சாவு தீட்டு, ப்ரஸவ தீட்டு அகலும் தினத்தில்புருஷர் வழக்கப்படி காலையில் ப்ராதஸ் ஸ்நானம், ஸந்தியாவந்தனம் முத்லிய கர்மாக்களை செய்து, தீட்டு நீங்குவதற்காக காலை 8-30 மணிக்கு மேல் நீரில் மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.புது பூணல் மாற்றி கொள்ள வேண்டும்.


மரணம் நேர்ந்தால் , இறந்தவரை நாடி தடாக குண்டம், கிருஹ குண்டம் என இரு பள்ளத்தில் சிறிய கருங்கல்லை புதைத்து , அதில் ப்ரேத ரூபனான இறந்தவர் ஆவாஹனம் செய்ய படுகிறார். அப்படி கிருஹ குண்டத்திற்காக கல் புதைக்க பட்ட வீடு ஸபிண்டிகரணம் முடியும் வர அசுத்தமே.


கிரஹ குண்டம் வேறு இடத்தில் ஏற்பட்டிருந்தால் பசுஞ்சாணி ஜலம் தெளித்து , புண்யாஹ வசனம் செய்தால் அந்த வீடு சுத்தமாகும். அத்தகைய வீட்டில் வாடகைக்கு குடியுருப்போர் இடம் சுத்தமானால் பூஜை செய்யலாம்.


க்ருச்ரம்:- நமது உடலில் உண்டான பாபமகல க்ருச்ரம் செய்து கொள்ள வேண்டும்.இதன் பொருள்;- உடலை வாட்டுவது, கஷ்ட படுத்துவது என்பதாகும். அதாவது உபவாஸத்தாலும் , பஸ்சாபத்தாலும் நமது பாபமகல வழி தேடுவது.


க்ருச்ரப்ரதினிதி:- உபவாஸமிருக்க முடியாதவர் ஒரு ப்ராஜாபத்ய க்ருச்சரத்திற்கு பதில் பத்து ஆயிரம் காயத்ரி ஜபிக்க வேண்டும். அதுவும் முடியாதவர் விதிபடி 100 ப்ராணாயாமம் செய்ய வேண்டும்.


அதற்கும் சக்தி இல்லாதவர் 30 முறை வேத பாராயணம் செய்ய வேண்டும்.அதற்கும் சக்தி இல்லாதவர் 60 அல்லது 24 அல்லது 12 ப்ராமணருக்காவது போஜனம் அளிக்க வேண்டும். அதுவும் முடியாதவர் ஒரு பசு மாடு தானம் செய்ய வேண்டும்.


அதுவும் முடியாதவர் கோமூல்யம் என்ற பசுவின் விலை அல்லது ஒரு வராஹனை தர வேன்டும்.


ஒரு கர்மாவை செய்ய நமக்கு யோக்கியதை உண்டாக வேண்டுமானால் 7 அல்லது 6 அல்லது 3 க்ருச்சரமாவது தானம் செய்ய வேண்டும்.


ஒருவர் இறந்தவுடன் 3 மணி நேரம் கழித்த பின்பே அவ்வுடலை அப்புற படுத்த வேண்டும். 9 மணிக்கு மேல் வைத்து க்கொள்ள நேர்ந்தால் ப்ராயஸ்சி த்தம் செய்ய வேண்டும்.3 க்ருச்சரம் தத்தம் செய்து, பஞ்சகவ்ய ஸ்நானம் உடலுக்கு செய்வித்த பின் தஹனம் செய்ய வேன்டும்.


இரவு 9 மணிக்கு மேல் தஹனம் செய்ய கூடாது.உடலை தூக்கி அக்னியில் ஹோமம் செய்ய முடியாது. ஆதலால் சிதை அடுக்கி உடலை அதன் மேல் வைத்து தீயிட வேண்டும்.


தக்ஷிணாயனத்தில், க்ருஷ்ண பக்ஷத்தில், இரவில், கட்டிலின் மேல் உயிரிழந்தால் , இந்த ஒவ்வொரு தோஷத்திற்கும் மும்மூன்று க்ருச்சரம் அல்லது ஒவ்வொரு க்ருச்சரமாவது செய்த பிறகே தஹனம் செய்ய வேண்டும்.


இறக்க போகின்றவனே சக்தி இருந்தால் ஸ்நானம் செய்து ஸங்கல்பம் செய்து கொண்டு தன் கையால் ப்ராஹ்மணர்களுக்கு தானம் செய்யலாம். சக்தி இல்லாத பக்ஷத்தில் புத்ரர் அல்லது கர்மா செய்பவர் இதை செய்யலாம்.


ப்ராயஸ்சித்தம் செய்து கொண்டவர் பிழைத்து கொண்டால் தோஷமில்லை.
ப்ராயஸ்சித்தம் செய்து கொண்டவர் ,அவர் 3 பிழைத்திருந்து பிறகு இறக்க நேர்ந்தால் மறுபடியும் ப்ராயஸ்சித்தம் செய்ய கொள்ள வேண்டும்.


இந்த 3 நாளிலும், பிறகும் அவர், மனதினால், வாக்கினால், உடலினாலாவது பாபம் செய்யக்கூடும். ஸ்நான சந்தியாக்களை விடக்கூடும். ஆதலால் ப்ரயஸ்சித்தம் மறுபடியும் செய்து கொள்ள வேண்டும்.


நமக்கு எது மறு உலகிலும், மறு பிறப்பிலும் தேவையோ அவைகளை தானம் செய்ய வேண்டும்.


தேவீ பாகவதம் கூறுகிறது. பரீக்ஷித் மஹாராஜன் கட்டிலில் படுத்து கொண்டு உயிரை விட்டதால் நரகம் சென்றான். ஜனமேஜயன் தேவீ பாகவத நவாஹம் செய்து இவரை மீட்டு ஸ்வர்கம் அனுப்பினான் என்று.


ப்ராணன் விரைவில் போய் விடும் என தெரிந்தால் கட்டிலில், படுக்கையில் படுக்க விடக்கூடாது. ரேழியில் தர்பையை பரப்பி அதன் மீது படுக்க விட வேண்டும்.


புண்ய சாலியாக இருந்தால் முகத்திலுள்ள துவாரங்கள் வழியாக அனாயாஸ மாக உயிர் போய் விடும். பாபிகளுக்கு பல நாள் கஷ்ட பட்டு மல ஜலம் கழிக்கும் துவாரம் வழியாக ப்ராணன் போகும்.


க்ஞானிக்கு சிரஸ் வெடித்து ஸுஷும்னா நாடி வழியாக ப்ராணன் போகும்.த்ரோனரது ஜீவன் இம்மாதிரி போனதாக பாரதம் கூறுகிறது.


ஜீவன், மனஸ், 5 க்ஞானேந்திரியம், 5 கர்மேந்திரியம், 5 ப்ராணன் இவைகளுடன் அவரவர் செய்த கர்மா இவைகளுள் ஒன்றாக சேர்ந்து ஒரு பொரி போல் லோகாந்திரம் செல்கிறது. ஜீவன் முக்தி அடைந்தவருக்கெல்லாம்


இங்கேயே லயமாகி விடும். மேலே செல்லாது. உபாஸகர்களது ஜீவன் ப்ரும்ம லோகம் சென்று அங்கு வெகு காலம் தங்கி ப்ருஹ்ம விசாரம் செய்து ப்ருஹ்


மாவுடன் முக்தி பெறும். 48 ஸம்ஸ்காரங்களும் ஒழுங்காக செய்து,பூமி தானம், மஹா தானம் செய்தாலும் ப்ருஹ்ம லோகம் செல்லலாம். ஆனால் வேதாந்த க்ஞானம் இல்லாதவர் திரும்ப வேண்டியது தான்.


சுவாசம் கண்டுவிட்டது என்றால் என்ன? ஸாதாரண மரண காலத்தில் , கழுத்தில் உள்ள உதானன் என்பவர் ப்ராணன் போகாதபடி வழியை தடுத்திருப்பவர். அவர், வழி திறந்து விடும் வரையிலும்,


இந்த ஜீவன் விட வேன்டிய மூச்சு கணக்கு முடிகிற வரையிலும், ப்ராணன் கிளம்பி கிளம்பி அடங்கும்.. இதையே சுவாசம் கண்டு விட்டது இனி பிழைக்க மாட்டார் என படுகிறது.


ஜீவன் எப்படி உடலை விடுகிறது? பஞ்ச ப்ராணனில் இருதயத்தில் ப்ராணன்,
மல வழியில் அபானன், தொப்புளில் ஸமானன், உதானன்; சரீரமெங்கும் வ்யானன் தங்கி இருக்கிறான். ப்ராணன் போவதற்கு முன் வ்யானன்


ரத்ததிலிருந்து திரும்பி ப்ராணனிடம் வருகிறான். ரத்தம் சுண்டுவதால் அப்போது தான் மரண வலி ஏற்படும். அபானன், ஸமானன் இவர்களும் இங்கு வந்து சேரும் போது, ஜீர்ணம், மல ஜலம் நின்று விடும்.எல்லாம் ஹிருதயதில் வந்து தங்கும்.


ஸகல இந்திரியங்களின் சக்திகள் ஒடுங்கி மனதில் லயமாவதால் கண், காது, நாக்கு, மூக்கு, தோல் வேலை செய்யாது. உதானன் ப்ராணனுக்கு வழியை திறந்து விடும் போது, பாலோ, ஜலமோ வாயில் விட்டால் வெளியே


வழிந்து விடும். உள்ளே செல்லாது. இதற்கு முன்பு தான் உள்ளே செல்லும். டாக்டர் இறந்து விட்டார் என கூறிய பிறகு தான் மேற்கொண்டு காரியங்கள் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.


ஜீவன் வேறு உடலை பிடித்துக்கொண்டு தான் இந்த உடலை விடுகிறது என சில இடங்களில் சொல்ல படுகிறது. ஜீவனுக்கு இந்த உடலை விட மனம் வருவதில்லை. ஆதலால் இவனுக்கு அடுத்த படியாக வர போகிற உடலை யம கிங்கரர் படமாக காட்டியவுடன் ஜீவன் இந்த உடலை விடுகிறது.


ஸூக்ஷ்ம சரீரமே யமலோகம் கொன்டு போகப்பட்டு திருப்ப படுகிறது. ஜீவன் இறப்பதில்லை. உடல் தான் இறக்கிறது. பழைய வஸ்திரத்தை எறிந்து விட்டு புது வஸ்த்ரம் தரிப்பது போல இவ்வுடலை விட்டு விட்டு வேறு உடலை தரிக்கிறது என கீதாச்சாரியாரும் கூறுகிறார்.


இறந்தவர் போக உத்திர மார்க்கம், தக்ஷிண மார்க்கம் என இரு வழிகள் உண்டு. இதையே தேவ யானம், பித்ரு யானம், என்றும், அர்ச்சிராதி மார்கம் தூமாதி மார்க்கம் என்றும் கூறுவர்.


உத்திர மார்க்கமாக செல்பவர் புண்யம் செய்தவர், அவர் புண்யத்திற்கு ஏற்றபடி யம லோகம் வழியாக ஸ்வர்க்கம் அல்லது மற்ற மஹர் லோகம்,, ஜனோ லோகம், தபோலோகம், , ப்ரும்ம லோகம் செல்வர். பாபிகளோ யம லோகம் செல்வர்.


ப்ரும்ம லோகம் செல்பவர் உத்தராயணத்தில், சுக்ல பக்ஷத்தில் பகலில் இறப்பர். அவரை பகல் தேவதை சுக்ல பக்ஷ தேவதையிடமும், அது உத்ராயண தேவதையிடமும், அது வருஷ தேவதையிடமும் கொண்டு விடும், அங்கிருந்து ப்ருஹ்ம லோகம் செல்வர். உபனிஷத் வித்தை உபா ஸனம் செய்தவருக்கும் இதே வழி.


கர்ம மார்கத்தில் ஈடுபட்டவர் தக்ஷிணாயனத்தில், க்ருஷ்ண பக்ஷத்தில் இரவில் இறப்பவர் இரவு தேவதை , க்ருஷ்ண பக்ஷ தேவதையிடமும், அது தக்ஷிணாயன தேவதையிடமும்,


அது ஸம்வத்ஸர தேவதையிடமும் அது யம லோகம், மற்றும் ஸ்வர்க்கத்திற்கும் அழைத்து செல்லும் அவரவர் செய்த புண்ய பாபத்திற்கு ஏற்றபடி லோகம் கிடைக்கும்.


ஆசாரம் என்பது என்ன?


சுத்தம் என்பது தெய்வ குணம். நமது உடல், வாக்கு, மனம், நாம் அணியும் ஆடை, உண்ணும் உணவு, கையாளும் பொருட்கள் எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும். இவை சுத்தமாக இருப்பது ஆசாரம் என கூறப்படுகிறது. அசுத்தமாயின் அனாச்சாரம்.


சுத்தமான உணவை உட்கொண்டால் தான் , மனம் சுத்தமாக இருக்கும். உணவு, அதை செய்பவர், உண்பவர், உடன் உட்காருபவர், அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும்.


புருஷர்கள், பெண்கள் பந்தியிலோ, சிறுவர் பந்தியிலோ உட்கார்ந்து உண்ண கூடாது. அதிலும் தன் மனைவியுடன் உட்கார்ந்து பந்தியில் சாப்பிட கூடாது. ஆனால் விவாஹம், யாத்திரை இக்காலங்களில் உண்பது தவறல்ல.


விளக்கு நிழல், மனிதர் நிழல், ,வஸ்த்ர ஜலம், தலை மயிரிலுள்ள ஜலம்,பெண் மக்கள் பாத தூளி, முறத்தால் உண்டாகும் காற்று, பெருக்கும் போது மேலே விழும் புழுதி, ஆகிய இவைகள்


நம் மேல் பட்டால் இந்தரனுக்கு சமமான பணமிருந்தாலும் அதை தொலைத்து விடும். நமது பூர்வ புண்ணியத்தையும் கொண்டு போய் விடும்.


பகலில், தூக்கம், ஸ்த்ரீ புருஷ ஸங்கமம். பால் அருந்துதல் கூடாது. மத்தியானத்திற்கு மேல் அரச மரம் ப்ரதக்ஷிணம் செய்தல் கூடாது.


வஸ்த்ரம் அனியாதவனையும், கச்சம் உடுத்தாதவனையும் ,கெளபீனம் மாத்திரம் தரித்து இருப்பவனையும் மூதேவி வந்தடைகிறாள்.. ஆதலால் அவசியமான காலம் தவிர , மற்ற காலமெல்லாம் உரியவர் கச்சத்துடன் தான் இருக்க வேண்டும்.


நமது ஸ்ம்ருதி கண்டிக்கிறது. கச்சமே இல்லாதவர், வால் விட்டு கச்சம் கட்டுபவர், விகச்சர், மேல் நோக்கி கச்சமணிபவர், அரைஞானில் கச்சமணிபவர்
ஆகிய இந்த ஐவரும் வஸ்த்ரம் இல்லாதவர் போலாவார். அவர்களை கர்ம காலத்தில் காணக்கூடாது. கண்டால் அணிந்த ஆடையுடன் ஸ்நானம் செய்ய வேண்டும்.
வஸ்த்ரத்துடன் நுனி தசை எனப்படும். அது தொங்கினால் அதன் வழியாக ஆத்ம சக்தி பூமியில் இறங்கிவிடும். ஆதலால் நுனி தெரியாமல் கச்சம் அணிய வேண்டும். கச்சமில்லாமல் ஸந்தியாவந்தனம் , காயத்ரி ஜபம் , மற்ற கர்மாக்கள் பயனை தராது.


இரவில் வேஷ்டி துவைக்க கூடாது. குப்பையை பெருக்கி வெளியில் கொட்ட கூடாது. மரத்தின் நிழலில் தங்க கூடாது. ரஹஸ்யமான விஷயத்தை பேச கூடாது. பட்டு வேஷ்டி ஆத்ம சக்தி சிதராமல் ரக்ஷிக்கிறது.


என்றைக்கும் காலையில் 108 முறை நின்று கொண்டு , முகத்திற்கு நேராக கைகளை மூடிக்கொண்டு காயத்ரீ ஜபம் செய்ய வேண்டும். தீட்டு வந்த போது 10 காயத்ரி செய்ய வேண்டும்.


ஸாயம் ஸந்தியா அனுஷ்டானத்தில் இரு பக்ஷங்களிலும் வருகின்ற சதுர்த்தி, அஷ்டமி, சதுர்தசி தினகளில் 54 காயத்ரீ செய்ய வேண்டும். சப்தமியில் 37, அமாவாசை, பூர்ணிமை, ப்ரதமை ஆகிய நாட்களில் 36.


த்ரயோதசி, விஷூ இவைகளில் 28 காயத்ரீ ஜபம் செய்ய வேண்டும். ஸ்ரீவத்ஸ ஸோம தேவ சர்மா எழுதிய ஸதாசாரம் புத்தகத்தில் உள்ளது.


பூணல் அறுந்து போகாமல் இருந்தால் கூட நான்கு மாதத்திற்கு ஒரு முறை புது பூணல் தரிக்க வேண்டும். ஒரு இழை அறுந்தாலும், தீட்டு வந்து நீங்கியதும் புது பூணல் தரிக்க வேண்டும்.


அஷ்டமி, சதுர்தசி, அமாவாசை, பெளர்ணமி, ஸங்க்ரமணம், மன்வாதி, யுகாதி , ஞாயிற்றுகிழமை, தாய் தந்தை சிராத்ததிற்கு முதல் நாள், சிராத்த நாள், சிராத்த மறு நாள் , தீட்டு போவதற்கு முதல் நாள் ஆகிய தினங்களில் இரவில் சாப்பிட கூடாது.


8 வயதிற்கு மேற்பட்டோரும், 80 வயதுக்கு உட் பட்டோரும் ஏகாதசி அன்று இரு வேளையும் சாப்பிட கூடாது.


பலஹீனமானவர், நோயாளி ஆகியோர் ஒரே வேளை பால் பழம் சாப்பிடலாம். இம்மாதிரியும் உபவாசம் இருக்க முடியாத அசக்தர் கஞ்சி வடிக்காத அரிசி சாதத்தில் உப்பு, புளி, காரம் சேர்க்காமல், ஒரே வேளை உண்டு உபவாசம் இருக்கலாம்.


இதுவே ஒரு பொழுது எனப்படுகிறது. ஆண், பெண் அனைவரும் அனுஷ்டிக்க வேண்டியது. தீட்டில் ஏகாதசி வந்தால் உபவாசம் இருக்க வேண்டும். பூஜை செய்ய க்கூடாது. விரதம் இஹ பர ஸுகம் அளிக்கிறது.


ஒரு நாளும் இரவில் நெல்லிக்காய் , இஞ்சி, தயிர், நெல்வருத்த மாவு இவைகளை சாப்பிட கூடாது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
மஞ்சள், நெய், உப்பு, புழுங்கரிசி, வெல்லம், மருந்து, பாக்கு இவைகளுக்கு பாவ தோஷமில்லை. அன்னியர் அதை பாகம் செய்தது ஏற்க தக்கதல்ல என்று எண்ண வேண்டாம். பாவ தோஷமில்லை.


உபவாசம் என்பது எதையும் உண்ணாமல் இருப்பது. அப்படி உபவாசம் இருக்கும் போது உடலுக்கு அதிக கஷ்டம் ஏற்பட்டால் தீர்த்தம், கிழங்கு, நெய், பால், மருந்து பழம், கஞ்சி வடிக்காத அன்னம் இவைகளில் ஒன்று சாப்பிடலாம்.


உபவாச காலத்தில் ஒருவர் செய்யும் சிராத்தத்திற்கு பிராமணர் அகப்படாமல் அது நின்று போகுமென்றால் அங்கு ப்ராஹ்மணார்த்தம் சாப்பிடலாம்.உபவாச பலன் உண்டு.


எந்த தீட்டு வந்தாலும் ஏகாதசி விரதம் இருந்தாக வேண்டும்.ஸந்தியா வந்தனம் போல் இது முக்கியமானது. பூஜை, தானம் ஆகியவைகளை தான் நேராக செய்யாமல் தீட்டில்லாதவரை கொண்டு செய்விக்கலாம்.


உபவாசம் என்பது சரிர சுத்திக்காகவும், மனசுத்திகாகவும், தேவ ப்ரஸாதம் பெறுவதற்காகவும் ஏற்பட்ட கர்மா. நினைத்த படி ஸாஸ்திரமில்லாமல் உபவாசம் இருக்க கூடாது. சாஸ்திரம் உபவாசம் இரு என்று விதித்த காலத்தில் சாப்பிட கூடாது.


மனது ஒருமை பட உபவாசம் ஒரு சிறந்த சாதனம். உடலே தர்மத்திற்கு முதல் சாதனம். கடினமான உபவாசம் நோய் வாய்படும்படி கை கொள்ள வேண்டாம். கலி யுகத்தில் அன்னத்தை ஆஶ்ரயித்தே ஜீவன் இருக்கிறது.


மற்ற யுகங்களில் ஜீவன் ரத்தம், மாமிசம், எலும்பு ஆகியவைகளை ஆஶ்ரயித்து இருக்கிறது. ஆதலால் அநாவசியமான அதிக உபவாசத்தால் உடலை கெடுத்து கொள்ள வேண்டாம். ஓயாமல் சாப்பிடவும் கூடாது.


கிடைத்த போதெல்லாம் உண்பது, அளவு கடந்து உண்பது குடிப்பது இவை எல்லாம் பாபமே. பலஹாரம் என்பது பால் பழம் சாப்பிடுவதே. உப்புமா, அடை தோசை, சப்பாத்தி, பூரி, தொட்டுக்கொள்ள 4 கிண்ணம் கூட்டு, முதலியவை கடின மான உணவு.


ஆதலால் உபவாசமாகாது. எனினும் கருணை கூர்ந்து பெரியோர் ஒரு வேளை பலஹாரம் செய்தால் கூட உபவாச பலன் உண்டு என்றார்கள்.


நித்யோபவாசம்:- பகல் இரவு இரண்டே வேளை புஜித்து , இடையில் ஒன்றும் புஜிக்காமலிருந்தாலும் , இந்த உணவிலும் ஒவ்வொரு கவளத்தையும் கோவிந்தா கோவிந்தா என்று கூறி புஜிப்பதும் நித்யோபவாசமாகும்.


தன் ஊரில் தன் வீட்டிலுள்ள போது சாஸ்த்ரம் கூறிய படி ஆசாரம் அனுஷ்டிக்க வேண்டும். வெளியூர் சென்றால் அதில் பாதி ஆசாரம் அனுஷ்டித்தால் போதும், நகரங்களில் கால் பங்கும், ப்ரயாணம் செய்யும் போது வழியில் முடிந்த வரை ஆசாரம் அனுஷ்டிக்க வேண்டும்.


வஸ்த்ரமே இல்லாதவன், கச்சம் கட்டாதவன், கெளபீனம் மாத்திரம் கட்டியவன் கலஹத்தில் ஆசை உள்ளவன் , இத்தகைய க்ருஹஸ்தனிடம் மூதேவி தாண்டவமாடுவாள். ஆதலால் பஞ்ச கச்சம் அவசியம் தேவை.


---------------------------------------------