Announcement

Collapse
No announcement yet.

Namadevar part4,5 spriritual story

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Namadevar part4,5 spriritual story

    Namadevar part4,5 spriritual story
    courtesy:Smt.Dr.Saroja Ramanujam
    விட்டல விட்டல பாண்டுரங்கா
    நாமதேவர் -4
    நாமதேவரும் ஞானதேவரும் பண்டரிபுர்ம் திரும்பியதும் அங்கு கோராகும்பர், ஜனாபாய், முக்தாபாய் முதலிய பக்தர்கள் வந்திருந்தனர். அவர்களை எல்லாம் கோராகும்பர் தன் வீட்டிற்கு அழைக்க அனைவரும் சென்றனர்.
    அப்போது நாமதேவரை மெருகேற்றிய வைரமாக்குவதற்காக பாண்டுடரங்கன் ஒரு திருவிளையாடல் புரிந்தான்.
    எல்லோரும் வீட்டிற்குச் சென்றதும் ஞானதேவர் அவரிடம் இங்கு ஏதேனும் சுடாத பானை உள்ளதா என்று கேட்க அவர் கூறியதைப் புரிந்து கொண்ட கோரா களிமண் வெந்துவிட்டதா என்று பார்க்கும் குச்சியை எடுத்து ஒவ்வொருவருடைய தலையிலும் தட்டிப் பார்க்க எல்லோரும் அதைக் கண்டு வாளாவிருந்தனர். நாமதேவர் மட்டும் அதற்கு எதிர்ப்பைத் தெரிவித்தார். அப்போது கோராகும்பர் "இந்தப் பானை மட்டும் இன்னும் சரியாக பக்குவப்படவில்லை," என்று கூறினார்
    அதைக்கேட்டு எல்லோரும் நகைத்தனர். அப்போது நாமதேவரிடம் ஞானதேவர் உண்மையில் பக்குவம் படைத்த ஒருவன் தேகாபிமானம் கொள்ள மாட்டான் என்று கூறினார். அதனால் வருத்தமடைந்த நாமதேவர் பாண்டுரங்கனிடம் வந்து முறையிட்டார்.
    அவர் கூறியது,
    "நான் உனக்கு பிரியமானவன் என்னைப்பிரிய மனமில்லை என்று கூறியதெல்லாம் பொய்யா? என்னை ஏன் இப்படி மற்ற் பக்தர்கள் மத்தியில் அவமானமடையச் செய்தாய் . இதற்காகத்தான் என்னை ஞானதேவருடன் அனுப்பினாயா? "
    பாண்டுரங்கன் கூறினான் ,
    "என் பிரிய பக்தா, அவ்ர்கள் கூறியது உண்மையே. உன்பக்தி மிகவும் சிறந்தது. அத்னால்தான் நீ எனக்கு பிரியமானவன். ஆயினும் உனக்கு உடல், மனம் இவற்றின் மீது கொண்ட பற்று நீங்கினால் ஒழிய ஞானம் வருவது சாத்தியம் இல்லை. அந்தப் பற்றின் காரணமாகவே உன்னால் கோரா செய்தது மறுக்கப்பட்டது. "
    அதற்கு நாமதேவர் பாண்டுரங்கனே தனக்கு அந்த ஞானத்தை ஏன் அருளவில்லை என்று கேட்க அதற்கு அவன் அது குரு மூலமாகவே சித்திக்க வேண்டும் என்றும் கூறி அவரை மல்லிகார்ஜுனம் சென்று விசோபாவை சந்திக்கும்படி கூறினான் .
    நாமதேவர் விசோபாவை சந்தித்து அவரிடம் இருந்து ஞானம் பெற்றதை அடுத்து காண்போம்.


    விட்டல விட்டல பாண்டுரங்கா
    நாமதேவர் -5
    நாமதேவர் விஷொபாவை சந்திக்க மல்லிகார்ஜுனம் சென்றார். அங்கு விஷோபா கோவிலில் லிங்கத்தின் மீது காலை வைத்து படுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். லிங்கத்தின் மீது கால் படலாகாது என்று கூடத் தெரியாத இவரிடமா என்னை பாண்டுரங்கன் அனுப்பினான் என்று எண்ணி, அவரிடம் , " ஐயா உங்கள் காலை லிங்கத்தின் மேல் வைத்து இருக்கிறீர்களே அது தவறில்லையா ?" என்று கேட்டார்.
    விஷோபா நாமதேவரிடம் " மகனே நான் வயதாகி தள்ளாமையில் இருக்கிறேன். நீயே என் காலை எடுத்து தரையில் வைத்து விடு" என்றார். அப்ப்டி செய்ய நாமதேவர் முயற்சிக்கையில் எங்கு அவர் காலைத் தூக்கி வைத்தாலும் அங்கெல்லாம் ஒரு சிவலிங்கம் தோன்றியது. இதைக் கண்ட நாமதேவரின் அகந்தை அகன்று அவருக்கு ஞானம் சித்தித்தது.
    பிறகு அவர் பண்டரிபுரம் திரும்பியதும் பாண்டுரங்கனை தரிசிக்கப் போகவே இல்லை. பாண்டுரங்கன் இதைக் கண்டு ஆச்சரியம் அடைந்து அவரிடம் " நாமதேவா , என்னை மறந்து விட்டாயா இல்லையேல் என்னிடம் கோபமா? ஏன் என்னைக் காண வரவில்லை? " என்றான்.
    அதற்கு நாமதேவர், " பாண்டுரங்கா, உன்னை எங்கும் எப்போதும் காணும் என்னால் எப்படி உன்னை மறக்க முடியும் ? நானும் நீயும் வேறல்ல என்று உணர்கிறேன். உன்னைக் காண கோவிலுக்குத்தான் வரவேண்டும் என்பதில்லையே " என்று மறுமொழி அளித்தார்.
    அதைக்கேட்ட பாண்டுரங்கன் நகைத்து, இப்போது பானை நன்றாக பதமாகிவிட்டது. என்றான்.
    நாமதேவர் 80 வயதிற்கு மேல் வாழ்ந்தார். அவர் இயற்றிய அபங்கங்கள் 2000த்திற்கும் மேல். அவர் பக்த ஜனா விற்கு ஆதரவு அளித்தார். அதை இப்போது காண்போம்.
    ஜனாபாய்
    ஜனாபாய் சிறு வயதில் பண்டரிபுரத்திற்கு அவளுடைய பெற்றோருடன் வந்தாள். அவர்கள் திரும்பிப் போகையில் அவள் அவர்களுடன் வர மறுத்து பண்டரிபுரத்திலேயே தங்கப்போவதாகக் கூறினாள். அவளுடைய பிடிவாதத்தினால் அவள் பெற்றோர் என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்தனர்.
    அப்போது நாமதேவர் அவள் தன்னோடு தங்கி பாண்டுரங்கனுக்கு சேவை செய்யலாம் என்று கூறினார். அவளும் மகிழ்ச்சியுடன் அவரோடு சென்றாள் . அதுமுதல் அவள் அவர் வீட்டில் நாமசங்கீர்த்தனம் செய்தவாறே பணி செய்து வந்தாள்.
    அவள் கண்ணன் மதுரை வந்த போது கூனியாக இருந்து அவனால் கூன் நிமிர்த்தப்பட்டவள் என்றும் அப்போது அவள் முக்தியை விரும்பாமல் கண்ணனின் சங்கமத்தையே விரும்பியதால் இந்தப்பிறவியில் முக்தியடைய ஜனாபாயாகப் பிறந்தாள் என்று கூறப்படுகிறது. அவளுடைய பணிகளுக்கு பாண்டுரங்கனே வந்து உதவி செய்ததாகவும் அவள் இயற்றிய அபங்கங்களை அவனே எழுதியதாகவும் வரலாறு
    .
    ஒருமுறை அவள் வரட்டி தட்டி அவைகளை சுவற்றில் ஒட்டி வைக்க அதைத் திருடியதாகக் கூறி ஒரு பெண்மணியிடம் வாதிட்டாள். அதற்கு அந்தப் பெண் அதை நிரூபிக்கும்படி கூற அதற்கு அவள் ஒவ்வொரு வரட்டியாகத் தன் காதில வைத்து பார்த்தாள். . அவள் சதா பாண்டுரங்க நாமத்தைக் கூறிக்கொண்டெ இருப்பதால் அவளுடையவற்றில் மட்டும் பாண்டுரங்க நாமம் கேட்டதாம். அப்படிப்பட்ட பக்தி ஜனாபாயுடையது.
Working...
X