Announcement

Collapse
No announcement yet.

Why Lord Ayyapa is called Dharma Sastha

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Why Lord Ayyapa is called Dharma Sastha

    ஐயப்பனை ஏன் தர்மசாஸ்தா என்று அழைக்கிறோம்?





    புலியை வாகனமாகக் கொண்டு, தவக்கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள் பாலித்துவரும் அருட்கடல் தான் ஐயப்பன். மகிஷி என்ற அரக்கியை வதம் செய்ய அவதரித்தவர். மற்ற கடவுளுக்கு மாலை போடும் பக்தர்களை விட ஐயப்பனுக்கு மாலை போடும் பக்தர்கள் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்.

    ஐயப்பனுக்கு தர்மசாஸ்தா என்ற பெயர் எப்படி வந்தது? அதற்குப் பொருள் என்று தெரிந்து கொள்வோம்.
    சாஸ்தா என்ற வார்த்தைக்கு, உன்னத ஆட்சியாளர், கட்டளையிடுபவர், ஆள்பவர், மேலும் தவறு செய்பவரை தண்டிப்பவர் என்று அர்த்தம்.

    முருகப்பெருமானை பிரம்ம சாஸ்தா என்று அழைப்போம். ஏனெனில், அவர் பிரம்மனுக்குக் கட்டளை இட்டவர். வீரபத்திரரை தக்ஷ சாஸ்தா என்பர். காரணம், அவர் தக்ஷ பிரஜாபதியை தண்டித்தார்.
    ஹரிஹர புத்திரனை தர்ம சாஸ்தா என்று அழைக்கக் காரணம், அவர் தர்மத்தை நிலை நாட்டி ஆட்சி புரிகின்றார். தர்மம் என்பது மனித வாழ்க்கையின் ஆணிவேர். தர்மமானது ஒரு மனிதன் அறிவழியில் நடப்பதற்கான பாதையாக இறைவனால் ஏற்படுத்தப்பட்டது.


    ஒருவன் எப்போது தர்மத்தை நிலை நாட்டுகின்றானோ, அப்போது நல்ல செயல்கள் அனைத்தும் தானாக நடக்கும். கிருஷ்ணபரமாத்மாவும் கீதையில் இதைத்தான் சொல்கிறார். எங்கு தர்மம் அழிகிறதோ, நான் அங்கு வந்து தர்மத்தை நிலை நாட்டுவேன் என்றும் இந்தத் தர்மத்தால் தான், இன்று அகிலம் தழைத்து நிற்கிறது என்றும் கூறுவார்.ஒருவன் எப்போது தர்மத்தை நிலை நாட்டுகின்றானோ, அப்போது அந்த செயல், இந்த அகில உலகத்தையும் பாதுகாத்து, அவனையும் தெய்வீகமானவனாக்குகிறது. நாளடைவில், இந்த தர்மம், அவனை தெய்வீகத்தின் பிரதிநிதியாக மாற்றுகிறது. இதுதான் தத்வமஸி. அந்த தர்மத்தை நிலைநாட்டும் பகவானாக இருப்பதால், ஐயப்பனை தர்ம சாஸ்தா என்று அழைக்கிறோம்.

    dinamani.

    seithipuna
    vikatan.
    This post is for sharing knowledge only, no intention to violate any copy rights

Working...
X