Announcement

Collapse
No announcement yet.

VARAHA AVATRAM

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • VARAHA AVATRAM


    VARAHA AVATHARAM

    வராஹ அவதாரம்



    உலகத்திலே த்ரிவிக்ரம அவதாரம் தான் மிகப்பெரிது என்றுநாம் நினைக்கிறோம்.லோகமெல்லாம் அளந்து நின்றானே அந்த பிரம்மாண்டரூபத்தைத்தானே எல்லோரும் பெரிது என்று கொண்டாடுவோம். ஆனால் அந்த த்ரிவிக்ரம அவதாரத்தை விடப் பெரியது வராஹ அவதாரம் என்பது யோசித்தால் புரியும். அதனால் தான் உன் பெருமையை யாரும் உணர முடியாது என்று அந்த அவதாரத்தைப் பாடுகிறார் ஆழ்வார்.
    வராஹ அவதாரம்எப்படி மற்றவற்றைக்காட்டிலும் பெருமை வாய்ந்ததாகிறது.

    எந்த உலகத்தைஅளப்பதற்குப் பரமாத்மா திருவடியைத் தூக்கி வைத்தானோஅதே உலகமானதுஇந்த வராஹஅவதாரத்திலே பகவானின் மூக்கிலே ஒட்டிக் கொண்டிருக்கிறது.ஏதோ சிறுதுகளாக துளியூண்டுஒட்டிக் கொண்டிருக்கிறது.உலகையே மூக்கின்மேலே தரிக்கிறான்.

    அதனால் தான்ஆண்டாள் சொல்கிறாள்:


    பாசிதூர்த்துக் கிடந்த
    பார்மகட்குப் பண்டொருநாள்
    மாசுடம்பில் நீர்வாரா மானமில்லாப் பன்றியாம்
    தேகடைய தேவர்திருவரங்கச் செல்வனார்
    பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே
    மானமில்லா பன்றியாம்? அப்படி என்றால்என்ன?

    வெட்கத்தை விட்டு, பகவான் நாராயணன் பன்றியாகஅவதாரம் பண்ணினான்என்று வியாக்கியானம்(விளக்கம்) சொன்னார் ஒருத்தார். சொல்லமுடியுமா அப்படி...?


    மானமில்லா என்றால், 'அளவில்லாத'"எவ்வளவு பெருமையுடையது" என்று நிர்ணயிக்க முடியாதஎன்று அர்த்தம்.அப்படிப்பட்ட மகாவராஹர் அவர். தாமரை புஷ்பம்போன்ற அவர்திருநேத்திரங்களே (கண்களே) அந்தநாராயணன் ஸ்வரூபம்என்று கோள்சொல்லிக் காட்டிக்கொடுத்து விடுகின்றன.அந்த வராஹஅவதாரிதான் விச்வாத்மா - ஜகத்துக்கு எல்லாம் தலைவன்.


    மானமில்லா பன்றி - அளவற்ற வடிவுடையவன் - மாபெரும்விசுவரூபம். த்ரிவிக்ரமாவதாரத்தை விட பல கோடிமடங்கு நெடியவராஹ வடிவமானான்பகவான்.


    நான்கு வேதங்களையும்நான்கு தமிழ்ப்பிரபந்தங்களாக மாற்றிக் கொடுத்த நம்மாழ்வார் திருவிருத்தம்என்கிற முதல்பிரபந்தத்தை முடிக்கிற சமயத்திலே வராஹ மூர்த்தியைத்தான்தியானம் பண்ணுகிறார்."அந்த வராஹ மூர்த்தியை விட்டால் நமக்குவேறு கதிஏது" என்கிறார்.


    எப்படி எந்தவகையிலே உயர்ந்ததுஇந்த அவதாரம்?


    விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலே பிற்பகுதியில்"மஹா வராஹோகோவிந்த" என்று வருகிறது.
    அதையே தான்சஹஸ்ர நாமத்தின்ஆரம்பத்தில் வரும் விச்வ சப்தமும் சொல்கிறது.


    ஹிரண்யாசுரனை சம்ஹாரம் பண்ணிய பரமாத்மா, பூமிபிராட்டியை எடுத்துக் கொண்டு மேலே வருகிறான்;கண்களை உருட்டுகிறான்.சப்தித்துக் கொண்டு வருகிறான். பூமி பிராட்டிஅந்த நேரத்திலேஅழுது கொண்டிருக்கிறாள்.

    பகவானுக்கு ஒரே வருத்தம்! காப்பாற்றுகிற நேரத்திலேஅவள் அழுதுகொண்டிருக்கிறாளே!

    உலகில் யாராவதுகிணற்றில், பள்ளத்தில் விழுந்தவர்களைத்தூக்கிவிட்டால் அழுவார்களா? தூக்கிவிட்டவர்களைக்கொண்டாடி மகிழ்வதல்லவாவழக்கம். பிராட்டிஇப்படி ஏன்அழுகிறாள்..?
    நீ சந்தோஷப்படவேண்டிய நேரத்திலே,இப்படி அழலாமா?என்று கேட்கிறார்பகவான்.


    அதற்கு பிராட்டிகேட்கிறாள்:


    நான் கூக்குரலிட்டுஅழுதபோது ஓடோடிவந்து ரட்சித்தீர்கள்.நான் உங்கள்பார்யை, சிஷ்யை,பத்னி என்பதால்வந்தீர்கள். இந்த பூமியில் இருக்கிற ஜீவன்கள்கூப்பிட்டால், வருவீர்களா? என்னை ரட்சித்த மாதிரிஇவர்களை ரக்ஷிப்பீர்களா?என்று கேட்டாள்.


    எத்தனை விதரூபங்களில் பகவான் வந்தாலும், அவன் பேசுகிறபேச்சிலே மாற்றம்கிடையாது.
    பூமி பிராட்டிக்குப்பதில் சொன்னான்:


    "ஒருத்தனுக்கு மனம் தெளிவாக,அலைபாயாமல், விகாரமில்லாமல் இருக்கிற போதே - சின்னவயதிலேயே, மனத்தில்காமம் புகாதநிலையிலே, இந்திரியங்கள்சரியாக இயங்கும்நிலையிலே, என்னுடையவிச்வரூபத்தை எவன் உணர்கிறானோ, என் திருவடியிலேஎவன் ஒருபுஷ்பத்தைப் போட்டு அர்ச்சனை பண்ணுகிறானோ, எவன்என் திருநாமத்தைவாய்விட்டு உரக்கச் சொல்கிறானோ, என் திருவடியிலேஎவன் ஆத்மசமர்ப்பணம் பண்ணுகிறானோ, அவன் அழைக்கும் போதுநான் ஓடோடிவருவேன்".

    வராகப்பெருமாளுடைய சரமச்லோகம் இதுவாகும்.

    அந்திம காலம்என்பது மனிதர்களுக்குஎப்படி இருக்கும்?கல் கட்டைமாதிரி விழுந்துகிடக்கும் நிலைவந்து விடும்.அப்போது சரணாகதிபண்ண முடியுமா?சுற்றம் அவனைச்சூழ உட்கார்ந்து"சொல்லு, சொல்லு, நீ பொருள் வைத்திருக்கிறாயா?சொல்லு" என்று கேட்டுத் துளைக்கும். அவன்இதற்கு பதில்சொல்வானா? இல்லைநாராயணா என்றுபகவான் நாமத்தைச்சொல்லுவானா? இத்தனை நாள் ஓடி உழைத்துப்பொருள் தேடியும்அதை எங்கேவைத்தோம் என்றுஅவனுக்கு நினைவுவரவில்லையே... அந்தச் சமயத்திலே பகவான் திருப்பெயரைஅவன் எப்படிச்சொல்வான்?


    ஆகையினாலே தான், அதற்கு முன்பே மனத்திலேஎம்பெருமானை பிரதிஷ்டை பண்ணி, அவன் திருவடியிலேபக்தியாகிற புஷ்பத்தை இட்டு வணங்க வேண்டும்.ஏனென்றால் அந்திமகாலம் என்பதுஎல்லோருக்கும் கட்டாயம் உண்டு. அது நமதுகட்டுப்பாட்டிலே இல்லை.


    ஒருவர் தம்மனைவியிடம் குடிக்க தீர்த்தம் கேட்டார். அவள்கொண்டு தருவதற்குள்காலமாகி விட்டார்.சடங்குகள் எல்லாம்நடந்து அவரைஎடுத்துச் செல்லசித்தமானபோது திடீரென்று உயிர் திரும்பியது போல்கண்விழித்து நான் எங்கே இருக்கேன்? இங்கேஎன்ன நடக்கிறது?என்று கேட்டார்.எனவே உயிர்போவதும் வருவதும்நம் கட்டுக்குள்இல்லை என்பதாகிறது.


    அதனால் தான்,இளமையிலேயே பகவான் நாமாவைச் சொல்ல வேண்டும்என்கிறான்.
    என் திருவடியில்ஆத்மா சமர்ப்பணம்பண்ணினவனைக் கைவிடேன் என்கிறான். அவ்வாறு செய்பவன்என் பக்தன்.அவனை ஒருநாளும்நான் கைவிடேன்.நானே வந்துஅவனை உத்தமகதிக்கு அழைத்துப்போவேன் என்கிறான்வராஹஸ்வாமி.


    எம்பெருமானின் அப்படிப்பட்ட வாக்கு இந்த வராஹஅவதாரத்திலே வெளிப்பட்டதினாலே அது பெருமையும், சிறப்பும்மிக்க அவதாரம்.அந்த வாக்கைபூமி பிராட்டிமூன்று முடிச்சுகளாகமுடிந்து வைத்துக்கொண்டாளாம். புஷ்பம் அர்ச்சித்தல், ஆத்மா சமர்ப்பணம்,திருநாமம் சொல்லுதல்என்ற மூன்றுக்கும்மூன்று முடிச்சு.
    பகவானின் இந்த மூன்று கட்டளைகளைத்தான் அவள்(பூமி பிராட்டி)தன்னுடைய ஆண்டாள்அவதாரத்திலே நடத்திக் காட்டினாள். வராஹனிடம் சரணமடைவோம்.அவன் நம்மைபிறவிச்சக்ரத்திலிருந்து காத்தருள்வான்.


    Source:srinivassharmablog.wordpress.

    This post is for sharing knowledge only, no intention to violate any copy rights
Working...
X