Announcement

Collapse
No announcement yet.

VIVAAHAM-2.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • VIVAAHAM-2.

    கல்யாணபத்திரிக்கை அடித்து வந்தவுடன்குல தெய்வம் கோயிலுக்கு சென்றுஅபிஷேகம்,அர்ச்சனைசெய்து வஸ்த்ரம் வாங்கிசாற்றி,கோயிலுக்குகாணிக்கை செலுத்தி பத்ரிக்கைகோயிலுக்கு கொடுத்து நல்லபடியாக கல்யாணம்
    நடக்கவேண்டும் என வேண்டி கொண்டுவர வேண்டும்.


    பிறகுகாஞ்சி அல்லது சிருங்கேரிஅல்லது உங்கள் மடாதிபதியிடம்வெற்றிலைபாக்கு,பழம்,புஷ்பம்பத்ரிக்கை தக்ஷிணை வைத்துஆசீர்வாதம் பெற்று வர வேண்டும்.



    பிறகுஉங்கள் நெருங்கிய உறவினர்களுக்குதாம்பூலம்,பழம்,புஷ்பம்,தேங்காய்,மஞ்சள்,குங்குமம், பத்ரிக்கையும்வைத்து கல்யாணத்தை வந்துநடத்தி கொடுக்கும் படியாககூப்பிட வேண்டும்.



    மற்றவர்களுக்குநேரிலும்,கம்ப்யூட்டர்மூலமும் பத்ரிக்கை அனுப்பிகூப்பிடலாம்.


    உறவினர்களுக்குஜவுளி வாங்க வேண்டிய லிஸ்ட்தயார் செய்து புடவை,ரவிக்கைதுண்டு, சுடிதார்;வேட்டி,துண்டு,பேன்ட்,ஷர்ட்
    இத்யாதிகள்வாங்கி அவரவர் பெயர் கவர்மேல் எழுதி வைத்து கொள்ளவேண்டும்.


    கட்டுசாத கூடைக்கும் இருக்க வேண்டும்என்ற கட்டு பாடுடன் மேளத்திற்குஅட்வான்ஸ் ,கேடரரிடம்கொடுக்க சொல்லவும்.



    இக்காலத்தில்எல்லாம் கேடரர் பார்த்துகொள்கி றார்.குடை,பாதரக்ஷை, தடிகம்பு, பரதேசகோல துண்டு,சோப்பு,சீப்பு,கண்ணாடி,ஷேவிங்க்
    செட்;பற்பசை;டூத்ப்ரஷ்; துண்டு, மணமக்கள் பெயரிட்ட பட்டு பாய்இவைகளும் கேட்டரர் வாங்கிகொடுத்து விடுவார்.பரதேச கோல
    துண்டில்அரிசியும்,பருப்பும்போட்டு கட்டி வைக்க வேண்டும்.ஊஞ்சல், அதற்குபுஷ்ப அலங்காரம்,மணமேடை புஷ்ப அலங்காரம் இவைகளும்கேடரர் பார்த்து கொள்வர்.


    நல்லநாள் பார்த்து கூறை புடவை,ரவிக்கை,திருமாங்கல்யம்,காலுக்குமெட்டி, வெள்ளிகுங்கும சிமிழ்,பஞ்சபாத்திரம் உத்திரிணி,சந்தனபேலா, தாம்பாளம்,பால்இட கிண்ணம் 2,
    வாங்கிவைத்து கொள்ள வேண்டும்.பிள்ளைவீட்டாரிடம் ,திருமாங்கல்யம்எடை, தினுசுஅவர்கள் பாதி பெண் வீட்டார்பாதியும் போட வேண்டுமா என்பதைஎல்லாம் கேட்டு செய்ய வேண்டும்.



    திருமணகல்யாண மண்டபம் தேர்ந்துஎடுத்து பிள்ளை வீட்டாரும்வந்து பார்த்து த்ருப்திசொன்ன பிறகே அட்வான்ஸ் தரவேண்டும்.


    ஜெனெரேட்டர்,.சி; ஏசி இல்லாத ரூம்கள் தேவையானவைஉள்ளதா , தண்ணீர், கார்பார்கிங்க் ஏரியா த்ருப்திகரமாக உள்ளதா;ஜீஸர்உள்ளதா என்று எல்லாவற்றையும்கவணிக்கவும்
    போதியஅளவு ஜமக்காளம்,தலைகாணி உள்ளதா?.
    பிள்ளைவீட்டார்,பெண்வீட்டார் தங்கும் அறைகளில்சோப், சீப்பு,தேங்காய்எண்ணைய்,
    மஞ்சள்தூள், குங்குமம்,பற்பசை,வீபுதிஇவைகளை சிறிய அளவில் வாங்கிஜிப் ப்ளாஸ்டிக் பையில் போட்டுஒரு அறைக்கு ஒன்றாக வைத்துவிடவும்.



    திருமணத்திற்குமுதல் நாள் காலை பிள்ளை வீட்டார்திருமண மண்டபத்திற்குவருவார்கள்.இதற்கும்முதல் நாள் இரவு கல்யாண
    மண்டபத்திற்குசென்று , திருமணமண்டபத்தை அலம்பி அரிசி மாவில்2 டிராப்பெவிகால் கலந்து இழை கோலம்போட்டு வைத்திருப்பார்கள்உங்கள் கேடெர்ரர் ஆட்கள்.வாசலிலும்,மண்டபத்
    திலும்,பிள்ளைவீட்டார் தங்க இருக்கும்அறையிலும் ,பெண்ணின்சீர் பொருட்கள் வைக்கும்அறையிலும்,இழைகோலம் போட வேண்டும்.



    நுழைவாயிலில் வாழை மரம்,தோரணம்கட்டி இருப்பார்கள்.பூந்தோரணம்மண்டபத்திலும் அலங்கரிக்கவேண்டும்.இதுவும்கேடரர் வேலை.



    பிள்ளைவீட்டார் தங்கி இருக்கும்அறையில் ஒரு இடத்தில் கிழக்குபக்கமாக சுவாமி படம் வைத்துகுத்து விளக்கு திரி,எண்ணைய்,தீபெட்டிவைத்து
    தயாராகஇருக்க வேண்டும்.அவர்கள்வரும் சமயத்தில் விளக்குஒருவர் ஏற்றவேண்டும்.


    மற்றொருஅறையில் பெண்ணின் சீர் வரிசைகள்பாத்திரங்கள் அழகாக வரிசைபடுத்தி வைத்து
    அரிசி,பருப்பு,வெல்லம்,நெய்,அப்பளம்,வடகம்,சீர்பக்ஷண வகைகள்,தீபாவளிலேஹியம்,அங்கமணிசாமாங்கள் வைக்க வேண்டும்.
    சீரில்வைக்க வேண்டிய பக்ஷணங்கள்:-
    திரட்டிபால் 500 கிராம்;7 சுற்றுகை முறுக்கு 31;மற்றஉபயோகத்திற்காக 5சுற்றுமுறுக்கு 51;முள்ளுதேங்குழல் 40;ஒன்பதுஅங்குல
    அளவில்அதிரசம் 31; ஆறுஅங்குல அளவில்51;
    விரதஅப்பம் 11; பெரியசைஸ் லட்டு 31;சிறியசைஸ் லட்டு 51;மைசூர்பாகு பெரிது 31.சிறியது51; ப்ளாஸ்டிக்கவர்களில் ஒரு கை முறுக்கும்,சிரியசைஸ் லட்டு,அல்லதுசிறிய சைஸ் அதிரசம் ஒன்றும்போட்டு வைக்கலாம்.



    முன்னதாகபிள்ளை வீட்டாரிடம் இது பற்றிபேசி அதன் படி,அவரவர்வசதிபடி செய்துகொடுங்கள்.
    இதுதவிர ஒரு சம்படத்தில் 500கிராம்திரட்டி பால் கையில் வைத்துகொண்டு, பிள்ளைவீட்டாரின் வருகையின் போது, பெண்ணீன்தாயார் பிள்ளையின் தாயாரிடம்கொடுக்க வேண்டும்.



    மாப்பிள்ளைஅழைப்பிற்கு சர்கரையில்செய்த பருப்பு தேங்காய்.(மைசூர்பாகு பருப்பு தேங்காய்.)இதைநிச்சயதார்தத்திற்கு பிள்ளைவீட்டார் கொண்டு வந்து வைப்பர்.


    ஊஞ்சலுக்குவெல்லம் போட்ட மனோகரம் பருப்புதேங்காய்.ஊஞ்சல்முடிந்தவுடன் இதை முஹூர்தத்தில்மேடையில் வைக்க வேண்டும்.
    வெல்லம்போட்ட பொட்டு கடலை 5சிறியபருப்பு தேங்காய் ஆசீர்வாதத்திற்கு.


    கிரஹப்ரவேசத்திற்கு1ஜோடிபருப்பு தேங்காய்.
    (லட்டுபருப்பு தேங்காய்)இதுமுதல் நாள் விரததிற்கு பெண்வீட்டார் வைத்தது.இதைபிள்ளை வீட்டார் கிரஹப்ரவேசத்திற்கு வைப்பர்.
    உதகசாந்திக்கு ஒரு ஜோடி பருப்புதேங்காய்.(பர்பிபருப்பு தேங்காய்).



    ஒருபித்தளை குடம்,பச்சைபிடிசுற்ற ஒரு பித்தளை தாம்பாளம்,2 பித்தளைசொம்பு; சிறியஅடுக்கு; ஐந்துமுகமுள்ள குத்து விளக்கு;இவைபித்தளை யில் போதும்.



    திருமணபெண்ணிற்கான புடவைகள்:-
    நிச்சயதார்தத்திற்கு ஒன்று;பிள்ளைவீட்டார் வாங்குவார் இதுசிலர் வீட்டு பழக்கம்.முதலில்பேசி தெரிந்து கொள்ளவும்.



    ஊஞ்சலுக்குஒன்று; பெண்ணின்மாமா வாங்குவர்.
    முஹூர்தத்திற்கு9 கஜம்புடவை ஒன்று.கிரஹ
    ப்ரவேசத்திற்குஒன்று; உதகசாந்திக்கு ஒன்று.
    வரவேற்புக்குஒன்று. மொத்தம்ஆறு புடவைகள்.
    விளையாடல்புடவை - பிள்ளைவீட்டார் வாங்குவர்.



    மணமகனுக்குவேஷ்டி.
    9x5வேஷ்டிமுஹூர்தத்திற்கு.ஒருஜோடி.
    மாற்றுவேஷ்டி 8 முழம்.ஒருஜோடி.
    கிரஹப்ரவேசத்திற்கு ஒன்று.
    9x5 பட்டுவேஷ்டி ஒன்று.
    மாப்பிள்ளைஅழைப்பிற்கென டிரஸ் தைக்கமுன் கூட்டியே பெண் வீட்டார்பிள்ளை வீட்டாரிடம் பணம்கொடுக்க வேண்டும்.இதில்
    பேண்ட்,ஷர்ட்,கோட்,டை;ஷூ,ஸாக்ஸ்,யாவும்அடங்கும்.


    காசியாத்திரைக்காக விசிறி,குடை,காலணி,
    கைத்தடி,புத்தகம்,துண்டு;வாங்கிவைக்கவும்
    முஹூர்தத்தன்றுகாலையில் மண மகனுக்கு அளிக்கஎன ட்ரேயில் டூத் பேஸ்ட்;ப்ரஷ்;டவல்
    ஷேவிங்க்செட்; சீப்பு;கண்ணாடி.ஹேர்ஆயில்;


    டால்கம்பவுடர், செண்ட்,ஆகியவைதேவை.



    மாப்பிள்ளைவீட்டார் உள்ளூரிலேயே இருந்தால்அவர்களை நேரில் சென்றுபத்திரிக்கை,தாம்பூலம்,பழம்,புஷ்பம்வைத்து திருமணத்திற்கு அழைக்கவேண்டும்.
    அவர்களைவேன் வைத்து கொண்டு வரசொல்லி


    வேன்டிரைவருக்கு பணம் கொடுத்துவிடவும்.
    வெளியூரிலிருந்துவருபவர்களை,ரயில்நிலைய த்திலிருந்து/பேருந்துநிலையதிலிருந்து யாராவதுசென்று அழைத்து வர வேண்டும்.



    அவர்கள்மண்டபம் வரு முன்பே மண்டபத்தின்நுழை வாயிலில் சந்தனம்,குங்குமம்,சக்கரைகல்கண்டு,புஷ்பம்இவற்றுடன் வர வேற்க தயாராகஇருக்க வேண்டும்.



    சிற்றுண்டி,காபிதயாராக உள்ளதா என்பதையும்பார்த்து கொள்ளவும்.மாப்பிள்ளையைவரவேற்க கையில் தயாராக மாலையும்,ஆரத்திகரைசலும்
    இருக்கவேண்டும்.மாப்பிளைவீட்டார் மண்டபத்தின் முன்வந்ததும் ,மணப்பெண்ணின்தந்தை அல்லது மணப்பெண்ணின்சகோதரர்


    மாப்பிளைக்குமாலை இட பெண் வீட்டார் ஒருவர்,ஆரத்திஎடுத்து அழைக்க சந்தனம்,குங்குமம்,சக்கரை,கல்கண்டு,புஷ்பம்இவற்றை
    கொடுத்து, பெண்ணின்தாய், பிள்ளையின்தாயிடம் திரட்டு பால் கொடுத்தும்வர வேற்று உபசரிக்க வேண்டும்.


    வசதிஉள்ளவர்கள் மாப்பிளை வீட்டார்எல்லோருக்கும் சிறிய சந்தனமாலை அணிவித்து அழைக்கிறார்கள்.



    அவர்களுக்குஎன ஏற்பாடு செய்துள்ள அறையில்தயாராக உள்ள குத்துவிளக்கைஏற்றி பிறகு அவர்களை அழைத்துசெல்லுங்கள்.



    அவர்களுக்கானவசதி அனைத்தையும் கவனித்துசெய்யவும்.இந்தசமயத்தில் பெண் வீட்டு புரோகிதர்பந்தகால் முஹுர்த்தம் செய்யகூப்பிடுவார்.



    பந்தகால்முஹுர்த்தம் ஆன பிறகு தான்திருமண விழா துவங்குவதுவழக்கம்.சாஸ்திரப்படிமந்திரங்க ளை கூறி ஒரு மூங்கில்கம்பை வைத்து பூஜை செய்துதூணில் கட்டுவர்.



    கல்யாணமண்டபத்தில் ஒரு பக்கம் பிள்ளைவீட்டாரும்,மற்றொருபக்கம் பெண் வீட்டாரும்
    தனிதனி இடங்களில் வைதீகரதுஅறிவிப்பின் படி அவரவர்வைபவத்தை தொடங்குவார்கள்.


    கேடரர்வைதீகரர்களுக்கு தேவையானவைகளைஇங்கு தயாராக வைத்திருப்பார்கள்.
    பிள்ளைவீட்டார் விரதம் செய்ய துவங்கும்போது பெண்ணின் அத்தையானவள்ஒரு ஜோடி பருப்பு தேங்காய்,அதிரசமும்,அப்பமும்,ஒரு
    முகம்பார்க்கும் கண்ணாடியும்அங்கு கொண்டு வந்து வைக்கவேண்டும்.இந்தஅத்தைக்கு பதில் மரியாதையாகபிள்ளை வீட்டார்,தாம்பூலம்,பழம்,புஷ்பம்,பணம்வைத்து கொடுப்பார்கள்.



    மணமகன்/மனமகள்தாய் தந்தையர் மடிசாரும்,பஞ்சகச்சமும் அணிந்திருக்கவேண்டும்.
Working...
X