ஒவ்வொரு கிரஹத்திற்கும், நண்பர், பகைவர், சமமானவர் இருக்கிறார்கள். இதற்கு நைசர்க்கிக பலம் எனபெயர்.
இதில் இரு வகை உண்டு:- நிலையான மித்திரர், சத்ரு, சமமானவர்கள்; தற்காலிக மித்திரர், சத்ரு, சமமானவர்கள்.


நிலையான நைசர்கிக மித்ருவே தற்காலிக மித்ருவாகவும் அமைந்தால் அது அதி மித்ருவாகும்.
நிலையான நைசர்கிக மித்ரு , தற்காலிக சத்ருவாக அமைந்தால் அது சமம் ஆகும்.
நிலையான நைசர்கிக சத்ரு தற்காலிக சத்ருவாகவும் அமைந்தால் அது அதி சத்ரு ஆகும்.
நிலையான சத்ருவானவர் தற்காலிக மித்ருவாக அமைந்தால் அது சமம் ஆகும்.
நிலையான சமம் பெற்றவர் தற்காலிக மித்ருவாக அமைந்தால் மித்ருவாக ஆவார்.
நிலையான சமம் பெற்றவர் தற்காலிக சத்ருவானால் சத்ரு வாகி விவார்.
ஒவ்வொரு கிரஹத்திற்கும் உச்சம்,ஆட்சி, நட்பு, சமம். பகை, நீசம் வீடுகள்- ராசிகள்.
சூரியனுக்கு:- மேஷம்-உச்சம், ரிஷபம்-பகை ; மிதுனம்-சமம்; கடகம்-சமம்.
சூரியனுக்கு:-சிம்மம்-ஆக்ஷி; கன்னி-சமம்; துலாம்-நீசம்; விருச்சிகம்- நண்பன்.
சூரியனுக்கு:- தனுசு- நண்பன்;மகரம்-பகை;கும்பம்-பகை; மீனம்- நண்பன்.


சந்திரனுக்கு:- மேஷம்-சமம்; ரிஷபம்-உச்சம்; மிதுனம்- நண்பன்; கடகம்-ஆட்சி;
சந்திரனுக்கு:- சிம்மம்- நண்பன்; கன்னி- நண்பன்; துலாம்-சமம்;விருச்சிகம்- நீசம்;
சந்திரனுக்கு:- தனுசு-சமம்; மகரம்-சமம்; கும்பம்-சமம்; மீனம்-சமம்.
செவ்வாய்க்கு:- மேஷம்-ஆட்சி; ரிஷபம்-சமம்[ மிதுனம்-பகை; கடகம்- நீசம்.
செவ்வாய்க்கு--சிம்மம்- நண்பன்; கன்னி-பகை; துலாம்-சமம்; விருச்சிகம்-ஆட்சி.
செவ்வாய்க்கு:- தனுசு- நண்பன்; மகரம்-உச்சம்; கும்பம்-சமம்; மீனம் -நண்பன்
புதனுக்கு:- மேஷம்-சமம்; ரிஷபம்- நண்பன்; மிதுனம்-ஆட்சி; கடகம்-பகை;
புதனுக்கு:- சிம்மம்- நண்பன்; கன்னி-ஆட்சி-உச்சம்; துலாம் - நண்பன் ;விருச்சிகம்-சமம்.
புதனுக்கு;-தனுசு-சமம். மகரம்-சமம்; கும்பம்-சமம்; மீனம்- நீசம்.


குருவுக்கு:- மேஷம்:- நண்பன்; ரிஷபம்-பகை; மிதுனம்-பகை; கடகம்-உச்சம்.;
குருவுக்கு:- சிம்மம்- நண்பன்; கன்னி- நண்பன்; துலாம்-பகை; விருச்சிகம்- நண்பன்;
குருவுக்கு:- தனுசு-ஆட்சி; மகரம்- நீசம்; கும்பம்-சமம்; மீனம்-ஆட்சி.
சுக்கிரனுக்கு:- மேஷம்-சமம்; ரிஷபம்-ஆட்சி; மிதுனம்- நண்பன்; கடகம்-பகை;
சுக்கிரனுக்கு:-சிம்மம்-பகை; கன்னி- நீசம்; துலாம்-ஆட்சி; விருச்சிகம்-சமம்.
சுக்கிரனுக்கு:- தனுசு- நண்பன்; மகரம்- நண்பன்;கும்பம்- நண்பன்; மீனம்-உச்சம்.
சனிக்கு:- மேஷம்- நீசம்; ரிஷபம்- நண்பன்; மிதுனம்- நண்ப்ன்; கடகம்-பகை;
சனிக்கு:- சிம்மம்-பகை; கன்னி- நண்பன்; துலாம்-உச்சம்; விருச்சிகம்-பகை;
சனிக்கு;- தனுசு-சமம்; மகரம்-ஆட்சி; கும்பம்-ஆட்சி; மீனம்-சமம்.
ராகுவுக்கு உச்சம்-விருச்சிகம், நீசம்-ரிஷபம்.;நட்பு கிரஹம்-சுக்;சனி; பார்வை-3,7,11.
சமம்-புதன்,குரு. பகை-சூரியன், சந்திரன், செவ்வாய்.


கேதுவுக்கு:-உச்சம்-விருச்சிகம், நீசம்-ரிஷபம்; நட்பு: சூரியன், சந்திரன், செவ்வாய்.
பார்வை-3,7,11. பகை;-சுரன்,சனி, சமம்_ புதன், குரு.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
மாந்தி அல்லது குளிகனுக்கு:- உச்சம்-தனுசு; நீசம்-மிதுனம்; ஆட்சி-கன்னி,மகரம்;
நட்பு-சுக்ரன்;, சந்திரன், செவ்வாய்; சமம்-குரு;புதன்;சனி.பார்வை-2,12.


யோகங்கள்:- 27. சூரிய ஸ்புடத்தையும், சந்திர ஸ்புடத்தையும் ஒன்றாக கூட்டி
13 பாகை-20 கலையினால் வகுத்தோமென்றால் கிடைக்கும் ஈவு யோகமாகும்.
அதுவரை சென்ற யோகத்தையும் மீதியை-திரை-ராசி முறைப்படி பெருக்கி நாழிகை
விநாடிகள் கண்டு பிடிக்கலாம்.
காரகம் என்றால் அதிகாரம் மிக்கவர்கள்.


லக்னம்=முதல் பாவம்-இதற்கு காரகன். சூரியன்.இரண்டாம் பாவம்-குரு; மூன்றாம் பாவம் செவ்வாய்;
நாங்காம் பாவம்-சந்திரன்,அல்லது புதன் ஐந்தாம் பாவம்-குரு. ஆறாம் பாவம்-சனி மற்றும் செவ்வாய்.


ஏழாம் பாவம்-சுக்கிரன்; எட்டாம் பாவம்;-சனி; ஒன்பதாம் பாவம்-குரு.பத்தாம் பாவம்-குரு,சனி, புதன், சூரியன்.
பதினொன்ராம் பாவம்-குரு; பன்னிரண்டாம் பாவம்-சனி.
லக்னம்:- ஸூரியன்- ஆத்ம காரகன், பிதா காரகன்.


2ம் வீடு. சந்திரன்-உடல் காரகன்.;ஸூரியனும் சனியும்=சம்பாத்ய காரகன். சூரியன்/செவ்வாய்=அரசு வேலை கிரஹம்.


3ம் வீடு செவ்வாய்-சகோதர காரகன். வீரிய ஸ்தானம், சனி/செவ்வாய்- கர்ம காரகர்; ராகு-போக காரகன்;


4ம் வீடு. கேது-ஞான, மோக்ஷ காரகன்; சந்திரன்/புதன்=தொழில்,வீடு, வாஹனம்; மாதா.--சந்திரன்-படிப்பு; புதன்-கல்வி.


சுக்ரன்- வாஹன காரகன்.
5ம் வீடு. குரு-புத்ர காரகன்; பூர்வ புண்யம்; அறிவு, பக்தி, குல தேவதா கடாக்ஷம்.; குரு/சந்திரன்-அரசு பணி அளிக்கும் வாய்ப்பு.


6ம் வீடு:-சத்ரு, வியாதி, கடன், விபத்து; பிறர் தனம் வருதல்;
7ம் வீடு- சுக்கிரன்-களத்திரம்--கூட்டுத்தொழில்;


8ம் வீடு சனி=ஆயுள் காரகன்;ஆயுள், அவமானம், சிறைவாசம்; அடிபடுதல்.


9ம் வீடு- பாகியஸ்தானம்- சனி, சூரியன்-குரு- காரகர்கள்.


10ம் வீடு; தொழில் ஸ்தானம், உத்யோகம்; கர்ம ஸ்தானம்--ஸூரியன்,குரு, புதன்;சனி.


11ம் வீடு- லாப ஸ்தானம்- குரு; லாபம், வியாபாரம், மறு மணம். சுக்கிரனும் காரகன்.


12ம் வீடு- விரய ஸ்தானம்-- சயனம்-போகம்.--சனி-விரய காரகன்;
சென்னை:- ராசிமான சங்கியை 13* அட்சாம்சத்திற்குரிய ராசிமான சங்கியை வருமாறு.
மேஷம்=4 நாழிகை-29 வினாடி; ரிஷபம்=5 நாழிகை 4 வினாடி; மிதுனம்5-27, கடகம்=5-22;
சிம்மம்=5-08; கன்னி=5-04; துலாம்=5-16; விருச்சிகம்=5-28; தனுசு=5-19; மகரம்=4-46;
கும்பம்=4-17; மீனம்=4-11.


மேஷம்-1 மணி 48 நிமிஷம்; ரிஷபம்=2 மணி 2 நிமிஷம்; மிதுனம்=2மணி11 நிமிஷம்,;
கடகம்=2 மணி 9 நிமிஷம்; சிம்மம்=2 மணீ 3 நிமிஷம்; கன்னி=2 மணி 2 நிமிஷம்;


துலாம்=2 மணி 7 நிமிஷம்; விருச்சிகம்=2 மணி 11 நிமிஷம்; தனுசு=2 மணி 8 நிமிடம்;
மகரம்=1 மணி 56 நிமிடம்; கும்பம்=1 மணி 43 நிமிடம்; மீனம்=1 மணி 40 நிமிடம்.


லக்னம் என்பது என்ன? பூமண்டலத்திலிருந்து பார்க்கும்போது கீழ் வானம் எந்த ராசியில் பூமியை சந்திப்பதாக தோற்றமளிக்கிறதோ அது தான் லக்னம்.
ஒவ்வொரு நாளும் பூமி நான்கு நிமிஷங்களுக்கு ஒரு பாகை வீதம், சுழன்று கொண்டே வருகிறது.
ஒரு நாளைக்கு 360* பாகை சுழல்கிறது. அவ்வாறு சுழன்று வரும் போது குழந்தை ஜனன மாகும் போது,
கீழ் வானத்தில் எந்த ராசி உதய மாகிறதோ அதையே ஜனன லக்னம் அல்லது உதய லக்னம் எங்கிறோம்.
.மேலை நாட்டில் சூரியனின் சலனத்தை அடிபடையாக கொண்டு பலன் அறிகிறார்கள். இதற்கு சாயன முறை எனப்பெயர்.
நிராயண முறை;- சந்திரனின் சலனத்தை அடிப்படையாக கொண்டு நாம் பலனறிகிறோம். ஒவ்வொரு நாலும்
கீழ் வானில் லக்னம் தோன்றும் நேரம் சமச்சீராக இருக்காது. வான மண்டலம் நீள் வட்டமாக அமைந்து இருப்பதாலும், பூமியின் மேற்பரப்பில் பூ மத்திய ரேகையிலிருந்து ஒவ்வொரு அக்ஷாம்சத்திற்கும் சரிவு ஏற்பட்டு இருப்பதாலும்


ஒவ்வொரு ராசியும் தோன்றும் நேரம் வேறுபட்டிருக்கும்.ஒரு குழந்தை பிறந்த ஊர் எதுவோ அந்த ஊரின் அக்ஷாம்சத்திற்கு ஏற்ப இராசிமான சங்கியை மாறுபடும்.சூரியன் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ அந்த ராசியே ஆரம்ப லக்னமாக இருக்கும்.


ஒவ்வொரு மாத ஆரம்பத்தில் ராசி மான சங்கியையின் முழு கால அளவு இருக்கும். அது ஒவ்வொரு நாளும் ஸூர்ய உதய காலத்தில் 9 வினாடிகள்=4 நிமிடங்கள் குறைந்து கொண்டே வரும்.


FOR EACH THITHI THESE ARE THE VISHA SOONYA RAASI:


PRATHAMAI; thulam. makaram. dwithiyai: danus, meenam, Thruthiyai: simham. makaram. Chathurthy: rishbam, kumbam. Panchami: Mithunam, kanni. Sasty: mesham, simham.Sapthami: kadagam, dhanus. Astami: mithunam. kanni. Navami and Dasami: Simham, vrishchigam. Ekadasi: dhanus, meenam. Dwadasi: Thulam, makaram. Thrayodasi: Rishabam,simham; Chathurdasi: Mithunam,kanni,dhanus, meenam, No thithi soonyam for amavasai and pournami.
ஒவ்வொரு திதிக்கும் விஷ சூன்ய ராசி உண்டு; அவை பின் வருமாறு.இந்த விஷ சூன்ய ராசி அதிபதிகள் கெடுதல் செய்யும். ஆனால், 1,5,9, அதிபதிகளில் யாரோ ஒருவர் இந்த ராசி அதிபதியை பார்த்தால் கெடுதல் செய்யாது.
ப்ரதமை-துலாம், மகரம்;
த்விதியை-தனுசு,மீனம்.
த்ருதியை-சிம்மம், மகரம்.


சதுர்த்தி- ரிஷபம், கும்பம்;
பஞ்சமி--மிதுனம், கன்னி,
சஷ்டி- மேஷம், சிம்மம்.


ஸப்தமி-கடகம்,தனுசு.
அஷ்டமி_ மிதுனம், கன்னி.
நவமி-சிம்மம்,விருச்சிகம்.


தசமி-சிம்மம்,விருசிகம்.
ஏகாதசி-தனுசு,மீனம்
துவாதசி-துலாம், மகரம்.


த்ரயோதசி-ரிஷபம்;சிம்மம்;
சதுர்தசி-- மிதுனம் ,கன்னி:தனுசு,மீனம்.
பெளர்ணமி/ அமாவாசை-கிடையாது.
நல்ல நேரம் பார்க்கும்போது கவணிக்க தக்கவை;_
கரி நாள் கூடாது; அஷ்டமி, நவமி திதி வேண்டாம்.
சித்த அமிருத யோகமாக இருக்க வேண்டும்.
சூரியன், செவ்வய், சனி ஹோரை தவிர மற்ற ஹோரைகள் நல்லது.
இராகு காலம், யம கண்டம் வேண்டாம். கெளரி பஞ்சாங்கத்தில் ரோக,
சோர, விஷ காலங்கள் வேண்டாம்.
அந்த நக்ஷத்திர காரருக்கு அன்று சந்திராஷ்டம தினமாக இருக்க கூடாது.


பஞ்சகம் பார்க்கும் முறை_:_ ஞாயிறு முதல் அன்றைய கிழமை வரை;
பிரதமை முதல் அன்றைய திதி வரை:- ;அசுவினி முதல் அன்றைய நக்ஷத்திரம் வரை;
மேஷம் முதல் இஷ்ட கால லக்கினம் வரை; லக்கின துருவம்-மேஷம்-5; ரிஷபம்-7;
மகரம்-2;கும்பம்-4; மீனம்-6. மற்றவைகளுக்கு லக்கின துருவம் இல்லை. இவைகளை
கூட்டி ஒன்பதால் வகுக்கவும். மீதி 1மிருத்யு பஞ்சகம்- தானபிரீதி-தீபம்.;2. ஆயின்


அக்னி பஞ்சகம்- தானப்ரீதி-சந்தன குழம்பு; 3,5,7,9=சுப பஞ்சகம்; 4 -இராஜ பஞ்சகம்.
தானப்ரீதி-எலுமிச்சை; 6- சோர பஞ்சகம்-தானப்ரீதி- பூஜை மணி; 8. ரோக பஞ்சகம்.
தானப்ரீதி-தான்யம்.


தாரா பலன்:- ஜென்ம நக்ஷத்திரம் முதல் அன்றைய தினம் நக்ஷத்திரம் வரை எண்ணி கொண்டு வந்த தொகையை
ஒன்பதால் வகுத்து நின்ற மிச்சத்தில் 2,4,6,8,9,மிக உத்தமம்.1,3,5,7, வேண்டாம்.


சந்திர பலன்:- ஜென்ம ராசி முதல் அன்றைய தினம் சந்திரன் நிற்கும் ராசி வரை எண்ணி வந்த தொகைக்கு பலன்.
1. சுகம், நன்மை; 2. நஷ்டம்,சமம்; 3. லாபம், நன்மை; 4. வியாதி;தோஷம்; 5. பங்கம்;துயரம்; 7. கடன்,சமம்,:
6.. சத்துரு ஜயம், நன்மை; 8.விரோதம்,சமம்; 9.தாமதம்,சமம்; 10.சம்பத்து, நன்மை;11.ஐஸ்வர்யம்;12. நஷ்டம்.


அவரவர் ராசிக்கு சந்திராஷ்டம நக்ஷத்திரங்கள்.( சந்திரன் எட்டாம் வீட்டில்)


மேஷம்-விசாகம், அனுஷம், கேட்டை; ரிஷபம்-மூலம், பூராடம், உத்திராடம்;
மிதுனம்-உத்திராடம், திருவோணம், அவிட்டம்; கடகம்- அவிட்டம், சதயம், பூரட்டாதி.
சிம்மம்-பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; கன்னி-அசுவினி, பரணி, கார்த்திகை


துலாம்-கிருத்திகை, ரோஹிணி, மிருக சீர்ஷம்;விருச்சிகம்:-மிருகசீர்ஷம், திருவாதிரை, புனர்பூசம்;
தனுசு:- புனர்பூசம், பூசம், ஆயில்யம்; மகரம்- மகம், பூரம், உத்திரம்; கும்பம்;_உத்திரம், ஹஸ்தம், சித்ரை.
மீனம்:- சித்திரை, சுவாதி, விசாகம்.