கர்த்தா வியாதியினால் முறைப்படி ஸ்நானம் செய்ய முடியாவிட்டால் கெளன ஸ்நானங்கள் விதிக்க பட்டிருக்கிறது. கங்கா ஜலம் ப்ரோக்ஷனம், ப்ராஶனம் செய்யலாம்.


கர்த்தாவிற்கு 10 நாட்களுக்குள் வேறு தீட்டு ஏற்பட்டால் கர்த்தா செய்யும் கர்மா தடைபடாது, 11ம் நாள் தீட்டு குறுக்கிட்டால் அன்று கர்மாவை முடித்து கொன்டு , ஸபிண்டீகரணம் முதலியவற்றை தீட்டு போனவுடன் நாள் பார்த்து செய்ய வேண்டும்.


தாய், தகப்பனாருக்கு ஸபிண்டீகரணம் செய்ய நல்ல நாள் பார்க்கவேண்டாம்.
மற்றவர்களுக்கு நல்ல நாள் பார்த்து தான் ஸபின்டீகரணம் செய்ய வேண்டும்.


மரண தினம் சரியாக தெரியாவிட்டாலும், மாதம் சரியாக தெரியாவிட்டாலும் ஆஷாடம் அல்லது மாக மாதம் திதி தெரியாவிடில் அமாவாசை அல்லது கிருஷ்ண பக்ஷ ஏகாதசி, மரண செய்தி என்று அறிய படுகிறதோ அந்த நாளின் திதியையும் வைத்துக்கொள்ளலாம்.


அனேக புத்திரர்கள் இருந்து மூத்த புத்ரன் (ஜ்யேஷ்ட புத்ரன்) முதல் நாள் வரா விட்டால் இதர புத்திரர்கள் தஹன க்ரியை செய்யலாம். ஸஞ்சயனதிற்கு
ஜ்யேஷ்ட புத்ரன் வந்து விட்டால் ஜ்யேஷ்ட புத்ரன் ஸஞ்சயனம் செய்யலாம்.


பத்து நாட்கள் வரை ஜ்யேஷ்ட புத்ரனால் வர முடியாவிட்டால் இதர புத்திரர்கள் 10 நாள் வரை செய்ய வேண்டிய அபர க்ரியைகளை அந்தந்த உரிய காலத்தில் செய்து விடலாம்.


பத்து நாட்கள் பிறகு வருகிற ஜ்யேஷ்ட புத்ரன் , ஸஞ்சயனத்துக்கு பிறகு இறந்த செய்தி கேள்வி பட்டால், அன்று முதல் 10 நாள் தீட்டு காத்து 75 திலோதகம் செய்து, வ்ருஷோத்ஸர்ஜனம், ஆத்ய மாசிகம் செய்து , தீட்டு


போன பிறகு ஆவ்ருத்த ஆத்ய மாசிகம் செய்து, நாள் பார்த்து ஸபின்டீகரணம் செய்ய வேண்டும். தற்காலத்தில் செல் போன் மூலம் உடனே தெரிந்து கொள்வதால் மரண தினத்திலிருந்து பத்து நாள் தீட்டு காத்தால் போதும்.


ஜ்யேஷ்டன் அபர க்ரியை செய்து கொண்டிருக்கும் போது கனிஷ்ட புத்ரன் முதல் நாள் வர முடியாவிட்டால் , 10 நாட்களுக்குள் வந்து சேர்ந்து கொண்டு
விட்டு போன நாட்களின் உதக தானத்தை செய்கின்ற தினத்தன்று சேர்த்து செய்து விடலாம்.தசம தினம் வரை=பத்தாவது நாள் முடிய ஜ்யேஷ்டனோடு சேர்ந்து செய்யலாம்.


கனிஷ்ட புத்ரன் ஸபின்டீகரணம் செய்த பிற்கு ஜ்யேஷ்டன் வந்தால் , வபனம் செய்து கொண்டு 75 உதக தானம் செய்து மறுபடியும் ஸபின்டீகரனம் செய்ய வேண்டும்.


தாயாதிகள் கர்மா நடக்கும் இடத்திற்கு வர முடியாவிட்டால் இருக்கும் இடத்திலேயே தர்பையால் ஆவாஹனம் செய்து, 30 வாஸோதகம், 75 திலோ தகம் செய்யவும். இதற்கு மந்திரம் சொல்லும் வாத்யாரும் ஸ்நானம் செய்ய வேணும்.


முதல் நாள் வபனம் கழுத்து வரை தான், கர்த்தாவிற்கு மட்டும் தான். தாயாதிகள்=பங்காளி=ஸபிண்டர்-=ஞாதிகள் ப்ரத்யக்ஷமாக இருந்தால் , அவர்களும் தினசரி கர்த்தாவுடன் தர்ப்பணம் செய்ய முடியுமானால் ,


அவர்களும் சிறியவனாய் இருந்தால் வபனம் செய்து கொண்டு,செய்ய வேண்டும்.தாயாதிகள் பத்து நாளும் விடாமல் தினமும் செய்ய வேண்டும். நடுவில் நிறுத்த க்கூடாது. முடியா விட்டால் பத்தாம் நாள் வந்து 10 நாளுக்கும் சேர்த்து செய்ய வேன்டும்.


தகப்பனார் இல்லாத பத்து நாள் தீட்டு காரர்கள் , இறந்தவர் வயதில் பெரியவராக இருந்தால் வபனம் உண்டு. பத்தாவது நாள் தான் கர்த்தாவிற்கும் , ஞாதிகளுக்கும் ஸர்வாங்க வபனம் விதிக்க பட்டிருக்கிறது.


பத்தாம் நாள் சிறியவர் முதல் பெரியவர் வரை வாஸோதகம், திலோதகம் செய்ய வேண்டும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
சில வாரத்தைகளுக்கு விளக்கங்கள்.
ப்ரஸ்தம், காரிகளம், த்ரோணம் , நிஷ்கம் இவைகள் எல்லாம் அந்த காலத்து அளவை குறிக்கிறது.


உத்க்ராந்தி = மூச்சு உடலை விட்டு வெளயேறுதல்.
வ்ருஷோத்சர்ஜனம்:- காளையை ருத்ர தேவனாக பூஜை செய்து இஷ்டம் போல் ஸஞ்சாரம் செய்யும் படி விட்டு விடுதல்.


ஆஹிதாக்னி:- ஆதானம் என்ற ஒரு கர்மா செய்து அக்னி ஹோத்ரம் செய்பவர்.


அனாஹிதாக்னி:= வெறும் ஒளபாஸனம் மட்டும் செய்பவர்.
ப்ராஶனம்:- தீர்த்தம், அன்னம் வாயில் உட்கொள்வது.


க்ருச்ரம்= தர்ம சாஸ்திரத்தில் சொல்லிய முறைப்படி 12 நாள் நியமத்துடன் இருக்க வேன்டிய ஒரு முறை. இதற்கு ப்ராஜாபத்ய கிருச்சரம் ப்ரத்யாம்னாயம்


பரிஸ்தரணம்:- அக்னியை சுற்றி நான் கு பக்கங்களிலும் தர்ப்பையை பரப்புதல்
பரீதீ:- அக்னியை சுற்றி நான் கு பக்கமும் சமித்து வைத்தல்.


தர்வீ = நெய் ஹோமம் செய்வதற்கு ஸாதனமாக உள்ள இலைக்கு பெயர்.
ப்ரோக்ஷணீ = சுத்தி செய்வதற்கு யோக்கியமான ஜலத்திற்கு ப்ரோக்ஷணி என்று பெயர்.


ஆயாமதம்= ஒரு ஒட்டை அளவுள்ள தர்பை நடுவில் முடி போட்ட பவித்ரம்.


ஸாதனம் செய்த பாத்திரம் ;= ஸூத்ரத்தில் சொன்னபடி தர்ப்பைகளின் மேல் வைப்பது ஸாதனம் என்று பெயர்.


துஷாக்னி :- உமியை கருக்கி எடுத்த அக்னிக்கு பெயர்.
கபாலாக்னி:= மண் பாத்திரதிலிருந்து சூட்டினால் வரட்டி முதலிவைகளை போட்டு உண்டாக்கபட்ட அக்னி.


உத்தபனாக்னி:- மும்முறை தர்பைகளை கொளுத்தி அதிலிருந்து உண்டு பண்ண பட்ட அக்னி.
தனிஷ்டா பஞ்சகம்;- அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி ரேவதி. இந்த ஐந்து நக்ஷத்திரம். இதில் மகர ராசி உள்ள அவிட்டம் 1,2, பாதங்களுக்கு தோஷம் இல்லை.


கும்ப மீன ராசியிலுள்ள மேற்படி நக்ஷத்திரத்தில் இறந்தால் தான் தோஷம். இதற்கான தோஷ பரிகாரம் முதல் நாள் காரியத்தில் செய்ய வேன்டும். 13ம் நாள் இதற்கான சாந்தி செய்ய வேண்டும்.


தான் பெற்ற பிள்ளை:- ஒளரஸ புத்திரன் என்று பெயர்.
ஸ்வீகாரம் ஒரு புத்ரனை எடுத்து கொண்டால் ஸ்வீகார புத்ரன் என்று பெயர்.


பெளத்ரன்;- பிள்ளையின் பிள்ளை.
தெளஹித்ரன்;- பெண்ணின் பிள்ளை.


பத்னீ;- பல பேர் இருந்தால் மூத்தவள். மனைவி; ப்ராதா=சகோதரன் ; உடன் பிறந்தவன்; ஸ்த்ரீகள் விஷயத்தில் கணவனின் ஸஹோதரன் ; ஸஹோதரனி ன் பிள்ளைகள் .
ஸ்த்ரீகளுக்கு= ஸபத்னீ புத்ரன்= சக்களத்தியின் மகன்.
கணவன்=பர்த்தா.
பெண்--- துஹிதா.


பின்னோதர ப்ராதா:- மாற்றாந்தாய்க்கு பிறந்த சகோதரன்.
ஸ்நுஷா=மாற்றுப்பெண்.
மாப்பிள்ளை= ஜாமாதா.


அந்த்யேஷ்டி;-கடைசி யக்ஞம் . தஹண ஸம்ஸ்காரம்.
ஆத்மா=உள்ளுடம்புடன் இருக்கும் உயிர்.


தாயாதி= 10 நாள் தீட்டுக்காரன்.==பங்காளி, ஸபிண்டர் ஞ்யாதி எனவும் கூறப்படுவர். ஒரு மூல புருஷனிடமிருந்து பிரிந்து வந்த ஏழு தலைமுறை வரை உள்ளோர்.


ஒருவர் இறந்தால் அவருடைய புத்ரன் ஈம சடங்குகள் செய்ய வேண்டும். இந்த ஒளரஸ புத்ரன் இல்லாதவர்களுக்கு ஸ்வீகார புத்ரன் செய்ய வேண்டும்.


ஒருவருக்கு மேற்படி இரு புத்ரர்களும் இல்லை. இறந்து விட்டார். யார் செய்வது என்று வரிசையாக வைத்னாத தீக்ஷிதியம் புத்தகத்தில் உள்ளது.


இந்த வரிசைபடி ஒருவர் இல்லாவிட்டால் அடுதவர் செய்யலாம். எல்லோரிலும் மூத்தவன் தான் கர்மா செய்ய அருகதை உடையவன்.


கர்மனுஷ்டானத்திற்கு அருகதை இல்லாதவன் :- அங்கஹீனன், மஹாரோகி
ஸுராபானம் முதலிய கெட்ட குணம் உள்ளவன் மூத்தவனாக இருந்தாலும் ப்ரயோஜனமில்லை. நற்குணம் உள்ள புத்ரனே உயர்ந்தவன்.


ஒளரஸ புத்ரன். 02. பெளத்ரன்;03.பெளத்ரனின் பிள்ளைகள்; 04. ஸ்வீகார புத்ரன்; 05. ஸ்வீகார பிள்ளையின் புத்ரர்கள்.06. சொத்தை பெற்றுக்கொள்ளும் தெளஹித்ரன். 07. பத்னீ ( பலர் இருந்தால் மூத்தவள்).


சில ஸ்ம்ருதிகளில் பத்னீ என்பதற்க்கு பதிலாக ப்ராதா என்று எழுத பட்டிருக்கிறது. இதன் படி பத்னியை காட்டிலும் முன்னுரிமை உடன் பிறந்தவனுக்கு உண்டு என்பது சாஸ்திர ப்ரமானம். இப்படியும் அனுஷ்டிக்கலாம்.


8. ஸ்த்ரீகள் விஷயத்தில் தன் சொந்த பிள்ளை; இல்லாவிட்டால் தெளஹித்ரர்கள். , இல்லாவிட்டால் சக்களத்தியின் மகன்=ஸபத்னி புத்ரன்.


9. கணவன்[ 10 பெண்[ 11.ஸஹோதரன்[12, ஸஹோதரனின் பிள்ளைகள்
13.பின்னோதர ப்ராதா; 14. இவர்களின் பிள்ளைகள்; 15.தகப்பனார் 16 தாயார்; 17. மருமகள், 18. பிள்ளையின் பெண்; 19. பெண்ணின் பெண்.


20. பெளத்ரனின் மனைவி; 21. பெளத்ரணின் பெண்; 22. ஸ்வீகார பையனின் பத்னீ; 23 சகோதரி= அக்கா; 24. மருமான்; 25. பத்து நாள் தாயாதி; 26. 3 நாள் தாயாதி;


27. தாய் வழியில் 10 நாள் தீட்டுக்காரன்; 28. தாய் வழியில் 3 நாள் தீட்டுக்காரன். 29. மாப்பிள்ளை; 30. ஸ்நேகிதன்; 31. சொத்து அடைபவன்.
32. அரசன்; 33. சிஷ்யன்;


34. வீட்டோடு வீடாக இருக்க கூடிய ப்ராமண வேலைக்காரன். 35. குரு; 36. ஆசாரியன்; 37. கூட அத்யயனம் செய்தவர்கள்.
இந்த வரிசை கிரமத்தில் கர்த்தாவாகி காரியங்கள் செய்யலாம்.