Announcement

Collapse
No announcement yet.

uma avathaaram.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • uma avathaaram.

    04-06-2019 கர வீர விருதம்;- ஜ்யேஷ்ட மாதம் சுக்ல பக்ஷ ப்ரதமை இன்று அரளிசெடியில் பூத்திருக்கும் பூவை பூஜை செய்ய வேண்டும்.வீட்டில் பூச்செடி இருப்பவர்கள் பூச்செடிக்கு பூஜை செய்யலாம். பூச்செடி வீட்டில் இல்லாதவர்கள் கடையிலிருந்து அரளி பூ வாங்கி வந்து அதை ஒரு தாம்பாளத்தில் வைத்து அந்த தாம்பாளத்திற்கு சந்தனம், குங்கும இட்டு கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி பிரார்த்திக்க வேண்டும்.
    கரவீர- விஷாவாஸ; நமஸ்தே பானுவல்லப மெளளி மண்டன துர்காதி தேவானாம் ஸததம் ப்ரிய . இந்த பூக்களை சிவனுக்கோ அல்லது விஷ்ணுவிற்கோ அர்ச்சனை செய்யலாம். குடும்பம் தினமும் வாஸனை உடையதாக இருக்கும் இதனால் என்கிறார்கள்..


    05-06-2019 ரம்பா த்ருதியை:- ஸ்ம்ருதி கெளஸ்துபம்-118 சொல்கிறது. புஷ்ப மண்டபிகா கார்யா ரம்பா ஸ்தம்போப ஶோபிதா தத்ர ஸம்பூஜயேத் தேவீம்
    சக்த்யா ஸ்வர்ணாதி நிர்மிதாம் மண்டபத்தின் நடுவில் தேவி படம் அல்லது விக்கிரஹம் வைத்து அதன் நான்கு பக்கங்களும் வாழை மரம் கட்டி நிறைய வாழைபழங்களும், நெய்யில் தயாரித்த பக்ஷணங்களையும் 16 உபசார பூஜை செய்து சுவாசினிகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் வினியோகம் செய்ய வேண்டும்.கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி வேண்டி கொள்ளவும். ஜ்யேஷ்ட மாதம் சுக்ல பக்ஷ த்ருதியை அன்று செய்ய வேண்டும்.
    வேதேஶு ஸர்வ சாஸ்த்ரேஷு திவி பூமெள ரஸாதலே ஸ்ருதோ த்ருஷ்டஸ்ச பஹுஶோன சக்த்யா ரஹித: சிவ: த்வம் சக்திஸ், த்வம் ஸ்வதா, ஸ்வாஹா த்வம், ஸாவித்ரீ ஸரஸ்வதீ, பதீம் தேஹி ஸுதான் தேஹி க்ருஹம் தேவி நமோஸ்துதே.யோஷித: புருஷோ வாபிக்யாதம் ரம்பா விருதம் புவி பார்யாம் புத்ரம் க்ருஹம், போகான் குலவ்ருத்தி மவாப்யுனு: என்கிறது பவிஷ்யோத்தர புராணம்.
    கணவனுடன் சேர்ந்தும் செய்யலாம், தனியாகவும் பெண்கள்/ஆண்கள் செய்யலாம். இதனால் நல்ல கணவன், நீண்ட ஆயுள்; நல்ல புத்ரன், வீடு , சுக போகங்கள், வம்ச விருத்தி கிடைக்கும். ஆண்களுக்கு நல்ல மனைவி, வீடு,குழந்தை செல்வம். சயன சுக போகம் வம்ச விருத்தி கிடைக்கும்.


    06-06-2019 உமா அவதாரம்;-ஜ்யேஷ்ட மாதம் சுக்ல பக்ஷம் சதுர்த்தி அன்று இமயமலையின் மகளாக , தக்ஷனின் மகள் அவதாரம் எடுத்த நாள். கடுமையாக தவம் புரிந்து பரமேஸ்வரனை திருமணம் செய்து கொண்டாள். குழந்தாய் தவம் வேண்டாம் என எல்லோரும் சொன்னார்கள். வட மொழியில் உமா என்றால் குழந்தாய் தவம் என்று அர்த்தம். அம்பாளை பூஜிப்பதால் ஸர்வ செளபாக்கியங்களும், மங்களம் களும் கிடைக்கும். உமா மஹேஸ்வரரை இன்று 16 உபசார பூஜை செய்யலாம். ஸ்தோத்ரங்கள், பாராயணங்கள் சொல்லலாம்.
Working...
X