13-09-2020 அஜாஏகாதசி .இதனைஅன்னதா ஏகாதசி என்றும்குறிப்பிடுவர்.இந்நாளில்எவரொருவர் உபவாசம் இருந்துஇறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிராரோ,அவர்அவரது பாவங்களின் கர்மவினைகளிலிருந்துவிடுபடுவர் என்று பிரம்மவைவர்த்த புராணம் கூறுகிறது.

அஜாஏகாதசி என்பது வருத்தத்தைநீக்கும் ஏகாதசி என்றுபொருள்படும்.இந்தஅஜா ஏகாதசி விரதத்தின் மகிமையைப்பற்றி,மகாபாரத்தில்தர்மருக்கு ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா விளக்கியுள்ளார்.

முன்னொருகாலத்தில்,பகவான்ஸ்ரீராமர் தோன்றிய ரகுவம்சத்தில் அரிச்சந்திரன்என்றொரு அரசன் சத்தியம் தவறாதுமாபெரும் வேந்தனாக அரசாண்டுவந்தான்.அவனுக்குசந்திரமதி என்ற மனைவியும்,லோகிதாசன்என்ற மகனும் இருந்தனர்.நாடும்,அவனும்எந்த விதமான குறையும் இன்றி,சுபிட்சத்தோடுவிளங்கியது.

விதிவசத்தால்,அரிச்சந்திரமகாராஜா தனது நாடு,நகரம்அனைத்தையும் இழக்க நேரிட்டதோடு,மனைவி,மக்களையும்விற்கும் மிகக் கொடிய நிலைக்குதள்ளப்பட்டார்.பக்திமானானஅரிச்சந்திரனை நாய்களை உண்ணும்சண்டாள குலத்தவனுக்கு அடிமையாகிமயானத்தைக் காக்கும் பணியில்அமர வைத்தது விதி.ஆனால்அந்நிலையிலும் அரிச்சந்திரமகாராஜா தனது சுயத்தன்மையைஇழக்காமல் சத்தியத்தினைகைவிடாது கடைபிடித்துவந்தார்.

பலகாலங்கள் கடந்தன.ஒருநாள் அவர்,நான்என்ன செய்வேன் ?இன்னும்எத்தனை காலம் இது போன்றவேதனையில் வாடுவது,இதிலிருந்துமீள வழியே இல்லையா?என்றுமிகவும் வருந்தினார்.அப்போதுஅதிர்ஷ்டவசமாக,அவன்அந்த வழியாக சென்ற கௌதமமுனிவரைக் கண்டு தனது நிலைமையைஎடுத்துக் கூறி,இதிலிருந்துமீள வழி கூறுமாறுவேண்டினார்.

அரிச்சந்திரனின்சோகக் கதையைக் கேட்டு இரக்கம்கொண்ட முனிவர்,அவருக்குஇந்த ஏகாதசி விரதத்தின்மகிமையை எடுத்துக் கூறினார்.அரிச்சந்திரா,உனதுநல்ல காலம்,இன்னும்ஏழு நாட்களில் பாவங்கள்அனைத்தையும் நீக்கி மிகவும்நற்பலன்களை அளிக்க வல்ல அஜாஏகாதசி எனப்படும் அன்னதாஏகாதசி வரவிருக்கிறது.இந்நாள்மிகவும் மங்களமானது.

இந்நாளில்,நீஇருக்கும் இந்த நிலையில்உன்னால் மற்ற அனுஷ்டானங்களைக்கடைபிடிக்க முடியாவிட்டாலும்,உபவாசத்தைமட்டுமாவது ஏற்று,அன்றுஇரவு கண் விழித்து இறைவன்ஸ்ரீஹரியின் திருநாமத்தைஉச்சரித்து கொண்டிரு .இதன்காரணமாக உனது முற்பிறவிபாவங்களில் இருந்து விடுதலைபெற்று நன்னிலையை அடைவாய்எனக் கூறினார்.

அரிச்சந்திரன்,கௌதமமுனிவரின் வழிகாட்டுதலின்படி,அஜாஏகாதசி நாளில் உபவாசம் இருந்துஅவனது பாவங்கள் அனைத்தும்நீங்கி,மீண்டும்நாடு நகரத்தினைப் பெற்றுநன்னிலையை அடைந்தான்.மேலும்இந்த விரதத்தின் பலனால்மாயையின் காரணத்தால் உயிரிழந்தமகனை மீண்டும் அடைந்ததோடு,மனைவியுடன்ஒன்று சேர்ந்து மீண்டும்ராஜ்ஜியத்தினை அடைந்தார்என்று ஸ்ரீகிருஷ்ணர்யுதிஷ்டிரனுக்குக் கூறிமுடித்தார்.

அதோடுஅவர் யுதிஷ்டிரனிடம்,ஓபாண்டு புத்ரா,நீயும்இப்போது இந்த அஜா ஏகாதசியின்சிறப்புகளை அறிந்து கொள்,எனக்கூறத் தொடங்கினார்.இந்நாளில்மேற்கொள்ளும் விரதம் நாம்முற்பிறவிகளில் செய்த பாவங்களின்விளைவால் இந்தப் பிறவியில்நாம் அனுபவிக்கும் துன்பங்களைஉடனடியாக நீக்க வல்லது.இதனால்அவர்கள் அனைவரும் இறுதியில்பக்தி லோகத்தை அடைவர் என்றுகூறினார்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஎவரொருவர்,இந்நாளில்இந்த விரதத்தின் மகிமையைவிவரிக்கும் இந்தக் கதையினைகேட்கிறாரோ அல்லது படிக்கிறாரோஅல்லது சொல்கிறாரோ அவர்அஸ்வமேத யாகம் செய்த பலனைஅடைவார் என ஸ்ரீகிருஷ்ணர்யுதிஷ்டிரனிடம் கூறி முடித்தார்என்று பிரம்ம வைவர்த்த புராணம்விவரிக்கின்றது