குடும்பிகளுக்கான சாதுர்மாஸ்ய விரதம்.
மனைவி மக்களுடன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் சாதுர்மாஸ்ய வ்ரதம் உண்டு.


ஆஷாட மாதம் சுக்ல பக்ஷ த்வாதசி முதல் கார்த்திகை மாதம் ஏகாதசி வரையில் நான்கு மாதங்கள் நாம் உட்கொள்ளும் உணவில் ஒரு சில வற்றை விலக்கி கட்டுபாடுகளுடன் இருப்பதே சாதுர்மாஸ்ய வ்ரதம்.


13-7-2019 முதல்11-8-2019 முடிய உணவில் விலக்க வேண்டியது :காய்,, புளி, மிளகாய், தேங்காய்.


12-8-2019 முதல்09-9-2019 முடிய தயிர் மற்றும் அவற்றால் தயாரிக்கும் பொருட்கள் கூடாது. தயிறில் ஒன்றுக்கு நான்கு பங்கு ஜலம் விட்டு மோராக உபயோகிக்கலாம். நிறம், தரம்,, ருசி குணம் மாறி விடுவதால் மோர் சாப்பிடலாம்..


10-9-2019 முதல் 09-10-2019 முடிய பால் மற்றும் பாலை கொண்டு தயாரிக்கும் உணவு வகைகள் கூடாது. ஆனால் தேங்காய் பால் உபயோகிக்கலாம்
.
10-10-2018 முதல் 09-11-2019 முடிய த்வி தள விரதம். அதாவது தானியங்களை உடைத்தால் இரு அல்லது பல விதைகள் இருக்கும்.
ஆதலால் பருப்பு வகைகள் , புளி மிளகாய். காய்கறிகள் சாப்பிடக்கூடாது. ஆனால் வாழைக்காய், வாழைதண்டு, வாழப்பூ,, சேனை, வள்ளிகிழங்கு, இஞ்சி, மாங்காய் இஞ்சி, பொன்னாங்கண்ணி ஆகியவை உபயோகிக்கலாம்.. இதனால் ஆரோக்கியம், குடும்ப அமைதி உண்டாகும்.


13-7-2019 அன்று பூஜை அறையில் ஸ்வாமிக்கு முன்பாக ஹே அச்யுத நான் இன்று முதல் நான்கு மாதங்கள் வரை இந்த வ்ருதத்தை செய்கிறேன். அது வறை எனக்கெந்த தடங்களும் வராமல் செய்வாயாக தடை ஏதுமில்லாமல் வ்ரதம் நிறைவேற நீ எனக்கு அருள் புரிவாயாக. என்று மஹா விஷ்ணுவை ப்ரார்த்தித்து கொள்ளவும்.


ரிஷிகள் கூறி இருப்பதால் இம்மாதிரி இந்த வருடம் முயர்ச்சிக்கலாமே. டாக்டர் சொன்னால் தான் கேட்க வேண்டுமா.


13-07-2019 முதல் 09-11-2019 முடிய ப்ரதக்ஷிணம்=வலம் வருதல்=கோயிலை சுற்றி வருதல். செய்யலாம். கோயில்களில் நாம் சுற்றும் ஒவ்வொரு காலடியும் முந்தைய பிறவிகளில் நாம் செய்த பாபங்கள் நம்மை விட்டு போய் விடுவதாக சாத்திரங்ககள் பகர்கின்றன. இதையும் ஒரு விரதமாக செய்யலாமே.


ஜாதி, மதம் இனம் வேறுபாடு இல்லை. எல்லோரும் செய்யலாம். தினமும் காலையும் மாலையும் செய்யலாம். அரச மரம், துளசி --காலையில் மட்டும் தான் ப்ரதக்ஷிணம். பவிஷ்யோத்திர புராணத்தில் வேத வ்யாசர் தர்ம புத்திரர்க்கு கூறினார்.


இந்த 4 மாதங்களில் ஒரு லக்ஷம் ப்ரதக்ஷிணம் செய்வது உத்தமம். முடிந்த வரை குறைந்த பக்ஷம் ஒரு ஆயிரம் ப்ரதக்ஷிணமாவது இந்த வருடம் செய்து பார்க்கலாமே. சிலவில்லாமல் நாம் செய்த பாபங்கள் விலகுமே.


பசுவை ப்ரதக்ஷிணம் செய்ய ஶ்லோகம்:- கவாம் அங்கேஷு திஷ்டந்தி புவனானி சதுர்தச: யஸ்மாத் தஸ்மாத் சிவம் மே
ஸ்யாத் இஹ லோகே பரத்ர ச.


துளசியை ப்ரதக்ஷிணம் செய்ய ஶ்லோகம்:- ப்ரஸீத மம தேவேசி க்ருபயா பரயா முதா அபீஷ்ட ஸித்திம் ஸெளபாக்கியம்
குரு மே மாதவ ப்ரிய.


காலை மாலை இரு வேளையும் ப்ரதக்ஷிணம் ஹனுமாரை செய்ய ஶ்லோகம்;- ராம தூத மஹா வீர ருத்ர பீஜ ஸமுத்பவ
அஞ்சனா கர்ப ஸம்பூத வாயு புத்ர நமோஸ்துதே.


ஸ்ரீ மஹா விஷ்ணுவை ப்ரதக்ஷிணம் செய்யும் போது சொல்ல வேண்டிய ஶ்லோகம்:- அனந்தம் அவ்யயம் விஷ்ணும்
லக்ஷிமீம் நாராயணம் ஹரிம் ஜகதீச நமஸ்துப்யம் ப்ரதக்ஷிண பதே பதே.


உங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள சிவன் அல்லது அம்பாள், அல்லது பிள்ளையார், அல்லது முருகன் அல்லது விஷ்ணு அல்லது ஹனுமார் கோவிலில் ஓடாமல் நிதானமாக நடந்து முடிந்த நாட்களில் இந்த நான்கு மாதங்கள் தினமும் காலை மாலை ப்ரதக்ஷிணத்தை கணக்கிட்டு கொண்டு செய்து பார்க்கலாமே.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
நாம் செய்த பாபங்களிலிருந்து சிலவில்லாமல் விடுபடலாம். யானி கானிச்ச பாபானி ஜன்மாந்திர க்ருதானி ச தானி தானி
வினஸ்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே.


16-07-2019 குரு பூர்ணிமா- வியாஸ பூஜை செய்முறை விளக்கம்.


பிறவி இலா தன்மை அடைய ப்ருஹ்ம ஸூத்ரம், பாரதம் ,பாகவதம், முதலான 18 புராணங்கள் எழுதியவரும், வேதங்க்களை
நான்கு பாகங்களாக பிறித்தவரும், மஹரிஷிகளுக்கு தலைவருமான கிருஷ்ண த்வைபாயனர் என்னும் வஸிஷ்டரின் கொள்ளு பேரனும், சக்தியின் பெளத்ரரும், பராசரரின் புதல்வருமான வேத வ்யாசருக்கு இன்று பூஜை செய்ய வேண்டும்.


வீட்டிலோ அல்லது பொது இடத்திலோ பூஜை செய்யலாம். ஒரு பீடம் தயாரித்து அதில் மஞ்சள் அக்ஷதை மணடலமாக போட்டு, அதன் மேல் 45 எலுமிச்சை பழங்களை வரிசையாக வைத்து அந்த பழங்களில் ஆவாஹனம் செய்ய வேண்டும்.


அக்ஷதை மண்டலத்தின் நடுவில் 5 எலுமிச்சை பழங்கள் வைத்து அதில் கிருஷ்ணர், வாசுதேவர், ஸங்கர்ஷணர், ப்ரத்யும்னர்,
அனிருத்தர் ஆவாஹனம் செய்து 16 உபசார பூஜை தனி தனியே செய்ய வேண்டும்.

இந்த 5 எலிமிச்சம்பழகளுக்கு தெற்கில் 5 எலிமிச்சம்பழம் வைத்து வ்யாஸர், ஸுமந்து, ஜைமினி, வைசம்பாயனர், பைலர் என்ற ஐந்து முனிவர்கள் ஆவாஹனம் செய்து 16 உபசார பூஜை தனி தனியே செய்ய வேண்டும்.


வடக்கு பக்கத்தில் 5 எலிமிச்சை பழங்களில் ஆதி சங்கரர், ஸுரேஸ்வரர், பத்ம பாதர், ஹஸ்தாமலகர், தோடகர் ஆகிய ஆசார்ய புருஷர்களை ஆவாஹனம் செய்து 16 உபசார பூஜை தனி தனியே செய்ய வேண்டும்.


ஸ்ரீ கிருஷ்ணருக்கு இரண்டுபக்கத்தில் 2 எலிமிச்சம் பழம் வைத்து ப்ருஹ்மா, சிவன் இருவரையும் ஆவாஹனம் செய்து, 4 திக்குகளில் 4 எலிமிச்சம்பழம் வைத்து ஸநகர், ஸநந்தனர், ஸனத் குமாரர், ஸனத் ஸுஜாதர்களையும் ஆவாஹனம் செய்து 16 உபசார பூஜை தனி தனியே செய்ய வேண்டும். இவர்கள் ப்ருஹ்மாவின் மானஸ புத்திரர்கள் ஆவர்.


கிருஷ்ணருக்கு கிழக்கில் 5 எலிமிச்சம்பழம் வைத்து குரு, பரம குரு, பரமேஷ்டி குரு, பராத்பர குரு ப்ருஹ்ம வித்யா ஸம்ப்ரதாய போத குருக்கள் --ஆவாஹனம், 16 உபசார பூஜை தனி தனியே செய்ய வேண்டும்.


திராவிடாசார்யார்; கெளட பாதர், கோவிந்த பகவத் பாதர், ஸங்க்க்ஷேப சாரீரகாசார்யாள், விவரணாசார்யாள், சுகர், நாரதர், இந்திரன், யமன், அக்னி, வருணன், நிருருதி, வாயு, ஸோமன், ஈசானன், கணேசன், க்ஷேத்திர பாலர், துர்கா, ஸரஸ்வதி ஆகியோர் களையும் ஆவாஹனம், தனி தனியே 16 உபசார பூஜை செய்ய வேண்டும்.


ஒரு பொது இடத்தில் பலர் ஒன்று சேர்ந்து செய்யலாம். ஶ்ரேயஸ் அடையலாம். இதுவே வ்யாஸ பூஜை அல்லது குரு பூர்ணிமா பூஜை எனப்படும்.