16/07/2019 சந்த்ர க்ரஹண புண்யகால தர்ப்பணம்


அதாவது ஆனி 31 ( 16.7.2019 ) செவ்வாய் அன்று நள்ளிரவுக்கு பிறகு ஆரம்பமாகும் உத்திராடம் நக்ஷத்திரத்தில் சம்பவிக்கிறது


அன்று பின்னிரவுக்கு மேல் 03.00 மணிக்கு மத்தியமம் .


க்ரஹண புண்யகால தர்ப்பணம் அதிகாலை 03.00 மணிக்கு மேல் ஸ்நானம் செய்து பிறகு செய்ய வேண்டும்.


காலை 04.28 மணிக்கு மோக்ஷம் , க்ரஹணம் விட்டவுடன் மீண்டும் ஒரு முறை சுத்த ஸ்நானம் செய்யவும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
பூராடம், உத்திராடம், ச்ரவணம் க்ருத்திகை, உத்திரம் நக்ஷத்திரக் காரர்கள் பரிஹாரம் செய்து கொள்ளவும்.


கர்ப்ப ஸ்திரீகள் க்ரஹண காலத்தில் சந்த்ரனை பார்க்க வேண்டாம் .


க்ரஹண தர்ப்பணம் முடித்து ஸ்நானம் செய்த பின் மாதப் பிறப்பு தர்ப்பணம் செய்யும் முன்பு அதற்கென ஒருமுறை மீண்டும் ஸ்நானம் செய்த பின்பே தக்ஷிணாயன புண்யகால தர்ப்பணம் பண்ண வேண்டும்.


ஆடி 01ம் தேதி ( 17/07/2019 ) புதன் அன்று 6.00 மணிக்கு சூர்ய உதயம் .
அன்று முற்பகல் 11.38 மணிக்கு தான் கடக ரவி சங்க்ரமணம்.


எனவே சூர்ய உதயம் ஆனவுடன் வழக்கம் போல அனுஷ்டான ஸ்நானம் செய்து பகல் 11.30 மணிக்குள் உத்தராயணம் இருக்கும் போதே ஆடி மாத பிறப்பு தக்ஷிணாயண புண்யகால தர்ப்பணம் செய்ய வேண்டும்.


ஒரே நாளில் இரு தர்ப்பணமா என்று பலருக்கு சந்தேகம். இரண்டு தர்ப்பணங்களும் அவச்யம் செய்யவேணும்.


ராம்... ராம்... ��