Announcement

Collapse
No announcement yet.

vivaaham-5.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • vivaaham-5.

    காசி யாத்திரை:-திருமணதினதன்று விடியற்காலையில் நாதஸ்வர இசையுடன் மணமகனுக்கென ஒரு ட்ரேயில், பற்பசை, ப்ரஷ், துண்டு, பற்பொடி, ஹேர் ஆயில், சோப், சீப்பு, கண்ணாடி, ஷேவிங்க் செட்;


    செண்ட் போன்றவை வைத்து ஒரு இனிப்பும் கொண்டு சென்று வைக்க வேண்டும். மணமகன் ஸ்நானம் செய்வதற்கென நல்லெண்ணெய்,
    சீயக்காய் பொடி, வாசனை பொடி வைக்க வேண்டும். ஒரு பித்தளை தவலையில் வென்னீர் வைக்க வேண்டும். தற்போது கீஸர் உள்ளது.
    காலையில் மணமகனின் அத்தையோ அல்லது மாமியோ மணமகனின் தலையில் சிறிது எண்ணய் எடுத்து தேய்த்த பின் ஸ்நானம் செய்ய வேண்டும்.
    அறுபது வருடங்களுக்கு முன்னால் டயரியில் எழுதி வைத்திருந்ததை பார்த்து எழுதுகிறேன்.


    ஸ்நானம் செய்த பின் முதல் நாள் கொடுத்த முஹுர்த்த வேஷ்டியை பஞ்ச கச்சமாக கட்டி கொள்ள வேண்டும். வீபூதி சந்தனம் குங்குமம் இட்டுக்
    கொண்டு, புது பூணல் இரண்டு போட்டுகொண்டு, கண்ணுக்கு மைதடவிகொண்டு,திருஷ்டி பொட்டு வைத்து கொண்டு, கழுத்தில் தங்க சங்கிலி,
    கையில் விசிறி ஊன்று கோல், ஒரு ஆன்மீக புத்தகம்,காலில் புது செறுப்பு, ஒரு புதிய துண்டில் சிறிது அரிசி, பருப்பு, தாம்பூலம் வைத்து கட்டி,
    இதையும் கையில் வைத்து கொண்டு, மாப்பிள்ளையின் தோழன் குடை பிடிக்க காசி யாத்திரைக்கு கிளம்ப வேண்டும்.
    சிலர் வலது கையில் குடை பிடித்து, புத்தகம், விசிறி வைத்து கொண்டு இடது கையில் பரதேச கோல மூட்டையை மாட்டி கொண்டு,தடி கம்பை
    எடுத்து கொண்டு,, பாதரக்ஷை தரித்து, கெட்டி மேளம் முழங்க சுற்றத்தார் புடை சூழ கிழக்கே சென்று வடக்கே போய் திரும்பி பெண் வீட்டார்
    (கல்யாண மண்டபத்திற்கு)அருகில் கிழக்கு முகமாக நிற்க வேண்டும். அரிசி, பருப்பு தேங்காய், கூறை புடவை,ரவிக்கை, விளையாடல்
    சாமான்கள்,இவைகளை கையில் எடுத்து கொண்டு. பிள்ளை வீட்டார் பரதேசி கோலத்துடன் வர வேண்டும்.
    பெண் வீட்டார் பருப்பு தேங்காய், மஞ்சள், குங்குமம், சந்தனம்,பழம்,புஷ்பம் சக்கரை வெற்றிலை,பாக்கு, மஞ்சள் தேங்காய் இவைகளை வைத்து கொண்டு மாப்பிள்ளையை எதிர் கொண்டு அழைக்க வேண்டும்.
    அப்போது அவனது கழுத்தில் முஹுர்த்த மாலையும், மாற்று மாலை இரண்டும் அணிவிக்க வேண்டும். இதற்கு பரதேச கோலம் என்று பெயர்.


    இந்த கோலத்தில் மணமகன் தனது உறவினர் புடை சூழ சிறிது தூரம் செல்ல , பெண்ணின் தந்தை இரு மஞ்சள் தடவிய தேங்காய் களை
    மணமகனுக்கு அளித்து தமது பெண்ணை அவனுக்கு மணமுடிப்பதாக வாக்களித்து மீண்டும் அழைத்து வருவார்.
    அந்த தேங்காய்களை மணமகன் சோபனம் என இரு முறை சொல்லி வாங்கிக்கொண்டு தனது தந்தையிடம் தருவான்.
    ஒவ்வொரு ப்ராஹ்மணனும் தனக்கு ஏற்பட்ட ரிஷி கடன், தேவ கடன், பித்ரு கடன் என்ற மூன்றையும் தீர்த்து விட்டே மோக்ஷத்தை பற்றி எண்ண வேண்டும்.


    ப்ருஹ்மசர்ய நியமத்துடன் வேத அத்யயனம் செய்வதால் ரிஷி கடன் அகல்கிறது. தேவ கடன் யக்ஞம் செய்வதால் அகலும். நல்ல சந்ததி பிறந்தால் தேவ பித்ரு கடன் அகலும்.
    ஆதலால் தேவ பித்ரு கடன் தீர விவாஹம் செய்து கொள்வது அத்யாவசிய மாகிறது.
    நான் எனது கன்னிகையை அலங்காரம் செய்து
    உமக்கு தானமாக தருகிறேன். அவளை மணம் புரிந்து கொண்டு ஒளபாசன அக்னியுடன் காசி செல்லலாம் தம் வீட்டிற்கு வாரும் என அழைத்து செல்வதாக இது அமைகின்றது.


    நாரதர் ஸ்ம்ருதி கூறுகிறது:- கன்னிகா தானம் ஆவதற்குள் வதூ அல்லது வரன் தோஷமுள்ளவர் என அறிந்தால், இந்த கல்யாணத்தை நிறுத்தி வேறு விவாஹம் செய்யலாம் என்கிறது.


    விளையாட்டில் காலிறுதி போட்டி, அரை இறுதி போட்டி, இறுதி போட்டி என்று இருப்பது போல் அக்காலத்தில் இதிலும் அமைந்துள்ளன.


    மணமகளுக்கும் திருமண தினத்தன்று காலையிலேயே எண்ணெய் தேய்த்து மங்கள ஸ் நானம் செய்வித்து, நன்கு அலங்கரித்து
    தலையில் ஜடை நாகம் வைத்து ஊஞ்சல் புடவையை கட்டிகொண்டு, முஹூர்த்த மாலை ஒன்றும் மாற்று மாலை மூன்றும் அணிவித்து தயாராக இருக்க வேண்டும்.
    மாலை மாற்றும் நிகழ்ச்சி வரை மணமகளோ
    மணமகணோ ஒருவரை ஒருவர் பார்த்தது கிடையாது. அந்த காலத்தில்.
    வட ஆற்காட்டை சேர்ந்தவர்கள் பெண்ணுக்கு கொண்டை போடுவார்கள். காசி யாத்திரை முடிந்து மணமகன் ஊஞ்சல் அருகில் வந்ததும் பெண்ணை கூப்பிடுவர். அப்போது பெண்ணுடன்


    இருக்கும் தோழி அழைத்து வர , பெண்ணின் மாமா அவள் கழுத்தில் இருக்கும் ஒரு மாற்று மாலையை எடுத்து அவள் கையில் தருவார்.
    அதை அவள் தனக்கு வரவிருக்கும் கணவனுக்கு முதலில் அணிவிக்க வேண்டும். அதே போல் வரனின் மாமா ,
    வரனின் கழுத்தில் இருக்கும் மாற்று மாலையை எடுத்து கொடுக்க அவன் அவளுக்கு அணிவிக்க வேண்டும்.
    இம்மாதிரி மூன்று முறை செய்ய வேண்டும். அந்த காலத்தில், எட்டு அல்லது பத்து வயது பெண் குழந்தைக்கும், பத்து அல்லது பதினைந்து வயது ஆண் குழந்தைக்கும் திருமணம் நடக்கும்.
    பெண்கள் மாலை மாற்றும் பாடல்கள் பாடுவது வழக்கம். மாலை மாற்றுவதை எல்லோரும் பார்ப்பதற்காக குழந்தைகளை தனது தோள்களில்
    தூக்கி வைத்து கொண்டு மாலை மாற்றினார்கள்.


    மணமகளோ மணமகணோ தனது என்று தனி தன்மையாக இல்லாது, விருப்பு, வெறுப்பு எல்லாவற்றிலும் ஒன்றாக , எண்ணம், செயல்,
    வாக்கு யாவற்றிலும் ஒன்றி இருந்து வாழ்க்கை நடத்தி இனிய பேற்றை பெற வேண்டும்.என்பதை உணர்த்துகிறது.
    சாதாரண மாக ஒருவர் அணிந்த மாலையை மற்றவர் அணிய கூடாது என்பது சாஸ்திரம்,
    ஆனால் இங்கு ஒரு கன்னிகை தனது மணாளனுக்கு தனது மாலையையே அணிவிக்கும் போது அவர்கள் இருவரது உள்ளங்களுமொன்றாக
    கலந்து ஈருடல் ஓருயிர் என இணைந்து விட்டதை காண்பிக்கிறது. ஆதலால் அன்னியர் அணிந்த மாலை என்ற பேச்சுக்கே இங்கு இட மில்லை.
    மாலை மாற்றும் நிகழ்ச்சி முடிந்தவுடன் மாமாகளுக்கு சந்தனம், வஸ்த்ரம் அளிக்கும் வழக்கம் உண்டு.
    மணமகளின் வலது கரம் எல்லா விரல்களும் சேர்ந்து குவிந்த வண்ணம் இருக்க வேண்டும். மாலை மாற்றுதல் ஆனதும் மணமகன் தனது
    வலது கரத்தால் மணமகளின் குவிந்த வண்ணம் இருக்கும் மண மகளின் வலது கரத்தை பற்றிய வண்ணம் இருவரும் அலங்கரிக்க பட்ட
    ஊஞ்சலில் அமர வேண்டும். மணமகள் மணமகனின் வலது பக்கத்தில் அமர வேண்டும்.
    மழ நாட்டு ப்ரஹசரணம் பிரிவை சேர்ந்தவர் களுக்கு மணப்பெண் மணமகனின் இடது பக்கம் அமர வேண்டும்,
    ஊஞ்சல் முடிந்த பிறகு பெண், மணமகனின் வலது பக்கத்தில் இருக்க வேண்டும்.
    திருமணத்தன்று காலையிலும் மணடபத்தின் நுழை வாயிலில் ஒரு மேஜையின் மீது ஒரு தட்டில், சக்கரை,கல்கண்டு,புஷ்பம், சந்தனம், குங்குமம்,பன்னீர் இவற்றை வைத்து கொண்டு


    திருமணத்திற்கு வருவோற்கு கொடுத்து வர வேற்க வேண்டும்.மண்டபத்தின் நுழை வாயில் முன்பாக கிழக்கு மேற்காக கட்டபட்டுள்ள ஊஞ்சலை புஷ்பங்களால் அலங்கரித்து


    அதன் பலகையில் பட்டு பாயை நான்காக மடித்து போட்டு மணமக்கள் இருவரும் மழலை செல்வங்கள் புடைசூழ இந்த ஊஞ்சலில் அமர்வர்.


    அப்போது பெண்கள் ஊஞ்சல் லாலி பாட்டு பாடுவர். குரல் வளம் படைத்த அனைவருக்கும் இது ஒரு சிறந்த சந்தர்ப்பம். நாதஸ்வர காரர்களும் இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி கொள்வர்.


    இச்சமயத்தில் பெண் வீட்டார் ஊஞ்சலுக்கான பருப்பு தேங்காய் ஜோடியில் தலையில் பூ சுற்றி, சந்தனம் குங்குமம் இட்டு, தாம்பூலம்,வாழை பழம் நிரம்பிய தாம்பாளங்களை ஏந்தி கொண்டும்


    பிள்ளை வீட்டார் விளையாடல் சாமான் களையும். பிள்ளையின் தாயார் கூறை புடவையையும் அதன் மேல் திருமாங்கல்யமும் வைத்திருக்க வேண்டும்.


    இந்த நிகழ்ச்சிக்கு பெண்ணிற்கு சீராக வைக்கபட்ட வெள்ளிகிண்ணம் ஒன்றில் சக்கரை, வாழை பழ துண்டங்கள்,கலந்த பாலையும் அதில் ஒரு தேக்கரண்டியும், , மற்றொரு கிண்ணத்தில் வெறும் பாலும் வைத்து கொள்ள வேண்டும்.
    ஒரு தாம்பாளத்தில் பச்சை பிடி சுற்ற கேடரர் சாத உருண்டைகள் செய்து கொடுப்பார். அவரிடம் முன் கூட்டியே இந்த மாதிரி வேண்டும் என்று சொல்லி விட வேண்டும்
    இந்த உருண்டைகளின் நிறம் அவரவர் ஊரை பொருத்து மாறுகிறது.
    தஞ்சாவூர், திருச்சியை சேர்ந்தவர்கள் சிவப்பு நிற உருண்டைகள் போதும் எங்கிறாகள்.
    மதுரையை சேர்ந்தவர்கள் மஞ்சள், சிவப்பு எனும் இரண்டு நிறங்களில் தனி தனியே தயாரித்து பிறகு அதை கலந்து வைக்கிறார்கள்.
    வட ஆற்காடு,செங்கல்பட்டை சேர்ந்தவர்கள் வெள்ளை,மஞ்சள், சிவப்பு என மூன்று விதமாக தயார் செய்து வைக்கிறார்கள்.
    இரண்டு பித்தளை சொம்புகளில் ஜலமும்,ஒரு அகல சிறிய பித்தளை அடுக்கில் நெல் இட்டு அதில் ஐந்து முகமுள்ள பித்தளை விளக்கின்
    மேற்பகுதியை மட்டும் அந்த அடுக்கினுள் வைத்துஎண்ணய் திரி இட்டு ஐந்து முகங்களையும் ஏற்றி வைக்க வேண்டும்.


    ஊஞ்சலில் அமர்ந்துள்ள மணமக்களது கால்களை பாலால் அலம்பி ,மணமக்கள் கையில் ஒரு கிண்ணத்தை அல்லது அட்டை யிலான கப்பில் பாலும் பழமும் ஒவ்வொருவராக தருவார்கள்.


    மணமகள், மணமகன் இருவரது நெருங்கிய உறவு பெண்டிர்கள் ஒருவர் பின் ஒருவராக இதை செய்ய வேண்டும்.
    முதலில் வெறும் பாலாக இருக்கும் கிண்ணத்தை இருவரது கால்களுக்கு அருகே வைத்து கொண்டு, இரு கை விரல்களாலும் பாலை தொட்டு
    அவர்களது இரு கால்களிலும் என மூன்று முறைதொட்டு அலம்பி தமது புடவையின் மேல் தலைப்பால் துடைப்பது வழக்கம்.
    பின்னர் பாலும் பழமுமாக இருக்கும் கிண்ணத்திலிருந்து தேக்கரண்டியால் மூன்று முறை மணமகளுக்கும், மணமகனுக்கும்
    அவர்கள் கையில் வைத்துள்ள கப்பில் கொடுக்க வேண்டும். அவர்கள் அதை சாப்பிட வேண்டும்.
    கை துடைக்க கர்சிப்பும் முதலிலேயே இருவருக்கும் கொடுத்து விடுங்கள்.
    இவ்வாறு ஐந்து பேருக்கு குறையாமல் எத்தனை பேர் வேண்டுமானாலும் செய்யலாம்.ஒற்றை படையில் இருக்க வேண்டும்.


    அடுத்த படியாக தாம்பாளத்தில் தயாராக வைக்க பட்டிருக்கும் சாத உருண்டைகளை தாங்கிய தாம்பாளத்தை கைகளில் எடுத்து தூக்கி


    பிரதக்ஷிணமாக அதாவது தனது இடது பக்கத்திலிருந்து வலது பக்கமாக , கீழிருந்து மேலாக மண மக்களின் முன்பு மூன்று முறை சுற்ற வேண்டும்.
    தட்டை கீழே வைத்து பின்னர் அதிலிருந்து தனது வலது கையால் ஒரு உருண்டை எடுத்து மணமக்களின் இருவரது தலை மேல் மூன்று
    முறை பிரதக்ஷிணமாக சுற்றி, முதலில் கிழக்கு பக்கத்திலும், பிறகு மேற்கிலும், பிறகு தெற்கிலும் பிறகு வடக்கு பக்கத்திலும் என வீசி எறிய வேண்டும்.
    வடக்கு பக்கத்தில் தான்முடிக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.
    இவ்வாறு ஒருவருக்கு நான்கு உருண்டைகள் . நான்கு முறைகள் செய்ய வேண்டி வருகிறது.
    இதற்கும் ஐந்து பேருக்கு குறையாமல் ஒற்றை படையில் எத்தனை பேர்கள் வேண்டு மானாலும் செய்யலாம்.
    இதை பிள்ளை வீட்டார் பெண் வீட்டார் என மாறி மாறி செய்யலாம்.
    பிறகு நெருங்கிய உறவினர் இருவர் பித்தளை சொம்பில் ஜலத்துடன் , மணமகளின் தாயார் விளக்கு வைத்த அடுக்கை வலது கையில் வைத்து கொண்டு ,
    விளக்கு அணையாதிருக்க இடது கையால் புடவை தலைப்பால் மறைத்து கொண்டு மெதுவாக ஊஞ்சலில் உட்கார்ந்தி
    ருக்கும் மணமக்களை சுற்றி வலம் வரவேண்டும். இது தஞ்சாவூர் பழக்கம்.
    வட ஆற்காட்டை சேர்ந்தவர்கள் மூன்று பேர் சொம்புகளில் ஜலமும், இரண்டு பேர் விளக்குமாக ஏற்றி சுற்றுவார்கள்.
    மழ நாட்டு ப்ருஹ சரணத்தை சேர்ந்தவர்கள், இரண்டு பேர் சொம்பில் ஜலமும், ஒருவர் விளக்கும், ஒருவர் பாலும், பழ கிண்ணத்துடனும்,
    ஒருவர் பித்தளை படியில் அரிசியை நிரப்பி அதன் மேல் ஒரு தேங்காயை வைத்து கொண்டும் சுற்றுவார்கள்.
    ஜலம் நிரம்பிய சொம்பை லேசாக சாய்த்த வண்ணம், வலது கையால் நீரை சிறிது சிறிதாய் தரையில் விட்ட வண்ணமும், சுற்ற வேண்டும்.


    இவ்வாறு மூன்று முறை சுற்று ஆனவுடன் , மீதியுள்ள சொம்பு ஜலத்தினால் பிள்ளை, பெண் கால்களில் சிறிது விட்டு அலம்பிய பின்னர்
    தாம்பாளத்தில் சுற்றபடாமல் மீதி இருக்கும் சாத உருண்டைகளை தண்ணீர் விட்டு கரைத்து பெண் வீட்டார் ஒருவரும், பிள்ளை வீட்டார் ஒருவரும்
    சேர்ந்து மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து வாசலில் கொட்டி விட வேண்டும்.
    வட ஆற்காட்டை சேர்ந்தவர் இதன் பின்னர் தனியாக ஒரு ஆரத்தி எடுப்பர்.
    அதன் பின்னர் பெண்ணின் மாமியார் பெண்ணுக்கும், பிள்ளையின் மாமியார் பிள்ளைக்கும் முறையே வெற்றிலை,பாக்கு,
    வாழை பழம், மட்டை தேங்காய் கொடுக்க அவற்றை மணமக்கள் மேளக்காரருக்கு கொடுத்து விடுவார்கள்.
    யாராவது ஒருவர் ஒரு தேங்காயால் மணமக்கள் தலைகளில் மூன்று முறை இடமிருந்து வலமும்
    பின்னர் வலமிருந்து இடமும் சுற்றி மணமக்கள் உள்ளே சென்றதும் தேங்காயை வாசலில் போட்டு சதுர் தேங்காயாக உடைக்க வேண்டும்.
    மணமக்கள் இருவரும் முன்பு கூறிய படி மணமகன் மணமகள் கரத்தை பிடித்த படி இருவரும் முதலில் வலது காலை எடுத்து
    வைத்து கெட்டி மேளம் முழங்க , பெண்டிர் கெளரி கல்யாணம் பாட முஹூர்த்த மேடை நோக்கி செல்ல வேண்டும்.
    சிலர் இப்போது, மணமகன் மாமியார் கைகளை பிடித்து கொண்டு, மணமகள் மாமியார் கைகளை பிடித்து கொண்டு மணமேடை சென்று அமருகி றார்கள்.


    இவை யாவும் வைதீகத்தை சேர்ந்தவை அல்ல.
    ஊஞ்சலில் உள்ள சங்கிலிகள் கர்ம பாசத்தினால் மேலான வைகுண்டத்திலிருந்து பூமியில் இறங்கி இந்த மானிட பிறவியை பெற்றுள்ளோம் என்பதையும்


    ஊஞ்சல் முன்னும், பின்னும் செல்வது வாழ்வில் நமக்கு ஏற்படும் இன்ப துன்பங்களை அறிவுரு த்துகிறது. நமது வாழ்க்கை சமுத்திர அலை போல் சஞ்சல மானது.
    என்றாலும் எல்ல நிலைகளிலும் இந்த புது மண தம்பதிகள் மனதாலும் உடலாலும் ஒன்றி ,நிலையான அமைதியான இனிமையான ஒரு வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும்.


    வாழ்க்கையில் நல்லவைகளை தேர்ந்தெடுத்து அசைவில்லா நிலையில் ஸ்திரமான ஒன்றை பின்பற்றி வாழ வேண்டும் என்பதை காட்டுகிறது.
    நமது கண்களுக்கு புலப்படாத எத்தனையோ கிருமிகள் நம்மை தாக்க முற்படுகின்றன.என்பது நிரூபிக்க பட்ட உண்மை.
    மஞ்சள் போன்ற கிருமி நாசினியும், சுண்ணாம்பு போன்ற பூச்சி கொல்லியும் சுற்றி சூழ்ந்துள்ள காற்றில் உள்ள கிருமிகளை அழிக்க உஷ்ணத்தை
    ஏற்படுத்தும் . விளக்கும் உஷ்ணத்தை கொடுக்கும். பஞ்ச பூதங்களான ஆகாயம், பூமி, காற்று, ஜலம், நெருப்பு ஆகிய சாக்ஷியில் ,
    திருமணம் நடக்கட்டும், என்பதனாலேயோ என்னமோ அக்காலத்தில் இம்மாதிரி வைத்திருக்கிறார்கள். பூத ப்ரேதாதிகள் தூரே
    விட்டெரியும் அன்னத்தை பலியாக புசித்து துர் தேவதைகள் , பூத ப்ரேத ராக்ஷஸ பிசாசாதிகள் தம்பதிகளை அண்டாதிருக்கும் படி அந்த காலத்தில் இம்மாதிரி ஏற்படுத்தி இருக்கிறார்கள்.


    கெட்டி மேளம் வாசிப்பது மற்ற அபசகுனமான வார்த்தைகள் எதுவும் காதில் விழாமல் தடுப்பதற்கே ஆகும்.
    வெளி நாட்டில் எதிர் பாரா விபத்தில் உயிரிழந்த
    வரின் இருதயம், கல்லீரல், சிறு நீரகம் எடுத்து உடனே ஆஸ்பத்ரியில் , இந்த அங்கங்கள் செயல் இழந்து போன நோயாளிகளுக்கு பொருத்தி குணமாக்குகிறார்கள்.
    இது இவர்களுக்கு நன்றாக வேலை செய்கிறது. இத்துடன் விபத்தில் உயிரிழந்தவரின் குணங்களும் இவர்களுக்கு ஏற்படுகிறது.
    இது வரை படம் வரைய தெரியாதவர்கள் இப்போது சிறு நீரகம் மாற்றிய பிறகு இவர்கள் அலக்ஷியமாக மிக நன்றாக படம் வரைகிறார்கள்.


    விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரிடம் கேட்டத்தில் விபத்தில் உயிரிழந்த என் மகன் மிக சிறப்பாக ஓவியம் தீட்டுவான் என்று அவன்
    வரைந்த ஓவியத்தையும் காண்பிக்கிறார்கள். இம்மாதிரி பலருக்கு அங்கு நடக்கிறது
    இது வரை பாட்டு பாட தெரியாதவர்கள் இப்போது நன்றாக ப்பாடுகிறார்கள். இருதயம் மாற்றப்பட்ட ஒருவர்.


    ஆதலால் மனம் எங்கு உள்ளது. உடலில் இருந்து யாரும் இது வரை கான்பிக்காததால் மனம் என்று ஒன்று கிடையாது. இதுவரை


    இந்த இடத்தில் உயிர் இருக்கிறது என்று யாரும் காண்பிக்கவில்லை. ஆதலால் யாருக்கும் உயிர் இல்லை என்று சொல்கிறீர்களா.
    இப்போது வைதீக முறைப்படி செய்ய வேன்டிய வைகள் ஆரம்பம். மண மேடையில் புரோஹிதர் குறிப்பிட்டவை எல்லாம் தயாராக வைக்க வேண்டும்.
    ஊஞ்சலுக்கு வைத்திருந்த பருப்பு தேங்காய் , தாம்பூலம், பழம், தேங்காய்கள், விளையாடல் சாமான். யாவற்றையும் கொண்டு வந்து இங்கு


    மணமேடையில் வைக்க வேண்டும். புஷ்பம், ஹோமம் செய்வதற்கான பொருட்கள், , மஞ்சள் பொடி, சந்தனம்; குங்குமம்,அக்ஷதை,சக்கரை,
    கல்கண்டு,பஞ்ச பாத்திரத்தில் ஜலம், என யாவற்றயும் வைத்து, கூறைபுடவை, திருமாங்கல்யத்தையும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
Working...
X