Announcement

Collapse
No announcement yet.

AYYANGAR- What is the Meaning ?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • AYYANGAR- What is the Meaning ?

    ஐயங்கார் என்பதன் பொருள் என்ன?

    ஐயங்கார் என்பதன் பொருள் என்ன?

    ஐயங்கார் என்பவர் வைணவத்தின் அடையாளமான பஞ்ச சம்ஸ்காரத்தைத் தரித்துக் கொண்டவர் ஆவார். சம்ஸ்காரம் என்பது ஐந்து நெறிகளை
    உள்ளடக்கிய ஒன்றாகும்.


    அவை
    தாபசம்ஸ்காரம்:-
    வலதுதோளில்
    சக்கரமும்,
    இடதுதோளில் சங்கும்
    தரித்துசெய்யப்படுவதாகும். இதை தாப சம்ஸ்காரம் என்பர்.

    புண்ட்ரசம்ஸ்காரம்:-
    நெற்றி, நாபி, மார்பு,
    கழுத்து,இரண்டுதோள்கள், பிடரி, பின்இடுப்பு
    ஆகிய உடலின் பாகங்களில்
    கேசவ, நாராயணா,
    மாதவ, கோவிந்த,
    விஷ்ணு, மதுசூதன,
    திரிவிக்கிரம, வாமன,
    ஸ்ரீதர, ரிஷிகேச,
    பத்மநாப, தாமோதர
    திருநாமங்களைத் தியானித்து திருமண் காப்பு அணிதல்! இதை புண்ட்ர சம்ஸ்காரம் என்பர்.

    நாமசம்ஸ்காரம்:

    கோத்திரம், சூத்திரம் முதலிய சரீரம் சம்பந்தமான சிறப்புகளை விடுத்து அடியேன் என்னும் பெயரை ஏற்றல்!
    இதை நாம சம்ஸ்காரம் என்பர்.

    மந்திரசம்ஸ்காரம்
    நல் மந்திரங்களை உபதேசித்தல்! இதை மந்திர சம்ஸ்காரம் என்பர்.

    யாகசம்ஸ்காரம்:வழிபாட்டு மூர்த்தியை அமைத்து திருவாராதனம் செய்தல்! இதை யாக சம்ஸ்காரம் என்பர்.

    இந்த ஐந்தும் பெற்றவரே ஸ்ரீவைணவ நெறிகளுக்கு உரிய அதிகாரி ஆவார்.

    அங்கத்தில் இந்த ஐந்தும் தரித்தவரையே ஐயங்கார் என்பர்.

    அய்யங்கார் என்பது சாதியல்ல. அது வைணவத்தின் அடையாளம் ஆகும்.

    ஓம் நமோ நாராயணாய…

    Source: amaljipanditji.wordpres

    ( This post is for sharing knowledge only, no intention to violate any copy rights)
Working...
X