ஸ்ரீவேதாந்ததேசிகன் !

காஞ்சிபுரத்திற்கு அருகேயுள்ள துப்புல் கிராமத்தை சேர்ந்தவர்கள் , அனந்தசூரி - தோத்தாரம்பா என்கிற வைணவ தம்பதியர் !..

குழந்தை பாக்கியம் வேண்டி இருவரும் கால்நடையாக திருப்பதி சென்றனர் ...

அன்றிரவு , இருவரும் சத்திரத்தில் தங்கியிருந்த போது , திருமலைவாசனின் சந்நிதியில் அடிக்கப்படும் மணியை, தான் விழுங்கியது போன்று கனவு கண்டார் தோத்தாரம்பா அம்மையார் !
திடுக்கிட்டு கண் விழித்த அவர் , ...தான் கண்ட கனவை கணவரிடம் கூறிக்கொண்டிருந்த அக்கணம் ........

திருமலை சந்நிதியில் ஒரே பரபரப்பு !....

பூஜை மணியை காணாததால் ஆளுக்கொரு பக்கமாய் , அனைவரும் பதட்டத்துடன் தேடிக்கொண்டிருக்க .....

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஅப்போது அசரீரியாய் ஒரு குரல் !
'' அந்த மணியை யாரும் தேட வேண்டாம் !....ஆம் ...புரட்டாசி , சிரவண நட்சத்திரத்தில் அந்த மணி ஒரு அற்புத மனிதராக , வேங்கடநாதன் என்கிற பெயரில் ...துப்புல் அனந்தசூரி - தோத்தாரம்பா தம்பதியருக்கு பிறப்பார் !....அவர் பேச்சு மணி மணியாய் இருக்கும் !''
அசரீரி வாக்கு படி பிறந்த அக்குழந்தையே ஸ்ரீவேதாந்ததேசிகன் !
திருமலை பெருமான் சந்நிதியில் இருந்த கைமணியே ,'
மணியான குழந்தையாக ' அவதரித்ததால் , திருமலையில் இன்றும் பூஜை , தீபாராதனை நேரங்களில் கூட மணி அடிப்பது இல்லை என்றும் ,
மாயவன் சன்னிதியிலும் மணி இல்லை என்று கூறப்படுகிறது ...
..
Source: /forum.smtamilnovels

This post is for sharing knowledge only, no intention to violate any copy rights