Announcement

Collapse
No announcement yet.

arasa maram pradhakshinam.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • arasa maram pradhakshinam.

    வ்ருக்ஷராஜன் என்றால் வ்ருக்ஷம் என்றால் மரம்; ராஜன் என்றால்=அரசன். விஞ்ஞானிகள் அரச மரத்திற்கு இட்ட பெயர்.
    ஃபிக்கஸ் ரெலிஜியோஸா. அரச மரத்தின் வேர் பகுதியில் ப்ருஹ்மாவும், நடு பகுதி விஷ்ணுவாகவும்,மேற் பகுதியில் சிவனாகவும் பரம்பொருள் உறைகின்றான், எங்கிறது--ஸ்காந்தம்.


    பகவத் கீதையில் மரங்களில் நான் அசுவத்தம் எங்கிறார். கிருஷ்ண பரமாத்மா. தர்ப்பை புல்லிலும் அடியில் ப்ருஹ்மாவும், நடுவில் விஷ்ணுவும், நுனியில், சிவனும் இருப்பதாக கூறப்படுகிறது. கோயிலில் ப்ரதிஷ்டை ஆகியுள்ள சிவலிங்கத்தின் அடிபாகம்=ப்ருஹ்ம ஸ்வரூபம், ஆவுடையார் இடைபகுதி விஷ்ணு ஸ்வரூபம், மேல் பகுதி லிங்கம் சிவ ஸ்வரூபம்.


    அக்னி புராணம் :- அரச மரம் வம்ச வ்ருத்தி வழங்கும் குணமுள்ளது. என்று கூறுகிறது.


    நம் உடல் என்பது அரச மரத்தின் பழம் போன்றது; அது சுக துக்கங்களை அனுபவிக்கிறது.
    ஆன்மா என்பது அந்த பழத்தினுள் உள்ள விதை போன்றது. விதை எல்லாவற்றிர்க்கும் சாட்சியாக உள்ளது.சுக துக்கங்களால் அல்லல் படவில்லை என் கிறது--உபநிஷத்.


    ஒரு யக்ஞத்தில் வெறுப்புற்ற அக்னி தேவன் , ஒரு அசுவத்தின் ( குதிரை) உரு எடுத்துக்கொண்டு யாக சாலை விட்டகன்றார்.
    அசுவம் மறைந்து இருந்த மையால் அரச மரம் அசுவத்த மரமாயிற்று. அக்னி தேவன் ஒரு அரச மரத்தில் லய படுத்திக்கொண்டு மறைந்தார். இதனால் அரச மரமே அக்னி சொரூபமாக கருத படுகிறது.




    யக்ஞங்களில் அக்னியே அனைத்து தேவதைக்குண்டான ஹவிஸ்ஸை பெற்றுக்கொண்டு, எடுத்து சென்று ,தேவதைகளுக்கு அளித்து அவற்றை மகிழ்விப்பது போல அரச மரத்திற்கு செய்யும் வழிபாடுகளும் உரிய தெய்வங்களை சென்றடைகின்றன.


    ஆதி சங்கர பகவத் பாதாள் அசுவத்த என்ற பதத்திற்கு வியாக்கியானம் கொடுக்கிறார். ஶ்வ என்றால் நாளை என்று பொருள்.
    அஶ்வ என்றால் நாளை என்று ஒன்று இல்லாதது. த்த என்றால் இருப்பது, நிற்பது என்று அர்த்தம். அதாவது நாளை இன்று போல் இராது; வேறு விதமாக இருப்பது எங்கிறார். அதுபோலதான் இந்த ப்ரபஞ்சத்தின் தன்மை எங்கிறார்.




    ஆகையால் அசுவத்த வ்ருக்ஷம் என்பது ப்ரபஞ்சத்தின் உருவகம். அதை தொழுவது ப்ரபஞ்சமாக வ்யாபித்து இருக்கும்
    பர ப்ருஹ்மத்தையே தொழுவதாகும் என்று தத்துவம்.


    கதோப நிஷத்:- 3ம் அத்தியாயம், 2ம் ப்ரஸ்னம்=யம தர்ம ராஜன் கூறுகின்றான். இது தலை கீழாய் என்றும் மறையாது நின்றிருக்கும் அசுவத்த மரம். இது தான் ப்ருஹ்மம். இதை நீ தேடி கண்டு அடைய வேன்டும்.


    நீல ருத்ர உபனிஷத்:-3 ஆவது மந்திரம்-- நீரின் மேல் நிலைத்து இருக்கும் அசுவத்தினின்றும் தோன்றி வரும் ருத்ரன் தீயனவற்றை அழிக்கின்றான்.


    ஸ்வேதாஸ்வதார உப நிஷத்:- இணை பிரியா இரு பறவைகள் ஒரே அசுவத்த மரத்தில் உள்ளன. ஒன்று கனிகளை சுவைக்கிறது. மற்றொன்று வாளாக இருக்கிறது.முன்னது ஜீவாத்மா; பின்னது பரமாத்மா; ஜீவாத்மா கனியின் சுவையில் சொக்கி கிடந்து , பரம்பொருளை மறந்து துக்க கடலில் வீழ்கிறது.அதற்கு அருகிலிருக்கும் மற்ற பறவையை கண்டால் பர மாத்மாவை அறிந்து கொண்டால் அதன் துக்கம் மறைந்து விடுகிறது.


    சாந்தி குஸுமாகரம் புத்தகத்தில் அரச மரத்திற்கு காக மல தோஷ நிவ்ருத்தி ஹோமமும், உபநயனமும், பிறகு வேப்ப மரத்தோடு சேர்த்து விவாஹமும் செய்து வைக்க வேண்டும் .என்ற விவரம் உள்ளது. அதன் பிறகே இந்த இணைந்த வேம்பு, அரசு வழிபட தகுதி உடையவை ஆகின்றன.




    அசுவத்தாமாவின் அஸ்திரத்தால் அபிமன்யுவின் மனைவியான உத்திரையின் கர்பம் கலைய தொடங்கியது. பீஷ்ம
    பிதாமஹர் அறிவுரைப்படி உத்திரை, சுபத்திரை த்ரெளபதி ஆகியோர் ஸோம வார அமாவாசை விரதம் இருந்து அரச மரம் ப்ரதிக்ஷிணம் செய்தனர். ஆதலால் பரீக்ஷித் பிறந்தான்; பாண்டவ வமிசம் தழைத்தது.




    பத்ம புராணம்:- ஸோம வார அமாவாசை யன்று மஹா விஷ்ணுவும், மஹா லக்ஷிமியும் அரச மரத்தில் வந்து உறைந்திருந்து
    தம்மை வழிபடுவோருக்கு அருள்வதாக ஐதீகம்.


    அந்தர் வாஹிநி யாகிய ஸரஸ்வதி நதி ஒரு அசுவத்த மரத்திலிருந்து தான் உற்பத்தியாகி வருகிறாள் என்கிறது-வாமனபுராணம்..


    தேவ அசுர யுத்தத்தின் போது மஹா விஷ்ணு அசுவத்த மரத்தில் மறைந்து இருந்தார் என்கிறது,. ப்ருஹ்ம புராணமும், பத்ம புராணமும். ஆதலால் அரச மரத்தை வேறு ப்ரதிமை ப்ரதிஷ்டை செய்யாமல் அப்படியே வழிபடலாம் என்கிறது சாத்திரம்.


    அறுபது ஆண்டுகள் ஜீவித்திருக்க வைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி பாராட்டவும், அது நாள் வரை செய்த பாவ செயல்களுக்கு கழுவாய் தேடவும், இனியும் பல்லாண்டுகள் நலமாக வாழவும் வேண்டி,செய்ய வேண்டிய சஷ்டி அப்த பூர்த்தி என்ற சாந்தி காரியம் குறித்து விரிவான விதி முறைகள் சாந்தி குசுமாகரம் பூர்வ பாகம், 41 ஆவது அநுவாகத்தில் உள்ளது.


    அப்போது பூஜைக்கு ஆவாஹனம் செய்ய படும் ஆயுர் தேவதைகளோடு அசுவத்தையும் ஆவாஹனம் செய்ய சொல்லி உளது.
    கிரியைகளின் அங்கமாக அசுவத்த ப்ரதக்ஷிணமும் விதிக்க பட்டுள்ளது. இதனால் ஆயுள் அபிவிருத்திக்கு அசுவத்த பூஜை
    துணை செய்கிறது. இந்த அனுவாகத்திலேயே அசுவத்த மரத்திற்கு போதி என்ற மாற்று பெயரும் காணப்படுகிறது.


    ஸ்ரீ மஹா விஷ்ணுவின் ஒரு அவதாரம் அரச மரத்தின் கீழ் நிகழ்ந்ததாக ஸ்காந்த புராணம் கூறுகிறது. கிருஷ்ணாவதாரம்
    நிறைவுற்றது ஒரு அரச மரத்தின் அடியில் தான்.


    சனி க்கிழமை தவிர மற்ற நாட்களில் அரச மரத்தை தொடக்கூடாது.அரச மர ஸ்தோத்ரத்தின் பலசுருதி இவ்வாறு உள்ளது.
    வாத, ரோகம் போன்ற பிணிகள் அகல ஞாயிற்று கிழமைகளில் ஸூர்யனை தொழுத பின்னரும், மங்களங்கள் உண்டாக சிவனை திங்கட்கிழமைகளில் தொழுத பின்னரும், வெற்றி வேண்டுமாயின் செவ்வாய் கிழமை அம்பாளை தொழுத பின்னரும்,




    வாணிபத்தில் வெற்றி பெற , புதன் கிழமைகளில் தேவர்களை தொழுத பின்னரும், ஞானம் பெற வேண்டின், வியாழக்கிழமை
    குரு பகவானை தொழுது விட்டும், செல்வம் வேண்டின், வெள்ளிகிழமைகளில் லக்ஷைமியை தொழுதுவிட்டும், துக்கங்கள்
    தொலைய வேண்டுமெனில் சனி கிழமைகளில் ஸகல் தேவர்களையும் தொழுத பின்னரும்,அரச மரம் ப்ரதக்ஷிணம் செய்க.




    குறிப்பாக சந்திரனையும், சனைஸ்சரனையும் அசுவத்த உருவில் பூஜித்து வ்ருக்ஷ ராஜனுக்கு நமஸ்காரம் செய்க.
    ப்ரதக்ஷிண விதி:- விநாயகருக்கு ஒன்று; ஸூரியனுக்கு இரண்டு, சிவனுக்கு மூன்று; விஷ்ணுவிற்கு நான்கு. அரச மரத்திற்கு ஏழு. இவற்றிர்கு குறைவாக ப்ரதக்ஷிணம் செய்ய க்கூடாது


    வாயினால் ஸ்தோதிரங்கள் உச்சரித்த வண்ணமும், மனதினால் இறைவனை சிந்தித்த வண்ணமும் மெதுவாக ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும்., தெய்வத்தை வணங்கி நிற்கும் பக்தனுக்கும் ஸ்வாமிக்கும் இடையே சென்று ப்ரதக்ஷீணம் செய்ய க்கூடாது. ஸ்வாமிக்கும் பலி பீடத்திற்கும் இடையே ப்ரதக்ஷிணம் செய்ய க்கூடாது. ப்ரதக்ஷிண முடிவில் நமஸ்காரம் செய்ய வேண்டும்.


    அரச மரம் அதிக அளவில் கரிய மில வாயுவை உட்கொண்டு, ப்ராண் வாயுவை விட வீர்யமிக்க ஓஸோன் வாயு வெளியிடுவதனால் ,காலை வேளைகளில் அந்த மரத்து அடியில் நடமாடுவது நல்லது. ஸ்ரீ மந் நாராயணனுக்கு நல்ல
    எண்ணைய் தீபம் சிறப்பானது. ஆதலால் அசுவத்த மர பிரதக்ஷிணத்திற்கும் நல்ல எண்ணைய் தீபம் ஏற்றலாம்.




    அரச மரத்தின் மீது அபிசேகம் செய்வதானால் நல்ல எண்ணைய். ,வாசனை திரவிய பொடி, சந்தனம், பால், தீர்த்தம் ஆகியவைகளால் மட்டும் அபிஷேகம் செய்யவும். மற்ற திரவ்யங்களால் அபிசேகம் செய்தால் அது அரச மரத்திற்கு அடியில் சென்று மரத்திற்கு ஊறு விளைவிக்க கூடும்.அரச மரத்தடி, விநாயகர், நாகருக்கும் இம்மாதிரியே அபிசேகம் செய்ய வேண்டும்.




    அரச மரம் எல்லா பாகமும் மருத்துவ குணங்கள் கொண்டது.அரச இலை பெண்மையையும், வேப்பம்பழம் ஆண்மையையும் குறிப்பதாக ஐதீகம்.வேப்ப மரத்தின் அனைத்து பகுதிகளும் மருத்துவ குணம் கொண்டவை. பஞ்சபூதங்களில் ஆகாயத்தை குறிப்பது அரச மரம். இடா, பிங்களா, ஸுசும்னா நாடிகள் நமது உடலில் சூக்ஷ்ம சரீரத்தில்


    இருந்து குண்டலினி சக்தி என்ற பெயருடன் சிரஸ்ஸின் உச்சியில் ஸஹஸ்ராரத்தை சென்றடைகிறது. இதனால் ஞானம் ஸித்திக்கின்றது. அவன் ஜீவன் முக்தன் ஆகிறான். இடா நாடியும், பிங்களா நாடியும் பிண்ணி பிணைந்து எழுவதைத்தான் அரச மரத்தடியில் , இரண்டு நாகங்கள் இணைந்து இருப்பதாக உரு அமைக்க பட்டு, ப்ரதிஷ்டை செய்யபட்டு, உள்ள நாகர்கள் குறிப்பிடுகின்றன.




    விரித்த படத்துடன் ஒரு நாகர் மட்டும் உள்ளதாக செதுக்க பட்டுள்ள நாகர் பிரதிமைகள்,ஸுஸும்நா வழியாக எழுந்த குண்டலினி ஸஹஸ்ராரத்தில் விகஸித்து ஞானம் வழங்குவதை அறிவிக்கிறது.


    வீட்டிலிருந்து கோயிலுக்கு எடுத்துச்செல்ல வேண்டிய பொருட்கள்._ மஞ்சள் தூள்20 கிராம்; குங்குமம்-10 கிராம், சந்தனம்-பெளடர் 50 கிராம்; வெற்றிலை-20; பாக்கு அல்லது சீவல் 20 கிராம், வாழைப்பழம்-6; அரச மரத்து அடியில் விளக்கேற்ற ஒரு காமாக்ஷி விளக்கு, நல்ல எண்ணைய்-100 கிராம், திரி நூல்-4; தீப்பெட்டி-1; கற்பூரம்-10 கிராம், ஊதுவத்தி-4; ஊதுவத்தி ஸ்டேன்டு; கற்பூர கரண்டி, பஞ்ச பாத்திர உருத்திரிணி, அபிஷேகம் செய்ய ஜலத்திற்கு வேண்டிய பாத்திரம்.உதிரி புஷ்பம்-அர்ச்சனைக்கு-200 கிராம்; தொடுத்த புஷ்பம் -4 முழம். ;மணி;தீர்த்தம் விட ஒரு கிண்ணம்; தேங்காய்-1.; கஞ்சுகம்-1, வாத்தியார் தக்ஷிணை;




    உட்கார தடுக்கு-1; அபிஷேகத்திற்கு நல்ல எண்ணைய், காய்ச்சாத பசும்பால்-200 மில்லி; வாசனை பொடி தூள் 10 கிராம்.


    சந்தன பெளடர்; கோல மாவு,= அரிசி மாவு; மங்களாக்ஷதை;




    108 எண்ணிக்கை ப்ரதக்ஷிணம் செய்யும் போது போட வேண்டிய பொருள், உருண்டை மஞ்சள்; குங்குமம் பொட்டலம், தாம்பூலம், புஷ்பம், கொய்யா பழம், சப்போட்டா பழம், வாழை பழம், வேர்க்கடலை/பொட்டுகடலை, உருண்டைகள், தட்டை. முறுக்கு; அதிரசம், அப்பம், , திராக்ஷை, மாதுளம்பழம்; அப்பம். ஜம் பிஸ்கட், சாகலேட், இத்யாதிகளில் ஏதோ ஒன்று. அதற்கு மூடி போட்ட பாத்திரத்துடன் எடுத்து வரவும். இது தவிர நைவேத்தியம் செய்ய தனியாக பத்து எண்ணிக்கை இந்த 108 போக எடுத்து வரவேண்டும்.


    ஒரு தாம்பாளம் அல்லது டிரே அரச மரத்தடியில் வைத்து மந்திரம் சொல்லிக்கொண்டே ஒவ்வொன்றாக போடவும். விளக்கு அணையாமல் எறிவதற் குண்டான செங்கற்கள்.


    அரச மரம் ப்ரதக்ஷிணம் செய்யும்போது கீழ் காணும் 11 சுலோகங்கள் ஜபிக்க வேண்டும். குறைந்த பக்ஷமாக , 5,6ஆவது
    சுலோகங்களை மட்டுமாவது ஜபிக்கவும்.


    1. ஆயுர் பலம் யஶோ வர்ச்ச: ப்ரஜா: பஶு வஸூ நிச, ப்ருஹ்ம ப்ரஞ்யாம் மேதாம் ச த்வம் நோ தேஹி வனஸ்பதே.
    2. ஸததம் வருணோ ரக்ஷேத் த்வாமாராத் வ்ருஷ்டிராஶ்ரயேத், பரிதஸ்த்வாம் நிஷேவந்தாம் த்ருணானி ஸுகமஸ்துதே.
    3. அக்ஷிஸ்பந்தம் புஜஸ்பந்தம் துர்ஸ்வப்னம் துர்விசிந்தனம், ஶத்ரூணாம்ச ஸமுத்தானம் ஹ்யஸ்வத்த ஶமய ப்ரபோ.
    4.அஶ்வத்தாய வரேண்யாய ஸர்வைஶ்வர்ய ப்ரதாயிநே நமோ துஸ்ஸ்வப்ன நாசாய சுஸ்ஸ்வப்ன பல தாயினே.
    5.மூலதோ ப்ருஹ்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபினே, அக்ரதஹ் சிவ ரூபாய வ்ருக்ஷராஜாய தே நம:


    6.அஶ்வத்த ஸர்வ பாபானி ஶத ஜன்மார் ஜிதானி ச நுதஸ்ய மம வ்ருக்ஷேந்த்ர ஸர்வைஶ்வர்ய ப்ரதோ பவ.




    7 யம் த்ருஷ்ட்வா முஸ்யதே ரோகை: ஸ்ப்ருஷ்ட்வா பாபைஹி ப்ரமுஸ்யதே, பதாஶ்ரயாச் சிரஞ்சீவிதமஶ்வத்தம் நமாம்யஹம்




    8. அஶ்வத்த ஸுமஹா பாக ஸுபக ப்ரியதர்சன, இஷ்ட காமாம்ஸ்ச மே தேஹி ஶத்ருப்யஸ்ச பராபவம்.
    9. ஆயு; ப்ரஜாம் தனம் தான்யம் ஸெளபாக்கியம்,ஸர்வஸம்பதம் தேஹி தேவ மஹா வ்ருக்ஷ த்வாமகம் சரணம் கத:


    10. ருக் யஜுர் ஸாம மந்த்ராத்மா ஸர்வரூபி பராத்பர: அஶ்வத்தோ வேத மூலோ அஸாவ்ருஷுபி: ப்ரோச் யதே ஸதா


    11. ப்ருஹ்மஹா குருஹா சைவ தரித்ரோ வ்யாதிபீடித: ஆவ்ருத்ய லக்ஷ ஸங்க்யம் தத் ஸ்தோத்ரமேதத் ஸுகீ பவேத்.


    அனந்த ராம தீக்ஷிதர் ஜய மங்கள ஸ்தோத்ரத்தில் உள்ளது.


    நாராயண காயத்ரி மந்திரம்:- ஓம் நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி;தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்.


    அஶ்வத்த நாராயாண காயத்ரி :-ஓம் நாராயணாய வித் மஹே வ்ருக்ஷ ராஜாய தீமஹி,தன்னோ அஶ்வத்த ப்ரசோதயாத்.




    அரச மரத்து வேரடியில் கோலம் போடவும். விளக்கு ஏற்றி வைத்துகொள்ளவும். முதலில் விநாயகர் பூஜை. சொம்பிலும், பஞ்ச பாத்திர உத்ரிணியிலும் கோவிலில் இருந்து ஜலம் எடுத்து வைத்துக்கொள்ளவும். மஞ்சள் தூளில் சிறிது ஜலம் விட்டு
    பிள்ளையார் பிடித்து ஒரு பித்தளை தாம்பாளத்தில், வெற்றிலையில் வைக்கவும்.வெற்றிலை நுனி தெற்கு பார்த்து வராமல் வைத்துகொள்ளவும்,


    உதிரி புஷ்பம், பழம், 2 வெற்றிலை, ஒரு பாக்கு, சந்தனம், குங்குமம், மங்களாக்ஷதை, எடுத்து வைத்துக்கொள்ளவும். ஊதுபத்தி, ஏற்றி வைத்து கொள்ளவும். கற்பூர கரண்டியில் கற்பூரம் பெரிய வில்லையாக வைத்தால் தான் அணையாமல் எரியும்.


    கையில் புஷ்பம், அக்ஷதை எடுத்துகொண்டு நெற்றியில் ஐந்து தடவை குட்டிக்கொள்ளவும். சுக்லாம்பரதரம் விஷ்ணும், சசி வர்ணம் சதுர்புஜம், ப்ரஸ்ஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே.


    அயம் முஹூர்த்த: ஸுமுஹூர்த்தோ அஸ்த்விதி பவந்தோ மஹாந்தோ அணுக்ருஹ்ணந்து. என்று ப்ரார்த்தித்து கொள்ளவும். அயம் முஹூர்த்த: ஸுமுஹூர்த்தோஸ்து என்று ப்ரதி வசனம் தானே சொல்லிக்கொள்ளவும். ததேவ லக்னம் ஸுதினம் ததேவா தாரா பலம், சந்திர பலம் ததேவா வித்யா பலம் தெய்வ பலம் ததேவா லக்ஷ்மிபதே தேங்க்ரியுகம் ஸ்மராமி.


    பெண்களுக்கு ப்ராணாயாமம் கிடையாது.


    ஸங்கல்பம்:- மமோபாத்த ஸமஸ்த துரிதய க்ஷத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம், கரிஷ்ய மானஸ்ய கர்மண: நிர்விக்னே ந பரிஸமாப்த்யர்த்தம் ஆதெள விக்நேஸ்வர பூஜாம் கரிஷ்யே.


    ஆஸன பூஜை:- ப்ருதிவ்யா: மேரு ப்ருஷ்ட ரிஷி: சுதலம் சந்த: கூர்மோ தேவதா; ப்ருத்வீ த்வயா த்ருதா லோகா தேவி த்வம் விஷ்ணு நா த்ருதா; த்வம் ச தாரய மாம் தேவி ப்வித்ரம் குரூ ச ஆஸனம். ஆஸனத்தில் மேல் அக்ஷதை சேர்க்கவும்.


    மணி பூஜை:- ஆகமார்த்தம் து தேவானாம் கம நார்த்தம் து ரக்ஷஸாம் கண்டாரவம் கரோம்ஞசனம் யாதெள தேவதாஹ்வான லாஞ்சனம். மணி அடிக்கவும்.


    கையில் புஷ்பம் எடுத்துக்கொண்டு மஞ்சள் பிள்ளையார் மீது போடவும். கணா நாம் த்வா கணபதிகும் ஹவாமஹே கவீம் கவிணாம் உபமஶ்ர வஸ்தமம். ஜ்யேஷ்டராஜம் ப்ருஹ்மணாம் ப்ருஹ்மணஸ்பதே ஆ ந: ஶ்ருண்வன் நூதிபிஸ்ஸீத ஸாதனம். அஸ்மின் ஹரித்ரா பிம்பே மஹா கணபதிம் த்யாயாமி, மஹா கணபதீம் ஆவாஹயாமி.


    மஹா கணபதயே நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி. ; புஷ்பம் போடவும். பிறகு உத்தரிணியிம் ஜலம் எடுத்துக்கொண்டு மந்திரம் சொல்லிகொண்டே அரச மரத்தடியில், அல்லது ஒரு கிண்ணத்தில் ஜலம் விட்டு வரவும்.
    மஹா கணபதயே நம: அர்க்கியம் ஸமர்ப்பயாமி.
    மஹா கணபதயே நம: பாத்யம் ஸமர்ப்பயாமி.
    மஹா கணபதயே நம: ஆசமனீயம் ஸமர்ப்பயாமி.




    மஹா கணபதயே நம: ஔபஸாரிக ஸ்நானம் சமர்ப்பயாமி.
    மஹா கணபதயே நம: ஸ்நாநா னந்த்ரம் ஆசமணியம் ஸமர்ப்பயாமி.
    கையில் அக்ஷதை எடுத்துக்கொண்டு மஞ்சள் பிள்ளயார் மீது போடவும்.
    மஹா கணபதயே நம: வஸ்த்ரார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.
    மஹா கணபதயே நம: யக்ஞோப வீதார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.


    மஹா கணபதயே நம: கந்தாந் தாரயாமி- சந்தனம் எடுத்து மஞ்சள் பிள்ளயார் மீது வைக்கவும்.
    மஹாகணபதயே நம: ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி- குங்கும வைக்கவும்.
    மஹா கணபதயே நம: அலங்கர ணார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி. அக்ஷதை சேர்க்கவும்.




    மஹா கணபதயே நம: புஷ்பை பூஜயாமி; புஷ்பத்தால் மஞ்சள் பிள்ளையாருக்கு அர்சிக்கவும்.
    ஓம் ஸுமுகாய நம: ஓம் ஏக தந்தாய நம:ஓம் கபிலாய நம:; ஓம் கஜ கர்ணகாய நம:; ஓம் லம்போதராய நம:; ஓம் விகடாய நம:; ஓம் விக்ண ராஜாய நம:; ஓம் கணாதிபாய நம: ஓம் தூம கேதவே நம:; ஓம் கணாத்யக்ஷாய நம:;ஓம் பால சந்திராய நம:; ஓம் கஜானனாய நம:; ஓம் வக்ர துண்டாய நம: ஓம் ஸூர்ப்ப கர்ணாய நம: ஓம் ஹேரம்பாய நம: ஓம். ஸ்கந்த பூர்வஜாய நம: ஓம் மஹா கணபதயே நம: நானா வித பரிமள பத்ர புஷ்பானி ஸமர்பயாமி.




    தூபார்த்தம் தீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி--அக்ஷதை சேர்க்கவும். வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து நைவேத்தியம் செய்யவும். பழம் , ஒற்றைபடையில் வைத்து நைவேத்யம் செய்ய க்கூடாது. வெற்றிலை காம்புகளை கிள்ளி எறிந்து விட்டு நைவேத்யம் செய்யவும். பழத்தின் தோல் சிறிது உறிக்க பட்டிருக்க வேண்டும். உத்திரிணியில் தீர்த்தம் எடுத்து கீழ் கண்ட மந்திரம் சொல்லி நைவேத்திய பொருட்களை சுற்றவும்.


    ஓம் பூர்புவஸ்ஸுவஹ; தத்ஸ விதுர்வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத்.ஓம் தேவ ஸவித அப்ரஸுவ; ஸத்யம் த்வர்தே ந பரிஷஞ்சயாமி. அம்ருத மஸ்து; அம்ருதோபஸ்தரணமஸி; கையில் புஷ்பம் எடுத்துக்கொண்டு ஓம் ப்ராணாய ஸ்ஸுவாஹா, ஓம் அபானாய ஸ்ஸுவாஹா; ஓம் வ்யானாய ஸ்ஸுவாஹா:; ஓம் உதானாய ஸ்ஸுவாஹா:


    ஓம் ஸமானாயா ஸ்ஸுவாஹா: ஓம் ப்ருஹ்மணே ஸ்ஸுவாஹா: ப்ரஹ்மணிம ஆத்மா அம்ருதத்வாயா மஹா கணபதயே நம; கதலி பலம், தாம்பூலம் நிவேதயாமி. புஷ்பத்தை மஞ்சள் பிள்ளையார் மீது போடவும். மத்யே மத்யே அம்ருத பானீயம் ஸமர்ப்பயாமி உத்தரணியில் ஜலம் எடுத்து கிண்ணத்தில் அல்லது அரச மரத்தடியில் விடவும். அம்ருதா பிதா நமஸி:- உத்தரா போஜனம் ஸமர்ப்பயாமி-உத்தரணியில் ஜலம் எடுத்து விடவும்.


    தாம்பூலம் ஸமர்ப்பயாமி:- உத்தரணியில் ஜலம் எடுத்து தாம்பூலத்தை சுற்றி விடவும். கற்பூரம் ஏற்றி நீராஜனம் ஸமர்ப்பயாமி என்று சொல்லி மஞ்சள் பிள்ளையாருக்கு காண்பிக்கவும். நீராஜனாந்தரம் ஆசமணம் ஸமர்ப்பயாமி. உத்தரிணி ஜலம் எடுத்து விடவும்.




    பிரார்த்தனை:- வக்ர துண்ட மஹா காய ஸூர்ய கோடி ஸமப்ரப அவிக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா.
    ப்ரதக்ஷிணம், நமஸ்காரம். கணபதி ப்ரஸாதம் தலையில் தரித்து கொள்ள வேண்டும்.


    சுமங்கலி பெண்கள் தீர்க்க ஸெளமங்கல்யமும், புத்ர ஸெளபாக்கியமும் ஏற்பட இதை செய்ய வேண்டும். திங்கட் கிழமை
    காலையில் சூரிய உதயத்தின் போது முதல் பத்தரை மணி வரைக்கும் குறைந்த பக்ஷம் அமாவாசை திதி இருக்க வேண்டும். திங்கட்கிழமை காலை பத்தரை மணிக்கு மேல் அமாவாசை திதி வந்தால் அரச மரம் ப்ரதக்ஷிணம் கிடையாது.
Working...
X