18-09-2020 muthal 16-10-2020 --adhika month or mala month or purushoththama maadham.
பொதுவாக இரண்டு அமாவாசைக்கு நடுவில் மாதப்பிறப்பு வர வேண்டும். வரா விட்டால் அது அதிக மாதம் எனப்பெயர்படும். இந்த அதிக மாதத்தில் மஹா விஷ்ணுவை வணங்க வேண்டும்.


ஸூர்ய உதயத்திற்கு முன்பாக எழுந்து முறையாக குளித்து விட்டு நெற்றிக்கு இட்டுக்கொன்டு ஸந்தியாவந்தனம் காயத்திரி ஜபம் செய்து விட்டு ஸூரியனை நோக்கி


நின்று கொண்டு இரு கைகளாலும் ஜலம் எடுத்து ஆண்கள், பெண்கள் கீழ் கண்ட மந்திரம் சொல்லி அர்க்கியம் விட வேண்டும்.


தேவ தேவ மஹா தேவ ப்ரளயோத்பத்தி காரக க்ருஹாணார்க்கியம் மயா தத்தம் க்ருபாம் க்ருத்வா மமோபரி ஸ்ரீ ஸூர்ய நாராயணாய நம: இதமர்க்கியம்; இதமர்க்கியம்;இதமர்க்கியம்.


புராண புருஷேசா ந: ஸர்வ லோக நிக்ருந்தன; அதி மாஸ வ்ருத ப்ரீதோ க்ருஹாணார்க்கியம் நமோஸ்துதே. .புராண புருஷாய நம; இதமர்க்கியம், இதமர்க்க்யம்


இதமர்க்கியம்.


ஸ்வயம்புவே நமஸ்துப்யம் ப்ரஹ்மணே அமித தேஜஸே நமோஸ்துதே ஶ்ரியானந்த தயாம் குரு மே மமோபரி ஸ்வயம்புவே நம: இதமர்க்கியம், இதமர்க்கியம், இதமர்க்கியம்.


யஸ்ய ஹஸ்தே கதா சக்ரே கருடோ யஸ்ய வாஹனம், ஶங்க: கரதலே யஸ்யே ஸ நே விஷ்ணு: ப்ரஸீதது. விஷ்ணவே நம: இதமர்க்கியம், இதமர்க்கியம், இதமர்க்கியம்.


கலா காஷ்டாதிரூபேண நிமேஷ கடிகாதி நா யோ வஞ்சயதி பூதானி தஸ்மை காலாத்மனே நம: காலாத்மனே நம: இதமர்க்கியம், இதமர்க்கியம், இதமர்க்கியம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
குருக்ஷேத்ர மயோதேச கால: பர்வத விஜோஹரி ப்ருத்வீ ஸம மிமம் தானம் க்ருஹாண


புருஷோத்தம புருஷோத்தமாய நம: இதமர்க்கியம், இதமர்க்கியம், இதமர்க்கியம்.


மலானாம் ச விசுத்யர்த்தம் பாப ப்ரசமனாய ச புத்ர பெளத்ராபிவ்ருத்தியர்த்தம் தவ தாஸ்யாமி பாஸ்கர பாஸ்கராய நம: இதமர்க்கியம், இதமர்க்கியம், இதமர்க்கியம்.


ஸூர்ய மண்டலத்தில் ஸ்ரீ மஹா விஷ்ணுவை ப்ரார்த்தித்துகொண்டு நமஸ்காரம் செய்ய வேண்டும்.


அதி மாஸே து ஸம்ப்ராப்தே குட ஸர்ப்பி ஸமன்விதான் தத்யாத் அனேன மந்த்ரேண த்ரயஸ்த்ரிம்ஸக பூபகான்.


அதிக மாதம் எல்லா நாட்களிலும் ஸ்ரீ மஹா விஷ்ணு ப்ரீதிக்காக ஒரு வெங்கல பாத்திரத்தில் 33 வெல்ல அப்பங்கள் வைத்து தக்ஷிணை, சிறிது நெய்யுடன் ஒரு வைதீகருக்கு தானம் செய்ய வேன்டும்.--இதற்கு ஸங்கல்பம்.


மம த்ரயஸ்த்ரிம்ஸத் தேவதா அந்தர்யாமி விஷ்ணூ ஸ்வரூபி ஸஹஸ்ராம்ஸு ப்ரீதி


த்வாரா , நிகில பாப ப்ரசமன பூர்வகம் , புத்ர, பெளத்ர யுத, தந தான்ய ,க்ஷேம ஸம்வ்ருத்தி


லோகத்வய ஸுக ஹேது: ப்ருத்வீ தான பல ப்ராப்த்யா அபூப சித்ர ஸமஸங்க்ய வர்ஷ ஸஹஸ்ராவத் ஸ்வர்லோக நிவாசாதி கல்போக்த பல ஸித்தியர்த்தம், மல மாச ப்ரயுக்த -


ஆஜ்ய- குட ஸர்பிர் மிஶ்ரித காம்ஸ்ய பாத்ரஸ்த த்ரயஸ்த்ரிம்ஸத அபூப தானானி கரிஷ்யே. என்று ஸங்கல்பம் செய்து கொண்டு ( தற்காலத்தில்) ஒரு எவர்சில்வர் டப்பாவில் 33, வெல்ல அப்பம், சிறிது வெல்லம் சிறிது நெய் வைத்து கொண்டு தானம் செய்ய வேன்டும்.


தானம் செய்ய மந்திரம்;- விஷ்ணு ஸ்வரூபி ஸஹஸ்ராம்ஸு ஸர்வ பாப ப்ரனாசன


அபூபான்ன ப்ரதானே ந மம பாபம் வ்யபோஹது. நாராயண ஜகத்பீஜ பாஸ்கர ப்ரதிரூபக வ்ரதேனானேன புத்ராம்ஸ்ச ஸம்பதம் சாபி வர்த்தய


இமான் அபூபான் அய பாத்ரஸ்தான் ஸர்பிர் குட ஹிரண்ய ஆஜ்ய ஸஹிதான் மஹாவிஷ்ணு ஸ்வரூபிணே ப்ராஹ்மணாய துப்யம் ஸம்ப்ரததே. இம்மாதிரி மல மாதம் முழுவதும் செய்யலாம்.அல்லது


இந்த மாதத்தில் ஒரு நாளாவது இம்மாதிரி செய்யலாம். அர்க்கியம், நமஸ்காரமாவது ஒரு நாளாவது செய்யலாம்.


மல மாச வ்ருதம் செய்பவர் இல்லத்தில் வியாதி,மன கஷ்டம்,இருக்காது. லக்ஷ்மி கடாக்ஷத்துடன் முழு ஆயுளுடனும் சுக மாக வாழ்வான் எங்கிறது புருஷார்த்த சிந்தாமணி.


க்ருஹே தஸ்ய ஸ்திரா லக்ஷ்மி யோ தத்யாத் ஸூர்ய ஸன்னிதெள தாரித்திரியம் ந பவேத் தஸ்ய ரோக க்லேஸ விவர்ஜித:.