Announcement

Collapse
No announcement yet.

KANCHI MAHAN AND SAI BABA

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • KANCHI MAHAN AND SAI BABA

    பகவான் பாபாவுக்கும் காஞ்சி மகா பெரியவருக்கும் இருந்த தெய்வீக பந்தம்.

    காஞ்சி மகா பெரியவரின் உன்னதமான பக்தை கர்நாடக இசை பாடகி திருமதி. M.S சுப்புலட்சுமி அம்மையார் ஆகும். அவர் காஞ்சி பெரியவரிடம் மிகுந்த பக்தியும் அன்பும் கொண்டிருந்தார். ஒருநாள் தன் கணவர் திரு. சதாசிவத்துடன் M.S அம்மையார் காஞ்சி பெரியவரை தரிசிக்க காஞ்சி மடத்திற்கு வந்திருந்தார்.

    அப்போது பெரியவர் 'நீ புட்டபர்த்திக்கு போக வேண்டிய நேரம் வந்துவிட்டது. சென்று பாபாவை தரிசித்து விட்டு வா' என்று கட்டளை பிறப்பித்தார். இதைக் கேட்ட திருமதி M. S அம்மையார் அதிர்ந்து போனார்.


    மெல்ல தயக்கத்துடன் பெரியவா நீங்க இருக்கையிலே எனக்கு வேறு ஒரு குரு எதற்கு என்று தயங்கியபடி கேட்டார். அதற்கு பெரியவா 'நான் வெறும் குரு, அவர் இந்த உலகத்துக்கே ஜகத்குரு'. ஒருமுறை சென்று வா உனக்கே எல்லாம் புரியும் என்று அவர்களை வழியனுப்பி வைத்தார்._*_பொதுவாக திருமதி M.S சுப்புலட்சுமி அவர்கள் 'குரு வாக்கே வேதவாக்கு' என நினைத்து வாழ்பவர். அதனால், தன் குரு சொல்லை தட்டாமல் ஒருநாள் செவ்வாயன்று கணவன் மனைவி இருவரும் புட்டபர்த்திக்கு வந்து சேர்ந்தார்கள்.

    மனக் குழப்பத்தில் இருந்த M.S அம்மையார் தரிசனத்தில், முன்வரிசையில் அமர்ந்து இருந்தார்கள். சிவந்த சூரியனாய் புன்னகை முகத்துடன் உள்ளே நுழைந்த பகவான், பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்த பின்னர் கணவன் மனைவி இருவரையும் நேர்காணல் அறைக்கு அழைத்துச் சென்றார். கிட்டத்தட்ட நேர்காணல் இரண்டே கால் மணிநேரம் நடந்தது. நேர்காணல் முடிந்த பிறகு, பாபா அவர்களை வெளியே அழைத்து வந்தார்.

    வந்தவர்கள் பகவானின் திருக்கமல பாதத்தை பற்றிக்கொண்டு சுவாமி சுவாமி என்று ஏதோ கேட்டுக்கொண்டிருந்தார்கள். பாபாவும் அவர்களுக்கு ஆசிர்வாதம் செய்து அவர்களை அனுப்பி வைத்தார். அன்று முதல் திருமதி M.S சுப்புலட்சுமி அம்மையாரின் குடும்பம் தீவிர சாயி பக்தர்களாக மாறினார்கள். அதன்பிறகு புட்டபர்த்திக்கு பலமுறை சென்று பகவானை தரிசித்து, கச்சேரியும் நிகழ்த்தி உள்ளார்கள்.

    ஒரு முறை கர்நாடக இசை பாடகியும், M.S அம்மையாரின் நெருங்கிய தோழியான திருமதி பட்டம்மாள், M.S அம்மையாரின் பெரும் மாற்றத்திற்கு காரணமான பாபா உடனான அந்த நேர்காணல் அறை அனுபவத்தை பற்றி கேட்டபோது M.S அம்மையார் 'இது எங்களின் தனிப்பட்ட அனுபவம். அதனை நேரம் வரும்போது நானே சொல்கின்றேன்' என்று சொல்லி அதனை சொல்ல மறுத்துவிட்டார். பின்பு அவர் கடைசிவரை அந்த அனுபவத்தை யாரிடமும் பகிர வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    காஞ்சி மகா பெரியவா பக்தர்களுக்கு பரிச்சயமான பெயர் திரு. ரா. கணபதி அவர்கள். இவர் காஞ்சி பெரியவரின் முக்கிய புத்தகமாக கருதப்படும் 'தெய்வத்தின் குரல்' என்ற புத்தகத்தை எழுதியவர் இவரே. இந்தப் புத்தகத்தை அவர் முழுவதுமாக எழுதி முடிக்காமல் புட்டபர்த்திக்கு சென்று பாபாவிடம் கொஞ்ச நாட்கள் தங்கி இருந்தார்.

    அப்படி அவர் தங்கியிருந்த சமயத்தில் தான் பாபா அவரை அழைத்து, முதலில் போய் தெய்வத்தின் குரல் புத்தகத்தை முழுவதுமாக முடித்து உன் கடமையை நிறைவேற்று. நீ செய்யும் இந்த பணி, ஒரு மகத்தான பணி. போய் உன் கடமையைச் சிறப்பாக செய் என்று அவரை அனுப்பி வைத்தார். இவ்வாறுதான் அவர் அந்த புத்தகத்தை முழுவதுமாக எழுதி முடித்தார்.

    _மேலும் ரா கணபதி அவர்கள் தன்னுடைய அனுபவத்தை விவரிக்கும் போது, புட்டபர்த்திக்கு போகும்போதெல்லாம் பாபா, காஞ்சிப் பெரியவரை பற்றி நலம் விசாரிப்பார். அதேபோல், தான் காஞ்சி மடத்திற்கு வரும்போதெல்லாம் பெரியவா பாபாவைப் பற்றி கேட்பார் என்று தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

    ரா.கணபதி அவர்கள் பகவான் சத்ய சாய் பாபாவை பற்றி பல புத்தகங்களை எழுதியுள்ளார். அதில் குறிப்பிடத்தக்க புத்தகமான 'சுவாமி' என்ற புத்தகத்தில் அவர் எண்ணற்ற பாபாவின் மெய்சிலிர்க்கும் அற்புதங்களை பதிவு செய்துள்ளார். சத்ய சாயி பாபாவின் அற்புதங்களை விரிவாக படிக்க விரும்பும் அன்பர்கள் இந்த புத்தகத்தை படிக்கலாம்.

    அதேபோல் சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த சீனிவாச அய்யங்கார் என்ற ஒரு அன்பர், காஞ்சி மடத்திற்கு அடிக்கடி சென்று மகா பெரியவாவிடம் ஆலோசனை கேட்டு வருவார். அவர் ஒருமுறை புட்டபர்த்திக்கு தன் நண்பரோடு சென்றிருந்தார். சென்றவருக்கு கிடைத்தது அதிர்ஷ்டம். பாபா அவருக்கும், அவர் நண்பருக்கும் சேர்த்து நேர்காணல் கொடுத்தார்.

    *_நேர்காணலில் அவர் குடும்ப கதை எல்லாம் பேசி முடித்த பிறகு கடைசியாக பாபா ஒரு மாங்கனியை ஸ்ருஷ்டித்து ஐயங்காரிடம் கொடுத்தார். பின்னர் 'நீங்கள் இங்கிருந்து நேராக காஞ்சி மடத்திற்கு செல்கிறீர்கள் அல்லவா?' என்ற ஐயங்காரிடம் கேட்டார். அதற்கு அவர் ஆம் சுவாமி என்று பதில் உரைக்க, போய் இந்த மாங்கனியை உங்கள் பெரியவரிடம் கொண்டு போய் சேருங்கள் என்று கொடுத்து அனுப்பினார்.


    பின்னர் அவரும் காஞ்சி மடத்துக்கு வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்ந்த சமயத்தில் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. அவரும் ஒரு வரிசையில் ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது பெரியவரின் சிஷ்யர் ஒருவர் உங்களை பெரியவா அழைக்கிறார் வாருங்கள் என்று உள்ளே அழைத்துச் சென்றார்.


    உள்ளே சென்ற உடனே பெரியவா 'எங்கே அந்த மரகத அம்பாள்' என்று கேட்டார். ஐயங்காருக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே காஞ்சி பெரியவர் கையை மாங்கனியை போல் செய்து காண்பிக்க ஒரு வழியாக ஐயங்காருக்கு புரிந்தது. உடனே தன் கையில் இருந்த மாங்கனியை பெரியவரிடம் கொடுத்து நமஸ்காரம் செய்து கொண்டார்.


    பெரியவா அருகில் இருந்த ஒரு சிஷ்யனிடம் கொடுத்து இந்த மாங்கனியை சரிபாதியாக வெட்டுமாறு கேட்டுக்கொண்டார். அந்த சிஷ்யர் ஒரு கத்தியால் அந்த மாங்கனியை சரிபாதியாக வெட்ட உள்ளே பார்த்தால் மாங்கொட்டைக்கு பதிலாக ஒரு சின்ன அளவில் பளபளக்கும் மரகத அம்பாள் விக்கிரகம்.

    அப்போதுதான் ஐயங்காருக்கு எல்லாம் தெளிவாக புரிந்தது. மேலும் இந்த சம்பவத்தை பற்றி அவர் விரிவாக பெரியவரிடம் கேட்ட போது பெரியவர் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. அதற்கு பதிலாக ஐயங்காருக்கு மாங்கனியில் பாதியை கொடுத்து வழி அனுப்பி வைத்தார்.


    காஞ்சி மகா பெரியவரும், பகவான் பாபாவும் ஒருபோதும் நேருக்கு நேராக சந்தித்ததே கிடையாது. அவர்களின் தெய்வீக பந்தம், நம் சராசரி கண்களுக்கு அப்பாற்பட்டது. அவர்கள் பார்க்காமலே இருந்த இடத்திலிருந்து கொண்டே பேசி கொள்கிறார்கள் என்று நடந்த சம்பவங்களை வைத்து பார்க்கும்போது நமக்கு தெளிவாக புலப்படுகிறது.

    இப்படி எண்ணற்ற மகான்களும், முனிவர்களும் இருந்த இடத்தில் இருந்து கொண்டே பகவானை தரிசித்து கொள்கிறார்கள். இதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஏனென்றால் ஒருசில பக்தர்களுக்கு இது போன்று அனுபவம் கிட்டியுள்ளது. அதாவது இரவு நேரங்களில் தேவதைகளும் முனிவர்களும் வந்து போவதுபோல் அவர்கள் கண்டிருக்கிறார்கள். சில புத்தகங்களில் அவர்கள் அந்த அனுபவத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

    Source: Web Search


    This post is for sharing Knowledge only, no intention to violate any copy rights
Working...
X