தர்ம கடம்தானம்: 14-04-2019முதல்14-06-2019வரை.


நாம் கஷ்டபட்டு நேர்மையான முறையில் சம்பாதித்தபணம் பொருள் ஆகியவற்றை மற்றவருக்கு தேவையான நேரத்தில்கொடுப்பதே தானம் எனப்படும்.தண்ணீர்(ஜலம்)இந்த கோடை மாதங்களில் சித்திரை வைகாசி மாதங்களில்


பிறருக்குகொடுப்பதும் சிறந்த தானமாகும்.தண்ணீர் பந்தல் அமைத்துதண்ணிர் கொடுப்பது ப்ரபாதானம் என்று பெயர். இதுஅனைத்து பாபங்களையும் போக்கி குழந்தைகளுக்கும் நன்மைதரும்.


ப்லாஸ்டிக் குடங்களிலும் தண்ணீர்கொடுக்கலாம்..தண்ணீர் பந்தல் அமைக்க சக்தி அற்றவர்கள்ஒரு குடம் நிறைய ஜலம்எடுத்து க்கொண்டு ஏஷ தர்மகடோ
தத்த: ப்ருஹ்மவிஷ்ணு சிவாத்மக: அஸ்யப்ரதாநாத் ஸகலா: மமஸந்து மனோரதா:


தர்மகுடம் என்னும் இந்த ஜலம்நிரம்பிய குடத்தை ப்ருஹ்மவிஷ்ணு ருத்ரர்களின் ப்ரீதிக்காக தானம் செய்கிறேன் இதனால் எனது விருப்பங்கள் அனைத்தும்நிறைவேறட்டும். என்றுசொல்லி குடத்துடன் ஜலத்தைதானம் செய்ய வேண்டும்


.இவ்வாறுகோடை காலம் முழுவதும் தினமும்ஒரு குடம் தானம் செய்யலாம்.முடியாவிட்டால் பிறந்த நக்ஷதிரத்தன்று ஒரு குடம்,அல்லது 3,6,12,குடங்கள்தானம் செய்யலாம்.


இதுமஹா விஷ்ணுவின் அருளை பெற்றுதரும் மஹா புண்ணியத்தை தரும்.


06-5-2019. சித்திரை மாதம் க்ருத்திகை நக்ஷதிரத்தன்று சியாமா சாஸ்திரிகள் பிறந்த நாள். இன்று இவரது கீர்த்தன்ங்களை பாடி, அல்லது கேட்டு ஆனந்திக்கலாம்..

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
2-5-2019 மத்ஸ்ய ஜயந்தி:
சித்திரை மாதம் க்ருஷ்ண பக்ஷ த்ரயோதசி திதி அன்று ஶ்ரீ மஹா விஷ்ணூ மீன் அவதாரம் எடுத்தார் .இன்று காலை விஷ்ணூவை முறையாக பூஜித்து ஸ்தோத்ரம் சொல்லி ப்ரார்தித்து கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி அர்க்யம் தரலாம். ஸத்ய வ்ரதோபதேசாய ஜிஹ்ம மீன ஸ்வரூப த்ருக் ப்ரளயாப்தி க்ருதாவாஸ. க்ருஹாணார்க்யம் நமோஸ்துதே , மத்ஸ்ய ஸ்வரூபாய விஷ்ணவே நம: இதமர்க்யம். அநேந அர்க்ய ப்ரதானேன மத்ஸ்ய ஸ்வரூபீ பகவான் ப்ரீயதாம்.
7-5-2019. பலராம ஜயந்தி.
7-5-19; அக்ஷய த்ருதியை
9-5-2019. ஶ்ரீ ராமானுஜர் ஜயந்தி. சித்திரை சுக்ல பக்ஷ பஞ்சமி. திருவாதிரை நக்ஷத்திரம்.


10-05-2019 காலடியில் ஆதி சங்கரர் தோன்றிய நாள்.


13-5-2019. வாசவி ஜயந்தி.


17-5-19. நரசிம்ம ஜயந்தி
18-5-19. ஆகாமாவை;; பெளர்ணமி, வைகாசி விசாகம்.
7-5-19அக்ஷய த்ருதியை
அக்ஷயம் என்றால் குறையாதது என்றும் மங்களம் என்றும் பொருள்..வைசாக சுக்ல பக்ஷ த்ருதியை அன்று இது வருகிறது. இன்று புண்ணிய நதிகளில்
நீராடுதல் ஏழைகளுக்கு தானம் அளித்தல்; அன்ன தானம், ஜல தானம், குடை,


செருப்பு, வஸ்த்ரம், பசு, தங்கம் முதலியன தானமளித்தல்.இன்று தங்கம் வாங்கி ஏழை உறவினர்களுக்கு தானமளிக்க வேண்டும். அவரவர் சக்திக்கு தகுந்தபடி அரிசி, கோதுமை, பருப்பு போன்ற தானியங்களை தானமளிக்கலாம்.
நீர்மோர், பானகம், ஜலம் ஒரு பத்து பேருக்கு கொடுக்கலாம்.


6-5-2019 திங்கள் கிழமை அக்ஷய துதியை. இன்று செய்யப்படும் பூஜைகள், ஜபம், ஹோமம், பாராயணம், பித்ரு தர்பணம், தானம் ஆகியவை அதிக பலனை தரும்.


அதி காலையில் ஸூரியன் உதிக்குமுன்பு 5-30 மணிக்குள்ளாக ஸ்நானம் செய்ய வேண்டும்.. இதனால் பாபங்கள் விலகும்.


குரு முகமாக உபதேசம் பெற்ற மந்திரங்களை அதிகமாகவே இன்று ஜபம் செய்யலாம். முடிந்தால் தெய்வ சன்னதியில் உட்கார்ந்து ஜபம் செய்யலாம். உபதேசம் இல்லாதவர்கள் ராமா என்றோ சிவா என்றோ சொல்லலாமே.


இன்று ஒளபாசனம்//ஸமிதாதனம் செய்யலாம். தான் கற்ற வேதத்தை சொல்லலாம். இல்லை என்றால் ராமாயணம், பாகவதம், கீதை சிறிதளவு படிக்கலாமே.. ப்ருஹ்மயக்ஞம் செய்யலாம்.


இதனால் பலன் நமக்கும் கிடைக்கும். நம் ஸந்த.தியினருக்கும் தொடர்ந்து அக்ஷயமாக கிடைக்குமே..


வார்த்தா கெளரி வ்ரதம்.


கெளரீ வ்ரதம் என்றால் சிவனுடன் கூடிய பார்வதி தேவியை பூஜை செய்து அருளை பெறுவது;-. கெளரீ என்றால் தூய்மை அல்லது வெண்மை என்று அர்த்தம்.. ஆகவே தான் சுக்ல பக்ஷத்தில் (வெளுத்த பக்ஷத்தில்) அம்பாள் பூஜிக்கபடுகிறாள்.


ஒவ்வொரு மாதமும் சுக்ல பக்ஷத்தில் (வளர் பிறையில்) இந்த கெளரீ விரதம் வருகிறது. அனைத்து கெளரீ பூஜைகளிலும் நியமங்கள் பூஜைகள், ஒரே மாதிரி தான் என்றாலும்


ஒவ்வொரு மாதமும் அந்தந்த பெயருக்கேற்ப சில மாறுதல்களும் உண்டு. எல்லா கெளரி வ்ருத பூஜைகளிலும் சிவனும் அம்மனும் சேர்த்து பூஜை செய்யவும்.


குறிப்பாக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மரத்தடியில் இந்த பூஜை செய்ய பட வேண்டும் அந்தந்த மரத்தின் ஒரு குச்சியை உங்கள் வீட்டில் பூஜைக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டு பூஜை செய்ய வேண்டியதுதான்.


அம்மரத்தின் இலைகளை பறித்து வந்து பூஜை மண்டபம் அலங்கரிக்கலாம், அல்லது அந்த இலைகள் மீது அம்மனை வைத்து பூஜிக்கலாம்.


ஹிமவான் மேனகை தம்பதிகளுக்கு மகளாக பிறந்து பார்வதி என்ற பெயருடன் ஹிமய மலையில் பல மரங்களுக்கு அடியில் உட்கார்ந்து தவம் செய்து பரம சிவனை மணந்ததால் மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும் என்கிறது ஸ்ம்ருதி.-. ஆனால் தற்காலத்தில் அது முடியாது.


கெளரீ வ்ரதம் அனுஷ்டிக்கும் சுமங்கலி பெண்கள் பகல் முழுவதும் ஒன்றும் சாப்பிடாமல் வ்ரதம் இருந்து மாலை 6மணி முதல் 9 மணிக்குள் இந்த கெளரீ பூஜையை செய்ய வேண்டும்.


சிவனும் பார்வதியும் சேர்ந்திருக்கும் விக்கிரகம் அல்லது படத்தை ஒருகோலம் போட்ட பலகையின் மேல் கிழக்கு பார்த்து வைக்கவும். அம்மனுக்கு வலப்புறம் நெய் தீபமும் இடது புறம் எண்ணய் தீபமும் வைக்கவும்.
விரத பூஜா விதானம் புத்தகத்தில் மங்கள கெளரி வ்ரதம் பூஜை போல் எல்லா பூஜையையும் செய்ய வேண்டும்.


அம்மனுக்கு எதிர் திசையில் உட்கார்ந்துகொண்டு கெளரீ பூஜை செய்து விட்டு அருகிலுள்ள சிவன் கோயில் சென்று சிவனையும், அம்பாளையும்
தரிசனம் செய்து விட்டு பூஜையில் நிவேதனம் செய்ததை மற்றவர்களுக்கும் கொடுத்துவிட்டு தானும் தனது குடும்பத்துடன் பக்தியுடன் சாப்பிட வேண்டும்.
கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படவும் அன்பு, பாசம் ஏற்படவும். பார்வதியை பூஜிக்க வேண்டும் என்கிறார், ஶ்ரீ சுகாச்சார்யார் ஶ்ரீ மத் பாகவத புராணத்தில்.
ஜாதகத்தில் சுக்ரன் நீசம் அல்லது கெடுதலான இடத்தில் இருந்தால் அது களத்திர தோஷத்தை கொடுக்கும். இதனால் காலத்தில் திருமணம் நடக்காது.


அல்லது திருமணம் ஆனவர்களிடம், ஒற்றுமையின்மை , கருத்து வேறுபாடு, தம்பதிகள் பிறிவு ஏற்படும். இந்த குறைகள் நீங்க இந்த கெளரீ பூஜை தக்க பரிஹாரமாகும்.நோய்கள் நீங்கும், ஆரோக்யம் ஏற்படும்.. ஒற்றுமை ஏற்படும்.


ஸம்வத்ஸர கெளரீ வ்ரதம்:-சைத்ர மாத சுக்ல பக்ஷ ப்ரதமை திதி: 06-04-2019
இன்று இந்த பூஜை செய்வதால் குடும்பத்தில் திருமணம் , கிருஹப்ரவேசம் போன்ற மங்கள நிகழ்ச்சிகள் அந்த வருடம் பூராவும் நடக்கும்.


ஸெளபாக்கிய கெளரீ வ்ரதம்:-சைத்ர மாத சுக்ல பக்ஷ த்ருதீயை திதி ; இதை செய்வதனால் படிப்புக்குகந்த வேலை கிடைக்கும். உழைப்புக்கேற்ற பலன் கிட்டும். பலவகையிலும் அதிருஷ்டம் கிடைக்கும்.08-04-2019;
வைசாக மாதம் சுக்ல பக்ஷ சதுர்த்தி திதி 08-05-2019 வார்த்தா கெளரி வ்ரதம்.
இதை செய்வதால் தகுந்த நபரிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் நல்ல செய்தி விரைவில் வந்து சேரும்.


புன்னாக கெளரீ வ்ரதம்: .ஜ்யேஷ்ட மாதம் சுக்ல பக்ஷ த்விதியை திதி 05-06-2019. புன்னை மரத்தடியில் அல்லது புன்னை மரத்து இலைகள், பூக்கள் மீது அம்பாளை வைத்து பூஜை செய்யவும்
.புன்னை இலைகளால் புன்னை பூக்களால் அர்ச்சனை செய்யவும். இதனால் மனதிலுள்ள ஆசாபாசங்கள் நீங்கி மனம் அமைதியாக இருக்கும்.


17-5-19. ந்ருஸிம்ம ஜயந்தி:


வைசாக சுக்ல பக்ஷ சதுர்தசி யன்று மாலை ப்ரதோஷ வேளையில் ஸ்வாதி நக்ஷதிரத்தில் உலகை காக்க அவதரித்தவரை நாமும் இன்று பூஜை, ஸ்தோத்ரம், அர்ச்சனை, வழிபாடு , நமஸ்காரம் செய்து ப்ரார்திப்போம்.


ஒவ்வொரு மாதமும் சுக்ல பக்ஷ சதுர்தசியன்று உபவாசமிருந்து மாலையில் இவரை பூஜிப்பது மிக்க நன்மையை தரும்.. முடியாவிட்டால் இன்றாவது காலை முதல் எதுவும் சாப்பிடாமல் உபவாசம் இருந்து மாலையில்


ஶ்ரீ ந்ருஸிம்ம மூர்த்தியின் படமோ விக்ரஹமோ வைத்து, ஶ்ரீ மத் பாகவத புத்தகத்துடன் ஶ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்மர் ஸஹஸ்ர நாமார்ச்சனை செய்து பானகம் முதலியன நிவேத்யம் செய்து முறைப்படி பூஜிக்கவும்.


பிறகு ஶ்ரீ மத் பாகவதத்தில் உள்ள ப்ரஹ்லாத சரித்ரம் ( ஏழாவது ஸ்கந்தம் ஒன்று முதல் பத்து அத்யாயங்கள் ) பாராயணம் செய்யவும். ப்ரஹ்லாதரால் செய்யப்பட்ட ஸ்தோத்ரம் (7 ஆவது ஸ்கந்தம் 9ஆவது சர்க்கம்) பாராயணம் செய்யவும்.


இவ்வாறு இவரை பூஜிப்பதால் மனதிலுள்ள காமம் , க்ரோதம் போன்ற உள் சத்ருக்களும் வெளியே திரியும் விரோதிகளும் நம்மிடம் நண்பர்கள் ஆகிறார்கள். மேலும் நீதி மன்றத்தில் வழக்கு வெற்றி அடையும்..


எவ்வளவு படித்தாலும் படிக்கும் விஷயங்கள் நினைவில் நிற்காமல் ஞாபக மறதியுள்ளவர்கள் இவரை பூஜிப்பதால் நல்ல நினைவு ஆற்றலை பெறலாம்..


தேவர்களின் தலைவனே, ஶ்ரீ ந்ருஸிஹ்மா எனது வம்சத்தில் பிறந்துள்ளவரையும் இனி பிறக்க போகிறவர்களையும் பிறவி பெருங் கடலிலிருந்து கரையேற்றி விடு.


பாபமென்னும் கடலில் மூழ்கியவனும், நோய் துன்பம் என்னும் ஜலத்தால் சூழப்பட்டவனும், பெரிய துக்கத்துடன் கூடியவனுமான என்னை கை கொடுத்து தூக்கி விடுங்கள். ஆதிஷேசன் மீது வீற்றிருப்பவரே.,


உலகம் அனைத்திற்கும் தலைவரே. பாற்கடலில் பள்ளிக்கொண்டு சக்ரத்தை கையில் தாங்கிய ஜனார்த்தனா.ஶ்ரீ ந்ருஸிம்ஹா எனக்கு இவ்வுலகில் தேவையான அனைத்து இன்பங்களையுமம் தந்து , இறுதியில் மோக்ஷத்தையும் தந்து அருள் புரிவாய்.


இவ்வாறு பக்தியுடன் ப்ர்ரார்திக்கவும்.. மனதில் உள்ள அனைத்து பயங்களும் நீங்கி தைரியம், அகத்தூய்மை, உடல் வலிமை நல்ல ஸுக வாழ்வும் ஏற்படும்..
18-5-19. ஆகாமாவை:- ஆஷாடம், கார்திகம், மாகம், வைசாகம் என்ற மாதங்களின் முதல் எழுத்துக்களே ஆகாமாவை என்றாகிறது. இன்று சூரிய உதயத்திற்கு ஒரு மணி முன்பாகவே அதாவது காலை 4-45 மணிக்கே வீட்டிலுள்ள எல்லோருமே ஸ்நானம் செய்து விடலாமே .இதனால் அனைத்து பாபங்களும் விலகும் என்கிறது சாஸ்திரம். முயர்சிக்கலாமே.