Announcement

Collapse
No announcement yet.

DEITY ALANKARAM IN TEMPLES

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • DEITY ALANKARAM IN TEMPLES

    சாத்துப்படிக்கலை




    ஆகம மரபு சார்ந்த கோவில்களாயினும், ஆகமமரபைச் சாராத கோவில்களாயினும், இவ்விரு மரபினும் கோவில்களில் இறைவனை அழகுபடுத்தும் அலங்கார முறை இருந்து வருகின்றது. இறைவனுக்கு செய்யப்பெறும் அபிஷேகம், அர்ச்சனை போன்றவை எவ்வளவு முக்கியமானவையோ, அதே அளவு முக்கியமானது அலங்காரமாகும். அலங்காரம் செய்வதில் துறை தோய்ந்தவர் ‘அலங்கரணாச்சார்யர்’ எனப்பெறுவார். இறைவனைப் போதுமானளவுக்கு அலங்கரிக்க வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. இவ்வாறு அலங்கரிப்பதனைச் ‘சாத்துப்படி’ என்றும் அழைப்பர். அதாவது இறை மூர்த்தத்திற்கு ஆடை, ஆபரணங்கள், மாலைகளை சாத்தி (சார்த்தி) அலங்கரித்தலை இது குறிக்கும்.

    இது ஒரு தெய்வீகக்கலையாகும். இது ஒரு அழகியற்கலையாகும். இன்னொரு சாரார் இதனை ஒரு கைவினையாகவும் கருதுவர். ஆக, இது கைவினையா..? அல்லது கலையா? என்ற கேள்வி உருவாகின்றது. என்றாலும் கைவினைக்கு அப்பாற்பட்ட ஒரு வித அருமைத்தன்மை காணப்படுதலால் இதனைக் கலையாகக் கருதலாம் என்பதும் பலர் கருத்து. சாத்துப்படி அலங்காரத்தில் கலைஞர்கள் ஒவ்வொருவராலும் மேற்கொள்ளப்படும் அலங்காரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை இரசனைத்தன்மை கொண்டனவாயுள்ளன. கலைஞர்களின் தனிப்பட்ட திறமையும், நுணுக்கமான அசைவுகளும், சாத்துப்படி அலங்காரத்தில் இழையோடியிருப்பதைக் காணலாம். என்றாலும் சாத்துப்படி அலங்காரம் பற்றிப் பெரியளவில், ஆய்வுகள் நடந்ததாகத் தெரியவில்லை. அதனை ஒரு கலையாகக் கூட பலர் நோக்குவதாகத் தெரியவில்லை.

    பல்வகை அழகு கொண்ட சாத்துப்படிகள்

    தினமும் ஆலயங்களில் நடக்கிற பூஜை வழிபாட்டில் இறைவனுக்கு அலங்காரம் நடைபெற்றாலும், அதனை நடைமுறையில் ‘சாத்துப்படி’ என்று சொல்வதில்லை. நடைமுறை வழக்கில், விசேட உத்ஸவ காலத்திலும், விசேட நாட்களிலும் உத்ஸவ மூர்த்திக்குச் செய்யப்பெறும் அலங்காரமே சாத்துப்படி என்று அழைக்கப்பெறுகின்றது.

    இவற்றினையும் சாதாரண சாத்தப்படி, விசேட சாத்துப்படி என்று இரு வகையாக அழைப்பர். விசேட சாத்தப்படி இவற்றுள் சிறப்பானது. யாழ்ப்பாணப் பிரதேச வழக்கில் விசேட சாத்துப்படியை மடல் சாத்துப்படி, சயனச்சாத்துப்படி, ஓங்காரச்சாத்துப்படி, நிருத்தச்சாத்துப்படி, வேல் சாத்துப்படி, நட்சத்திரச் சாத்துப்படி, ஆரச்சாத்துப்படி, மயில் சாத்துப்படி, நாகபடச் சாத்துப்படி, ஆறு கோணச்சாத்துப்படி, வட்டச்சாத்துப்படி, காலவரைச் சாத்துப்படி, பச்சைச்சாத்துப்படி, மஞ்சள் சாத்துப்படி, சிவப்புச்சாத்துப்படி, வெள்ளைச்சாத்துப்படி என்று பலவாறாக வகுத்து விரித்துச் சொல்லுவார்கள்.
    tamilhindu.

    This post is for sharing knowledge only, no intention to violate any copy rights
Working...
X