Announcement

Collapse
No announcement yet.

Rettai pulavar - 2 pandits in tamil

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Rettai pulavar - 2 pandits in tamil

    Posted: 31 Jul 2019 04:41 AM PDT
    தமிழ் புலவர்கள் J K SIVAN
    ரெட்டை புலவர்கள்
    சொக்கலிங்கம் தருவான்
    வீட்டிலும் கோயிலிலும் பள்ளிக்கூடம், ஆபீஸ்களிலும் சரஸ்வதியும் லக்ஷ்மியும் பக்கத்தில் படத்தில் இருந்தாலும் ஒரே இடத்தில் இருவரும் அநேகமாக இருப்பதில்லை. இது நான் கண்டுபிடித்தது அல்ல. நிறைய கல்விமான்கள், ஆசிரியர்கள், கவிஞர்கள் அனுபவித்து சொன்ன உண்மை. லட்சுமி இல்லாவிட்டால் .ஏழ்மை, வறுமை. சரஸ்வதி இல்லாவிட்டால் நிறைய செல்வம் - இப்படி இருந்தவர்கள் எண்ணிக்கையில் அதிகம்
    14 ம் நூற்றாண்டில் ஒரு சோழ வேளாளர் தம்பதிகளுக்கு ரெண்டு குழந்தைகள் பிறந்ததாம். .ஒன்றுக்கு கண் இல்லை. இன்னொன்றுக்கு இரு கால்கள் இல்லை. கற்று நல்லபுகழ் பெறுவார்கள் என்று ஜோசியர் சொன்னாராம். முதுசூரியர், இளஞ்சூரியர் என்று பெயராம். அவர்கள் சகோதரர்களே இல்லை, ஒன்றாக சேர்ந்ததால் தான் இரட்டை புலவர்கள் என்ற பெயர் என்று படிக்கும்போது நமக்கு எதையும் ஜாக்கிரதையாக பாதுகாக்க தெரியாது வழக்கமும் இல்லை என்பது அடிக்கடி புரிகிறது. இந்த ரெட்டை புலவர்கள், கண்தெரியாதவர் தோளில் கால் இல்லாதவர் வழிகாட்டுவார்.குருடர் தோளில் முடவர் என்ற ரெண்டுபேரும் சிறந்த புலவர்கள். ஒருவர் முதல் ரெண்டு அடி பாடினால் மற்றவர் மீதி ரெண்டு அடி பாடுவார். நிறைய ஊர்கள் சென்று பிரபுக்கள், வள்ளல்கள், ராஜாக்கள் எல்லோரையும் பார்த்து பாடல்கள் பாடி பரிசுகள் பெற்றவர்கள்.சிவபக்தர்கள். அநேக ஆலயங்களை தரிசித்தவர்கள்.
    ஒன்றிரண்டு அற்புதமான ரெட்டை புலவர்கள் பாடல்களை சொல்கிறேன். ஊர் ஊராக இப்படி நடந்து சென்றவர்கள் நாங்கூரோ ஆங் ஏதோ ஒரு ஊர் செல்கிறார்கள். அங்கே ஒரு பழைய சிவன் கோவில். ஆஹா , சிவனை தரிசனம் செய்துவிட்டு பசிக்கு உணவு தேடுவோம். உச்சி காலம் பூஜை நேரம் ஆகிவிட்டது. மணி காதில் கேட்டது. கோவிலுக்குள் சென்றார்கள். நைவேத்திய பிரசாதம் கிடைக்கலாம் பசி தீர்க்கலாம் என்றும் ஒரு நம்பிக்கை.
    அது உண்மையாக பிக்ஷாடனர் கோவில். வருமானமே இல்லை. நைவேத்திய ப்ரசாதத்துக்கோ, பூஜைக்கோ, வஸ்திரத்துக்கோ கூட வழியில்லாத வறுமை நிலை. அர்ச்சகர் ஒரு விசித்திரத்தை நிகழ்த்தினார்.
    அருகிலே இருந்த செங்கல்லை விளக்கில் உள்ள தீபத்தில் சூடேற்றி, அதை சுடசுட ஒரு தட்டில் வைத்து அதன் மீது ஈரத்துணியை போர்த்தி அந்த ஆவியை நைவேத்தியம் செய்த்துக்கொண்டிருந்தார். ஆத்மநாதர் போல இருக்கிறது.
    ரெட்டையர்களுக்கு பொங்கல் தான் ஆவி பறக்க நைவேத்தியம் ஆகிறதோ என்ற எண்ணம். நைவேத்தியம் ஆகியது. மணி சங்கு எல்லாம் முழங்கியது. பூஜை முடிந்தது. குருடருக்கு நடந்தது எதுவும் தெரியாதே. முடவர் மேலே பார்த்துவிட்டார். மேலே இருந்த முடவர் சிவன் மேல் பாட ஆரம்பித்தார்.
    தேங்குபுகழ் ஆங்கூர்ச் சிவனே அல்லாளியப்பா,
    நாங்கள் பசித்திருக்க நியாயமா? என்று நிறுத்த, குருடர் முடவரைச் சுமந்தவாறு மீதி ரெண்டு அடிகள் பாடுகிறார். ''போங்காணும் .....
    கூறு சங்கு தோல்முரசு கொட்டோசை அல்லாமல்
    சோறு கண்ட மூளி யார் சொல்?''
    அடே நீ பரமேஸ்வரனா, பரம ஏழைசிவனா, தெரியவில்லையே , நீயே இங்கே உன் உணவிற்கு ததிங்கிணத்தோம் போடுகிறாய். சோறு நேரத்தில் உனக்கு தோல் முரசு சத்தம் மணி சப்தம் ஒன்று தான் உனக்கு உணவு. ஆகவே வெறும் சத்தத்தைக்கேட்டு உணவாக அதை கொண்ட மூளி நீயா, அதை கேட்டு வெறும் வயிற்றோடு நாங்களா, இது நியாயமா சொல் ?
    அந்த அர்ச்சகர் சாமர்த்தியசாலியோ, கோவிலுக்கு அளிக்கப்பட மானியத்தை, பொருள்களை தனதாக்கிக்கொண்டு சிவனுக்கு சுடசுட செங்கலை மூடி கொண்டுவந்து அதன் மேல் நீர் தெளித்து ஆவி பறக்க காட்டினால் சூடான நைவேத்தியம் என்று ஏமாற்றுபவரோ?.அல்லது வேறு வழியில்லாமல் தானும் தன குடும்பமும் கூட செங்கல் ஆவியில் வாழும் தரித்திர நாராயண குடும்பமோ? எது வேண்டுமானாலும் ... இருக்கலாம் யார் கண்டது?
    ஒரு சமயம் ரெட்டைப்புலவர்கள் மதுரை சொக்கநாதனை தரிசனம் செய்து விட்டு பொற்றாமரைக்குளத்தில் தங்களது வஸ்திரங்களக் கசக்கி துவைக்க எண்ணம் கொண்டார்கள். குருடர் துணியை கசக்கி அடித்து துவைக்க, அது அவர் அவர் கையிலிருந்து நழுவி, விழுந்து விட்டது. அதைப் பார்க்க அவரால் முடியாதே. அதற்குள் முடவர் அதை பார்த்தாலும் நீரில் இறங்கி தண்ணீரில் தேட முடியாதே. விதியை நொந்தபோது கவிதை பிறந்தது. அவர்களால் முடிந்தது அது தானே. வேட்டி போச்சு பாட்டு வந்தது டும் டும் என்று நாம் பாட வழி கிடைத்தது.
    முடவர் முதல் ரெண்டடி வழக்கம் போல் பாடினார்: மீதி ரெண்டடியை குருடர் பாடுகிறார்.முழுப்பாட்டும் இது தான். :
    ''அப்பிலே தோய்த்திட் டடுத்தடுத்து நாமதைத்
    தப்பினால் நம்மையது தப்பாதோ? - செப்பக் கேள்
    'ஆனாலும் கந்தை, அதிலுமோர் ஆயிரங்கண்
    போனால் துயர் போச்சுப்போ'
    இந்த அற்புதமான பாடல் புரிகிறதா?
    அப்பு என்றால் நீர். துணி அடித்து துவைப்பதை ''தப்புவது'' என்று சொல்பவர்கள் இன்னும் உண்டு.
    அடே தம்பி துணியை நிறைய தண்ணீரில் தோய்த்து துணியை தப்பினால் அதற்கு கோபம் வராதா. எப்போது சிவனிடமிருந்து தப்புவது என்று தருணம் பார்த்து உன்னிடமிருந்து தப்பிவிட்டது''. என்று சிரித்தார் முடவர். குருடர் பலே புலவர் அல்லவா. பட்டென்று பதிலாக மீதி ரெண்டடி பாடுகிறார்.
    என்னடா இதில் பெரிய நஷ்டம் நமக்கு ஏற்கனவே கந்தல் துணி . நக்ஷத்திர பங்களா. ஆயிரம் கிழிசல். போனால் போகட்டுமே, சனி விட்டது. இனிமே கஷ்டம் எல்லாம் தீரும்'' என்கிறார் குருடர்.
    முடவர் விடுவாரா? என்னய்யா பேசுகிறீர். இருக்கிற ஒரே துணியும் போய்விட்டது. எதை மேலே போர்த்திக்கொண்டு குளிரில், கொசுவிடமிருந்து, இனிமேல் தப்புவது? என்று கவலையோடு ரெண்டடி பாட குருடர், முடவரைத் தேற்றுவது போல அடுத்த கடைசி ரெண்டடி பாடுகிறார். .அதில், ''உனக்கு எதற்கு வேண்டாத இந்த கவலை? அந்த வருகிறது. கலிங்கம் என்றால் துணி. இந்த கலிங்கம்போனால் ஏகலிங்கமாக விளங்கும் இந்த ஊர் மதுரை சொக்கலிங்கம் நமக்கு வேறே தந்து உதவுவானே '' என்கிறார். அதற்குள் யாரோ ஒருவன் நீரில் துணியை தருகிறான். வேறொருவன் வஸ்திரம் இருவருக்கும் கொண்டு வந்து தருகிறான். இது தான் சொக்கலிங்கம் தந்த கலிங்கம்.
    'கண்ணாயிரமுடைய கந்தையேயானாலும்
    தண்ணார் குளிரையுடன் தாங்காதோ?'
    'எண்ணாதீர், இக்கலிங்கம் போனாலென்
    ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை!'
    இரட்டைப் புலவர்கள் ஒன்றாகவே வாழ்ந்து ஒரே சமயத்தில் மறைந்ததாக சொல்கிறார்கள்.
Working...
X