Announcement

Collapse
No announcement yet.

SRIMAT BHAGAVAT GITA AND 18 CHAPTERS

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • SRIMAT BHAGAVAT GITA AND 18 CHAPTERS


    SRIMAT BHAGAVAT GITA AND 18 CHAPTERS







    கீதையும் 18 அத்தியாயங்களும்


    கீழே கொடுக்கப்பட்டுள்ள பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப் படியில் ஏறிச் சென்றால் தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும் என்பதின் அடிப்படையில் கீதை 18 அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு தொகுப்பு தான் இது.



    1 காமம்:
    பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது என்பதை கீதையின் முதல் அத்யாயம் நமக்கு விளக்குகிறது.


    2 குரோதம்:
    கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும் என்பதை கீதையின் இரண்டாவது அத்யாயம் நமக்கு விளக்குகிறது.


    3 லோபம்:
    பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது என்பதை கீதையின் மூன்றாவது அதிகாரம் நமக்கு விளக்குகிறது.


    4 மதம்:
    யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும் அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான் என்பதை கீதையின் நான்காவது அதிகாரம் நமக்கு விளக்குகிறது.


    5 மாத்ஸர்யம்:
    மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம் அதுவே அவனை அழித்துவிடும் என்பதை கீதையின் ஐந்தாவது அதிகாரம் விளக்குகிறது.


    6 டம்பம் (வீண் பெருமை):
    அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது என்பதை கீதையின் ஆறாவது அதிகாரம் விளக்குகிறது.


    7 அகந்தை:
    ‘தான்’ என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேறவே முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை. இதனால் ஏற்படும் தீமைகளை கீதையின் ஏழாவது அத்யாயம் நமக்கு எடுத்துச் சொல்கிறது.


    8 சாத்வீகம்:
    விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும். இதனை கீதையின் எட்டாவது அத்யாயம் நமக்கு எடுத்துச் சொல்கிறது.


    9 ராஜஸம்:
    அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது இதனை கீதையின் ஒன்பதாவது அத்யாயம் நமக்கு எடுத்துச் சொல்கிறது.


    10 தாமஸம்:
    அற்ப புத்தியை பற்றி நிற்பது மதி மயக்கத்தால் வினை செய்வது. அப்படி செய்யப்படும் வினையால் ஏற்படும் துன்பம் போன்றவற்றை கீதையின் பத்தாவது அத்யாயம் நமக்கு எடுத்துச் சொல்கிறது.


    11 ஞானம்:
    எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு பற்றி இந்த அத்யாயம் தெளிவாக விளக்குகிறது.


    12 மனம்:
    நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழ வேண்டும் எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும். அது எப்படி என்பதைத் தான் கீதையின் பன்னிரெண்டாவது அத்யாயம் விளக்குகிறது.


    13 அஞ்ஞானம்:
    உண்மைப் பொருளை அறிய மாட்டாது. மூடி நிற்கும் இருளை விளக்கி மெய் ஞானத்தை அடைய வழி வகை செய்கிறது இந்த அத்யாயம்.


    14 கண்:
    ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது இந்த அத்யாயம்.


    15 காது:
    ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும். அது எப்படி என்பதை இந்த அத்யாயம் எடுத்துரைக்கிறது.


    16 மூக்கு:
    ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும். அத்துடன் பக்தியில் ஆழ்ந்து முக்தி பெரும் வழியை இந்த அத்யாயம் எடுத்துக் கூறுகிறது.


    17 நாக்கு:
    கடுஞ் சொற்கள் பேசக்கூடாது. அது பற்றிக் கூறுகிறது இந்த அத்யாயம்.


    18 மெய்:
    இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும் போன்ற பல நற் சிந்தனைகள் வளர இந்த அத்யாயம் துணை செய்கிறது.


    -சர்வம் கிருஷ்ணார்ப்பயாமி-

    Source:lycdhyanam.wordpress.

    This post is for sharing knowledge only, no intention to violate any copy rights
Working...
X