Announcement

Collapse
No announcement yet.

VIVAAHAM-1.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • VIVAAHAM-1.

    .பாக்கு வெற்றிலை மாற்றுதல்:-= நிச்சயதார்த்தம்


    ஜாதகம் பொருந்தி, பெண்ணுக்கும் பிள்ளைக்கும் பிடித்து , எல்லோர் மனதிற்கும் த்ருப்தி ஏற்பட்ட பின் ,சம்பந்தம் கொள்வது என்று உறுதியானபின்
    , பிள்ளை வீட்டில் பாக்கு வெற்றிலை மாற்றி கொள்வது வழக்கம். அந்த காலத்தில் வாய் வார்த்தையின் நிச்சயத்திலேயே நம்பி இருந்தனர்.


    இக் காலத்தில் விவாஹத்திற்கு முன்னதாகவே ஒரு நல்ல நாளில் பிள்ளை வீட்டில் இந்த நிகழச்சி நடை பெறுகிறது.
    இதற்கு பெண் வீட்டார் ஒரு புதிய சம்படத்தில் திரட்டி பால் 500 கிராம்,, பருப்பு தேங்காய் ஒரு ஜோடி, ஏதோ ஒரு வகை இனிப்பு 31;


    வெற்றிலை, பாக்கு, புஷ்பம், மாலை, கல்கண்டு, சந்தனம், குங்குமம். , மஞ்சள் தூள், ஆப்பிள், ஆரஞ்ச், பைன் ஆப்பிள்,
    பன்னீர் திராட்சை, கொய்யா, மாதுளை, வாழை பழம், பலா பழம், மாம்பழம் (கிடைக்கும் சீசனில்)


    வகைக்கு ஒரு டஜனும், வாதாம் பருப்பு, பேரீச்சை, பிஸ்தா பருப்பு, வால்னட்,கிஸ்மிஸ் பழம், முந்த்ரி பருப்பு வகைக்கு ஒரு கிலோவும்; சக்கரை பொம்மைகள்;
    சர்க்கரை, அதில் கலர் பெப்ப்ர் மின்டால் பெயர்கள் எழுதி வைக்கிறார்கள்.
    ட்ரேகளில் இவைகளை வைத்து அலங்கரிக்கி றார்கள்.


    மணமகனுக்கு பேண்ட், ஷர்ட். டை; ஷூ மணமகள் வீட்டார் வாங்கி செல்ல வேண்டும்.
    திருமணதிற்கென வைக்க இருக்கும், வெள்ளி சந்தன பேலா, குங்கும சிமிழ், இவற்றை இந்த வைபவத்தின் போது பிள்ளை வீட்டாரிடம்


    சேர்பிக்க வேண்டும். கல்யாண தினதன்று இவைகளை பிள்ளை வீட்டார் கல்யாண மணடப
    திற்கு கொண்டு வருவார்கள். இதை முன் கூட்டியே பேசி கொள்ளலாம். பெண் வீட்டு புரோஹிதரும், பிள்ளை வீட்டு ப்ரோஹிதரும் இந்த வைபவத்திற்கு வருவார்கள்.


    பிள்ளை வீட்டார் அவர்களது மொட்டை மாடியில் இடமிருந்தால் அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் ஷாமினா போட்டு, டேபிள், நாற்காலி
    போட்டு, தண்ணீர், ப்ளாஸ்டிக் டம்ப்ளர்கள் வாங்கி கேடரர் இடம் சொல்லி டிபனோ அல்லது சாப்பாடோ சமயத்திற்கு ஏற்றார்


    போல் போட்டு, தாம்பூல பையில் தாம்பூலம், பழம் அல்லது தேங்காய், பரிசு பொருள், பணம் போட்டு கொடுக்க வேண்டும். மாதர்களுக்கு
    இத்துடன் ரவிக்கை துண்டும் சேர்த்து கொடுக்க வேண்டும். சாப்பாடு அல்லது டிபன், காபி, தாம்பூல பை இவைகள் பிள்ளை வீட்டார் சிலவு.


    மொட்டை மாடியில் இடமில்லா விட்டால் பக்கத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் செய்ய வேண்டும். இதுவும் பிள்ளை வீட்டார் சிலவு.


    முதலில் பெண் வீட்டார் விக்னேஸ்வர பூஜை; கிரஹ ப்ரீதி செய்து வாங் நிச்சய பத்திரிக்கை
    வைத்து தாம்பூலம், பழம், தேங்காய் புஷ்பம் உள்ள தாம்பாலத்தை பிள்ளை வீட்டு தலைவரிடம் கொடுப்பார்


    பிறகு பிள்ளை வீட்டு தலைவரும் பெண் வீட்டு தலைவரிடம் பத்ரிக்கை, தாம்பூலம், பழம், புஷ்பம் தேங்காய் கொடுப்பார்.


    இப்போது வந்திருக்கும் அனைவருக்கும் சக்கரை, கற்கண்டு, சந்தனம் கொடுக்க வேண்டும்.


    செளகரிய பட்டால் மண மகனையும், மண மகளையும் தனி தனியே கிழக்கு நோக்கி உட்கார வைத்து , பிள்ளைக்கு பெண்ணீன் தந்தையும், பெண்ணிற்கு பிள்ளையின் சகோதரியுமாக சந்தனம் கொடுத்து, , பெண்ணுக்கு


    குங்குமமும், பூவும் கொடுத்து பிள்ளைக்கு பெண் வீட்டார் உடை அளித்து அதை அணிந்து வந்த பிறகு, மாலை போட்டு, அதே போல் பெண்ணிற்கு


    பிள்ளை வீட்டார் வாங்கி கொடுத்த , புடவை கட்டி வர பெண்ணிற்கும் மாலை போடுவார்கள்.
    வசதி உள்ளவர்கள் பிள்ளை வீட்டார் பெண்ணிற்கு நகையும், பெண் வீட்டார் பிள்ளைக்கு கை கடிகாரம், மோதிரம், மைனர் செயின் ,ப்ரேஸ்லெட் இத்யாதிகளில் ஏதோ ஒன்று வாங்கி போடு
    வார்கள்.


    பெண்ணின் பெற்றோர்கள் பிள்ளையின் பெற்றோர்களுக்கு புடவை, வேட்டி, துண்டு வாங்கி கொடுப்பார்கள்.


    பிள்ளையின் பெற்றோர்கள் பெண்ணின் பெற்றோர்களுக்கு வேட்டி, துண்டு, புடவை வாங்கி தருவார்கள்.
    அதன் பின்னர் ஆரத்தி எடுப்பார்கள். பெண் வீட்டு உறவுகாரர்களை பிள்ளைக்கும், பிள்ளை வீட்டோருக்கும், பிள்ளை வீட்டு உறவு காரர்களை பெண்ணுக்கும் பெண் வீட்டோருக்கும் அறிமுகம் செய்து வைப்பார்கள்.


    பிள்ளை வீட்டிலேயே நடக்குமானால் குத்து விளக்கு, திரி நூல், எண்ணெய், கற்பூரம்,தீபெட்டி, ஊதுபத்தி, பஞ்ச பாத்திர உத்திரிணி ஆசன பலகை கொடுப்பார்கள்,


    கல்யாண மண்டபம் என்றால் பெண் வீட்டார் தடுக்கு, பஞ்ச பாத்திர உத்திரிணி, குத்து விளக்கு, எண்ணெய், திரி நூல், தீப்பெட்டி, ஊதுவத்தி, கற்பூரம், கற்பூர கரண்டி முதலியவை எடுத்து செல்ல வேண்டும்.


    திருமணம் ஆகாததால் பெண் தனியாகவும், பிறகு பிள்ளை தனியாகவும் நமஸ்காரம் செய்ய வேண்டும். இருவரும் சேர்ந்து இப்போது நமஸ்காரம் செய்ய கூடாது.
    இரு தரப்பினரும் வாக்கு மாறாமல் இருப்பதற்காக இந்த வாங் நிச்சயம் செய்ய படுகிறது.


    பெண் வீட்டுக்காரர்.


    நிகழும் மங்களகரமான -------- வருஷம் ------
    மாதம் ------ தேதி ----- கிழமை ----- திதி ------
    நக்ஷத்திரம் -------- யோகம் கூடிய ஶுப
    தினத்தில் உதயாதி நாழிகை ----- மேல் ----- குள்


    ------- ( ஊரின் பெயர் ) --------- கோத்ரம் --------
    பேரனும் --------- குமாரனுமான சிரஞ்சீவி --------
    ஊர் ------ கோத்ரம் --------- பெளத்ரியும் -------


    குமாரியுமான ---------- யை பகவத் க்ருபையுடன் -------- தேதி நிச்சயமானால்) ------- வருஷம் ------- மாதம் -------- தேதி அன்று
    சுப முஹூர்த்தத்தில் கன்னிகா தானம் செய்து
    கொடுப்பதாய் இரு பக்கத்தாரின் ஸம்மதத்துடன்
    பெரியோர்களால் நிச்சயிக்க பட்டது
    இடம் --------- இப்படிக்கு.
    தேதி --------


    பிள்ளை வீட்டுக்காரர்.


    நிகழும் மங்களகரமான -------- வருஷம் ------
    மாதம் ------ தேதி ----- கிழமை ----- திதி ------
    நக்ஷத்திரம் கூடிய -------- யோகம் கூடிய ஶுப
    தினத்தில் உத்யாதி நாழிகை ----- மேல் ----- குள்
    ------- ( ஊரின் பெயர் ) --------- கோத்ரம் --------
    பேரனும் --------- குமாரனுமான சிரஞ்சீவி --------


    ஊர் ------ கோத்ரம் --------- பெளத்ரியும் -------
    குமாரியுமான ---------- யை பகவத் க்ருபையுடன் -------- தேதி நிச்சயமானால்) ------- வருஷம் ------- மாதம் -------- தேதி அன்று
    சுப முஹூர்த்தத்தில் பாணி க்ரஹணம் செய்து
    கொள்வதாய் இரு பக்கத்தாரின் ஸம்மதத்துடன்
    பெரியோர்களால் நிச்சயிக்க பட்டது
    இடம் --------- இப்படிக்கு.
    தேதி --------
    நான்கு மூலைகளிலும் மஞ்சள் தடவி கைஎழுத்திட்டு கவரில் போட்டு கொடுக்கவும்.
    இதை தாம்பாளத்தில் வைத்து பழம், புஷ்பம், இரு தேங்காய் களுடன் கொடுக்கும் போது


    ஶோபனம், ஶோபனம் என்று சொல்லி கொண்டு இரு தரப்பினரும் பெற வேண்டும்.
    ஒரு தேங்காயை பிள்ளையாருக்கு சதுர் தேங்கா யாக உடைக்கவும். மற்றொன்றை சுவீட் செய்து சாப்பிடலாம். திருமணத்திற்கு நாளாகும் என்றால்.


    பெண்ணின் தகப்பனார் ஆசமனம் செய்து, சுக்லாம்பரதரம் சொல்லி, ப்ராணாயாமம் செய்து ஸங்கல்பத்தில் சுபே சோபனே முஹூர்த்தே -----
    சுப திதெள ---------நக்ஷத்ரே -------- ராசெள ------ ஜாதாயாஹா --------- நாமின்யாஹா அஸ்ய:


    மம குமார்யாஹா -------- வத்வாஹா---------
    ---------- நக்ஷத்ரே -------- ராசெள -------ஜாதஸ்ய
    --------- சர்மன: அஸ்ய வரஸ்ய அனயோஹோ வதூ வரயோ: உத்வாஹார்த்தம்


    வாங்க் நிச்சயம் கரிஷ்யே. ததங்கம் க்ரஹ ப்ரீதி தானம் ச கரிஷ்யே. அப உபஸ்பர்ஸ்ய.
    பிறகு பிள்ளையார் பூஜை. பிறகு யதா ஸ்தானம். பிள்ளையாரை சிறிது வடக்கே நகர்த்தவும். க்ஷேமாய புணராகமனாய ச. என்று சொல்லவும். புஷ்பத்தை கர்த்தா மனைவி தலையில் வைத்து கொள்ளலாம்.


    கிரஹ ப்ரீதி: ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அதஶாந்திம் ப்ரயஸ்சமே.
    வதூவரயோ: உத்வாஹா வாங் நிச்சய முஹூர்த்த லக்னாபேக்ஷயா ஆதித்யாதீனாம்


    நவானாம் க்ரஹானாம் ஆனுகூல்ய ஸித்தியர்த்தம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதா ப்ரீத்யர்த்தம் இதம் ஹிரண்யம் ப்ராஹ்மணேப்ய:
    ஸம்ப்ரததே ந மம. என்று சொல்லி ஜலத்தை கீழே விட்டு தக்ஷிணையை ப்ராஹ்மணர்களுக்கு கொடுக்கவும்.
    இரு பக்கத்து வாத்யார்களுக்கும் ஸம்பாவனை கொடுக்கவும்.


    பிள்ளை வீட்டார் பெண் வீட்டார் கொடுத்த பழங்கள், உலர் பழங்கள்; ஸ்வீட், இத்யாதிகளை காலி அட்டை பெட்டிகளில் மாற்றி கொண்டு
    தனது வீட்டிற்கு எடுத்து செல்வார்கள். தனது உறவினர்களுக்கு அதை பகிர்ந்து கொடுப்பார்கள்.


    பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் அவரவர் வீடுகளில் சமாராதனை; ஸுமங்கலி ப்ரார்த்தனை செய்வார்கள்.
    பிள்ளை வீட்டார் மறுமகள் வீட்டிற்கு வந்த பின்னும் சிலர் ஸுமங்கலி ப்ரார்த்தனை செய்வார்கள். ஒரு நல்ல நேரத்தில் ஒரு மஞ்சள் துணியில் பத்து ரூபாய் நாணயம் வைத்து


    முடிந்து ஸுமங்கலி ப்ரார்த்தனை மறுமகள் வந்த பிறகு செய்கிறேன் என்று வேண்டி கொண்டு பிறகு செய்யலாம். வருடத்திற்கு ஒரு முறை தான் ஸுமங்கலி ப்ரார்த்தனை செய்ய முடியும்.

  • #2
    Re: VIVAAHAM-1.

    Sri:
    Respected Brahma Sri Gopalan Swamin,
    I sent an email to you few days back regarding kanakabhishegam,
    Please post a detailed procedure about how to do Kanakaabhishegam.
    Expecting it at the earliest.
    dasan,
    nvs


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    Working...
    X