பக்தியின் வலிமை.
குழந்தைக் கண்ணன் கடுமையான சேஷ்டைகள் செய்து கொண்டிருந்தான்.

ஏன் உபத்திரவம் செய்கிறாய்?, என்று கண்டித்த யசோதை, அவனது காதை கோபத்துடன் திருகினாள்.

உரலில் பிணைத்துக் கட்ட கயிறைத் தேடிப்போனாள். அவள் வரும்வரை ஆடாமல் அசையாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தான் கண்ணன்.

அவனைக் கட்டும் போது, கயிறை முடிச்சுப் போட முடியாமல் தவித்தாள். ஆயர்பாடியில், அத்தனை பேர் வீட்டில் இருந்தும் கயிறை எடுத்து வந்து கட்டியும் அவனைக் கட்ட முடியவில்லை.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஒரே ஒரு கயிறு தான் பாக்கி! அது தான் அங்குள்ள பெண்களின் கழுத்தில் கிடந்த தாலிக்கயிறு. அதை யாராவது தருவார்களா என்ன! அம்மா, தன்னைக் கட்டிப் போட முடியாமல் திணறுவதைப் பார்த்து கண்ணனுக்கே என்னவோ மாதிரியாகி விட்டது! ஒரு கயிறைப் பார்த்து, நீ என்னைக் கட்டு, என்று அவன் மனதுக்குள் உத்தரவு போட்ட பிறகு தான் அதைக் கொண்டு யசோதை கட்டிப் போட்டாள்.

பக்தி என்று வந்து விட்டால், தன் காதைத் திருகவும், கயிறால் கட்டவும் கூட பரம்பொருள் அனுமதிக்கிறான். கண்ணனின் இந்த எளிமையைப் பற்றி படித்த நம்மாழ்வாருக்கு மயக்கமே வந்து விட்டதாம். மூர்ச்சையாகி கீழே விழுந்து விட்டார். தெளிய ஆறுமாதம் ஆனது.


Source: harikrishnamurthy

( This post is for sharing knowledge only, no intention to violate any copy rights )