Announcement

Collapse
No announcement yet.

Yathra Dhanam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Yathra Dhanam


    YATHRA DHANAM.

    யாத்ரா
    தானம்என்றால் என்ன?எப்படி வந்தது?செய்தால் என்னநன்மை-- ஒருவிளக்கம்

    யாத்ராதானம் என்றால்என்ன?


    ஒருயாத்திரை வெளியூர் பயணமோ அல்லது ஷேத்திராடனமோ/கல்யாண மண்டபமோ/செல்லும் முன்செய்யும் தானம்தான் யாத்ராதானம்என்பது


    யாத்ரா தானம்எப்படி வந்தது?


    வால்மீகியின் இராமாயண காவியத்தில் ஒரு அருமையான சம்பவம்ஒன்று விளக்கப்பட்டிருக்கும். அது வெறும் சம்பவம் மட்டுமல்லஅது பலதுன்பங்களிருந்து விடுபட சிறந்த பரிகாரமாகவும் உள்ளஒன்று. அதுதான்யாத்ரா தானம்என்பது.


    அதாவது ஸ்ரீராமபிரான் தந்தைசொல் மிக்கமந்திரமில்லை என்ற கோட்பாட்டை சிரமேற்கொண்டு கானகம்செல்ல தயாராகிவிட்டார். தான்சேர்த்த பொருளைஎல்லாம் யாத்ராதானமாக கொடுக்கமுடிவு செய்தார்.அது முதல்வந்தது தான்யாத்ராதானம்


    யாத்ராதானம் செய்வதால் என்ன நன்மை?


    ஸ்ரீ ராமபிரான்அரண்மனையில் பணிபுரியும் எல்லோருக்கும் அவர்கள் விரும்பியபொருட்களையும் தான் அணிந்திருந்த உடை உட்படசேர்த்த பொருளைஎல்லாம் வாரிவழங்கினார். அயோத்தி வாசிகள் பலரும் தானம்பெற்றனர்.


    தானத்தை முடிக்கும் தருவாயில் வறுமையில் வாடும்ஒரு அந்தணன்வந்தான். அவன்பெயர் திரிசடன்.வயது முதிர்ந்தவன்.அவனுக்கு ஒருமனைவியும் சிலபிள்ளைகளும் இருந்தனர். அன்றாடம் வயல்வெளியில் வரப்பில்சிந்தி இருக்கும்நெல் மணிகளைபொருக்கி அதிலேஜீவனம் செய்துவந்தான்.கொடிய வறுமை.
    இவன் இவ்வாறுவறுமையில் வாடிக்கொண்டிருக்க ராமபிரான் கானகம் செல்லும் முன்தனது உடைமைகளைஎல்லாம் யாத்ராதானம் செய்வதைகேள்விபட்ட அவனது மனைவி ஓடோடி கணவனிடம்சென்று அன்பரேஎவ்வளவு நாள்தான்இந்த வறுமையை சகித்துக்கொள்வது.


    ராமர் கானகம்ஏகும் முன்தனது பொருள்களைஎல்லாம் யாத்ராதானம் செய்கிறார்,நீங்களும் இந்தமண்வெட்டி கோடாலியைஎல்லாம் அப்பாலில்வைத்துவிட்டு அவரை சென்றடைந்து நமது நிலையைஎடுத்துசொல்லி ஏதாவது பொருள் வாங்கி வாருங்கள்நிச்சயம் தருமமேவடிவம் தாங்கிவந்திருக்கும் அந்த அண்ணல் நம் துன்பங்களைஎல்லாம் தீர்ப்பார்ஆகவே சென்றுவாருங்கள் என்றாள்.


    அதற்கு அந்தணனும்ஒப்புக் கொண்டுதன்னுடைய கந்தல்ஆடையால் உடலைஓரளவு மறைத்துக்கொண்டு வேகவேகமாக அரண்மனையைசென்றடைந்தான்.


    அங்கே தானதர்மங்களை வழங்கிக்கொண்டிருந்த ராமபிரானை கண்டார். ராமரை பணிந்து,ஹே அரசகுமாரரே! தங்களின் புகழ் இப்புவி முழுவதும் பரவியுள்ளது.


    நான் மிகப்பெரிய குடும்பத்தின்தலைவன். நானும்என் குடும்பமும்வறுமையால் வாடிக்கொண்டிருக்கிறோம். உண்ண உணவில்லை,உடுக்க உடைஇல்லை. வயல்வரப்பில் தானேவிழும் நெல்லைபொறுக்கி அதைக்கொண்டு வாழ்ந்துவருகிறோம். என்பால் கருணைக் கொண்டு உதவவேண்டும் எனவேண்டி நின்றான்.
    ராமபிரான், "அன்பரே சற்றுமுன் வந்திருக்ககூடாதா? என்னுடையவிலையுயர்ந்த பொருள்களை எல்லாம் அனேகருக் கும்கொடுத்து விட்டேனே!தற்பொழுது என்னிடம்மிஞ்சி இருப்பதுஇந்த பசுக்கள்மட்டுமே.

    உங்களுக்குஎவ்வளவு பசுக்கள்வேண்டும் எனவினவ

    நூறா இருநூறாஅல்லது அதற்கும்மேலும் கேட்பதாஎன அந்தணன்திகைத்தான். பிறகு ஒரு வழியாக புத்திசாலிதனமாகஎன் வறுமைதீரும் அளவிற்குவேண்டும் என்றுராமபிரானின் விருப்பத்திற்கு விட்டு விட்டான்.


    அண்ணலும் "அந்தணரே உமதுகையில் உள்ளகொம்பை வீசிஎறியுங்கள் அது எவ்வளவு தூரம் செல்கின்றதோஅது வரைஉள்ள பசுக்களைஉமதாக்கிக் கொள்ளலாம்" என்றார்.


    இதை கேட்டஅந்தணன் விழிகள்மலர்ந்தன.


    நடக்கவும் சக்தியற்ற நிலையிலிருந்த அவன் நிமிர்ந்துநின்றான்.


    தன் இடுப்பில்இருந்த வஸ்திரத்தைஅவிழ்த்து அதைவரிந்து கட்டிக்கொண்டான்.


    தனது முழுபலத்தையும் திரட்டி ஒரு சுற்று சுற்றிதனது கையில்இருந்த கொம்பைவீசி எறிந்தான்.அது சரயுநதி கரைக்குஅருகில் சென்றுவிழுந்தது.


    அவனுடைய பேராசையை எண்ணி சிரித்துக் கொண்டார்பொரு ளாசைதான் மனிதர்களைஎப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது? அதே சமயம் சக்தியற்றமனிதனையும் பொருளானது எத்தகைய சக்தி வாய்ந்தவனாகமாற்றுகிறது என்பதை தெரிந்துக் கொண் டார்.


    உமது கொம்புவிழுந்த இடம்வரை உள்ளபசுக்களை எல்லாம்உங்களுக்கே வழங்குகிறேன் பெற்று செல்லுங்கள் என்றார்.


    அந்த திரிசடன்என்ற அந்தணன்ராமரை பலவாறாகபோற்றி புகழ்ந்துபாராட்டினான்.யாத்திரை இனிதே முடியவாழ்த்தினான்.


    அவரிடம் விடை பெற்றுக்கொண்டு ராமபிரான் வழங்கியபசு கூட்டங்களுடன்தனது வீட்டைஅடைந்தான். பின் மனைவி மக்களுடன் வறுமையின்றிசுகமாக வாழ்ந்தான்.


    இதன் அடிப்படையில்தான்நம் முன்னோர்கள்வெளியூர் பயணமோ,ஷேத்திராடனமோ,கல்யாணமண்டபமோ, அல்லதுநல்ல காரியங்களுக்கோசெல்லும் முன்தங்களால் முடிந்தபொருள்களை, பழ வகைகளை யாத்ரா தானம்செய்து விட்டுயாத்திரை மேற்கொள்வார்கள்.


    அதனால் யாதொருகஷ்டமும் இன்றிபயணம் இனிதேமுடிந்து ஊர்திரும்புவர்.


    நாமும் நல்லகாரியங்களுக்கு வெளியூர் பயணங்களுக்கு செல்லும் முன்யாத்ரா தானம்செய்து விட்டுசெல்வோம்


    யாத்ரா செல்லும்முன்சொல்ல வேண்டியஸ்லோகம்.


    ஓம் அஸாத்யஸாதக ஸ்வாமின்அஸாத்யம் கிம்தவ ப்ரபோ
    ராமதூத மஹாப்ராக்ஞ்ய மமகார்யம் ஸாதயா

    ஆபதாம் அபஹர்த்தாரம்தாதாரம் ஸர்வஸம்பதாம்|
    லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்||
    ஆர்த்தா நாமார்த்திஹந்தாரம் பீதானாம்பீதநாசனம்
    த்விஷதாம் காலதண்டம்தம் ராமச்சந்த்ரம்நமாம்யஹம்
    ராமாய ராமபத்ராயராமசந்த்ராய வேதஸே
    ரகுநாதாய நாதாயஸீதாய பதயேநம:


    ஓம் நமோநாராயணாய
    ஓம் நமோநாராயணாய ...

    Source: ragasiyamarivom.blogspot

    This post is for sharing knowledge only, no intention toviolate any copy rights
Working...
X