Announcement

Collapse
No announcement yet.

NARAYANANE NAMAKKE PARAI THARUVAN

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • NARAYANANE NAMAKKE PARAI THARUVAN

    நாராயணனே நமக்கே பறை தருவான்


    Thiruppavai, Andala says ''Narayanane namakke Parai Tharuvan''.(நாராயணனே நமக்கே பறை தருவான்)





    Meaning of 'Parai' in Andal Verses:

    Sri Andal mentions 'parai' in eleven places in Thirupavai.

    Ordinary meaning 'parai' is a musical instrument. Special meaning is doing service to the Lord always. This special meaning is clearly given in verse 29.

    Verse 30 gives the meaning like this:

    (i) Ordinary meaning for common person :

    parai - musical instrument

    (ii) Special meaning:

    parai - getting eternal bliss by serving Him only!

    a) To whom Narayana will give ?

    Sriman Narayana gives parai as per His wish (sankalpa)

    b) What is the use of parai ?

    Eternal Bliss (Moksha) can be given only by Sriman Narayana. Nityasuris serve Sriman Narayana at Vaikundam.

    c) Why Andal used the word Parai ?

    Andal (Boomadevi) used the word 'Parai" only for us to get Sriman Naraya's blessings or boons.

    B) Detailed Answer:

    ஆண்டாள் கூறும் 'பறை' (திருப்பாவை):

    i. பறை தருவான் (பாசுரம் – 1)
    ii. பாடிப்பறை கொண்டு (பாசுரம்- 8 )
    iii. போற்றப் பறை தரும் – (பாசுரம்- 10)
    iv. அறை பறை - (பாசுரம் -16)
    v. சேவகமே ஏத்திப் பறைகொள்வான் - (பாசுரம் -24)
    vi. பறை தருகியாகில் – (பாசுரம் -25)
    vii. சாலப்பெரும் பறை – (பாசுரம் -26)
    viii. உன்றன்னை பாடிப் பறைகொண்டு – (பாசுரம் -27)
    ix. நீ தாராய் பறை – (பாசுரம் -28)
    x. இற்றைப் பறை கொள்வான் - (பாசுரம் -29)
    xi.அங்கப் பறை கொண்ட ஆற்றை – (பாசுரம் -30)

    ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை:

    (i) Explanation on Verse 1:

    ' ....... radiant moon faced Lord alone will grant us our boons. ........'

    பறை என்பது நோன்புக்கு அங்கமானதொரு வாத்ய விசேஷம். இவ்வாய்ச்சிகள், மேல், “மாலே மணிவண்ணா” என்ற பாட்டில் அபேக்ஷித்தபடி கண்ணபிரான் பறை தரப்புக, அதுகண்ட இவர்கள் “சிற்றஞ்சிறுகாலே” என்கிற பாசுரத்தில், “இவற்றைப் பறைகொள்வானன்றுகாண் கோவிந்தா; எற்றைக்கு மேகீழழ்பிறவிக்கு முன்றன்னோடுற்றோமே யாவோ முனக்கே நாமாட் செய்வோம், மற்றை நங்காமங்கள் மாற்று” எனக் கூறினமையால், பறை, பறை என்று சொல்லிக்கொண்டு போவது நாட்டார்க்கு ஒரு வியாஜமாத்திரமேயாய், அதன் உள்ளுறை கைங்கரிய விருப்பம் என்பது விளங்கும். அக்கைங்கரியத்தைத்; தாமாகவே செய்ய இவர்கட்குப் பிராப்தி உளதாயினும் “ஏவமற்றமாராட் செய்வார்” என்றபடி எதிர்த்தலையின் நியமனங்கொண்டு செய்வதே ஸ்வரூபத்துக்குச் சேருமென்னும் ரஹஸ்யார்த்தம், “பறை தருவான்” என்பதனாற் போதரும். 'ஸ்வயம் துருசிரே தேசே க்ரிய தாமிதி மாம் வத' என்ற இளையபெருமாள் பிரார்த்தித்தவாற்றை நோக்குக.


    (ii) Explanation on Verse 29:

    ' ..... இப்படி, ‘எங்களிடத்திற் குற்றேவல் கொள்ளவேணும்’ என்று வேண்டின ஆய்ச்சிகளை நோக்கிக் கண்ணபிரான், ‘பெண்காள்! அது அப்படியே ஆகிறது; அந்தரங்கமாக ஏவிக்கொள்ளுகிறேன்; நீங்கள் மார்கழி நீராட்டத்திற்கு உபகரணமாகக்கேட்டவற்றைத் தருகிறேன், கொண்டுபோங்கள் என்று ஒரு பறையை எடுத்துவரப்புக்கான்; அது கண்ட ஆய்ச்சிகள், ‘அப்பா! கருத்தறியாமற் செய்கிறாயே; நாங்கள் ‘பறை’ என்று சொன்னதற்குக் கருத்துரைக்கின்றோம் கேளாய்’ என்று உரைக்கத் தொடங்குகின்றனர் “இற்றைப்பறை” இத்யாதியால்.

    இன்று + பறை, இற்றைப்பறை. இப்போது நீ எடுத்துக்கொடுக்கும் பறை என்றபடி. கொள்வானன்று – கொள்வதற்காகவன்று; ‘நாங்கள் வந்தது’ என்று சேஷ பூரணம் செய்க. ....'

    'Govinda! In the wee hours of the morning we have come to worship you and praise your golden lotus feet; pray hear our purpose. You were born in the cowherd clan, now you cannot refuse to accept our service to you. Know that these goods are not what we came for. Through seven lives and forever we would be close to you, and serve you alone. And if our desires be different, you must change them.'

    (iii) Explanation on Verse 30:

    அங்கு - அத்திருவாய்ப்பாடியில்

    பறைகொண்ட ஆ ஆற்றை - (தங்கள்)புருஷார்த்தத்தைப் பெற்ற அந்த விருத்தாந்தத்தை.

    அணி புதுவை - அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் (திருவவதரித்த)

    கை கமலம் தண் தெரியல் பட்டர் பிரான் - பசுமை பொருந்திய தாமரை மலர்களினாலான குளிர்ந்த மாலையையுடையபெரியாழ்வாருடைய (திருமகளான)

    கோதை - ஆண்டாள்

    சொன்ன - அருளிச் செய்த

    சங்கம் தமிழ் மாலை முப்பதும - திரள் திரளாக அநுபவிக்க வேண்டிய தமிழ்மாலையாகிய இம் முப்பது பாசுரங்களையும் ....

    “அப்பறைகொண்டவாற்றை” – பறைகொண்ட அவ்வாற்றை; பறைக்கு முன்புள்ள அகரச்சுட்டு – ஆற்றை என்பதனோடு கூட்டியுரைக்கப்பட்டது. அன்றியே, (அப்பறை)-நாட்டார்க்காகச் சொன்ன பறையைக் கழித்து, “எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கு முன்றன்னோடுற்றோமே யாவோம்” என்று சொன்ன பறையை என்று முரைக்கலாம்.

    This is garland of thirty songs of faultless Sangam Tamil on how the moon-faced be jeweled maidens praised the Lord and got their boons , sung by Pattarbiran’s daughter Kodai, Goda, of lotus-wafting cool-watered Puduvai fame; by the grace of the mighty-four armed, beautiful eyed, gracious faced Tirumal, those who sing it with joy shall find eternal bliss everywhere.




    Sources:

    Thiruppavai (and with Commendary 'Sudhasvaatam'), Chakravarthyachariar Swamy, Sri Desika Vidya Bhavanam, Chennai 4, Total Pages 608,
    and other sites
    yahoo answers
    C .Sri Vidya Rajagopalan

    This post is for sharing knowledge only, no intention to violate any copy rights
Working...
X