பிறப்பால். அனைவரும் சமம் வேதம் சொல்கிறது

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
Bராமணன் முகத்தில் இருந்து பிறந்தான்;
சூத்திரன் காலில் இருந்து பிறந்தான்
இப்படி சொல்வது இந்து மதம் புருஷ சூத்திரத்தில் வரும் ஒரு செய்யுள். சரியான அர்த்தம் தெரியாமல் ஒரு பிதற்றல் பலரால் சொல்ல படுகிறது


பிராமணன்
தலையில் பிறந்தான்;
சத்திரியன் தோளில் பிறந்தான்;
வைஷியன் தொடையில் பிறந்தான்;
சூத்திரன் பாதத்தில் பிறந்தான்!
இப்படித்தான் சமஸ்கிருதம் தெரியாத நாத்திகர்கள் வேதங்களை தூற்றுகின்றனர் பொய்யை பல முறை அதை உண்மை போல் உளருகிர்கள்.
உண்மை என்ன?


உண்மைகளை எளிதில் மறைத்துவிட முடியாது.
புருஷ சூக்த்தத்தில் வரும் ஸ்லோகம் இதுதான்:பிராமணஸ்ய முகமாஸீத், பாஹூ ராஜன்ய: க்ருத:ஊரு ததஸ்யயத்வைஸ்ய:,பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத
- (ரிக் வேதம் 10-90-12)
ஸ்லோகத்தின் பொருள்:


வேதம் நல்லொழுக்கம் நீதி இவற்றை
புகட்டுபவன் பிராமணன், அப்பேர்பட்டவன் முகமானது ஞானம் பெருகி தேஜசாக இருத்தல் வேண்டும்.


இராஜாங்கத்தைக் கட்டிக்காக்கும் ஒரு சத்திரியன் தோளானது பிரம்மதேவரின் தோள் போல வலிமையா னதாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் அவனால் போர்களையில் சிறந்து விளங்கி தனது குடிகளை திறம்பட காத்திட முடியும்.


வைஷியனானவன் பொருளை ஈட்டும் போது பிறர் வயிற்றிர்க்கு வஞ்சனை அளிக்காமல் வியாபாரத்தில் நேர்மையானவனாக நல்ல தீர்க்கமாக வலிமையான துடை கொண்டு அமர்ந்து சிந்தித்து நேர்மையான வாணிபத்தில் ஈடுபட வேண்டும்.
சூத்திரனானவன் வயல்களில் பாடுபட்டு, இந்த லோக உயிர்களுக்கு பசியாற்ற பாடுபட வேண்டும். மேலும் பல தொழிலில் சிறக்க அவனுக்கு வலிமையான பாதங்கள் வேண்டும். சோர்வில்லாத பாதங்கள் வேண்டும்.


இதில் பிறப்பு என்ற சொல் எங்கே வந்தது?பிறப்பினால் யாரும் எதையும் அடையமுடியாது.
மேலே குறிப்பிட்ட ஸ்லோகத்தில் பிறப்பு என்ற வார்த்தை எங்கே வந்தது? வாய்க்கு வந்தார் போல் அர்த்தம் புகட்டிவிட்டு முட்டாள் மாணவனாக இருந்து விட்டு ஆசிரியரை குறை சொல்லி என்ன பயன்.


பிறப்பால் வர்ணங்கள் இல்லை மனு தர்மம்:
பிறப்பால் வர்ணங்கள் இல்லை என்பதை இவர்கள் விமர்சிக்கும் மனு தர்மம் சொல்கிறது. அதற்கான ஸ்லோகம்,
ஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மணா த்விஜ ஜாயதே
அதாவது பிறப்பால் அனைவரும் சூத்திரர்களே,


தொழிலினால்தான் இரு பிறப்பாளராகின் றனர் (துவீஜம்).
இரு பிறப்பாளர் என்பது வேத காலத்தில், முதல் மூன்று வர்ணங்களைக் குறித்தது.இங்கே தான் பிறப்பு என்ற சொல் வருகிறது:ஜன்மனா பிறப்பால்;
ஜாயதே பிறந்த அனைவரும்;
சூத்ர சூத்திரரே;


கர்மணா தான் மேற்கொண்ட பணிக்குட்பட்டு; த்விஜ இருபிறப்பாளனாக;
ஜாயதே பிறப்பாளன் ஆகிறான். செய்யும் தொழில் தான் ஒருவரை அடையாளம் காண்கிறது. பிறப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.