நல்ல நேரம் பார்க்கும்போது கவணிக்க தக்கவை;_
கரி நாள் கூடாது; அஷ்டமி, நவமி திதி வேண்டாம்.
சித்த அமிருத யோகமாக இருக்க வேண்டும்.Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
சூரியன், செவ்வய், சனி ஹோரை தவிர மற்ற ஹோரைகள் நல்லது.
இராகு காலம், யம கண்டம் வேண்டாம். கெளரி பஞ்சாங்கத்தில் ரோக,
சோர, விஷ காலங்கள் வேண்டாம்.
அந்த நக்ஷத்திர காரருக்கு அன்று சந்திராஷ்டம தினமாக இருக்க கூடாது.


பஞ்சகம் பார்க்கும் முறை_:_ ஞாயிறு முதல் அன்றைய கிழமை வரை;
பிரதமை முதல் அன்றைய திதி வரை:- ;அசுவினி முதல் அன்றைய நக்ஷத்திரம் வரை;
மேஷம் முதல் இஷ்ட கால லக்கினம் வரை; லக்கின துருவம்-மேஷம்-5; ரிஷபம்-7;
மகரம்-2;கும்பம்-4; மீனம்-6. மற்றவைகளுக்கு லக்கின துருவம் இல்லை. இவைகளை
கூட்டி ஒன்பதால் வகுக்கவும். மீதி 1மிருத்யு பஞ்சகம்- தானபிரீதி-தீபம்.;2. ஆயின்


அக்னி பஞ்சகம்- தானப்ரீதி-சந்தன குழம்பு; 3,5,7,9=சுப பஞ்சகம்; 4 -இராஜ பஞ்சகம்.
தானப்ரீதி-எலுமிச்சை; 6- சோர பஞ்சகம்-தானப்ரீதி- பூஜை மணி; 8. ரோக பஞ்சகம்.
தானப்ரீதி-தான்யம்.


தாரா பலன்:- ஜென்ம நக்ஷத்திரம் முதல் அன்றைய தினம் நக்ஷத்திரம் வரை எண்ணி கொண்டு வந்த தொகையை
ஒன்பதால் வகுத்து நின்ற மிச்சத்தில் 2,4,6,8,9,மிக உத்தமம்.1,3,5,7, வேண்டாம்.


சந்திர பலன்:- ஜென்ம ராசி முதல் அன்றைய தினம் சந்திரன் நிற்கும் ராசி வரை எண்ணி வந்த தொகைக்கு பலன்.
1. சுகம், நன்மை; 2. நஷ்டம்,சமம்; 3. லாபம், நன்மை; 4. வியாதி;தோஷம்; 5. பங்கம்;துயரம்; 7. கடன்,சமம்,:
6.. சத்துரு ஜயம், நன்மை; 8.விரோதம்,சமம்; 9.தாமதம்,சமம்; 10.சம்பத்து, நன்மை;11.ஐஸ்வர்யம்;12. நஷ்டம்.


அவரவர் ராசிக்கு சந்திராஷ்டம நக்ஷத்திரங்கள்.( சந்திரன் எட்டாம் வீட்டில்)


மேஷம்-விசாகம், அனுஷம், கேட்டை; ரிஷபம்-மூலம், பூராடம், உத்திராடம்;
மிதுனம்-உத்திராடம், திருவோணம், அவிட்டம்; கடகம்- அவிட்டம், சதயம், பூரட்டாதி.
சிம்மம்-பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; கன்னி-அசுவினி, பரணி, கார்த்திகை


துலாம்-கிருத்திகை, ரோஹிணி, மிருக சீர்ஷம்;விருச்சிகம்:-மிருகசீர்ஷம், திருவாதிரை, புனர்பூசம்;
தனுசு:- புனர்பூசம், பூசம், ஆயில்யம்; மகரம்- மகம், பூரம், உத்திரம்; கும்பம்;_உத்திரம், ஹஸ்தம், சித்ரை.
மீனம்:- சித்திரை, சுவாதி, விசாகம்.