Announcement

Collapse
No announcement yet.

THIRUPATHI- A JOTHIDA EXPLANATION

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • THIRUPATHI- A JOTHIDA EXPLANATION

    திருப்பதி சூழ்ச்சமம் ஜோதிட விளக்கம்...





    திருப்பதி சென்று முதலில் சந்திரன் எனும் பத்மாவதி தாயாரை தரிசித்து, ராகு எனும் மலை மீது ஏறி திருமலை வந்து, கேது எனும் முடியை பரிகாரமாக தந்து, சனி எனும் கூட்டத்துடன் கூட்டமாக நின்று, செவ்வாய் எனும் காவலரை கடந்து, குரு எனும் பக்தி மார்க்கம் கொண்டு, உச்ச புதனான பெருமாளை தரிசித்து, சூரியன் எனும் ஆத்ம பலம் பெற்று வெளியே வந்தால் கிடைக்கும் சுக்கிரன் எனும் லட்டு...

    இதில் உள்ள சூழ்ச்சமம் என்ன வேனில், சந்திரன் ராகுவுக்கு எதிரி ஆகவே தாயார் திருப்பதியில் முதல் தரிசனம், பின்பு மனோ பலத்துடன் ராகு எனும் மலை ஏறினால், ராகுவின் எதிர்காரகமான கேதுவை நீச்ச படுத்த வேண்டும் அதாவது விரக்தி, தடை, பூர்வ ஜென்ம கர்மா போன்ற காரகங்களை நீச்ச படுத்த கேது எனும் முடியை பரிகாரமாக கொடுக்கிறோம், பின்பு கர்மா எனும் கூட்டத்துடன் பெருமாள் எவ்வளவு நேரம் காக்க வைப்பார் என்று தெரியாமல்(ஏனெனில் கர்மா தெரியாது) நிற்கிறோம், அப்படி நிற்கயில் கர்மா செவ்வாயை வைத்து சோதித்து பின்பு குரு எனும் பக்தி மேலோங்கி செல்கையில், புத்தியை தெளிய வைக்கும் உச்ச புதன் எனும் பெருமாளின் தரிசனம் கிடைக்கும்,

    மனோ பலம் புத்தி பலம் சேர்ந்து சூரியன் எனும் ஆத்ம பலம் பெற்று, பின்பு அவரின் ஆசியுடன் சுக்கிரனை சிறிது உண்டியலில் காணிக்கையாக போட்டுவிட்டு மனம் நிறைந்து நிற்கும் போது, நம் பசியாற வரும் அன்னம் எனும் நவகிரக கலவையை உண்ட பின்பு, கிடைக்கும் சுக்கிரன் எனும் லட்டு அதுவே லட்சுமி கடாக்க்ஷம்...
    Source: raman dorairajan

    mymandir.

    This post is for sharing knowledge only, no intention to violate any copy rights
Working...
X