Announcement

Collapse
No announcement yet.

Karmaa - Parable by Bharatiyar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Karmaa - Parable by Bharatiyar

    அர்த்தமுள்ள இந்து கதை J K SIVAN


    நான் ஒரு குட்டி கதை சொல்கிறேன் கேளுங்கள்:


    ஒரு வீடு. அதில் குப்பனும் குப்பியும் வசித்தார்கள். ரொம்ப அன்னியோனிய தம்பதிகள் அந்த புருஷனும் ஸ்திரீயும்.
    ஒரு நாள் புருஷன் இரவு வீடு திரும்பும்போது ஸ்த்ரீ சமையல் செயது கொண்டிருந்தாள் அடுப்பில் சோறு பாதி வெந்து கொண்டிருந்தது. குக்கர் காஸ் ஸ்டவ் தெரியாத காலம். விறகு அடுப்பு, வெண்கலப்பானையில் சோறு.
    குப்பிக்கு உடம்புக்கு ஏதோ அசௌகரியம். அன்றிரவு சாப்பிட வேண்டாம் என்று முடிவு. ஆகவே சாதம் புருஷனுக்கு மட்டும் சமைத்துக் கொண்டிருந்தாள்.


    குப்பம்மா எனக்கு இன்றிரவு விரதம், நான் சாப்பிடப்போவதில்லை. உனக்கு மட்டும் என்று சொல்லிவிட்டு படுத்துக் கொண்டு தூங்கிப்போனான் .


    குப்பி என்ன செய்தாள்? . பாதி கொதிக்கிற சோற்றை அப்படியே விட்டு விட்டு அடுப்பை தண்ணீர் விட்டு அவிக்க வில்லை. தங்கள் இருவருக்கும் உபயோகம் இல்லாவிடினும் மறுநாள் காலையில் வேலைக்காரம்மா வேலாயிக்கு உதவுமே என்று நினைத்து, சாதம் நன்றாக கொதி வரும் வரை காத்திருந்து சாதத்தை வடித்து கஞ்சியையும் மூடிவைத்து விட்டு அடுப்பை அணைத்து விட்டு பிறகு நித்திரைக்கு சென்றாள்.


    அதுபோலவே கர்மயோகி தான் ஒரு தொழில் செய்ய தொடங்கி, இடையிலே அது தனக்கு பயனில்லை என்று தோன்றினால், அதை அப்படியே நிறுத்தி விட மாட்டான். பிறருக்கு பயன் தரும் என்பதை மனதில் கொண்டு தான் எடுத்த வேலையை முடித்த பிறகே வேறு காரியம் தொடங்குவான்.


    அன்பு நண்பர்களே இந்த கதை நன்றாக இருக்கிறதா? ஆமாம் என்றால் அதை நான் உங்கள் சார்பில் முண்டாசு கவிஞர் மஹாகவி பாரதியாரிடம் தெரிவித்து விடுகிறேன். இது அவர் எழுதிய ஒரு குட்டி கதை..இன்னும் நிறைய அவர் கதைகள் சொல்கிறேன்.
Working...
X