ராசிகளும் அதில் இருக்கும் நட்சத்திரங்களும்.. மொத்தம் 12 ராசிகள். முதல் ஆரம்பம் மேஷம். பிரதக்ஷிணமாக வந்து மீனத்தில் முடியும். சூரியன் சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் இருப்பார். வைகாசி மாதம் ரிஷபத்தில் இருப்பார், ஆனி மாதம் மிதுனத்தில் இருப்பார்; ஆடி மாதம் கடகத்தில் இருப்பார்; ஆவணி மாதம் சிம்மத்தில் இருப்பார்; புரட்டாசி மாதம் கன்னியில் இருப்பார். ஐப்பசி மாதம் துலா த்தில் இருப்பார். கார்த்திகை மாதம் விருச்சிகத்தில் இருப்பார். மார்கழி மாதம் தனுசில் இருப்பார்; தை மாதம் மகரத்தில் இருப்பார்; மாசி மாதம் கும்பத்தில் இருப்பார்; பங்குனி மாதம் மீனத்தில் இருப்பார். சூரியன் இருக்கும் ராசியை பார்த்து இந்த மாதத்தில் பிறந்தார் என சொல்ல முடியும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
ஸங்கல்பம் செய்யும் போது இதையே தான் மேஷ மாசே; ரிஷப மாசே மிதுன மாசே; கடக மாசே; சிம்ம மாசே; கன்னியா மாசே, துலா மாசே; விருச்சிக மாசே; தனுர் மாசே; மகர மாசே, கும்ப மாசே. மீன மாசே என சொல்கிறோம்.அடுத்து ஸங்கல்பம் செய்யும் போது சுக்ல பக்ஷம், க்ருஷ்ண பக்ஷம் எங்கிறோம். அமாவாசைக்கு மறு நா|ள் ப்ரதமை திதி முதல் பெளர்ணமி முடிய சுக்ல பக்ஷம்=வளர்பிறை; பெளர்ணமிக்கு மறு நாள் ப்ரதமை முதல் அமாவாசை முடிய தேய்பிறை- க்ருஷ்ண பக்ஷம் என்று சொல்கிறோம்.
திதிகள் பதினைந்து:- ப்ரதமை, துதியை; த்ருதியை; சதுர்த்தி; பஞ்சமி, சஷ்டி, ஸப்தமி, அஷ்டமி; நவமி; தசமி; ஏகாதசி; துவாதசி; த்ரயோதசி; சதுர்தசி அமாவாசை அல்லது பெளர்ணமி என்று திரும்ப திரும்ப வரும்.
ஒரு வருடத்தை இரு அயனங்களாக பிரித்தனர். உத்திராயணம்= தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய; தக்ஷிணாயனம் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் முடிய; 12 மாதங்களை 6 ருதுக்களாக பிரித்தனர். சித்திரை, வைகாசி=வஸந்தருது; ஆனி, ஆடி=க்ரீஷ்ம ருது; ஆவணி, புரட்டாசி=வர்ஷ ருது;
ஐப்பசி, கார்த்திகை=சரத் ருது;மார்கழி,தை=ஹேமந்த ருது; மாசி, பங்குனி=சிசிர ருது.
இருபத்தேழு நட்சத்திரங்கள் பெயர்= அசுவதி, பரணி, கார்த்திகை; ரோஹிணி; ம்ருகசீர்ஷம்; திருவாதிரை; புனர்பூசம்; பூசம்; ஆயில்யம்; மகம்; பூரம்; உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி; விசாகம்; அனுஷம்; கேட்டை; மூலம்; பூராடம்; உத்திராடம்; திருவோணம்; அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி ரேவதி.
இந்த 27 நட்சத்திரங்களை 12 ராசிகளுக்குள் அடக்க வேண்டும். 12 மாதங்கள் ஒரு வருடம். ஆதலால் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் நான்கு பாதங்களாக பிரித்தனர். மொத்தம் தமிழ் வருடங்கள் 60. திரும்ப திரும்ப இதே பெயர் வரும்.
இந்த 27 நட்சத்திரங்களை ஸங்கல்பம் செய்யும் போது இம்மாதிரி சொல்ல வேண்டும்; அஸ்வினி, அபபரணி; க்ருத்திகா;ரோஹிணி;; ம்ருகசீர்ஷ;அர்ர்த்ரா; புனர்வஸு; புஷ்ய; ஆஶ்லேஷா; மக; பூர்வ பல்கினி; உத்திர பல்குனி; ஹஸ்த; சித்ரா; ஸ்வாதி; விசாகா; அனுராதா; ஜ்யேஷ்டா; மூலா; பூர்வாஷாடா; உத்ராஷாடா; ஶ்ரவண; ஶ்ரவிஷ்டா; பூர்வப்ரோஷ்டபதி; உத்திரப்ரோஷ்டபதி; ரேவதி;,.
7 நாட்களை ஸங்கல்பம் செய்யும் போது இம்மாதிரி சொல்ல வேண்டும்:- ஞாயிறு=பானு வாஸரம்; திங்கள்= இந்து வாஸரம்; அல்லது ஸோம வாஸரம்; செவ்வாய்= பெளம வாஸரம்; புதன்= ஸெளம்ய வாஸரம்; வியாழன்=குரு வாஸரம்; வெள்ளி= ப்ருகு வாஸரம்; சனி= ஸ்திர வாஸரம்.
யோகங்கள்=27; விஷ்கம்பம்; ப்ரீதி; ஆயுஷ்மான்; ஸெளபாக்கியம்; சோபனம்; அதிகண்டம்; சுகர்மம்; திருதி; சூலம்; கண்டம்; விருத்தி; துருவம்; வியாகாதம்; ஹர்ஷணம்; வஜ்ரம்; ஸித்தி; வ்யதீபாதம்; வரீயான்; பரிகம்; சிவம்; சித்தம்; சாத்தியம்; சுபம்; சுப்பிரம்; பிராம்யம்; மாஹேந்திரம்; வைத்ருதி.
கரணங்கள்-11. பவம், பாலவம், கெளலவம்; தைதுலம்; கரசை; வணிசை; பத்திரை; சகுனி; சதுஷ்பாதம்; நாகவம்; கிம்ஸ்துக்னம்;. இதில் முதல் 7 கரணங்கள் சரம்; கடைசி நாங்கு கரணங்கள்=ஸ்திரம்.


30 திதிகள் கொண்டது ஒரு மாதம். (சுக்ல பக்ஷ, க்ருஷ்ண பக்ஷ திதிகள் சேர்ந்தது.) திதி என்பது சூர்யனுக்கும் சந்திரனுக்குமுள்ள இடைவெளியை குறிக்கும். வாண மண்டலத்தில் மொத்தம் 360 பாகைகள் ( ஒரு வட்டத்திற்கு 360 டிகிரி) உள்ளதாகவும், ஒரு திதிக்கும் மற்றொரு திதிக்கும் உள்ள இடைவெளி 12 பாகைகள் எனவும், சூரியனிலிருந்து 180 பாகையில் சந்திரன் வரும்போது பெளர்ணமியும், , சூரியனும், சந்திரனும் ஒரே பாகையில் வரும் போது அமாவாசை வருவதாகவும் வான சாஸ்திரத்தில் சொல்ல படுகிறது.
கிழமைகளில்- புதன், வியாழன், வெள்ளி இரு கண்கள் உள்ள நாட்கள்=சுப காரியம் செய்ய உத்தமம்; ஞாயிறு, திங்கள்-ஒரு கண் உள்ள நாட்கள்=சுப காரியம் செய்ய மத்திமமான நாட்கள்; செவ்வாய், சனி= இரு கண்களும் இல்லா நாட்கள் ஆதலால் சுப காரியம் செய்வதை தவிர்க்க வேண்டும்.


மொத்தம் 27 நக்ஷத்திரங்கள்:- ராசி மண்டலத்தில் மொத்தம் 360 பாகைகளில் ஒவ்வொரு நக்ஷத்திரமும் 13 பாகை-20 கலைகள் கொண்டதாகும். ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் 4 பாதங்கள் வீதம் 108 பாதங்கள் உள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் 2.25 நக்ஷத்திரம்=( 9 பாதங்கள்) 12 ராசிக்கும் பிறித்து கொடுக்க பட்டது.


யோகம்;- இந்த யோகமானது நக்ஷத்திரங்களை போலவே 27 ஆகும். வான மண்டலத்தில் சூரியன் செல்லும் தூரத்தையும், சந்திரன் செல்லும் தூரத்தையும் கூட்டி இந்த யோகங்கள் கணக்கிட படுகின்றன. நக்ஷத்திரத்தை போலவே ஒரு யோகத்தின் அளவு 13 பாகை, 20 கலை யாகும்.


இந்த யோகங்கள் வேறு. அம்ருதாதி யோகங்கள் வேறு. அம்ருதாதி யோகங்கள் கிழமையும், நக்ஷத்திரமும் இணைவதால் கிடைப்பவை. அம்ருத யோகம், சித்த யோகம், மரண யோகம் பிரபலாரிஷ்ட யோகம் என்று வரும்.


கரணம்:- கரணம் என்பது திதியில் பாதி ஆகும். முப்பது நாட்களில் 30 திதிகள். (கிருஷ்ண பக்ஷம், சுக்ல பக்ஷம்) ஆதலால் கரணம் 60 பகுதி ஆகிறது. இதில் 4 பகுதிகளை 4 ஸ்திர கரணங்கள் எப்போதும் ஆக்கிரமிக்கின்றன. கிருஷ்ண பக்ஷ சதுர்தசியில் இரண்டாவது கரண மான சகுனி கரணமும், அமாவாசையின் முதல் கரணமான சதுஷ்பாதமும் , இரண்டாவதாக நாகவமும் , சுக்ல பக்ஷ ப்ரதமையின் முதல் கரணமான கிம்ஸ்துக்ண கரணமும் , எப்போதும் வருவதால் இவை நான்கிற்கும் ஸ்திர கரணங்கள் என்று பெயர்.. இந்த நான்கு ஸ்திர கரணங்களும் நற்காரியம் செய்ய ஏற்றதல்ல.


மீதமுள்ள 56 பகுதிகளை மீதமுள்ள 7 கரணங்களும், சுக்ல பக்ஷ ப்ரதமையில் 2 ஆவது கரணமான பவ கரணத்தில் ஆரம்பித்து சுழற்சி முறையில் 8 முறை ( 8இன்டூ7=56) வந்து கிருஷ்ண பக்ஷ சதுர்தசியின் முதல் கரணமான பத்திரையில் முடிவடைகிறது. ஆகையால் இவை சர கரணங்கள் என அழைக்க படுகிறன.