Announcement

Collapse
No announcement yet.

GURU BHAGAVAN

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • GURU BHAGAVAN

    குரு பார்வை கோடி நன்மை

    ''குரு பிரம்மா குரு விஷ்ணுகுரு தேவோ மகேஸ்வரஹகுரு சாக்ஷõத் பரப்பிரம்மாதஸ்மை ஸ்ரீ குரவே நமஹ''

    குரு பார்க்க கோடி நன்மை. மனிதர்களை நல்வழிப்படுத்துவதில் குரு பகவானுக்கு நிகர் யாரும் இல்லை. பிரம்மனின் மானச புத்திரர்களின் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதாவுக்கும் பிறந்த ஏழாவது குழந்தை. அறிவிலே மேம்பட்டவர்.

    தேவர்களின் குரு. இந்திரனுக்கு அமைச்சர். குரு பகவானை பிரகஸ்பதி என அழைப்பர். பிரகஸ்பதி என்றால் ஞானத் தலைவன் என்று பொருள்.

    பிரகஸ்பதி, காசியில் பல காலம் சிவபெருமானை வேண்டி கடுமையான தவத்தை மேற்கொண்டார். இதன்காரணமாகவே அவர், தேவர்களுக்கு குருவாக விளங்கும் பதவியும், கிரக பதத்தில் வீற்றிருக்கும் பேறும் பெற்றார். இவருக்கு எம கண்டன், கசன் என்ற இரண்டு புதல்வர்கள் உண்டு. நவக்கிரகங்களில் பிரதானமான இவர் சுபக்கிரகர் ஆவார். மூன்று குணங்களில், சாத்வீக குணத்தைக் கொண்டவர். மஞ்சள் நிறம் உடையவர். அதனால் இவரை ‘பொன்னன்’ என்றும், ‘வியாழன்’ என்றும் கூறுவார்கள். தயாள சிந்தனை கொண்டவர்.

    யானையை வாகனமாக கொண்ட இவருக்கு, கொண்டைக் கடலை பிடித்த உணவு. இதனால்தான் வியாழ பகவானுக்கு கொண்டைக் கடலை மாலை சூட்டி வழிபாடு செய்கிறார்கள்.

    நவரத்தினங்களில் புஷ்பராகத்தை அணிவார். அரச மரம் இவருக்கு பிடித்தமான மரம். இனிப்பு பிடிக்கும். நான்கு சக்கரங்கள் கொண்ட ரதத்தில் நாற்கோண பீடத்தில் எழுந்தருளி இருப்பவர். ரதத்தின் ஓரத்தில் வில்லும், மீனும் அடையாளமாக இருக்கும். அது தனுசு ராசிக்கும், மீன ராசிக்கும் அதிபதி இவர் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

    பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு பகவான் மகம் நட்சத்திரத்திலே சஞ்சரிக்கும் போதுதான் ‘மகா மகம்’ நடைபெறுகிறது. இதையே ‘மாமாங்கம்’ என்று சொல்வார்கள்.

    குரு சன்னதியில் நின்று கோரிக்கைகளை மனதார நினைத்தாலே போதும், அவற்றை நிறைவேற்றி நலம் பல பெற வைப்பார் என்பது ஐதீகம்.

    "குருவே சரணம்"

    Sources:

    dinakaran.

    maalaimalar.


    This post is for sharing knowledge only, no intention to violate any copy rights
Working...
X