|| மாத்ரு ஷோடஶி ||
தாய்க்குத் தனியாக பதினாறு (16) பிண்டங்கள். தாயில்லாதவர்கள் மட்டும் செய்யலாம்.

1. கர்பஸ்த்தே கமனே துக்கம் விஷமே பூமி வர்த்மனி |
தஸ்ய நிஷ்க்ரமணார்த்தாய மாத்ரு பிண்டம் ததாம்யஹம் ||
கர்பத்தைத் தரிக்கும்பொழுது, மேடு பள்ளமான இடங்களில் சஞ்சாரம் செய்த துக்கத்தினால் வந்த பாபத்தை விலக்குவதற்காக இந்த பிண்டம் கொடுக்கிறேன்.

2. யாவத் புத்ரோ ந பவதி தாவன்மாதுஶ;ச Nஶhசனம் |
தஸ்ய நிஷ்க்ரமணாத்தாய மாத்ரு பிண்டம் ததாம்யஹம் ||

3. மாஸி மாஸி நிதாகச ஶரீராதப துக்கதிதா |
தஸ்ய நிஷ்க்ரமணாத்தாய மாத்ரு பிண்டம் ததாம்யஹம் ||
கர்பம் தரித்தது முதல் ஒவ்வொரு மாதத்திலும் மட்டுமின்றி குழந்தை பிறக்கும்பொழுதும் ஏற்பட்ட துக்கத்தினால் வந்த பாபத்தை விலக்க இந்தப் பிண்டம் கொடுக்கிறேன்.

4. ஸைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாதா நிற்கதி தத்க்ருதம் |
தஸ்ய நிஷ்க்ரமணாத்தாய மாத்ரு பிண்டம் ததாம்யஹம் ||
குளிர் காலத்திலும், கோடை காலத்திலும் என்னைக் காப்பாற்ற குளிர், தாபம் பொருத்ததற்கு இந்தப் பிண்டம் கொடுக்கிறேன்.

5. ஸம்பூர்ணே தஶமே மாஸி மாதா க்ருந்ததி துஷ்க்ருதம் |
தஸ்ய நிஷ்க்ரமணாத்தாய மாத்ரு பிண்டம் ததாம்யஹம் ||
பூர்ண கர்பத்தில் பத்தாவது மாதத்தில் தாய்க்கு மிக அதிகமாக கொடுத்த கஷ்டத்தினால் விளைந்த பாபத்திலிருந்து விடுபட இந்த பிண்டம் கொடுக்கிறேன்.

6. திவாராத்ரௌ ச யாமாதா ஸ்தனம் தத்வாச பாலிதா |
தஸ்ய நிஷ்க்ரமணாத்தாய மாத்ரு பிண்டம் ததாம்யஹம் ||
இரவும் பகலும் உனது ரத்தத்தையே எனக்குப் பாலாக சாப்பிட கொடுத்த போது, உனக்குக் கஷ்டத்தைக் கொடுத்ததற்கு இந்த பிண்டம் கொடுக்கிறேன்.

7. அக்னிநா Nஶhஷிதே தேஹே த்ரிராத்ரௌ போஷணேன ச |
தஸ்ய நிஷ்க்ரமணாத்தாய மாத்ரு பிண்டம் ததாம்யஹம் ||
ப்ரஸவம் ஆனபிறகு மூன்றுநாட்கள் ஆஹாரமில்லாமல் வயிற்றுத் தீயின் தாபத்தைக் கொடுத்ததற்கு இந்தப் பிண்டத்தைக் கொடுக்கிறேன்.

8. ராத்ரௌ மூத்ர பரிஷாப்யாம் வித்யதே மாத்ரு கர்ப்படே |
தஸ்ய நிஷ்க்ரமணாத்தாய மாத்ரு பிண்டம் ததாம்யஹம் ||
இரவில் மல - மூத்திரங்களால் தாயின் வஸ்திரங்களை அசுத்தம் செய்ததினால் உனக்கு துன்பத்தை உண்டாக்கிய பாபத்திலிருந்து விடுபட இந்தப் பிண்டத்தைக் கொடுக்கிறேன்.

9. காத்ரு பங்க பவேன்மாது: கோரவாயை ப்ரபீடிதே |
தஸ்ய நிஷ்க்ரமணாத்தாய மாத்ரு பிண்டம் ததாம்யஹம் ||
ப்ரஸவ காலத்தில் தொப்புள் கொடியை நறுக்கியபோது வேதனையையும், மூர்ச்சை முதலான துக்கத்தைக் கொடுத்து பாபங்களிலிருந்து விடுப இந்தப் பிண்டத்தைக் கொடுக்கிறேன்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends10. பாதாத்ப்யாம் ஜனயேத்புத்ரோ ஜனனீ பரிவேதனம் |
தஸ்ய நிஷ்க்ரமணாத்தாய மாத்ரு பிண்டம் ததாம்யஹம் ||
வயிற்றிலிருந்தபடி காலாலுதைத்து தாயே உனக்கு கொடுத்த வேதனையின் காரணமாக உண்டான பாபத்திலிருந்து விடுபட இந்த பிண்டத்தைக் கொடுக்கிறேன்.

11. அல்பாஹார கதாமாதா யாவத் புத்ரோத்ஸ்தி பாலகா |
தஸ்ய நிஷ்க்ரமாணார்த்தாய மாத்ரு பிண்டம் ததாம்யஹம் ||
நான் வளருவதற்காக ஆஹாரத்தை பத்தியமாகவும், குறைத்தும் சாப்பிடச்செய்த பாபத்தை விலக்கிக்கொள்ள இந்த பிண்டத்தைக் கொடுக்கிறேன்.

12. பிபந்தி கடுத்ரவ்யாணி க்வாத்தானி விவிதானி ச |
தஸ்ய நிஷ்க்ரமணாத்தாய மாத்ரு பிண்டம் ததாம்யஹம் ||
குழந்தையான எனக்கு வியாதி வராமலிருக்க, கஷாயம், கசப்பு மருந்துகள் என பலவிதமாக சாப்பிடச் செய்த கஷ்டங்களாலுண்டான பாபங்களிலிருந்து விடுபட இந்தப் பிண்டத்தைக் கொடுக்கிறேன்.

13. புத்ரோ வ்யாதி ஸமாயுக்தோ மாதா க்ருந்தன காரிணி |
தஸ்ய நிஷ்க்ரமணாத்தாய மாத்ரு பிண்டம் ததாம்யஹம் ||
உனது புத்ரனான எனக்கு வியாதி வந்தபொழுது, சோகத்தினால் உன்னைத் தவிக்கவிட்ட பாபங்களிலிருந்து விடுபட இந்தப் பிண்டத்தைக் கொடுக்கிறேன்.

14. க்ஷ{தயா பீட்யதே புத்ரே ஹ்யன்னம் மாதா ப்ரயச்சதி |
தஸ்ய நிஷ்க்ரமணாத்தாய மாத்ரு பிண்டம் ததாம்யஹம் ||
பசி - தாஹம் உண்டாகும் ஸமயம் அறிந்து என் பசி தாஹம் போக்க என் வயிற்றிற்கு அன்னத்தையும் நீரையும் கொடுத்த சிரமத்தினாலுண்டான பாபத்திலிருந்து விடுபட இந்தப் பிண்டத்தைக் கொடுக்கிறேன்.

15. மாஸே மாஸே க்ருதம் கஷ்டம் வேதனா ப்ரஸவேஷ{ ச |
தஸ்ய நிஷ்க்ரமணாத்தாய மாத்ரு பிண்டம் ததாம்யஹம் ||
* கர்ப காலத்திலும், ப்ரஸவ காலத்திலும் குழந்தைப் பருவத்திலும் மரணவேதனைக்குச் சமமான சரீரவேதனையை தந்ததினால் உண்டான பாபங்களிலிருந்து விடுபட இந்தப் பிண்டத்தைக் கொடுக்கிறேன்.

16. யமத்வாரே பதே கோரே நதி வைதரணி ததா |
தஸ்ய நிஷ்க்ரமணாத்தாய மாத்ரு பிண்டம் ததாம்யஹம் ||
மேலுலகில் யமத்வார பதத்தில் மிக கோரமான பயங்கரமான வைதரணி நதியை நீ தாண்டுவதற்கு உன் பொருட்டு இந்தப் பிண்டத்தைக் கொடுக்கிறேன்.