Announcement

Collapse
No announcement yet.

இறுதி ஸம்ஸ்காரம்.-4

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • இறுதி ஸம்ஸ்காரம்.-4

    இறுதி ஸம்ஸ்காரம்-4.
    ஆத்மா வேறு இந்த சரீரம் வேறு என்ற திடமான மனது ஏற்படத்தான் கர்மானுஷ்டானம்.ஒரு ஜீவனை வேத மந்திரங்களல் இப்படி சுத்தி செய்து அந்த மந்திரங்களோடு சேர்ந்த கர்மாக்களில் ஈடு படுத்த தான் 40 ஸம்ஸ்கா ரங்கள். என விதிக்க பட்டது.

    கடைசியாக இந்த உடலை தேவதைகளுக்கு ஆஹூதியாக ஹோமம் செய்து விடுகிறோம். தர்ம சாஸ்த்ரம் இந்த உடலுக்கு நெய்யை ஊற்றி இதையும் ஒரு
    திரவியமாக அக்னியில் ஹோம மந்திரங்களோடு போட சொல்கிறது.

    பகவத் கீதை படி பிறந்தவனுக்கு இறப்பு நிச்சயம்.பாபம் , புண்ணியம் என்ற இரண்டில் இந்த பிறவியில் செய்ததில் எது குறைவோ அது முதலில் அனுபவிக்க பட வேண்டும்.

    இறந்தவுடன் ஏற்படும் நிலை ப்ரேத சரீர நிலை. இந்த நிலையிலிருந்து பித்ரு நிலையை அடைய செய்யும் கர்மாக்களுக்கு பைத்ரு மேதிக கர்மாக்கள் என்று
    பெயர்.
    உயிருடன் இருக்கும்போது மாதா பிதாக்கள் செய்வது மக்களை காக்கும். இறந்த பிறகு அவர்களுக்காக மக்கள் செய்யா விட்டால் ( ப்ரேத சரீரத்தை பித்ரு சரீரமாக மாற்றாவிட்டால்) அது மக்களை தாக்கும்.

    ப்ரேத நிலையில் துக்கம் அனுபவிக்கும். ஆதலால் நம் குடும்பத்திற்கு க்ஷேமம் கிடைக்காது. குடும்பத்தில் ஆண் வாரிசு இருக்காது. அங்க ஹீனத்துடன் குழந்தை பிறக்கும்.

    இறந்தவுடன் யம கிங்கிரர்கள் இந்த ஸூக்ஷம சரீரத்துடன் கூடிய ஜீவனை காற்று ரூபமாக உடனே யம தர்ம ராஜா முன்பு நிறுத்து கிறார்கள். அவர் பார்த்து இவனை அவன் வீட்டிலேயே விட்டு விடு. 12 நாட்கள் கழித்த பிறகு நம் சபைக்கு அழைத்து வா என்று உத்திரவிடுவார். இவைகள் 48 நிமிடங்க ளில் நடைபெறுகிறது.

    உயிர் போன பிறகு 3 மணி நேரம் காத்திருந்து ப்ராயச்சித்தம் பைத்ருமேத கர்மா முதலியவைகளை செய்ய வேண்டும். வேதத்தில் 6 வது ஆரண்யக ப்ரஶ்னத்தில் சொல்ல படுகிறது. யம புரியில் யம தர்ம ராஜன் கிருஹத்தை காப்பாற்றுகின்ற நான்கு கண்களை யுடைய இரு நாய்கள் புண்ய சாலிகளை ஹிம்சிக்காமலும், பாபிகளை ஹிம்சித்தும் கொண்டு சேர்க்கிறது என்று.

    ஸ்தூல சரீரம் எறிக்கபட்ட உடனேயே ஸூக்ஷ்ம சரீரம் பிண்டாகாரமாக ஆகி யம புரிக்கு கொண்டு செல்ல படுகிறது. இறந்த தினத்திலிருந்து 10 நாள் வரை தினமும் கொடுக்க படும் உதக பிண்ட தானத்தினால் முறையாக பூர்ண சரீரம் உண்டாகிறது.

    முதல் நாள் தலை, 2ம் நாள் கண்,காது,மூக்கு; 3ம் நாள் கைகள், மார்பு, கழுத்து, 4ம் நாள் தொப்புள், குதம், லிங்கம். 5ம் நாள் துடைகள், 6ம் நாள் தோல்; 7ம் நாள் நரம்புகள்; 8ம் நாள் ரோமங்கள்; 9ம் நாள் வீரியம், 10 ம் நாள் அகோர பசி. ஆதாரம் வைத்திய நாத தீக்ஷிதீயம். கருட புராணத்தில் சிறிய மாற்றங்களுடன் சொல்ல பட்டிருக்கிறது.

    ப்ரபூத பலி கர்மாவினால் பசி தாகம் தீர்கின்றது. 11ம் நாள் விருஷௌத்ஸர்ஜனம் , பிறகு ஆத்ய மாசிகம், பஞ்சதச மாசிகம் முதலியவைகளால் பைசாச பாத நிவ்ருத்தி ஏற்படுகிறது. தானங்களால் யம புரம் போகும் போது ஏற்படும் ஸகல துக்கங்களும் குறைகிறது.

    ஸபிண்டீ கரணத்தினால் ப்ரேதத்வ நிவ்ருத்தி ஏற்பட்டு பித்ருக்களுடன் சேர்க்கபடுகிறது.

    சாஸ்திரத்தில் இறந்த நாள் அன்றே ப்ராயஸ்சித்ததுடன், உத்கிராந்தி கோ தானம், தச தானம், பஞ்ச தானம் செய்ய சொல்லி இருக்கிறது. தச தானத்தின் அளவும் சொல்ல பட்டிருக்கிறது.
    இறக்கும் தருவாயில் பசு, பூமி, எள், தங்கம், தீபம் , தீர்த்த பாத்திரம் இவைகளை தானம் செய்வது விசேஷம். தான பலன் மிக மிக அதிகம். ராம , சிவ, நாராயணா என்ற பகவான் நாமாக்களை ஜபிக்க வேண்டும். கீதை, உப நிஷத்,ஸஹஸ்ர நாமம் முதலியவைகளை சொல்ல சொல்லி கேட்கலாம்.


    கன்றோடு கூடிய கறக்கும் பசு; 300 கிலோ நெல் விளைய க்கூடிய ஒருவன் போஜனத்திற்கு போதுமான அளவு பூமி தானம் ; தான்யம் 307.2 கிலோ;
    எள்ளு 25.6 கிலோ; நெய் 3.2 கிலோ; வெல்லம் 3 கிலோ; உப்பு 307.2 கிலோ

    வேஷ்டி ஒன்பது ஐந்து ஒன்று; வெள்ளி 25 கிராம்; தங்கம் 0.75 கிராம்.
    ஆதாரம் மாதத்ரமானம் சாரங்கர் ஸம்ஹிதா வைத கிரந்தம். அந்த காலத்து அளவை இந்த காலத்து அளவுக்கு மாற்றி எழுதபட்டது.

    இவைகளை சொன்னபடி கொடுக்க முடியாவிட்டால் அதன் விலையை பணமாக கொடுக்கலாம். பூரா அளவும் கொடுக்க முடியாவிட்டால் அவரவர் சக்திக்கு குறையாமல் கொடுக்கவும்.


    இறண்டு வயதிற்குள் இறந்தால் புதைக்க வேண்டியது. ஸம்ஸ்காரம் கிடையாது.
    இரண்டு வயதிற்கு மேற்பட்டால் ஏகார்ச்ச விதி தஹன ஸம்ஸ்காரம்.
    இதில் புருஷருக்கு உபனயனம் ஆன பிறகும், ஸ்த்ரீகளுக்கு கல்யாணம் ஆன பிறகோ இறந்தால் பைத்ருமேதிக விதிபடி தஹன ஸம்ஸ்காரம்.

    ப்ரும்ம மேத ஸம்ஸ்காரம் புருஷர்களுக்கு மட்டும் தான். ஸ்த்ரீகளுக்கு இல்லை.

    ப்ரும்ம மேத ஸம்ஸ்கரம் ஶ்ரோத்ரியன் இல்லாதவருக்கும், ஆசாரியனாக இல்லாதவருக்கும் கிடையாது.ப்ருஹ்ம மேத ஸம்ஸ்காரத்தின் மஹிமையும் பலனும் மிக சிறப்பாக உள்ளது.

    முறைப்படி பித்ருமேதம் செய்வது மோக்ஷப்ராப்தி.= மறுபிறப்பில்லாமை.
    ப்ரும்ம ஸாயுஜ்யம் அடைய ப்ரும்ம மேத ஸம்ஸ்காரம் செய்ய வேண்டும்.

    தகப்பனாருக்கு பிள்ளையாக பிறந்தவன் இதனை அறிந்து முறைப்படி பித்ரு மேதத்துடன் ப்ரும்ஹ மேத ஸம்ஸ்காரமும் இனைத்து செய்ய வேண்டும்.
    இறந்தவன் ஶ்ரோத்ரியனாக இருந்தால்= வேத அத்யயனம் செய்து

    அனுஷ்டானம் உள்ளவனாக இருப்பது. புத்ரனும் இதற்கு வேண்டிய மந்த்ரம் அத்யயனம் செய்துஇருந்தால் மிகவும் உசிதம் ஶ்ரத்தை உடையவனாக இருந்தால் ப்ரும்ஹ மேத ஸம்ஸ்காரம் செய்யலாம்.

    ஆதலால் ப்ராஹ்மணர்கள் ஒவ்வொருவரும் வேத அத்யயனம் தவறாமல் செய்து முடிந்த வரை அனுஷ்டானங்களை கடை பிடித்து தன்னுடைய பிதாவை ப்ரும்ம ஸாயுஜ்யம் அடைய செய்வது புத்ரனின் கடமையாகும்.

    தர்ம சாஸ்திரதின் கட்டளை:- ஒவ்வொரு புத்ரனும் காசி, கயா சிராத்தங்கள் அவசியம் செய்ய வேண்டும். அப்போதுதான் புத்ரன் 100% புத்ரன் ஆகிறான்.

    பிறகும் பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய சிராத்தங்களை ஆயுள் முடியும் வரை உரிய காலத்தில் செய்ய வேண்டும்.

    நமது ஸனாதன தர்மப்படி இறப்பது என்பது ஒரு ஊரை விட்டு மற்றொரு ஊருக்கு செல்வது போல. உயிர் பிரியும் போது பூமியில் இருப்பது தான் விசேஷம். கட்டிலில் இருந்து கீழே இறக்கு தெற்கு பக்கம் தலை வைத்து தர்ப்பங்களின் மேல் படுக்க வேண்டும்.

    ப்ராணன் வெளியில் செல்லும் சமயம் தெரிந்தாலும், தெரியா விட்டாலும் பசு தானம் செய்ய வேண்டும். இந்த சரீரத்தை விட்டு ப்ராணன் கஷ்ட படாமல் போவதற்கும் இந்த பசு மாடு தானம் உதவுகிறது.

    கர்ண மந்திரம்:- ப்ராணன், அபானன், வ்யானன், ஸமானன்.உதானன் என்ற ஐந்தும், தோல் கண், காது, மூக்கு, நாக்கு என்ற ஐந்து ஞான இந்திரியங்கள். வாக்கு, கை, கால், குய்யம்,குதம் முதலிய ஐந்து கர்மேந்திரியங்கள், மனஸ்,

    சித்தம், புத்தி, அஹங்காரம், என்ற நாங்கும் சேர்ந்து மொத்தம் 19; இந்த 19ம் சேர்ந்து ஸூக்ஷ்ம சரீரமாக சொல்ல படுகிறது. இவைகள் ஒன்றுக்குள் ஒன்று இணைந்து , பூத பஞ்சகத்தை=(பூமி, ஆகாயம், ஜலம், காற்று, தீ) அடைந்து,

    பிறகு பூமி, அந்தரிக்ஷம், த்யு லோகம் அடைந்து , கடைசியாக ஸூக்ஷ்ம சரீரத்தை இந்த மந்த்ரமானது ஸ்வர்க்கம் வரை செல்லும்படி செய்கிறது.

    ஸூர்யோதயத்திற்கு மேல் ப்ராணன் சென்று அதாவது காலை 6 மணிக்கு மேல் 6-15 மணிக்குள் ப்ராணன் போனால் மாலை 4 மணிக்குள் தஹனம் செய்து விட வேண்டும். இல்லாவிட்டால் பழசாகி விடுகிறது.

    பகலில் இறந்து முன் இரவில் தஹனம் செய்தாலும்,இரவில் இறந்து பகலில் தஹனம் செய்தாலும், அது யாதா யாமம்=பழசாகி விடுகிறது. ப்ராயஸ்சித்தம் செய்து புதிது ஆக்க வேண்டும்.

    ப்ருஹ்மசாரி, உப நயனமாகாத பையன், கல்யாணமாகாத பெண், மனைவியை இழந்த புருஷன், புருஷனை இழந்த ஸ்த்ரீ இவர்களுக்கு ஸ்ம்ருதி வாக்கிய படி அக்னி தயாரிக்க வேண்டும்.

    தம்பதிகளில் முதலில் இறந்த ஒருவருக்கு ஒளபாசனாக்னியில் ப்ரேதாக்னி ஸந்தான ப்ரயோகம் செய்ய வேண்டும்.

    கபாலாக்னி;- மண் பாத்திரத்தை அக்னியில் வைத்து நன்றாக சூடான பிறகு அதில் கொஞ்சம் விராட்டி தூளை போட்டு அக்னி உன்டு பண்ணுவது. இது ப்ருஹ்மசாரிக்கு ஏற்பட்டது.

    துஷாக்னி:- அக்னியில் மண் பாத்திரம் நன்றாக சூடான பின் அதில் கொஞ்சம் உமியை போட்டு அக்னி உண்டுபண்ணுவது. இது உப நயனமாகாத பையனுக்கும், விவாஹமாகாத பெண்ணுக்கும் ஏற்பட்டது.

    உத்பன்னாக்னி:- தர்பை முஷ்டி மூன்று எடுத்துக்கொண்டு, அதில் ஒன்றை அக்னியில் காண்பித்து , இதில் உண்டான அக்னியில் இரண்டாவது முஷ்டியை காண்பித்து, இதில் உண்டான அக்னியை மூன்றாவது முஷ்டியில் காண்பித்து அந்த அக்னியில் தான் மனைவியை இழந்த கணவனுக்கும், கணவனை இழந்த மனைவிக்கும் தஹன ஸம்ஸ்காரம் செய்ய வேண்டும்.

    இந்த அக்னி, ஸம்ஸ்காரத்திற்கு யோக்கிய மாவதற்காக 12 வ்யாஹ்ருதிகள் அக்னியில் நெய்யினால் ஹோமம் செய்ய வேண்டும். ஒளபாஸனாக்னிக்கு சொல்ல பட்ட ப்ரேதாக்னி ஸந்தான முறை வேறு. அது இதற்கு பொருந்தாது.

    மாத விடாய் இருந்து அந்த ஸமயத்தில் இறந்தாலும், 6 மாதத்திற்கு மேல் கர்ப்பிணி ஸ்த்ரீ இறந்தாலும் அவைகளுக்கு உரிய ப்ராயஸ்சித்தம் செய்ய வேண்டும்.

    மாத விடாய் இருக்கும் போது கணவன் இறந்தாலும், ப்ரஸவித்து பத்து நாட்களுக்குள் கணவன் இறந்தாலும், கணவன் மனைவி இவர்களில் யாரோ ஒருவர் போயிருக்கும் இடமே தெரியாம லிருக்கும்போது, யாராவது ஒருவர் இறந்தாலும் விசேஷ அக்னி சொல்ல பட்டிருக்கிறது.


    அபர காரியங்கள் குளிகன் காலத்தில் ஆரம்பிக்க கூடாது. எப்பொழுதும் ஆசமனம், ப்ராணாயாமம், நமஸ்காரம், ஸ்நானம், இவைகளை உபவீதியாகவே செய்ய வேண்டும்.

    தீட்டு உள்ளவர்கள் வீபூதியை ஜலத்தில் குழைத்து இட்டு கொள்ள கூடாது.
    ஸந்தியா வந்தனம் செய்யும் போது வீபூதியை எடுத்து அப்படியே இட்டு கொள்ளலாம்.

    இறந்தவள் சுமங்கலியாக இருந்தால் நெற்றியில் குங்குமம் இருக்க வேண்டும்.கர்த்தா கர்மா செய்யும்போது வீபூதி இட்டுக்கொள்ளக்கூடாது.
    எப்போழுதுமே கோபி சந்தனத்தின் மேல் வீபூதியை குழைத்து இட்டு கொள்ள கூடாது.

    இறந்தவர் விதவையாய் இருந்தால் வீபூதியை குழைத்து இட வேண்டும்.
    ஸம்ஸ்காரம் நடக்கும் நாட்களில் ஒரு வேளை சாப்பாடு; பூமியில் படுத்து உறங்க வேண்டும். ப்ரஹ்மசர்யம் அனுஷ்டிக்க வேண்டும்.கண்ட இடங்களில் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.
    கர்த்தாவின் நியமங்கள் கர்த்தாவின் மனைவிக்கு அப்படியே உண்டு.
    உயிர் பிறிந்ததிலிருந்து 24 மணி நேரம் வரை கர்த்தாக்கள் தஹனம் முதலியவை செய்து முடித்திருந்தாலும் கூட ஆகாரம் சாப்பிடக்கூடாது.
Working...
X