சுப்ரபாதம் என்பதன் பொருள் என்ன?

சுப்ரபாதம் என்பதன் பொருள் என்ன?

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
இந்து மக்கள் தங்கள் கடவுளை சுப்ரபாதம் பாடி எழுப்புவார்கள். திருப்பதி ஏழுமலையில் வெங்கடாசலபதியை எழுப்ப சுப்ரபாதம் அதிகாலையிலேயே பாட ஆரம்பித்து விடுவார்கள். இனிமையும், புத்துணர்ச்சியையும் தரும் சுப்ரபாதத்தின் பொருள் என்ன என்று தெரியுமா? அதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

சுப்ரபாதம் என்பது ஒரு ஸமஸ்க்ருத மொழிப் பெயர். வடமொழியில் சு எனும் எழுத்து ஒரு சொல்லுக்கு முன்னர் சேர்க்கப்படுவதால் உயர்ந்த பொருள்களை நல்கும். அதாவது இப்பொழுது நற்பொழுதாகட்டும் என்பது இதன் அர்த்தம். கடவுளுக்கு காலை வணக்கம் செலுத்தி அவரை எழுப்புவது தான் சுப்புரபாதமாகும்.

இதில் பா எனில் வெளிச்சம். ப்ரபாதம் எனில் காலைப்பொழுது. சுப்ரபாதம் எனில் இனிய காலைப் பொழுது என்று அர்த்தம். பாக்ஷிதம்-வார்த்தைகள், சுபாக்ஷிதம்-நல்வார்த்தைகள். இனிய காலை பொழுதில், கடவுளை சுப்ரபாதத்தின் மூலம் வழிப்படுவது மிகவும் நன்மையாகும். இவை கடவுளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து ஜீவராசிகளையும் எழுப்பும் விதமாகவும் இதனால் நாமும் புத்துணர்ச்சி பெறுவதும் அனுபவ உண்மை.
சுப்ரபாதம் கேட்பதன் மூலம் கடவுளின் அருளும், மகான்களின் அருளும் நமக்கு கிடைக்கும். இவற்றை காலையில் கேட்பதே உயர்ந்தது. எனினும், கடவுளின் நாமாவளிகளின் தொகுப்புகளை மற்ற காலங்களில் கேட்கலாம் தவறொன்றுமில்லை. எனினும், விடியற்காலையில் கேட்பதே பொருத்தமானது.

கௌஷல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்தியா ப்ரவத்தது என்ற இந்த முதல் வரிகள் வால்மீகி ராமாயணத்திலிருந்து உருவக்கப்பட்டது. அதாவது. விஸ்வாமித்ரர் ராமனை எழுப்புகிறார். கௌசல்யை புண்ணியம் செய்து பெற்ற ராமா. அங்கே காட்டுப் பக்கம் அரக்கர்கள் அடாவடி செய்து தவ முனிவர்களுக்கு இடைஞ்சல் செய்கிறார்கள். நீ வந்து அவர்கள் வீழ்த்து என ராமனை அழைக்கிறார்.இதுவே இப்பாடலின் பொருள் ஆகும்.

கெளஷல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்தியா ப்ரவர்த்ததே உத்திஷ்ட்ட நர ஷார்தூலா கர்த்தவ்யம் தெய்வமாநிகம்

ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்

Source: kamaljipanditji.wordpress.

This post is for sharing knowledge only,no intention to violate any copy rights