Announcement

Collapse
No announcement yet.

96 tharpana vivaram.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 96 tharpana vivaram.

    03/10/2020


    முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில்
    *நாம் முன்னோர்களை உத்தேசித்து செய்யக்கூடிய தான தர்ப்பணங்களை வரிசைப்படுத்தி பார்த்துக்கொண்டு வருகிறோம்.
    அதில் இப்போது நாம் பார்த்துக்கொண்டிருப்பது மன்வாதி புண்ணிய கால தர்ப்பணங்கள். இது ஒரு முக்கியமான புண்ணிய காலமாக தர்மசாஸ்திரம் காண்பிக்கிறது.


    #மன்வாதி_என்பது_14_புண்ணிய #காலங்களை_குறிக்கிறது_இது #விஷயமாக_தர்மசாஸ்திரம் #சொல்லும்பொழுது_மச்ய_புராணத்தில் #இருந்து_ஒரு_வாக்கியம்_மன்வாதி #மற்றும்_யுகாதி_புண்ணிய_காலங்களில் #முறைப்படி_நாம்_செய்யவேண்டிய, #ஸ்ராத்தங்களை
    #தர்ப்பணமாக_செய்வதினால்_2000 #வருடங்கள்_வரை_நமக்கு #பிதுருக்களுடைய_சாபமோ_தோஷமோ #ஏற்படாது_அந்த_அளவுக்கு_விருத்தியை #கொடுக்கக்கூடியது.


    இந்த மன்வாதி யுகாதி புண்ணிய காலங்களில் நாம் செய்யக்கூடிய ஜபம் ஹோமம் ஸ்நானங்கள் எல்லாம் ரொம்ப புண்ணியத்தை/எதிர்பார்த்த அளவு கொடுக்கக்கூடியது என்று புராணங்கள் காண்பிக்கின்றன. இதையே தர்ம சாஸ்திரம் நமக்கு சொல்கிறது
    அதேபோல் மகாபாரதமும், இந்த மன்வாதி யுகாதி போன்ற புண்ணிய காலங்களில், நாம் ஏதாவது ஒரு புண்ணிய காரியத்தை செய்ய வேண்டும் நாம் தினமும் செய்யக்கூடிய காரியம் அல்லாமல் அதிகப்படியாக ஒன்று செய்ய வேண்டும்.


    அந்த அளவுக்கு மிகுந்த பலனைக் கொடுக்கக் கூடியது இந்த மன்வாதி காலங்கள். இந்த மன்வாதி புண்ணிய காலங்கள் எப்போது வரும் என்று பார்த்தால் சாந்திரமான படிதான் தீர்மானிக்கப்படுகின்றது


    ஆஸ்வைஜ மாதம் சுக்ல பக்ஷ நவமி, கார்த்திகை சுக்ல துவாதசி, சைத்ர சுக்ல திருதியா, பாத்ரபத சுக்ல திருதியா, பால்குன அமாவாசையா, புஷ்ய சுக்ல ஏகாதசி, ஆஷாட சுக்ல தசமி, மாக சுக்கில சப்தமி, ஸ்ராவண கிருஷ்ண அஷ்டமி, ஆஷாட பூர்ணிமா, கார்த்திகை பூர்ணிமா, பால்குண பூர்ணிமா, சைத்ர பூர்ணிமா, ஜேஷ்ட பூர்ணிமா இப்படி 14 மன்வாதி காலங்கள்.


    இந்த காலங்களில் நாம் இந்த தர்ப்பணத்தை செய்ய வேண்டும். இதை பஞ்சாங்கத்தில் காண்பித்து இருப்பார்கள். இது சொல்லக்கூடியதாக வரிசை மாறி மாறி வருகிறது.


    காலங்கள் மாறி மாறி வருகின்றது ஏனென்றால் அந்த 14 மன்வாதி வரிசையிலே, நமக்கு இந்த காலத்தை காண்பித்திருக்கிறார்கள் அதாவது மன்வாதி என்று 14 மனுக்கள் இருக்கிறார்கள். இவர்கள் யார் இதற்கு மன்வாதி என்று பெயர் வர என்ன காரணம்
    இதைப்பற்றி நாம் விரிவாகப் பார்ப்பதற்கு முன்பு, இந்த தர்ப்பணத்தை செய்ய வேண்டியது தான காலம் அதற்கான பலன்கள் அதை பற்றி முதலில் பார்ப்போம்.


    சுவாயம் புவன மனு, சுவாரோஷிஜ மனு, உத்தம மனு, தாமஸ மனு, ரைவத மனு, ஷாக்ஷூக்ஷ மனு, வைவஸ்வத மனு என்று ஏழு பேர்கள்.
    சூரிய சாவர்னி மனு, தக்ஷ சாவர்னி மனு, பிரம்ம சாவர்னி மனு, தர்ம சாவர்னி மனு, ருத்ர சாவர்னி மனு, ரௌச்சிய மனு, பவுஷ்ய மனு என்று ஏழு பேர்கள்.


    இப்படி மொத்தம் 14 மனுக்கள். அவர்களுடைய காலங்கள் தான் இந்த மன்வாதி புண்ணிய காலங்கள் என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கின்றது.
    இதுவும் காலத்தை குறிக்கக்கூடிய தான மன்வாதி காலங்கள். இதை நாம் கட்டாயம் செய்வதினால் ஆனந்தமான பலன்கள் நமக்கு கிடைக்கின்றன என்று சொல்லப்பட்டிருக்கிறது.


    மன்வாதி மற்றும் யுகாதி புண்ணிய காலங்களில் நாம் விசேஷமாக ஜப ஹோமங்கள் செய்தல், புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்வது என்று வைத்துக்கொள்ள வேண்டும்.
    அன்றைய தினத்திலேயே முகூர்த்தங்கள் எதுவும் செய்யக்கூடாது பொதுவாகவே, தர்ம சாஸ்திரப்படி விரத தினங்களிலும் தர்ப்பன தினங்களிலும், முகூர்த்தங்கள் வைக்கக்கூடாது என்று ஜோதிஷம் தர்ம சாஸ்திரமும் காண்பிக்கிறது.


    வரக்கூடிய காலங்களிலேயே முகூர்த்த தினங்கள் குறைவாகத்தான் இருக்கிறது அப்படி இருந்தாலும் கூட முகூர்த்த தினங்கள் தான். அதனால் தர்ப்பணம் செய்துவிட்டு முகூர்த்தத்தில் உள்ள இந்த மாதிரியான சங்கடங்கள் வரும் என்ற காரணத்தினாலே தான் இன்றைய தினங்களில் முகூர்த்தநாள் வைக்கக்கூடாது.


    மேலும் இந்த மன்வாதி புண்ணிய காலம் என்று இருக்கே இதை செய்யாவிடில் பிரசித்தமானது சொல்லப்பட்டிருக்கிறது. அந்த அளவுக்கு ஒரு முக்கியமானது. இது ஒரு யோகம் ஆகவே சொல்லப்பட்டிருக்கிறது.


    இந்த தர்ப்பணங்களை பார்த்துக் கொண்டு வரக்கூடிய வரிசையிலே அம்மாவாசை முதல் மிகவும் நல்ல நாட்கள் என்று சொல்கிறோமே, தேவ காரியங்களும் மற்றும் பிதுர் காரியங்களும் உண்டு. யாரெல்லாம் இந்த தர்ப்பணங்கள் செய்வதற்கு அதிகாரியாக உள்ளார்களோ அவர்கள் அதை செய்ய வேண்டும்.


    #வீட்டில்_உள்ள_ஸ்திரீகள்_அல்லது_ஜீவ #பிதுருக்கள்_அதாவது_தாயார் #தகப்பனார்_இருக்கும்_போது_உள்ள #கிரகஸ்தர்கள்_விரதங்கள் #செய்துகொள்ளவேண்டும்_என்று_தர்ம #சாஸ்திரம்_காண்பிக்கிறது.
    *அம்மாவாசை மற்றும் சங்கரமணம் என்று விரதங்கள் இருக்கிறது. யதிபாத விரதம். இப்படி இந்த பைத்திரிக்கமான தினங்கள் விரதங்களாகவே சொல்லப்பட்டிருக்கிறது.*


    *ஏனென்றால் அந்தக் காலமே மிகவும் புண்ணியமாக இருப்பதினால் எதுவுமே செய்யாமல் இருக்கக் கூடாது என்பதற்காக, இந்த அளவுக்கு முக்கியத்துவம் சொல்லப்பட்டு இருக்கிறது. மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
Working...
X