Announcement

Collapse
No announcement yet.

Sri Rama Jayam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sri Rama Jayam


    Sri Rama Jayam

    அயோத்தியா காண்டத்தில் வருகிற ஒரு அற்புதமான காட்சி இது...


    தாயின் சொற்படி நகரை விட்டு நீங்கி ராமனும், சீதையும்,
    லக்ஷ்மணனும் காவி உடுத்தி வனத்துக்குள் நுழைகிறார்கள். கங்கைக் கரையை அடைந்து அங்கே முனிவர்களின் உபசாரத்தை ஏற்று, கங்கையில் நீராடச் செல்கிறார்கள்.

    நுரைத்து ஓடும் கங்கை நீரின் துளிகள் ராமனின் சடாமுடி கற்றைகள் வழியாக ஊடாடி வந்து விழுகின்றன.

    திரண்ட அழகான ஸ்ரீராமனின் புயங்கள் அந்த நீரில் பிரகாசமாக ஜொலிக்கின்றன. அந்நிலையில் தன் கணவனைக் கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறாள் சீதை.
    கம்பனின் கவிதை இதைக் காட்சியாக விரிக்கிறது கூடவே ஸ்ரீமன் நாராயணன் அம்சமான ஸ்ரீராமனை அம்பலக்கூத்தன் சிவபிரானோடு ஒப்பிடுகிறார் கவிச்சக்ரவர்த்தி –
    *வெங்கண் நாகக் கரத்தினன், வெண் நிறக்
    கங்கை வார் சடைக் கற்றையன்,
    கற்புடை
    மங்கை காண நின்று ஆடுகின்றான், வகிர்த்
    திங்கள் சூடிய செல்வனின் தோன்றினான்.
    (கங்கைப் படலம், 18)

    [வெங்கண் நாகக் கரத்தினன் – வெம்மையான கண்களைக் கொண்ட நாகங்களைக் கரத்தில் ஆபரணமாக அணிந்த சிவன்;

    சிறிய கண்களைக் கொண்ட யானையின் துதிக்கை போன்ற கம்பீரமான கரங்களைக் கொண்ட இராமன்; வகிர்த் திங்கள் – பிறை நிலா]

    தில்லை அம்பலத்திலே உமையவள் மகிழ்ந்து காண கௌரி தாண்டவம் ஆடிய கங்காதரனின் திருவுருவை ஸ்ரீராமனின் கங்கை நீராட்டத்தில் இணைத்துக் காட்டுகிறது கம்பன் கவியமுதம்.

    சிவனையும் விஷ்ணுவையும் வைணவத்தையும், சைவத்தையும் மட்டுமல்ல, வடக்கையும், தெற்கையும் கூட இணைக்கும்படியான அழகான பொருள் பொதிந்தது இந்த கம்பன் கவிமாலை.

    This is a wonderful scene coming in the ayodhya meeting...
    Ram, Sita and lakshman are entering the forest in the form of mother's heaven. The Ganges has reached the shore and accepting the benefits of the sage, they are going to swim in the hands.

    The drops of the ganges water that are running in the lungs are coming through the ūṭāṭi of Rama's caṭā.

    The Beautiful Sri Rama's flowers are shining bright in the water. Sita is enjoying her husband in that situation.

    The poem of kamban is spreading this as a scene, even sri mann narayanan's feature is compared to Sri Rama Ampalakkūt Shiva, Kaviccakravartti -

    * Onions, nākak, white color
    The Ganga of the Ganges,
    Kaṟpuṭai
    He is standing to see the lady, vakirt
    Monday crowned the cell of the cell.
    (Ganga film, 18)

    [onion nākak - lord shiva who has worn the nākaṅ in the hands of the wet eyes;

    Raman with a small eye-like elephant's tutikkai; VAKIRT MONDAY - MOON MOON]

    Kamban Ganga Sri Sri Sri kamban kamban kamban.

    This kamban kavi evening is a beautiful thing that has been made to connect with Shiva and Vishnu, not only the vaiṇavattai and the vegetarian.


    Source: FB

    This post is for sharing knowledge only, no intention to violate any copy rights
Working...
X