Announcement

Collapse
No announcement yet.

What is VIDHYAI ?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • What is VIDHYAI ?

    வித்யை என்றால் என்ன?

    வித்யை என்றால் என்ன?

    வித்யை என்றால் அறிவை வளர்க்கும் சாதனம்.

    வித்யை என்றால் அறிவு.

    வித்யை என்றால் மெய்யுணர்வு, உண்மை, தெளிவு, ஞானம்.
    வித்யைகள் பலவிதம். நமது ஸ்ரீவித்யாவோடு தொடர்புடைய நாமாவளிகள்

    மனு வித்யா, சந்திர வித்யா, ஸித்திவித்யா, மகாவித்யா, ஸ்ரீவித்யா,
    ஸ்ரீ சோடஷாக்ஷரி வித்யா, நந்தி வித்யா.

    ஸ்ரீ வித்யை என்பதே பிரம்ம வித்யை. இது மூல வித்யை, மகாவித்யை, தகர வித்யை என்றும் சொல்லப்படும்.


    தேவியின் மந்திர மகிமை குறித்து ஹயக்ரீவர் அகஸ்த்தியருக்கு
    சொல்கிறார். “எல்லாப் பொருள்களையும் விட சப்தமே சிறந்தது,
    எல்லா சப்தங்களையும் விட வேதமே சிலாக்கியமானது.


    எல்லா வேதங்களையும்விட அதன் மந்திரங்களே சிறந்தவை
    சகல வேத மந்திரங்களில் துர்க்கா மந்திரம் சிறந்தது,
    சாரஸ்வத மந்திரங்கள் துர்கா மந்திரங்களைவிட சிறந்தது.

    அதைவிட ஆம்னாய மந்திரங்கள் சிறந்தது. இவை எல்லாவற்றையும்விட
    சிறந்தது லோபாமுத்ராவின் ஹாதி.

    அதைவிட சிறந்தது காமராஜம் என்கிற காதி.

    இப்படி பல பீஜாக்ஷரங்கள் சேர்ந்ததே மூல மந்திரம்.

    இதை தீக்ஷை பெற்று உபாசிப்பதே வித்யை.

    ஸ்ரீவித்யையில் ஏகாக்ஷரி, த்ரயக்ஷரி, நவாக்ஷரி, பஞ்சதசாக்ஷரி,
    ஷோடசி, மகாஷோடசி இவைகள் அடங்கும்.

    ஸ்ரீவித்யை என்பது சாக்தம் அல்ல. சைவம், வைணவம், காணாபத்யம்,
    சௌரம், சாக்தம், கௌமாரம், பௌத்தம் என அனைத்து மதங்களையும்
    அணைத்துக் கொள்கிறது. அவைகளைக் கடந்தும் நிற்கிறது.

    நவ ஆவரண பூஜையில் எல்லா தரிசனமும் உண்டு.

    உலகில் உள்ள அனைத்து வழிபாட்டு முறைகளும் ஸ்ரீ வித்யையில் அடக்கம்.


    Source: kamaljipanditji.wordpress.

    This Post is for sharing knowledge only, no intention to violate any copy rights
Working...
X