Announcement

Collapse
No announcement yet.

Kungumam Mangalam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Kungumam Mangalam

    குங்குமம் மங்கலம்

    குங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது. பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள்.குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது.மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் ஸ்ரீ லக்ஷ்மிதேவி உறைகின்றாள். இந்த மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது.கோயிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது. வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால் தான் குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம்.இக்குங்குமத்தை அறிவியல் ரீதியாக பார்த்தால், படிகாரம், சுண்ணாம்பு தண்ணீர், மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்துதான் குங்குமம் தயாரிக்கிறார்கள்

    இதில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இரும்புச் சத்தாக மாறிவிடும்.
    படிகாரம் கிருமி நாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரவே வராது. தொற்றுநோய் கிருமிகளும் நெருங்காது.மூளைக்கு செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல், அதை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி. அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு தணிகிறது.

    1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு க்ஷேமத்தைக் கொடுக்கும்.

    2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.

    3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்குகுங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

    4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும்.குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.


    5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

    6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.

    7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்

    .
    8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

    9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

    10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

    11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை,நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

    12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.மங்களம் தரும் குங்குமத்தை அணிந்து இன்னும் மங்களகரமாக இருக்க உங்கள் வீட்டு இளந்தளிர்களுக்கு இந்த நல்ல நாளில் ஆரம்பித்து படிப்படியாக சொல்லிகொடுங்கள்

    Source:srisathsangam.blogspot

    This post is for sharing knowledge only, no intention to violate any copy rights
Working...
X