29/09/2020
முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஷண்ணவதி தர்ப்பணம் விளக்கத்தை மேலும் தொடர்கிறார்
இதிலே யுகாதி புண்ணிய காலம் பற்றி விரிவாகப் பார்த்தோம். மாச பிறப்பிற்கும் யுகாதிக்கும் சம்பந்தம் உண்டு.


நாம் ஒரு வருடத்தில் செய்ய வேண்டிய தர்ப்பணங்கள் என்று பார்த்தால் அமாவாஸ்யா யுகாதி மன்வாதி சங்கரமணம் மஹாலயம், இப்படி பலவிதமான தர்ப்பணங்களை பண்ணுகிறோம். இவைகள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லை என்று நமக்கு தோன்றும். ஆனால் அப்படியில்லை.
ஒன்றுக்கொன்று சம்பந்தம் உள்ளது. இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

சில பேர் அமாவாசை மற்றும் மாதப்பிறப்பு மட்டும் நான் செய்து கொண்டு வருகிறேன் என்று சொல்லுவார்கள். ஆனால் மாதப்பிறப்பு செய்கின்றவர்கள் யுகாதி கட்டாயம் செய்ய வேண்டும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
இவை இரண்டிற்கும் நிறைய சம்பந்தங்கள் இருக்கின்றன உதாரணத்திற்கு, வருஷத்தில் 4 யுகாதி புண்ணிய காலங்கள் வருகின்றன. அதை யுகாதி சிராத்தம் என்று நாம் செய்கிறோம்.
அம்மாவாசை அன்று நாம் செய்யக்கூடியது தர்ஸ ஸ்ராத்தம்என்று பெயர். யுகாதி புண்ணிய காலங்களில் யுகாதி சிராத்தம் என்று பெயர். அதேபோல் மாதப்பிறப்பன்று செய்யவதற்கு சங்கரமணம் என்று பெயர். அதற்கு தனிப்பட்ட ஒரு பெயரும் சொல்கிறோம் அது என்ன என்பதை பின்னாடி விரிவாக பார்ப்போம்.
மாச பிறப்பு பற்றி தர்ம சாஸ்திரத்தில், சூரிய சங்கரமணம் அதாவது சூரியன் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு செல்வது. அன்றைய தினம் இந்த சங்கரமணம் ஸ்ராத்தம் நாம் கட்டாயம் செய்ய வேண்டும். அதைத்தான் நாம் தர்ப்பணம் ஆக செய்து கொண்டு வருகிறோம்.
#இந்த_சங்கரமணம்_வருடத்தில் 12 தான் வரும் அமாவாசை கூட அதிக மாசமாக இருந்தால் ஒன்று கூட வரும். 13 அமாவாசைகள் வரலாம் யுகாதி 4 தான் வரும். மாதப்பிறப்பு ஏன் இந்த அளவுக்கு புண்ணியகாலம் சொல்லப்பட்டு இருக்கிறது என்றால், யுகாதி என்பது ஒரு யுகத்தின் ஆரம்ப காலம். மாத பிறப்பு என்பது யுகங்கள் முடிவு காலம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
நடுவில் இடைவெளி இருக்கின்றது அதற்கு சந்தி என்று பெயர். சூரிய சங்கரமணம் அதாவது சிம்ம சங்கரமணம், சூரியன் சிம்ம ராசிக்குள் பிரவேசிப்பதற்கு பெயர்.
அதாவது ஆவணி மாதப்பிறப்பு, இது கிருத யுகத்தின் முடிவு காலம் முடிவு காலம். விருச்சிக சங்கராந்தி. கார்த்திகை மாதப் பிறப்பு தான், திரேதா யுகத்தின் உடைய முடிவு தினம். விருஷ சங்கராந்தி அதாவது வைகாசி மாசம். வைகாசி மாதப்பிறப்பு தான் துவாபர யுகத்தின் முடிவு தினம். கும்ப சங்கராந்தி அதாவது மாசி மாதத்தின் பிறப்பு தான், கலியுகத்தின் உடைய முடிவு காலம்.
இந்த யுகத்தின் உடைய ஆரம்ப காலம் யுகாதி ஆகவும், யுகத்தின் முடிவு காலம் மாதப் பிறப்பாகவும், அக்ஷய மான புண்ணியத்தை நமக்கு கொடுக்கக் கூடியது என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது.
வருடாவருடம் இந்த யுகங்கள் எல்லாம் முடிந்து ஆரம்பமாகின்றது என்றால், இப்போது நடக்கின்றது கலியுகம் இந்த கலியுகம் ஒரு காலத்தில் முடியப் போகின்றது, அது எவ்வாறு இருக்கும் என்றால் கும்ப சங்கராந்தி, மாசி மாதப் பிறப்பில் தான் இந்தக் கலியுகம் முடியப்போகிறது.
தினம் அதுதான் வருடங்கள் மாறும். அதற்குத்தான் மகா பிரளயம் என்று பெயர். பிரளயங்களை இரண்டு விதமாக உபநிஷத் காண்பிக்கின்றது. மகாப் பிரளயம் அவாந்தர பிரளயம் என்று இந்த இரண்டு விதம்.
#ஒரு_யுகம்_முடிந்து_வரக்கூடியது


#மகா_பிரளயம். அப்பொழுது என்ன ஆகும் என்றால் இந்த உலகத்தில் நாம் பார்க்கக்கூடியதான எல்லா வஸ்துக்களும் ஈஸ்வரன் இடத்திலேயே லயத்தை அடைந்து விடும். #அப்புறம் #எதுவுமே_இருக்காது_அம்_மையமாக #இருக்கும்_அதாவது_தண்ணீர்_தீர்த்தம் #சூழ்ந்து_இருக்கும்_இதற்கு_மகாப் #பிரளயம்_என்று_பெயர்.


#அவாந்தர_பிரளயம்_என்றால்_நாம் #தினமும்_இரவில்_தூங்கி_காலையில் #எழுந்து_இருக்கிறோம்_நாம் #தூங்கியதில்_இருந்து_எழுந்து #கொள்ளும்_வரை_உள்ள_காலம்_தான் #அவாந்தர_பிரளய_காலம்_என்று_பெயர்.


*நாம் அசந்து தூங்கும் பொழுது எந்த வஸ்துக்களுமே நமக்குத் தெரியாது. இருந்தது என்றால் தெரிய வேண்டுமே ஏன் தெரியவில்லை என்றால், அதுவும் ஒரு பிரளயம் ஆக சொல்லப்பட்டிருக்கிறது எப்படி மகா பிரளயம் காலத்திலே அனைத்து வஸ்துக்களும் ஈஸ்வரன் இடத்திலேயே லயத்தை அடைகின்றனவோ, #அதேபோல்_சுக்ஷூக்தி_நிலையிலே, #நாம்_பார்க்கக்_கூடிய_அனைத்து #வஸ்துக்களும்_ஈஸ்வரன்_இடத்திலேயே #லயத்த_அடைகின்றன.
திரும்பவும் மறுநாள் காலையிலே புதியதாக உற்பத்தியாகின்றன, பிரளய காலத்திலே, சுக்ஷூக்தி நிலையில்தான் நாம் ஈஸ்வரனை அடைகிறோம் என்று உபநிஷத் காண்பிக்கிறது. நாம் இந்த சுக்ஷூக்தி நிலையில்தான் ரொம்ப சுகமாக இருக்கிறோம், நாம் அனுபவிக்கக்கூடிய வஸ்துக்கள் எல்லாம் என்ன ஆயிற்று என்றால் ஈஸ்வரன் இடத்திலேயே லயத்தை அடைந்து விட்டன.


திரும்பவும் காலையில் நாம் எழுந்து கொள்கிறோம், படுத்துக் கொள்ளும் பொழுது நாம் நாமாக படுத்திக் கொள்கிறோம். #காலையில்_நாம்_நாமாக_எழுந்து #கொள்ள_வேண்டுமென்றால் #ஈஸ்வரனுடைய_அனுகிரகம்_வேண்டும். #சுக_கர்ம_பலன்_வேண்டும்.


#நம்முடைய_கர்மா_தான்_நம்மளை #காலையில்_எழுப்புகின்றது. அதநாள் தான் இரவு படுத்துக் கொள்ளும் போது காலையில் நான் நானாக எழுந்து கொள்ள வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு படுத்துக் கொள்ள வேண்டும்.


இல்லையென்றால் எழுந்த பிறகு நாம் நாமாக இருக்க மாட்டோம். சுப கர்மபலன் இருந்தால் தான் நாம் நாமாக இருக்க முடியும். அதற்கு தான் பிரார்த்தனை செய்கிறோம். இதற்கு அவாந்தர பிரளயம் என்று பெயர். அப்படி தினமுமே ஒரு பிரளயம் ஆக சொல்லப்பட்டு இருக்கிறது.


அதனால்தான் சூரியோதயம் எல்லாம் தினமும் புதியதாக உதிக்கின்றது. நாம் பார்க்கக்கூடிய வஸ்துக்கள் எல்லாம் புதியதாக தெரிகிறது. இதை உபநிஷத் காண்பிக்கின்றது. கலியுகம் முடிவு என்பது மாசிமாச பிறப்பாக இருக்கும் என்று சொல்லப்பட்டிருப்பது நாலே, சங்கரமண ஸ்ராத்தம்

என்பதும் மிகவும் முக்கியம். மாச பிறப்பில் நாம் செய்ய வேண்டிய தர்ப்பணம். ஆகையினாலே யுகாதியும் செய்யவேண்டும் மாசப் பிறப்பும் செய்ய வேண்டும். யுகாதி புண்ணியகாலம் செய்து மாதப்பிறப்பு தர்ப்பணம் செய்யாமல் இருந்தால் ஒன்றை செய்து ஒன்றை செய்யாததாக ஆகும். மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்க்கலாம்.