Announcement

Collapse
No announcement yet.

கயா புராண - வரலாற்று சுருக்கம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கயா புராண - வரலாற்று சுருக்கம்

    || கயா புராண - வரலாற்று சுருக்கம் ||
    Click image for larger version

Name:	gaya-vishnupadham.png
Views:	1
Size:	549.5 KB
ID:	35817
    கயன் என்ற பெயருடைய அசுரனானவன் தன் வாழ்நாளில் தவத்திலேயே எண்ணம் கொண்டவனாய் மாபெரும் தவத்த்திலேயே வெகுகாலம் எவ்வித பலனையும் எதிர்பாராமல் ஈடுபட்டிருந்தான். இதனால் முறையே, ப்ருஹ்ம தேவரும், பகவான் நாராயணரும் அவனது தவத்தால் மனம்மகிழ்ந்து அவனுக்கு தரிசனமளித்தனர். அப்போது கயாசுரனின் சரீரமானது, எல்லா புண்ய தீர்த்தங்களிலும், பவித்ர வஸ்துக்களிலும் அதி புனிதமாக இருக்கும் என வரமளித்தனர். (இதன் காரணமாகவே இங்கு அனைத்து புண்ய தீர்த்தங்களும் உறைந்துள்ளதாக ஐதீகம்) இதன் பின்னரும் அவன் தொடர்ந்து தவமியற்றி வந்தான். இதனால் மூன்று உலகங்களும் கலக்கமடைந்தன. தேவர்கள் கலக்கமுற்றனர். பின்னர் ப்ரஹ்மாதி தேவர்கள் சிவனை சரணடைந்து உபாயமொன்றைத் தருமாறு வேண்டினர். அப்போது சிவபெருமான் மாயாலீலா விநோதன், ஸ்ரீமஹாவிஷ்ணுவே தங்களுக்கு தகுந்த அபயம் தந்து அநுக்ரஹிப்பார் எனக்கூற, ஆதலால் சற்றே ஆறுதலடைந்த தேவர் குழாம் வைகுண்டத்தை அடைந்து துதிசெய்து வணங்கி தங்கள் வருகையின் நோக்கத்தைக் கூறினர். அப்போது ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் ப்ருஹ்மதேவரைப் பார்த்து ஒரு யாகம் செய்யவேண்டும். அதற்கு புனிதமானதோர் இடம் வேண்டும் என கயாசுரனிடம் கேளுங்கள். அப்போது அவனது சரீரமே பரம பவித்ரம் என்றும் சொல்லுங்கள். அதற்கிசைந்து காயசுரன் தனது சரீரத்தை தருவான் - எனக்கூற, பகவான் விஷ்ணுவினுடைய ஆஜ்ஞையின் படியே ப்ருஹ்மாவானவர், கயாசுரனிடம் சென்று யாகம் செய்வதன் பொருட்டு அவனது சரீரத்தைக் கேட்டார். கயாசுரனானவன், அதற்கிணங்கி கோலாகல பர்வதத்தில் தலையை வைத்துத் தூங்கிவிட்டான். அப்போது கயாசுரனின் சரீரத்தின் மேலே ப்ருஹ்மாவின் மூலம் யாகமானது விதியுற நடத்தப்பட்டது. அச்சமயம் அவனது சரீரமானது சற்றே அசைந்தது. அதனால் யாகவேதியும் அசைந்தது. அதைக் கண்ட தேவர்கள், உடனே அவன்மீது தர்ம (வேதி) சிலா என்ற கல்லை வைத்தனர். அதன் பின்னர் கயாசுரனானவன் எழுந்திருக்க முயன்ற தருணத்தில் ஸமஸ்த தேவதா ஸஹிதம் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் கையில் கதாயுதம் ஏந்தி ❝கதாதரர்" என்ற திருநாமம் தாங்கி அவன்மீது ஏறி நின்றார். அப்போது கண்திறந்த கயாசுரனானவன், முதலில் ப்ருஹ்மதேவரைக் கண்டு, அவரிடம் உங்களது யாகம் சிறப்புற நடைபெற்றதா?! என கேட்க, உடனே ப்ருஹ்மதேவர் மனமகிழ்ந்து, விதியுற நடைபெற்றது என மறுமொழி தந்த வண்ணம் அங்கிருந்த அந்தணர்களுக்கு முறையே ஒருகுளம் பால், ஒருகுளம் தயிர், ஒருகுளம் நெய், ஒரு குளம் தேன், மற்றும் தங்க மலை, வெள்ளி மலையும் யாகத்திற்கு அங்கமாகத் தானம் செய்தார். (அவை பயகுல்யா, ததிகுல்யா, க்ருதகுல்யா, மதுச்ரவா எனத் தற்போதும் நீர்நிலைகளாக விளங்கி வருகின்றன.) அப்போது ப்ருஹ்மாவானவர் அந்தணர்களிடம் பேராசை கொண்டு வேறு யாரிடமும் தானம் வாங்காதீர்கள் என வேண்டுகோளையும் வைத்தார். அப்போது ப்ருஹ்மாவின் அருகிலேயே தன்மீது நின்ற ஸ்ரீமஹாவிஷ்ணுவைக் கண்ட யாசுரன், அவரைப் பணிந்தேத்தி, ஹே! ப்ரபோ! இதென்ன லீலை, தாங்கள் சும்மா இரு என்றாலே இந்த சரீரம் அவ்வாறே இருந்து விடுமே. அப்படியிருக்க, எனது மேல் ஒரு கல்லை (தர்மசிலா) வைத்துப் பின்னர் அனைத்து தேவதா - தேவதை ஸஹிதம் என்மீது ஏறி நிற்கவேண்டுமா?! எனக் கேட்க, அப்போது மஹாவிஷ்ணுவானவர், உலக நன்மையின் பொருட்டே இச்செயல் உன்மீது அருளப்பட்டது - வேண்டும் வரம் கேள், எனக் கூற, அப்போது கயாசுரனானவன் சூர்ய - சந்திரர் உள்ள வரை இந்த ஊர், எனது பெயரைத் தாங்கித் திகழவேண்டும். (அன்று முதல் கயா என அழைக்கப்பட்டு வருகிறது). அதற்கு முன் ❝கோலாகலம்" என இந்த ஊர் அழைக்கப்பட்டு வந்ததாம்.) மேலும், இந்த ஊரில் ப்ராஹ்மணர்களே இருக்கக்கூடாது, என இரண்டாம் வரம் கேட்க, அப்போது ப்ரஹ்மதேவரானவர், அந்தணர் இல்லையேல் அவலமே மிகும் எனக்கூற, அதைச் செவிமடுத்த்த கயாசுரனானவன் ஸ்ரீமஹாவிஷ்ணுவிடம், சரி, அப்படி அந்தணர்கள் இருக்கவேண்டுமானால், எனது பரம்பரையில் வந்தவர்களே இந்த ஊரில் ப்ராஹ்மணர்களாக இருக்கவேண்டும் எனக் கேட்க, ❝அவ்வாறே ஆகட்டும்" என மஹாவிஷ்ணு வரமளித்தார். மேலும் கயாசுரனானவன், இங்கு பல்குனி நதியில் பாலும் - தேனும் ஓடவேண்டும், மட்டுமின்றி என்மீது வைக்கப்பட்ட உமது பாதத்தில் எவர் பொருட்டு பிண்டமிடப்படுகிறதோ, அவர் மோக்ஷமடையவேண்டும் எனக் கேட்க, ❝அப்படியே ஆகட்டும்" என மஹாவிஷ்ணுவானவர் வரமளிக்க மேலும் கயாசுரனானவன் இறுதியாக, இங்கு எந்த நாளில் என்மீத பிண்டமானது விழவில்லையோ? அன்று நான் பூமியிலிருந்து எழுந்துவிட அநுக்ரஹிக்க வேண்டும் என ப்ரார்த்திக்க, அதற்கிசைந்த மஹாவிஷ்ணுவானவர், ❝ததாஸ்து" அப்படியே ஆகட்டும் எனக்கூறி அந்தர் த்யானமாயினர். அவனுடைய வரத்திற்கிணங்கிய அந்த மஹாவிஷ்ணுவினுடைய ஆஜ்ஞைக்கு உட்பட்ட கயாசுரனின் தேஹமானது, அப்போது பூமியில் நிலைத்தது. அந்த பூமியை கயாசிரஸ், முண்டப்ருஷ்டம், தர்மசிலா, விஷ்ணுபாதம் என நான்கு பெயர்களோடு திகழ்கிறது. அனுதினம் மாலை வேளையில் விஷ்ணு பாதத்தை சந்தனக் காப்பிட்டு அலங்கரித்து, துளசி அர்சனை செய்கிறார்கள்.


    காயவில், விஷ்ணுபாத மத்தியில் எந்த ஜீவனின் பொருட்டு பிண்டம் போடப்படுகிறதோ, அந்த ஜீவனானது ப்ரேதயோனியிலிருந்து விடுபட்டு, ஸாக்ஷhத் விஷ்ணுபுரத்தை அடைந்து பின் அக்ஷய த்ருப்தியின் மூலம் கடைத்தேறுகிறது என சொல்லப்படுகிறது - நம்பப்படுகிறது.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS
Working...
X