இந்து மத அமைப்பினர் அனைவரும் பாரம்பரியமாக, வாழ்த்துக்களை தெரிவிக்க மணமக்களுக்கு, தமது குழந்தைகளுக்கு மற்றும் புதிதாக தொழில் துவங்கும் தமது வாரிசுகளுக்கு " அட்சதை " பயன் படுத்துகின்றனர் இதனால் என்ன பயன் ?

முனை முறியாத அரிசி தான் அட்சதை , நன் மங்களங்களை நல்குவது மஞ்சள் . அது சென்றடைய ஒரு ஊடகம் தேவை. அதுவே அரிசி இந்த இரண்டையும் இணைக்கும் இணைப்பான் பசு நெய்; இது கோமாதாவின் திரவியம் .

பூமிக்கு மேல் விளையும் பொருள் அரிசி, பூமிக்கு கிழ் விளை பொருள் மஞ்சள், இந்த இரண்டையும் இணைக்க தூய பசு நெய் தேவை.

சற்றே யோசித்தால் இயற்கையில் , மணமக்களை வாழ்த்தும் பொழுது மணமக்கள் இரு மாண்பினர்; வெவ்வேறு குணநலன்கள் கொண்டவர்கள்; ஒருமித்து வாழத்தக்கவர்கள்; அரிசியும் மஞ்சளுமான மணமக்களை இணைக்கும் பசு நெய்யாகப் பாசமிகு உற்றார் உறவினர்கள் உள்ளனர் இதுவே தத்துவம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஆகவே உற்றார் உறவினர்கள், பெரியோர், நண்பர்கள் என அனைவரும் மணமக்களை வாழ்த்தும் பொழுது, மணமேடைக்கு அருகே வந்து ஒருவர் பின் ஒருவராக மணமக்களை அட்சதை தூவி ஆசி வழங்குவதே சரியான முறையாகும். மொத்தாமாக மாங்கல்ய தானம் செய்யும் பொழுது தூவி வாழ்த்துவது நன்மையான பலன்களை, அதிகம் வழங்குவது இல்லை என்பது சாஸ்திர உண்மை .

மேலும் தமது வாரிசுகள் புதிதாக தொழில் துவங்கும் பொழுதும் சந்திரன் சக்தி அதிகம் அமைந்த அரிசியும் குருபகவானின் சக்தி அதிகம் அமைந்த மஞ்சளும் , மஹா லக்ஷ்மி பரிபூரண சக்தி கொண்ட நெய்யினை கலந்து,

உற்றார் உறவினர்கள், பெரியோர், நண்பர்கள் என அனைவரும் அவர்களை ஆசி வழங்கும் பொழுது அந்த புதியதாக துவங்கப்பட்ட தொழில் வாழையடி வாழையாக அவர்களுக்கு அதிர்ஷ்டத்துடன் கூடிய முன்னேற்றத்தை வாரி வழங்கும் என்பது சாஸ்திர உண்மை.

When Akshata is offered to a deity, it is believed to be the finest offering that a devotee can make. Akshata is believed to be equal to offering clothes, jewelry, food, or any other offering.Akshata is usually thrown over the head of the devotees during pujas and during functions like marriage and other auspicious events.

Source: Google search