Announcement

Collapse
No announcement yet.

TEMPLES Where Lord Garuda is Worshipped

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • TEMPLES Where Lord Garuda is Worshipped

    கருட வழிபாட்டு கோவில்கள்!



    திருமாலின் வாகனமான கருடனின் அவதார நாள். இந்த நாளில், கருடனுக்கு முக்கியத்துவம் தரும் பெருமாள் கோவில்கள் சிலவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோமா!

    1. வரதராஜ பெருமாள் - வைகாசி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள், ஆனி சுவாதி, ஆடி பவுர்ணமி நாட்களில் கருடசேவை - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., -

    2. திருநாங்கூர் குடமாடுகூத்தன்(அரிமேயவிண்ணகரம்) - தை அமாவாசைக்கு மறுநாள் 11 திவ்யதேச பெருமாள்களின் கருடசேவை - சீர்காழியில் இருந்து 8 கி.மீ.


    3. நாச்சியார்கோவில் (திருநறையூர் நம்பி) - கல்கருடனுக்கு தனி சன்னிதி, வியாழக்கிழமைகளில் அமுத கலச நைவேத்யம், ஆடி சுவாதி விழா, பங்குனி திருவிழாவில் 64 பேர் கல்கருடனை சுமத்தல், எடை கூடி குறையும் அதிசயம் - கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ.

    4. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் - 30 முழ வேட்டி அணியும் 25 அடி உயர கருடன் - திருச்சியில் இருந்து 6 கி.மீ., -

    5. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் - கருடன் பெரியாழ்வாராக அவதரித்த தலம், திருமாலுக்கு மாமனார் முறை, ஆண்டாள், பெருமாளுடன் இணைந்த கோலம் - மதுரையில் இருந்து 90 கி.மீ.,


    6. திருக்கண்ணங்குடி லோகநாதர்கோவில் - மற்ற தலங்களில் கைகூப்பிய கருடாழ்வாரைப் பார்க்கலாம். இங்கு கைகளைக் கட்டிக் கொண்டு தரிசனம் தருவது சிறப்பு - நாகபட்டினத்தில் இருந்து 8 கி.மீ.,


    7. திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமர் - நான்குகரங்களுடன் சங்கு, சக்கரம் ஏந்தியவர் - கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ.,

    8. ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் - வைகாசி பிரம்மோற்சவத்தின் 5ம்நாள் நவதிருப்பதி பெருமாள்களின் கருடசேவை - திருநெல்வேலியில் இருந்து 30 கி.மீ., -


    9. தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் - பெருமாளுக்கு நேர் எதிரில் இல்லாமல் இடப்புறமாக கருடன் சன்னிதி விலகியுள்ளது - திருநெல்வேலியில் இருந்து 30 கி.மீ., -


    10. ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாதர் - பெருமாளுக்கு சாத்தும் சந்தனத்தைக்களைந்து கருடனுக்கு சாத்துதல், சந்தனக்கருடன் என்ற சிறப்பு பெயர் - திருநெல்வேலியில் இருந்து 30 கி.மீ.,


    11. திருத்தங்கல் நின்றநாராயணர் - கருடாழ்வார் சர்ப்பம், அமிர்த கலசம் தாங்கியிருத்தல், மூலஸ்தானத்தில் பெருமாளுடன் காட்சியளித்தல - விருதுநகரில் இருந்து 20 கி.மீ., - 12.

    திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் - நம்பாடுவான் என்ற பக்தருக்காக கருடாழ்வாரும், கொடிமரமும் விலகியுள்ள தலம் - திருநெல்வேலியில் இருந்து நான்குநேரி வழியாக 39 கி.மீ,


    Source: dinamalar.


    This post is for sharing knowledge only, no intention to violate any copy rights
Working...
X