Announcement

Collapse
No announcement yet.

Mooka pancasati - Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Mooka pancasati - Periyavaa

    Mooka pancasati - Periyavaa
    குருவே சரணம்(03.03.2019 Sunday) மகா பெரியவா நாங்கள் உங்கள் உபதேசத்தை கேட்பதர்க்காக காத்து கொண்டு இருக்கிறோம். உங்கள் பாதம் பணிகிறோம். உங்கள் ஆசி எங்களுக்கவேண்டும். ;.

    சொன்னவர்-சரஸ்வதி அம்மாள் காஞ்சிபுரம்.


    தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா


    புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.


    குழந்தைக்குப் பேச்சு வரவில்லை.




    பெற்றோர்களின் இதயத்தில் பெரிய சூனியம்விழுந்தது.


    'இரண்டு வயசாச்சே,இன்னும் பேச்சு வரல்லே'.


    வாயை மூடிக்கொண்டிருந்தாலாவது


    சரி - அதைக்காட்டிலும் கொடுமை - எப்போதும்


    பிதற்றிக் கோண்டேயிருக்கிறான்.


    தொண்டை வலிக்காதா? உடல்நலம் கெடாதா?


    கண்களில் பொங்கிவந்த நீரை துடைத்துக்கொண்டு


    கெஞ்சினாள், ராஜேஸ்வரி.


    பெரியவாள் பதில் சொல்லவில்லை. ராஜேஸ்வரி,


    அவள் கணவன் ரங்கராஜன்,குழந்தை பாபு -மூவரையும்


    அலட்சியப்படுத்துவதைப் போல, பார்வையை வேறு


    எங்கங்கோ செலுத்திக்கொண்டிருந்தார்கள்,பெரியவா.


    "மூகபஞ்சசதீ தெரியுமா-ன்னு கேளு..."


    தொண்டர் வந்து கேட்டார்.


    "தெரியாது.."


    "சுலோகமாகப் படிக்காமல், ராகம்போட்டு பாட்டுப்போல


    பாடி - காஸெட்டுக்கு கூடவந்திருக்கே.காஸெட்டிலேர்ந்து


    பாட்டுப் போலவே பாடக் கத்துக்கோ, நீ பாடுகிறதை


    குழந்தை கேட்கட்டும்.."


    ராஜேஸ்வரிக்கு பெரியவாளின் பூரண அனுக்ரஹம்


    கிடைக்கவில்லை என்பது போன்ற ஒரு குறை மனத்தில்


    தங்கிவிட்டது உண்மைதான்.பெரியவாளின் உத்திரவை,


    முதலில் நிறைவேற்றிப் பார்ப்போம்.


    இயல்பாகவேசங்கீதஅபிமானிஎன்பதால்,


    மூகபஞ்சசதியின்பல சுலோகங்கள், ராக - தாளத்துடன்
    ராஜேஸ்வரியின்நெஞ்சில் விரைவில் பதிவாகி விட்டன.


    டம்ளரில் பால் கொடுக்கும் போது,உணவு ஊட்டும் போது,


    குளிப்பாட்டும் போது, தூங்க வைக்கும்போது.....-ஆனந்தபைரவியும்,சிந்துபைரவியும், காபியும்,


    நீலாம்பரியும், தேவகாந்தாரியும்,அமீர்கல்யாணியும்


    அலை வீசின.


    பாபு,காது கொடுத்துக் கேட்டான்;கவனமாகக் கேட்டான்.


    அவனுள்ளே ஏதோ நிகழ்ந்திருக்க வேண்டும்.


    பிதற்றல் குறைந்துகொண்டே வந்து, ஒருநாள் நின்றே


    போயிற்று.அவனால் ஒரு தொந்திரவு இல்லை.


    அவ்வளவு அடக்கமான பையன்.


    இவ்வளவு தான் போலிருக்கிறது,இந்தப் பிறவியில்


    என்ற சமாதானம் அமைதியைத் தந்தது.


    சமையற்கட்டில், ராஜேஸ்வரியின் ஆனந்தபைரவி


    இனிமையாகக் கேட்கிறது. MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM!
Working...
X