Announcement

Collapse
No announcement yet.

Balloon & body - Balloon & body - Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Balloon & body - Balloon & body - Periyavaa

    பெரியவா சரணம்


    ஒரு குழந்தை எதிரில் இருந்த பலூன் வியாபாரியை பார்த்து பலூன் வேண்டுமென்று அழுதது. தாய் கண்டிக்க, ஞானக் குழந்தையான பெரியவா பலூன் வாங்கி குழந்தையிடம் தரும் படி சொன்னார்.


    பலூன் கைக்கு வந்தவுடன் குழந்தைக்கு ஒரே கொண்டாட்டம், கும்மாளம்.


    இதைப் பார்த்த மாமுனி "பாரு குழந்தை இப்போ ஒரே சந்தோஷமா இருக்கு. அது பலூனில் காத்துள்ள மட்டும் தான். காத்து போயிடுத்தோ அல்லது பலூன் உடைஞ்சி போச்சுன்னாலோ ஒரே வருத்தமாயிடும் அழும்.


    இப்போ எவ்வளவு சந்தோஷமோ, காத்து போனா அவ்வளவு துக்கம் வரும். நாமும் குழந்தை மாதிரி தான் இந்த உடம்பை வெச்சுண்டு விளையாடுறோம்.


    ரொம்ப சந்தோஷமா, சவுக்கியமா இருக்காப்புல நினைக்கிறோம். ஆனால் , இதுலயும் காத்து போயிட்டா ஒரே துக்கம், அழுகதான். இதைத் தான் சித்தர்கள் ரொம்ப சாதாரணமா 'காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா' ன்னு பாடிவிட்டார்கள் " என்றார்.


    சிறிய பொருளுக்கும் பெரிய விஷயத்தை எளிமையாக விளக்கும் ஞானேஸ்வரர் நம் பெரியவா!
Working...
X