11/09/2020
*முசிறி அண்ணா மஹாளயம் என்கின்ற தலைப்பில் நாம் சிராத்தத்தை அன்ன ரூபமாக தான் செய்ய வேண்டும் என்பதை மேலும் விளக்குகிறார்.*
காரணம் என்னவென்றால் அன்ன ரூபமாக நாம் இந்த மாஹாளயம் சிராத்தம் செய்யும் பொழுது, அதிலே பிண்டப் பிரதானம் வருகிறது கடைசியில், அத்தனை பேருக்கும் பிண்ட பிரதானம் செய்ய வேண்டும். #பிறகு_தர்ம_பிண்டம்_என்று_மூன்று #வருகிறது.


இந்த மஹாளய சிராத்தம் அதில் தான் தர்ம பிண்டம் சொல்லப்பட்டிருக்கிறது அது மிகவும் முக்கியம். இதைத்தான் நாம் காசி போன்ற க்ஷேத்திரங்களுக்கு போகும்பொழுது பண்ணுகிறோம். ஆனால் அதை மகரிஷிகள் நம்முடைய மஹாளய சிராத்த திலேயே சொல்லியிருக்கிறார்கள்
#அந்த_தர்ம_பிண்டம்_வைக்கும்_போது #நாம்_என்ன_சொல்கிறோம்_என்றால்,

நம்முடைய வம்சத்தில் நம் முன்னோர்கள் நம்மை சுற்றியுள்ள, ஏழு கோத்திரங்களில், எந்த ஒரு வம்சத்திலுமே, செய்யக்கூடாத பாவங்கள், பிரம்மஹத்தி போன்ற பாவங்களை, செய்த எந்த பிதுர்க்கள் உண்டோ, அல்லது அடிபட்டு இறந்தவர்கள் ஆன பிதுருக்கள், அல்லது தற்கொலை செய்து கொண்டவர்கள்.


இப்படி எப்படிப்பட்ட பிதுருக்கள் இருந்தாலும், வாய் பேச முடியாமல், கண்கள் தெரியாமல், காது கேட்காமல், அப்படி இருந்து துன்பப்பட்டு இறந்த பிதுருக்கள், என்னுடைய பிதுர் வம்சத்தையும் என்னுடைய தாயார் வம்சத்திலும் இப்படி இருந்த பிதுருக்கள் யாரு உண்டோ அவர்கள் மட்டும் இல்லாமல் என் மனைவி வம்சத்திலே வந்திருக்கக்கூடிய தான பிதுருக்கள், பாலர்கள் சிறுவர்களாக இருந்து இறந்து போனவர்கள், ரொம்ப வயசாகி கால மாணவர்கள், 90 95 வயது வரை இருந்தால் அவர்களுக்கு அவ்வப்போது செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும்..


இல்லையென்றால் அவர்களுக்கு ரொம்ப குறையாக இருக்கும். அப்படி குறைபட்டு இறந்தவர்கள், தூரமாக இருக்கும் பொழுது காலமான ஸ்திரீகள், திருமண வயதை அடைந்தவுடன் இறந்த பெண்கள் ஆண்கள், #கர்ப்பத்திலேயே #உற்பத்தியாகி_இழந்த_குழந்தைகள், #நாமே_அழிக்கின்றோம்_கருக்கலைப்பு. #அதிலே_இழந்த_ஜீவன்கள், நம்நண்பர்கள், நமக்கு நல்லது நினைப்பவர்கள், இப்படி யாருண்டோ அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் இந்த லோகத்திலே, பிறந்திருக்கிறார்கள் அவர்கள் எப்படிப் பிறந்திருக்கிறார்கள் என்று தெரியாது.


பசு பக்ஷிகள் ஆக, எப்படி அவர்கள் பிறந்திருந்தாலும், நான் வைக்கக் கூடிய தானே இந்த பிண்ட பிரதானமானது, அவர்களுக்கு பூரணமான திருப்தியை கொடுக்கட்டும், என்று சொல்லி முதல் பிண்டத்தை வைக்கிறோம்.


*என்னுடைய தகப்பனார்/தாயார் வம்சத்திலேயும், எந்தெந்த பித்ருக்கள்/குருவாகவும் என்னுடைய மாமனார் வம்சத்திலும், அவர்களுக்கும் என்னுடைய குரு என்னுடைய மாமனார், இவர்கள் வம்சத்திலேயும் என்னை சுற்றியுள்ள பந்துக்கள் வம்சத்திலேயும் உள்ள பித்ருக்களுக்கு யாருக்கெல்லாம் #நல்ல_கதி_கிடைக்கவில்லையோ, அல்லது செய்ய வேண்டிய கர்மாக்களைச் சரியான முறையில் செய்யப்படாமல் இறந்தவர்கள் ஆனால், #பிறவிக் #குருடர்கள்_பிறவியிலேயே_நொண்டி யாக இருப்பவர்கள், அல்லது விகாரமான உருவத்தோடு உள்ளவர்கள், கர்ப்பமாக உற்பத்தி ஆவதற்கு முன்பே அழிந்தவர்கள், இப்படி எனக்கு தெரிந்தும் தெரியாமல் உள்ள என்னுடைய வம்சத்திலே இருக்கின்ற இவர்கள் அவ்வளவு பேருக்கும், இந்தப் பிண்டத்தை நான் வைக்கிறேன். அவர்களுக்கு பூரணமான திருப்தியை கொடுக்கட்டும் திரும்பவும் அவர்கள் இந்த துக்கத்ங அனுபவிக்காமல் இருக்கட்டும்,


#மூன்றாவது_பிண்டம்_வைக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம் ஆனது, பிரம்மா சிருஷ்டி ஆனதிலிருந்து ஆரம்பித்து, இன்றைய தினம் வரைக்கும், என்னுடைய வம்சத்திலே முன்னோர்களாக யாரெல்லாம், பிறந்து வந்து இருக்கிறார்களோ, என் தாயார் வம்சத்திலே யாரெல்லாம் வந்தார்களோ, என்னுடைய மனைவி வம்சத்திலே யாரெல்லாம் வந்தார்களோ, அவர்கள் அத்தனை பேருக்கும் இந்த பிண்டமானது போய் சேரட்டும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
#இந்த_இரண்டு_வம்சங்களிலும்_தாயார் தகப்பனார் வம்சம் இந்த தலைமுறைகளில், வேலை செய்த வேலை ஆட்கள், கூலி வாங்கிக் கொண்டு வேலை செய்தவர்கள், வீடு பெருக்கி துடைத்தவர்கள்
ஒட்டடை அடித்து சுத்தம் செய்தவர்கள், நம் வீட்டிலுள்ள மாடுகளை குளிப்பாட்டி பார்த்துக் கொண்டவர்கள், நமக்கு பால் கொடுத்தவர்கள்,நமக்கு காய்கறிகள் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தவர்கள், #நம்முடைய #துணிகளை_துவைத்து #கொடுத்தவர்கள், இப்படி யாரெல்லாம் நம்முடைய தலைமுறையிலேயே நமக்காக வேலை செய்து இருக்கிறார்களோ, #நமக்கு_பிரசவம் பார்த்த டாக்டர், நம்முடைய பிரசவத்திற்கு துணைபுரிந்த நர்சுகள்,

நம்மை தூக்கி தாலாட்டியவர்கள், நம் துளியை ஆட்டினவர்கள் , அத்தனை பேருக்கும் இந்தப் பிண்டம் ஆனது போய் சேரட்டும், எனக்கு நண்பனாக இருந்தவர்கள், ஸ்கூல் படித்ததிலிருந்து நண்பனாக யார் யாரெல்லாம் என்னுடன் சேர்ந்தார்களோ, அவர்களுக்கும் எனக்கு துணையாக இருந்தவர்கள், எனக்கு என்று பால் கறந்த பசுக்கள், எனக்காக வேலை செய்தவர்கள், என்னால் தொட பட்டவர்கள், என்னால் பார்க்க பட்டவர்கள், என்னால்

உபகாரத்தை அடைந்தவர்கள், இவர்கள் அனைவருக்கும் நான் இந்தப் பிண்ட பிரதானத்தை பண்ணுகிறேன், இந்த ஜென்மம் மட்டும் இல்லாமல் இதற்கு முன்னால் உள்ள ஜென்மங்களிலும், இப்படி யாரெல்லாம் எனக்கு வேலை செய்தார்களோ, அத்தனை பேருக்கும் நான் இந்த பிண்டத்தை வைக்கிறேன், அவர்களுடைய சாபமோ தாபமோ, எதுவாக இருந்தாலும் அது என்னை பாதிக்க கூடாது, அவர்களுக்கும் அந்தத் துன்பம் போய் திருப்தியை கொடுக்க வேண்டும், எப்பொழுதும் நான் இங்கு #வைக்கக்கூடிய_அந்த_பிண்டம்_ஆனது, #பூர்ணமான_திருப்தியைக் #கொடுக்கட்டும்_என்று_சொல்லி_3 மூன்றாவது பிண்ட பிரதானம் பண்ணுகிறோம்.*இந்த மூன்று பிண்ட பிரதானங்களுக்கும் தர்ம பிண்டம் என்று பெயர். இதை அவசியம் நாம் மஹாலய சிராத்தத்தில் பண்ணவேண்டும். அப்படி நாம் செய்தோமே ஆனால் உடனேயே நம்முடைய குழந்தைகளுக்கு கல்யாணங்கள் கூடிவரும், பித்ரு தோஷம் பித்ரு சாபம் எதுவாக இருந்தாலும் நிவர்த்தி ஆகிவிடும்.

இது சுலபமான வழி, நாம் திலஹோமங்கள் என்று வேறு வழியில் சென்றோம் ஆனால் நிறைய கட்டுப்பாடுகள் அதிகம். பழைய நாட்களில் நாம் யாரையாவது கேட்டால் திலஹோமம் என்பதெல்லாம் எப்போதோ ஒரு முறை தான் நடக்கும். அதனால் இந்த மஹாளய சிராத்தத்தை நாம் அன்ன ரூபமாக செய்தால் நிறைய திருப்தியை கொடுக்கிறது*