கிரஹ காரஹத்வம்=கிரஹங்கள் எவற்றை குறிக்கும் என்பது.


சூரியன்:- ஆத்மா, உடல்வலிவு. ,உடல்கட்டு, உஷ்ணம், எரியும் பதார்தங்கள், சிவ பூஜை, தைரியம், அரசாங்க உத்யோகம். வயது காலம், காரசாரமான உணவு, பூமி, தகப்பன், ப்ரகாசம், ஆத்ம ஞானம், ஞானோதயம் உண்டாகுதல், ஆகாயம், தீர்க்கதரிசி, பயம், தொழில் சாலைகளில் உற்பத்தி யாகும் பொருட்கள். கிராம அதிகாரி, க்ஷத்திரிய வர்க்கம், வீரமரணமெய்யும் வாய்ப்பு,பஞ்சாயத்தின் முடிவு, மனித வர்க்கங்கள். சதுரமான பொருட்கள். ப்ரதாபங்கள்;


பல வித புற்கள், வயிறு, உற்சாகம், அடர்ந்த காடு, உத்தராயணம், கோடை காலம், பிரகாசமான கண்கள், மலை புறத்தில் சஞ்சரித்தல்,காட்டு மிருகங்கள், வழக்குகள் விவகாரங்கள், பித்தம், வட்டத்தின் பரிதி, கண்ணை பற்றிய வ்யாதிகள். வேகம், துளிர், இலையுள்ள மரங்கள், சுத்தமான மனது , மேன்மையான உடல் நலம். நகைகள், தலை வலி. தந்தை வர்கத்தினர், முன் கை; தாமிரம், சிவப்பு வஸ்திரம், கல் வெட்டு, கல்லில் சிற்ப வேலை.


கல்லிலான விக்கிரஹம், நதிகரை, மத்தியான நேரம், பிரபலமான ஆட்கள்;மனோ தைரியம், முகப்பொலிவு, அடக்க முடியாத கோபம்,, பிறரால் கடத்தபடுதல்; சாத்வீக சுபாவம்,ஒரு அயனம், மாணிக்ககல், வயல்கள், ஜாதகத்தில் முதல் பாவம்,இடா நாடி, சிவந்த கண்கள், அணு ஆயுதங்களில் பயிர்ச்சி, புதிய கண்டு பிடிப்புகள்; அரசியல் சாசனம், மேதாவி தன்மை. புகழ் பெறுதல், தன்னம்பிக்கை, மன கோட்டைகள்,முதுகு எலும்பு, பரந்த நெற்றி,


கண்ணின் மணி, க்ஷயரோகம், அஜீரணம், குடல், யோனி வியாதிகள். சக்கரை வியாதி, காலரா, போன்றவைகள், நிலக்கடலை, முந்திரி பருப்பு, பசுக்கள், மக்களது பிரதி நிதி, இரசாயந தொழில் புரிவோர்கள், மருந்து வியாபாரம், தட்டான், வயிற்றில் புண் உண்டாவது; விஷங்களிலிருந்து செய்ய படும் மருந்துகள், வேப்ப மரம், திருடர்கள். பயிர் தொழில் செய்பவர்கள்; சர்ப்பம், அத்திமரம், திருப்பதி மலை போன்றவை கூட சூரியனது காரஹத்துவங்கள்.


சந்திரன்:-


புத்தி, மலர்ந்த புஷ்பங்கள், வாசனை பொருட்கள், மனம், நெருங்கி பழகும் தன்மை, நீர் நிலைகள், குளம்,கிணறு, ஆற்றில் நீர் உள்ள பாகங்கள்,
தேவி உபாசனை, யாத்திரை, பிரமானங்கள்,சோம்பல், களைப்பாறுதல், ரத்த பித்தம், காக்காய் வலிப்பு, படரும் கொடிகள், ஹிருதயம், பெண்களது சாந்த குணம், தூக்கம், தண்ணீர், நாணயங்கள், வெள்ளி, ருசியுள்ள கரும்பு, சமமான சீரான சுக ஜீவனம், சீத ஜ்வரம், தாய்; வளர்ப்பு தாய், மத்தியானம், முக்தி அடைதல்; மலை மேலுள்ள ஸ்தலங்களை பார்ர்க போவது, வெளுத்த நிரம், அரைஞான், ஓடு, உப்பு, இளகிய மனது; மனதை கட்டுபடுத்தும் சக்தி, தாமரை உள்ள குளம், முஹூர்த்தங்கள். முகத்தின் பிரகாசம், வயிற்றின் அடிபகுதி, தெய்வ பக்தியில் ஆழ்ந்து இருப்பது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
மது பானங்கள், சந்தோஷம், காம தேவன், அரசனால் சன்மானிக்க படுவது, இரவில் தைரியம் உண்டாகுதல், வைடூரியம், சுலபமான வெற்றிகள். அழகு போஜனம், தூர தேச ப்ரயாணம், கடல் கடந்து போகுதல், தோல், பழுத்த பழங்கள், நீர் வாழ ஜந்துக்கள், பட்டு வஸ்த்திரம், தொழில் வளர்ச்சி, அழகான உடை;
நல்ல பெயர், வினயம், தேன், கற்கண்டு, பெண்களீன் மாங்கல்ய பாக்கியம், நாட்டு பற்று, இரக்கம், பெருந்தன்மை, தலையின் உச்சி பாகம், கடலில் பணி புரியும் ஆட்கள், பிறரது கஷ்டங்களை புரிந்து கொள்வது, பெண்களின் கர்ப்பபை, பிங்களா நாடி, வெண் குஷ்டம், தொண்டை புண், வைத்தியம், திரவ ரூபத்தில் மருந்து வகைகள். செவிலி தாய், அலை போன்ற தலை மயிர்,


கடலில் உற்பத்தி ஆகும் உணவு பொருட்கள், அழகான சரிரம், தனது சுய பலத்தை அறியாமை, , பெண்களை துன்புறுத்துவது, கருவழித்தல், பெண்களின் மாத விடாய், பத்திரிக்கை நிரூபர்கள், சித்திரம் வரைபவர்கள், வாதத்தால் ஏற்படும் கஷ்டம், சிறு காரியங்களூக்கு கூட விஷேஷ முயற்சி செய்ய வேண்டிய சூழ்நிலை.சத்துவ குணமுள்ள ராக்ஷஸர்கள், வெள்ளை குதிரை.
செவ்வாயின் காரகத்துவங்கள்:-
ஆண்களின் ஆணவம் மற்றும் ஆண்மை; பூமி. முரட்டு சுபாவம், எதிர்ப்பு சக்தி, ஜனங்கள் மீது ஆதிபத்தியம், புகழ் குன்றி போகுதல், திருடன், யுத்தம் , கிரியா சக்தி, கலகம், பரஸ்பர விரோதம், சத்துருக்களது நல்ல மனம். சிவப்பு வஸ்துக்களில் ஆர்வம், பூந்தோட்டம், வயல்கள்.


விவசாயத்துக்கான நீர் நிலைகள், மிருதங்கம், தவில் போன்றவற்றின் சப்தங்கள். ,நினைத்த காரியத்தை செய்து முடித்த பரம த்ருப்தி, நாற்காலிகள், சிறிய அரசன், முட்டாள், பாம்பு, முன் கோபம்,வெளி நாட்டில் நல்ல பெயரெடுத்தல். , படை தாக்குதல், நெருப்பு, இரைந்து பேசும் வாக்கு வாதங்கள்,


வாந்தி பேதி, உஷ்ண ஜுரம், மெய் காவலன், அரசாங்க உத்தியோகம், இரத்தத்தினால் உடலில் ஏற்படும் கோளாறுகள். தேவியின் பால் பக்தி, ஆயுதங்கள்., முத்து மாலை, சுப்பிரமணியரை வணங்குவது, மிக உறப்புள்ள வஸ்துக்கள். அரசனை அண்டி வாழ்வது, சத்துருக்களை ஜயிப்பது, சூரிய உதயத்தில் காணப்படும் நல்ல சொப்பனம், வெய்யலின் கொடுமை, பராக்கிரமம், கம்பீர தோற்றம், ஒருவனது உண்மையான நடத்தை, கிராம ஆதிபத்தியம், காட்டில் வசிக்கும் ஜனங்கள், பொருட் காட்சிகள், மூத்திர கோச சம்பந்த வியாதிகள். தச்சர், இழந்த பொருள் திரும்ப கிடைப்பது, எரிந்து போன இடம், துஷ்டர்கள்.


சுகமான மாமிச சாப்பாடு, ரத்தம் சிந்துதல், தாமிரத்தால் செய்ய பட்ட மூர்த்திகள், புருஷ தன்மை, பிறரை குற்றம் சொல்வது, துப்பாக்கி, வெடிகுண்டு, பீரங்கி, போன்ற யுத்த ஆயுதங்கள். இடிந்து போன வீடு, வெறுப்புக்குறிய காம விகாரம், வீண் கோபம், சொந்த வீடு, பருத்த மரங்கள், உடன் பிறந்தோர், கடப்பாறை, தெற்கு பக்கம், வெட்கமில்லா குல பெண்கள், அடுக்கு மாடி வீடுகள், வேட்டை, குதிரை லாயம், நாற்றமுள்ள ரசாயன பொருட்கள், மின்சாரம்,


இடி, மின்னல், பேராசை, நியாய ஸ்தலங்கள், கொடுத்த வாக்கை காப்பாற்றுவது, விலை உயர்ந்த வாஹனம், அலர்ஜி, ரத்தக்குறைவு, மனைவியின் உடன் பிறந்தோர், விதைகள், உழவரது ஆயுதங்கள், சாகச செயல்கள். தேசாபி மானம் , பொறாமை, விடா முயர்ச்சி, எந்த சூழ் நிலையையும் சமாளிக்கும் தைரியம், பொறுமை யின்மை, சபல புத்தி, பித்த ப்ரகிருதி, கஸ்தூரி, வெல்லம், வெறுப்பு, திடீரென்று ஏற்படும் நன்மை தீமைகள், காவல் படை மின்சாரம்,


திடீரன்று கோபம் வருதல், அதிகார துஷ் ப்ரயோகம், இரவோடு இரவாக பணக்காரனாவது, பணத்தின் அசிங்கமான உபயோகம்,தர்மத்தை மறந்து எதை வேண்டுமானாலும் செய்பவர்கள், கொல்லன்மார், லஞ்சம் வாங்கும் சர்க்கார் ஊழியர்கள், கர்வம் பிடித்தவர்கள், இடையர்கள், வேத ப்ராஹ்மண குடும்பம், தர்க்க சாஸ்திரம், பெரிய பட்டிணத்தில் வசிக்கும் ஜனங்கள், நீண்ட கால சத்ருத்வம்; பல இடங்களுக்கு போய் வியாபாரம் செய்பவர்கள்.