Announcement

Collapse
No announcement yet.

இறுதி ஸம்ஸ்காரம்.-3.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • இறுதி ஸம்ஸ்காரம்.-3.

    அந்திம காலம் என்று தெரிந்தவுடன் செய்ய வேண்டியவை.


    ப்ராணாவஸ்தையில் இருப்பவர்களுக்கு நெற்றியில் வீபூதி இட வேண்டும்.துளசி வாயில் போடு. கங்கை தண்ணீர் கொடுக்கவும்.எல்லோரும் சேர்ந்து நாம ஸ்மரணம் சொல்ல வேண்டும்.


    பூஜை அலமாரி/ ரூமை மூடி வைக்கவும். வேண்டிய துணிகளை மட்டும் எடுத்து வைத்து கொள்ளவும்.குடம், சொம்பு அரிசி முதலியவைகளை எடுத்து வைத்துக்கொள்ளவும்.


    தச தானம், தீப தானம், தீர்த்த பாத்திர தானம், காவேரி ஸ்நான ப்ரதி நிதி கோமூல்ய தானம் செயது ஜப தக்ஷிணை கொடுக்க வேண்டியது. பகவத் நாம ஸங்கீர்த்தனம்,உத்க்ராந்தி கோதானம் செய்யவும். உறவினர்களுக்கு தெரிவிக்கவும்.


    புத்ரன் வலது தொடையில் இறக்கும் தருவாயில் உள்ளவரின் தலையை வைத்து கொண்டு வலது காதில் கர்ண மந்திர ஜபம் செய்ய வேண்டியது.
    ராம நாமா சொல்ல வேண்டும்.


    கீழே தர்ப்பையை தெற்கு நுனியாக பரப்பி அதன் மேல் தென் புறமாக உடலை வைக்கவும். இரு கை கட்டை விரல்களையும், இரு கால் கட்டை விரல்களையும் சேர்த்து கட்டவும்.


    ப்ரேதத்தின் பக்கத்தில் தொன்னையில் துளசி இலை வைக்கவும். உயிர் நீங்கிய பின் ஒன்றரை மணி நேரத்திற்கு தீட்டு கிடையாது.பிறகு தான் துக்கம் விசாரிக்க வரவேண்டும்.


    ஒரு பொருளை தயாரித்து மூன்று மணி நேரமாகி விட்டால் அது பழையது ஆகி விடுகிறது. அசுத்த பொருளை அக்னியில் போடக்கூடாது. உடலை ஹவிஸ் என அக்னியில் போடுகிறோம்.


    இறந்து பத்து மணி நேரத்திற்கு மேல் உடலை வைத்து கொள்ள கூடாது.
    அப்படி வைத்து கொண்டால் பர்ஷியுத ப்ராயஸ்சித்தம் செய்ய வேண்டும்.


    ப்ராயஸ்சித்தம் க்ருச்சரம் - இது சாந்திராயணம், தப்தம், ப்ராஜாபத்யம் என பல வகை படும். இறந்த மூன்று மணி நேரத்திற்குள் கொளுத்த கூடாது.


    ப்ராயஸ்சித்தம் செய்தவர் பிழைத்து விட்டால் தோஷமில்லை.காதில் ராம ராமா என்று சொல்லி கங்கா தீர்த்தம் கொடுக்க வேண்டும்.


    சுவாஸம் கண்டுவிட்டது ப்ராணன் வெளியே செல்ல ஆரம்பிக்கும் போது ஆயுஷ; என்ற கர்ண மந்திரம் வலது காதில் சொல்ல வேண்டும்.


    இதன் அர்த்தம் :- ஆயுசும் ப்ராணனும் ஒன்றாக சேரட்டும். ப்ராணன் , அபாணன் முதலியவைகளும் , கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்களும், மனதும் ஒன்றாக சேர்ந்து சுவர்க்கம் செல்லட்டும்.
    கர்ண மந்திரம் சொன்ன பிறகு தான் தீட்டு துவங்கும். இறந்தவரின் பெண், மருமகள், சகோதரி ஸ்நானம் செய்து ஈரவஸ்திரத்துடன் சொட்ட சொட்ட
    தண்ணீர் கொண்டு வந்து காலிலிருந்து தலை வரை பூத உடலுக்கு ஸ்நானம் நம் செய்விக்க வேண்டும்.


    ஈர வஸ்த்ரம் பிழியாமல் உடுத்துவது , அப்பிரதக்ஷிணமாக சுற்றுவது , படுத்திருக்கும் போது நெற்றிக்கு இடுவது , ப்ரேத காலத்தில் செய்வதால் மற்ற காலங்களில் செய்ய கூடாது.


    ப்ரேதத்தை மூட வாங்கிய துணியிலேயே கொஞ்சம் கிழித்து வைத்து கொண்டு அதயே பத்து நாளும் வஸ்த்ரோதகம் விட உபயோகிக்க வேண்டும்.


    பவித்ரம் ஒரே தர்பையால் ஆனது இப்போது உபயோகிக்க வேண்டும்.
    அக்னி பரிஷேசனங்களுக்கும், ஔபாஸனத்திற்கும் மந்திரமில்லை.
    சவத்துடன் தொடர்பு இருக்கும் படி கயிற்றால் தொட்டு கொண்டே ப்ரேயு வாகும் ஸம் என்ற மந்திரத்தை கூறி ஹோமம் செய்ய வேண்டும்.


    இது யமனுக்காக செய்ய படுகிறது. புது வஸ்த்ரம் போர்த்தவும் பழைய வஸ்த்ரம் எடுக்கவும் மந்திரம் உண்டு.


    மயானத்திற்கு போகு முன் எள், பச்சரிசி, வேகாதபடி பாகம் செய்த அரிசி,
    அத்தி கொத்து நெய், தர்பை, ஒடு, சல்லி, மணல் ஆகியவைகளை முன்னாடி அனுப்ப வேண்டும்.


    கர்த்தா ஒரே வஸ்திரத்துடன் இருக்க வேண்டும். தலை குடுமி அவிழ்ந்தி ருக்க வேண்டும். நெருப்பு சட்டியை முன்னே எடுத்து செல்ல வேண்டும். பிரேதத்திற்கு பின் பங்காளிகள் செல்ல வேண்டும். பக்கத்திலோ முன்னோ செல்ல கூடாது.


    வழியில் மூன்று முறை ப்ரேதத்தை கீழே வைத்து பலி கொடுக்க வேண்டும். அல்லது மயானத்திலாவது மூன்று முறை கீழே வைத்து பலி கொடுக்கா விட்டால் வழியிலுள்ள ஜீவன்கள் இந்த ஜீவனை ஹிம்சிக்கும்.


    இதற்காக அரிசியை களைந்து தீயில் பாதி வெந்ததாக பாகம் செய்ய வேண்டும். ப்ரேத காரியத்தில் அன்னத்தை தெற்கு பக்கமாக இறக்கி வைக்க வேண்டும். தேவ காரியத்தில் அன்னம் நன்றாக வெந்தபின் வடக்கு பக்கமாக இறக்கி வைக்க வேண்டும்.


    மயானத்தில் உடலை தகிக்க போகும் இடத்திற்கு மேற்கில் உடலையும், அக்கினியையும் வைக்க வேண்டும். எல்லோரும் வடக்கு புறம் செல்ல வேண்டும். அத்தி கொத்தால் இடத்தை சுத்தம் செய்ய அபேதவீதா என்ற மந்திரம்.


    ஸ்வர்ணத்தினால் ப்ரேதத்தை துடைக்க வேண்டும். வலது தொடையை கையால் தட்டி கொண்டு மூன்று முறை ப்ரேதத்தை அப்பிரதக்ஷிணமாக சுற்ற வேண்டும். இதில் சிறிய சகோதரன் முதலிலும் கர்த்தா கடைசியிலும் செல்ல வேண்டும்.


    உடலை சிதையில் வைத்த பின் நெய்யை வாய், வலது கண்,இடது கண், வலது மூக்கு, இடது மூக்கு, வலது இடது காது ஆகிய இடங்களில் சொட்ட வேண்டும். அக்காலத்தில் ஸ்வர்ணம் வைக்க வேண்டும் என்று எழுதி இருக்கிறார்கள். ஸ்வர்ணத்திற்கு பதில் நெய் சொட்டு விடுகிறோம்.


    பெரும்பாலும் இந்த ஏழு த்வாரங்கள் வழியே தான் ப்ராணன் போகிறது. பிறகு எள்ளுடன் கலந்த அரிசியை (வாய்க்கரிசி ) பந்துக்கள் போட வேண்டும்.


    தம்பதிகளில் ஒருவர் இறந்தால் ஒளபாசனாக்னி உபயோகிக்க வேண்டும்.
    பத்னி இல்லாதவருக்கு, புருஷன் இல்லாதவருக்கு உத்தபனாக்னி ஸம்ஸ்காரம்.
    தீயில் ஒரு பிடி தர்ப்பையை கொளுத்தி அதில் ஒரு பிடி தர்ப்பையை கொளுத்தி அதில் ஒரு பிடி தர்ப்பையை கொளுத்தி யதே உத்தபனாக்னி எனப்படும்.


    பருஹ்ம மேத ஸம்ஸ்காரம்;- ப்ருஹ்ம வி நாப்னோதி பரம் பிர்குர்வை வாருணி என்ற மந்திரம் சொல்ல வேண்டும். ராம சிவ நாமங்கள், பஞ்சாக்ஷரி, அஷ்டாக்ஷரி காதில் சொல்ல வேண்டும். துளசி தீர்த்தம் வாயில் விட வேண்டும்.


    தக்ஷிணாயனம், இரவு, கிருஷ்ண பக்ஷம் இவைகளில் இறந்தால் ப்ராயஸ்சித்தம் செய்ய வேண்டும். உடல் அக்னியில் ஹோமம் செய்ய படுவதால் சுத்தமாக இருக்க வேண்டும்.


    பிணத்தை சிதையில் வைத்த பின் வெள்ளி நாணயங்களை பிணத்தின் கையில் வைத்து எடுத்து பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும். பின் வாய்கரிசி போட்டு அபிரதக்ஷிணமாக வந்து பானையை உடைத்து எறிந்து விட்டு திரும்பி பார்க்காமல் செல்ல வேண்டும்.


    பின் க்ஷவரம் செய்து ஸ்நானம் செய்து வீடு திரும்ப வேண்டும்.


    இதற்குள் அலம்பின வீட்டிற்கு ஒரு வாத்தியார் புண்யாஹ வாசனம் செய்திருப்பார். அன்றைய சாப்பாடு சம்பந்தி பொறுப்பு.


    மத்யானமே கல் ஊன்றுவது வழக்கம். தனிஷ்டா பஞ்சகம்= அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி இதில் இறந்தால் ப்ராயஸ்சித்தம் செய்ய வேண்டும்.


    ப்ரேதத்தின் வாயில் ஸ்வர்ண தகட்டை வைத்து வ்யாஹிருதிகளால் ஹோமம் செய்து பாதி நெய்யை அக்னியிலும் பாதி நெய்யை ஸ்வர்ண தகட்டிலும் ஹோமம் செய்ய வேண்டும். இக்காலத்தில் ஸ்வர்ண தகட்டிற்கு பதில் நெய் விடுகிறார்கள்.


    ஐந்து கூர்ச்சம் தர்ப்பைகளால் செய்து ஆவாஹனம் செய்து பூஜித்து தஹன சமயத்தில் ,ப்ரேதத்தின் தலை, கண், வயிறு, நாபி, கால் ஆகிய இடங்களில் வைத்து ஹோமம் செய்து ப்ரேதத்துடன் எரிக்க வேண்டும்.




    ப்ராமணனுக்கு அஸ்தி ஸஞ்சயனம் நான்காவது நாள் செய்ய வேண்டும்.
    அஸ்திகளை இடது கை மணிக்கட்டில் கம்பளி கயிறு, கண்டங்கத்ரிகாய் ,அத்தி இலை கட்டி கொண்டு இடது கையால் சேகரிக்க வேண்டும். கடலில் போடும் வரை அகமர்ஷண சூக்தம் சொல்ல வேணும்.


    மறு நாள் விடியுமுன் ஸ்நானம் செய்து ஈர வஸ்த்ரதுடன் உப்பு போடாத அரிசி மாவினால் 11 அடைகள் தட்டி பயரை சுண்டி எடுத்து கொண்டு சஞ்சயனத்திற்காக மயானம் செல்வர்.


    பின் சாம்பலில் ஒரு உருவம் மாதிரி செய்து ,கால் பக்கம் நின்று கண், காது, மூக்கு, மார்பு, கை கால்களில் மந்திரம் சொல்லி அடைகளை எறிந்து விட்டு
    அஸ்தியை பானையுடன் ஆற்றிலோ, சமுத்திரத்திலோ போட்டுவிட்டு வீடு திரும்ப வேண்டும்.


    க்ருஹ த்வார குண்டத்தில் மேல் பச்சை தென்னை ஓலையை வளைத்து வைத்து தென்னம் பாளைகளை வெட்டி வைத்து மேல் பக்கம் வேஷ்டி, ருத்ராக்ஷ மாலைகள் சாற்றி விளக்கு ஏற்றி வைத்து மூன்று இழைகளில் கோலம் போட வேண்டும்.


    பிறக்கும் ஜீவன் , பால்யம், யெளவனம், முதுமை அடைவது போல் இறக்கும் ஜீவன் பூத அணு சரீரத்துடன் சேர்ந்து ஒரு நிலை அடைகிறது. பிரேத நிலை அடைந்த பின்பு தான் யாதனா சரீரம் ஏற்படுகிறது.


    ப்ரேத சரீரம் இறந்த பத்து நாட்களில் புத்ரனால் அளிக்க படும் பிண்டத்தினாலும் , எள், தண்ணீர் தர்ப்பணத்தினாலும் உண்டாகிறது.
    ஜீவன் யம லோகம் செல்ல 12 மாதமாகிறது. தனி யான ஜீவனுக்கோ சூக்ஷ்ம சரீரத்திற்கோ போதல் வருதல் கிடையாது.


    ஆகவே ஜீவன் பூத உடலை விட்டு கிளம்பு முன்பே , அடுத்த உடலுக்கு ஆரம்பமான சில பூத பரமாணுக்கள் சூக்ஷ்ம சரீரத்திற்கு சஹாயமாக அளிக்க படுகிறது. இதை பற்றி கொண்டே சூக்ஷ்ம சரீரம் செல்கிறது.


    புண்ய பாவங்களை அனுபவிப்பதற்கு ஏற்ப அந்த உடல் ஓராண்டில் பூர்ண மாகிறது.


    ஆசைகள் உள்ளவர்களை பூத ப்ரேத பிசாச லோகங்களை தாண்டி செல்ல விடாமல் உலகம் ஆகர்ஷிக்கிறது. இந்த ஆசை அகலவே எள்ளும், தண்ணீரும் இறைக்க வேண்டியது இருப்பவர் செய்யும் கடமை. இறக்க வேண்டியவன் இவன் தான் என நிர்ணயம் செய்த பின் தன் உடலில் ஜீவன் புக முடியாமல் வருந்தும்.


    உடல் தீயிட்ட பின் பசி தாகம் என அலறும். நக்ன சிராத்தம் செய்தால் தான் சாந்தி அடையும்.


    அந்த காலத்தில் வீட்டில் கிரஹ குன்டமும், ஆற்றங்கரையில் தீர்த்த குண்டம் என இரு குண்டங்கள் ஏற்படுத்தி சிறிய கருங்கல் மூன்றை தர்ப்பையால் ஒன்றாக கட்டி ஊன்றுவார்கள். கருங்கல் சிலைகளில் தேவதைகள் தங்குவது போல்


    இந்த ஜீவனும் இந்த கல்லில் தங்கும். பிண்டம் போடுதலும் ஜல தர்ப்பணமும் செய்ய ப்படும். தீர்த்த கரையில் ஜல தர்ப்பணம் மட்டும் தான். தாகம் அடங்கவே இது. பங்காளிகளும் தர்ப்பணம் செய்ய வேண்டும். பத்து நாளும் பிண்ட தானம் செய்ய செய்ய பிரேத உடல் உருவாகிறது.


    பத்து தினம் , தினமும் காலையில் பெண் பிண்டம் செய்து தர , வாஸோதகம், திலோதகம் விட்டு இறந்தவர் ஆத்மாவை த்ருப்தி செய்ய வேண்டும். 90 வயதில் இறந்தாலும், இந்த ப்ரேத சரீரம் ,30 வயதில் இறந்தவர் எப்படி இருந்தாரோ அதே மாதிரி உண்டாகிறது. அந்த காலத்தில் பெண்கள் மாலையில் பிலாக்கணம் பாடுவார்கள்.


    தகனத்தால் உண்டான எரிச்சல், பசி தாகம் அடங்க , ப்ரேத சரீரம் விருத்தியாக திலோதகம், வாஸோதகம் கொடுக்க படுகிறது. உதகம் என்றால் தண்ணீர் என்று அர்த்தம். திலம் என்றால் கருப்பு எள்.
    முன்பு உடலுக்கு போற்றிய புது துணியை சிறிது கிழித்து வைத்து கொண்டு இருக்கிறீர்கள் அல்லவா. அந்த துணியால் தான் தினமும் மூன்றாக மடித்து ஒரு தர்பையும் அத்துடன் வைத்துகொண்டு மந்திரம் சொல்லி ஜலத்தில் தோய்த்து தோய்த்து மூன்று முறை பாஷாணத்திலேயே பிழிய வேண்டும்.


    முதலில் சிறியவன் தான் ஆரம்பிக்க வேண்டும். எல்லா சகோதரர்களும் விட வேண்டும்.முதல் நாள் 3 தடவை. இரண்டாம் நாள் 4 தடவை; 3ம் நாள் 5 தடவை; 4ம் நாள் 6; 5ம் நாள் 7; 6ம் நாள் 8; 7ம் நாள் 9; 8ம் நாள் 10;


    9ம் நாள் 11 தடவை; 10 ம் நாள் 12 தடவை; என்ற முறைப்படி வாஸோதகம் அளிக்க வேண்டும். வீட்டில் இம்மாதிரி வாஸோதகம் விட்ட பின் காலை உணவிற்கு ஒரு பிண்டம்; மாலை உணவிற்கு ஒரு பிண்டம் ஸமர்ப்பிக்க
    வும்.


    இந்த வஸ்த்ரம் சொம்பு இவைகளை மாற்றக்கூடாது. கிரஹ குண்டத்திற்கு வஸ்த்ரம், ருத்ராக்ஷம், பச்சோலை பந்தல், இளநீர், தீபம் முதலியன தேவை.
    மேலிருந்து உரி போல கட்டி அதில் ஒரு சிறிய துவாரமுள்ள மண் பானையை வைத்து அதில் தீர்த்தம் விட்டால் 24 மணி நேரமும் அதிலிருந்து கிரஹ த்வார குண்டத்தில் தண்ணீர் சொட்டி கொண்டே இருக்கும். அந்த காலத்தில் ஓட்டு வீட்டில் இது முடிந்தது.


    தினமுமொரு இளநீர் காயும் வைக்க வேண்டும். தர்ப்பணத்தால் தாகம் அடங்கும். பசிக்கு தினமும் ஆம சிராத்தம் செய்ய வேண்டும். முதல் 3 என்று பத்தாம் நாள் 12 என்ற படி ஒவ்வொரு நாளும் ஒன்று அதிக மாக 75 பேருக்கு அரிசி, பயற்றம் பருப்பு; காய், தக்ஷிணை தர வேண்டும்.


    3+4+5+6 +7+8+9+10+11 +12= 75 மொத்தம். இதனால் ப்ரேதத்தின் பசி தீரும். இந்த அரிசி தானம் செய்யும் போதெல்லாம் இந்த ஸ்லோகம் சொல்ல வேண்டும். தண்டுலா; வைசுவதேவத்யா: பாகேன அன்னம் பசந்தியே. தஸ்மாத் தண்டுல தானேன அத: சாந்திம் ப்ரயஸ்சமே.


    நவ சிராத்தம்:- இறந்தவருக்கு 1,3,5,7,9, 11 ஆகிய நாட்களில் செய்ய வேண்டியது. இது இறந்தவருக்கு ப்ரேத ஸ்வரூபத்தை அகற்ற கூடியது. ஆகாரமாகவும் ஆகிறது.


    கிரஹ குண்டத்தினருகே படைத்த இரு பிண்டங்களையும் வஸ்த்ரத்தில் எடுத்து கொண்டு ப்ராசீனாவீதியாய் குளம் அல்லது நதியில் இறங்கி தெற்கு முகமாக நின்று பிண்டங்களை ஜலத்தில் விழும்படி ஆகாயத்தில் எறிய வேண்டும். ஒரே இடத்தில் தான் பத்து நாட்களும் பிண்டம் எறிய வேண்டும்.


    முதல் நாள் எந்த தானியத்தில் பிண்டம் செய்தோமோ அதே தானியத்தில் தான் பத்து நாட்களும் செய்ய வேண்டும்.


    பத்தாம் நாள் ப்ரேத உடல் அகலுவதற்காக வ்ருஷ உத்ஸர்ஜனம் செய்ய படுகிறது. ( காளை கன்று உடம்பில் சூலம் மாதிரி குறியிட வேண்டும்.).
    3 லிட்டர் அரிசியின் அன்னம், உப்பு போடாமல் செய்த11.இட்லி11,அடை,11 அப்பம்,11முறுக்கு 11 ,வடை இத்யா திகளை கல் ஊன்றிய இடத்தின் அருகில் வைத்து படைப்பதையே பத்து கொட்டுவது அல்லது ப்ரபூத பலி எங்கிறார்கள்.


    இரவு ஒரு மணிக்கு ஸ்நானம் செய்து விட்டு ஈர வஸ்த்ரத்துடன் பெண்ணும், மருமகளும் இவைகளை தயாரித்து வைப்பர். ப்ரபூத பலியின் போது ப்லாக்கணம் பாடுவார்கள்.


    அந்த காலத்தில் இதை வபனம் செய்யும் நாவிதரிடம் மூட்டை கட்டி கொடுப்பர். அவர் உப்பு தண்ணீரில் தோய்த்து இதை சாப்பிடுவர். இக்காலத்தில் சலூன் காரர்கள் வாங்குவதில்லை ஆதலால் ஆற்றில் சமுத்திரத்தில் கரைக்க வேண்டி யிருக்கிறது. பிறகு ஸ்நானம் செய்துவிட்டு வீடு திரும்ப வேண்டும்.




    ஊன்றிய கற்களை பத்தாம் நாள் எடுத்தவுடன் ப்ரேத சரீரத்திற்கு அதிக பசி ஏற்படும். ப்ரேத சரீரம் பூரணமாக வளர்ந்து இப்போது, தான் பூரண சரீர முள்ளவன் என எண்ணுகிறது.




    கணவன் இறந்திருந்தால் நாலாம் நாள் இறந்தவரது மனைவியை பிறந்த வீட்டிற்கு அழைத்து வந்து கீழே நெல் தெளித்து அதன் மேல் நடந்து வர செய்வர். பால் பழம் கொடுப்பர். புக்ககம் கொண்டு விடுவர்.




    எட்டாம் நாள் இட்லி எண்ணைய் மிளகாய் பொடி எல்லா வீடுகளுக்கும் இறந்தவரின் பெண் போடுவது வழக்கம்.


    நார் மடி புடவையை பிரித்து சகோதரன் கழுத்தில் போட்ட பின் மற்ற உறவினர்களும் போடுகின்றனர். எல்லா சுமங்கலிகளையும் அப்புரம் போக சொல்லி விட்டு பூவையும் தாலியையும் அகற்றி விடுவர். சிலர் 10ம் நாள் இரவு நடு நிசிக்கு பின் தாலி கழற்றி பால் கிண்ணத்தில் போடுவர்.


    அன்று மாலை சரம ஸ்லோகம் வாசிக்க சொல்வர். கில ஊர்களில் 13 ம் நாள் சரம ஸ்லோகம் வாசிகின்றனர்.


    கர்த்தா நான்கு பாத்திரங்களில் எள், ஜலம், வாசனை திரவியம், சந்தனம் ஆகிய வற்றால் நிரப்பவேண்டும். இதில் 3 பித்ருக்களுக்கும், ஒன்று மரணமடைந்த வருக்கும் வைக்க படும். இந்த ஒற்றை கிண்ண திரவியத்தை


    மற்ற கிண்ணங்களிலும் விட வேண்டும். இதுவே இறந்த ஜீவனுக்கு பித்ரு லோகம் செல்லும் வரை ஆகாரமாகும்.பிண்டான்னம் 7 தலை முறைக்கு போய் சேரும்.


    12ம் நாள் சபிண்டீகரணம் செய்த பின் முந்தய பித்ருக்களுடன் சேர்க்க வேண்டும். ஜீவன் யம லோகம் போக ஒராண்டு காலம் ஆகுமாதலால் கிரமபடி அதன் பின்பே சபிண்டீ கரணம் செய்ய வேண்டும்.


    ஆனால் கர்த்தா அது வரை உயிருடன் இருப்பார் என்ற நிலை இல்லாததால் 12 மாதங்களில் செய்ய வேன்டிய மாஸ்யங்களை முன்னமேயே செய்து சபிண்டீகரணமும் செய்ய படுகிறது.


    யம லோகம் செல்வதற்கு இடையே 16 இடங்களில் தங்கி செல்ல வேண்டும். அந்த தங்குமிடங்களில் அன்னம், தீர்த்தம், கிடைக்கும்படி சோத கும்பம் மாஸ்யம் செய்ய வேண்டும்.
    பித்ருக்கள் தாகம் அடங்க சோதகும்பம். ஊன மாஸ்யம்-4. மாஸ்யம் 12.
    ஜீவன் யம லோகம் செல்லும் காலத்தில் அதற்கு வேண்டிய ஸகல செளகரி யங்களையும் சபின்டீகரணதன்று தானமாக செய்ய வேண்டும். வைதரணி நதி கடந்து செல்ல பசு மாடு தானம் செய்ய வேண்டும்.


    11ம் நாள் ஏகோதிஷ்டம்:- இது சோதகும்பத்தின் விரிவானது. சோதகும்பம் சுருக்க மானது. 16 மாசிக சிராத்தம், சபிண்டீகரண சிராத்தம் செய்த பின்பே இறந்த ஜீவனுக்கு பித்ரு லோகத்தில் இடம் கிடைக்கிறது. அன்று பசு தானம் விசேஷம்..


    ஸ்தூல உடம்பிலிருந்த வாசனையால் இறந்தவனின் சரீரம் பசி தாகம்
    இருப்பதாகவும், கண் ,காது இல்லை. வஸ்த்ரம் இல்லை என வருந்தும்
    சபிண்டீகரணதன்று இக்குறைகள் போக சகல தானங்களும் செய்ய படுகிறது.


    தற்கால சாந்திக்காக அரிசி, பருப்பு, தேங்காய், தீபம், வஸ்த்ரம் அனைத்தும்
    தானமாக வழங்க படுகிறது.


    பிராயஸ்சித்த ஹோமம்.:-
    இனிமேல் இரு தர்ப்ப பவித்ரம்.
    அக்னி மூட்டி ப்ரதக்ஷிணமாக பரிசேஷனம்.எள்ளினால் ஹோமம் செய்ய வேண்டும். விஸ்வேதேவஸ்ய என்ற மந்திரத்தால் ஸவிதாவிற்கு ஹோமம்.
    யமோதாத் என்ற மந்திரத்தால் யமனுக்கு ஹோமம். உஸந்தஸ்த்ர என்று பித்ருக்களுக்கு ஹோமம். . வியாக்ருதியை தனியாகவும் சேர்த்தும் ஹோமம்.


    தீட்டு அகலவும் துக்கம் நீங்கவும் சாந்தி ஹோமம்.
    தீட்டு அகல ஏற்றது மாவிலங்க இலை. இதை தலைகீழாக வைத்து அக்னிக்கு ஹோமம். தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் ஏற்றது பலாச இலை.


    ப்ரேதங்களுக்கு ஏற்றது அத்தி இலை.


    அக்னியில் பக்குவமான நெல் பொரியை எல்லோரும் சாப்பிட வேண்டும். சரம ஸ்லோகம் வாசிப்பர். அதாவது இறந்தவரது வருஷம், அயனம், ருது, பக்ஷம், திதி கோத்திரம் சர்மா இவைகளை பாட்டாக எழுதி சொர்க்க லோகம் செல்வதாக வாசிப்பர்.


    பெண் அப்பம், பொரி, லட்டு செய்து எல்லோருக்கும் வினியோகிப்பர்.


    துறவிகளுக்கு:-


    ஸித்தியான துறவிகளுக்கு ஸ்ரீ ருத்ரம் சொல்லி சுத்த ஜலம் அபிஷேகம். டோலி செய்து அதில் உட்கார வைத்து உபனிஷத் பாராயணம் செய்து கொண்டு நதிதீரம் அல்லது தடாக தீரம் எடுத்து செல்லவும். தீட்டு கிடையாது


    ஒரு தண்டம் அளவு கொம்பு வைத்து அதற்கு 16 உபசார பூஜை செய்ய வேண்டும். இதம் விஷ்ணு மந்திரம் சொல்லி கொம்பை மூன்றாக உடைத்து கொம்பை வலது கரத்தில் வைத்து, கமண்டலத்தை இடது கரத்தில் வைத்து


    புருஷ சூக்தம் ஜபம் செய்து தலை பிளக்கும் வரை தேங்காய்களை உடைக்க வேண்டும். கபாலம் பிளந்த பின் பிரணவத்தாலும் வ்யாஹ்ருதியாலும் உப்பை கொட்டி மூட வேண்டும். பின் ப்ரதக்ஷிண நமஸ்காரம்.அவப்ருத ஸ்நானம். பத்து நாள் வரை நித்ய பூஜை. பாயச தானம்


    தர்ப்பணம் செய்ய வேண்டும். பிண்டம் அளிப்பது போல் பாத்திரத்துடன் பாயச தானம்.பத்தாவது தினத்தில் நித்ய பூஜை, மஹா பூஜை செய்ய வும். பிராமண போஜனம். பதினோராவது நாளில் ப்ரத்யாப்தீகம் போல பார்வண சிராத்தம். சமாதிக்கு பூஜை செய்து 12 ம் நாளில் நாராயண பலி செய்யவும்.


    நாராயண பலி;- சுக்ல பக்ஷமானால் கேசவாதி முதல் 12 நாமாக்களுக்கு 12 பிராமணர்களையும் விஸ்வம்பரர் விஷ்ணுவிற்காக ஒருவரும் வரிக்க வேண்டும். கிருஷ்ண பக்ஷமானால் ஸங்கர்ஷ்னர் முதல் 12 நாமாக்களால் வரிக்க வேண்டும்.


    விசுவம்பரர் விஷ்ணு இலைக்கு எதிரில் கிழக்கு நுனியாக தர்ப்பையை போட்டு அக்ஷதையுடன் தீர்த்தம் விட்டு 3 வியாஹ்ருதிகளை தனி தனியாக கூறி பலிம் ததாமி என்று சொல்லி 3 பலிகள் வைத்து அதன் மேல் அக்ஷதையும் நீரும் விட வேண்டும்.
Working...
X