Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்-

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்-

    Srimad Bhagavatam skanda 9 adhyaya 9 in tamil
    Posted on May 23, 2019by knramesh
    Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
    ஸ்ரீமத்பாகவதம்-ஸ்கந்தம் 9- அத்தியாயம் 9
    அத்தியாயம் 9
    அம்சுமான் நெடுங்காலம் கங்கையைக் கொண்டுவர விரும்பி தவம் செய்த போதிலும் அவனால் அது இயலவில்லை. நாளடைவில் அவன் மரணம் அடைந்தான். அவன் புத்திரனான திலீபனும் அவனைப்போலவே அதை சாதிக்க முயன்று முடியாமல் மரணம் அடைந்தான்.
    அவன் புதல்வன் பகீரதன் பெரும் தவம் செய்தான். அவனுக்கு கங்காதேவி தரிசனம் அளித்து அவன் கோரிக்கை என்னவென்று வினவ அதற்கு அவன் கங்காதேவியிடம் பூமிக்கு வர வேண்டினான்.
    அதற்கு கங்கா தேவி தான் பூமியில் வீழ்கையில் த்ன் வேகத்தைத் தங்குவோர் எவரும் இலர் என்றும் அப்படி ஒருவர் இல்லாவிடில் தான் பூமியைப் பிளந்துகொண்டு பாதாளம் சென்று விட நேரிடும் என்றும் கூறி மேலும் தான் பூமியில் தங்கினால் மனிதர் தன்னிடம் தங்கள் பாவத்தைக் கழிப்பார்கள் , அந்தப்பாவத்தைத் தன்னால் போக்க இயலாது என்றும் கூறினாள்.
    அதற்கு பகீரதன் சாதுக்களும் சந்யாசிகளும் கங்கையில் ஸ்நானம் செய்வதால் அவளுடைய பாவம் நீங்கும் என்றும் அவள் வேகத்தைத் தாங்கும் வல்லமை ருத்ரன் ஒருவருக்கே உண்டு என்றும் கூறி மஹாதேவனை தவத்தால் சந்தோஷிக்கச் செய்தான்.
    அதனால் ப்ரீதியடைந்த சிவனும் கங்கையைத் தன் தலையால் தாங்கினார். பகீரதனும் பூமியில் விழுந்த கங்கையைத் தன் பித்ருக்கள் சாம்பலாகிக்கிடந்த இடத்திற்கு அழைத்துசென்றான். கங்கையின் புனித நீர் பட்ட மாத்திரத்தில் ஸகரகுமாரர்கள் சுவர்க்கம் சென்றனர்.
    பகீரதன் வரலாற்றை வால்மீகி ராமாயணத்தில் விரிவாகக் காணலாம்.
    பகீரதனின் புதல்வன் ச்ருதன். இவன் வம்சத்தில் தோன்றியவன் ருதுபர்ணன். இவன் நளனுக்கு நண்பன். ( நளசரிதம் மகாபாரதத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. )இவனுடைய பௌத்திரன் ஸுதாஸன். இவனுடைய மகன் ஸௌதாசன் . இவன் ஒரு சமயம் வேட்டையாடுகையில் ஒரு ராக்ஷசனைக் கொன்றான். அந்த ராக்ஷசனுடைய சகோதரன் இவனைப் பழிவாங்க எண்ணி இவனுடைய அரண்மனையில் மாறுவேஷத்தில் சமையற்காரனாக அமர்ந்தான். குலகுருவான வசிஷ்டருக்கு நர மாமிசத்தை உணவாக சமைத்து வைத்தான். வசிஷ்டர் அதை அறியாமல் அரசனை ராக்ஷசனாகுமாறு சபித்தார். பிறகு உண்மை உணர்ந்து பன்னிரண்டு வருஷங்களுக்குப் பிறகு சாபம் முடிவுறும் என்றார்.
    ராக்ஷச்னாக இருந்தபோது இவன் ஒரு அந்தணனை அவன் மனவியுடன் கூடும்போது கொன்றான். அப்போது அந்த அந்தணனுடைய மனைவி அவனுக்கு ஸ்திரீ சம்போகம் ஏற்பட்டால் மரணம் உண்டாகும் என்று சபித்தாள். இதை அறிந்த அவன் மனைவி மதயந்தி சாபம் தீர்ந்த பின் அவனுடன் சேர்வதைத் தவிர்த்தாள். இதனால் அவனுக்கு சந்ததி உண்டாகவில்லை. பிறகு வசிஷ்டரின் அருளால் மதயந்திக்கு அச்மகன் என்ற புத்திரன் பிறந்தான்.
    அவனுடைய புத்திரன் மூலகன். இவன் பரசுராமரிடம் இருந்து ஸ்திரீகளால் அந்தப்புரத்தில் மறைத்து வைக்கப்பட்டு காப்பாற்றப் பட்டதனால் நாரீகவசன் என்று பெயர் பெற்றான். இவனுடைய புத்திரன் கட்வாங்கன். இவன் தேவர்களுக்கு உதவி செய்தபோது இந்திரனால் தன் ஆயுள் இனி இரண்டு நாழிகைதான் என்று அறிந்து அந்த சிறிய காலத்தில் பகவானிடம் மனம் ஒன்றி அவருடன் ஐக்கியம் அடைந்தான்
    அவனுடைய மகன் திலீபன் அவன் மகன்தான் ராமனின் வம்சம் ரகுவம்சம் என்று பேர்பெற்ற காரணமான ரகு. ரகுவின் மகன் தசரதனுடைய பிதாவான அஜன்.
    அத்தியாயம் 10,11,12
    இதைக்கூறிய பின் சுகர் ராமனின் கதையை பரீக்ஷித்திற்கு சுருக்கமாகக் கூறினார். (இதற்குப்பின் க்ருஷ்ணரின் வம்சமான சந்திர வம்சம் வர்ணிக்கப்படுகிறது.)
Working...
X