Announcement

Collapse
No announcement yet.

96 tharpana vivaram.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 96 tharpana vivaram.

    5th October No Broadcaste

    06/10/2020

    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் நம்முடைய பித்ருக்களை உத்தேசித்து ஒரு வருடத்தில் செய்யக்கூடிய தானே தர்ப்பணம் முறைகளை வரிசைப்படுத்தி பார்த்துக்கொண்டு வருகிறோம் அதில் மேலும் தொடர்கிறார்.*



    மன்வாதி 14 புண்ணிய காலத்தை இதுவரை நாம் விரிவாக தெரிந்து கொண்டோம். இவர்கள் கால தேவதையாக சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு மன்வாதி என்றால் அதாவது மன்வந்திரம் என்பது காலத்தைக் குறிக்கிறது. #ஒரு_மன்வந்திரம்_என்பது #30_கோடியே_85_லட்சத்து_71_ஆயிரத்து #428_வருஷங்களை_கொண்டது.

    #காலவிதானம்_போன்ற_கிரந்தங்கள் #இதை_காண்பிக்கின்றன. இத்தனை
    வருடங்களைக் கொண்டது ஒரு மன்வந்தரம் என்பது. அதிலே இப்போது நடக்கக்கூடியது வைவஸ்வத மன்வந்தரம் என்பது பெயர்.*



    *காலத்தை நமக்கு நிர்ணயம் செய்து கொடுப்பது இந்த மன்வாதி புண்ய காலங்கள் தான். பிரம்மாவின் உடைய காலத்தை நிர்ணயம் செய்யக் கூடியதும் இந்த மன்வந்திரம் தான். இப்படி மன்வாதி பெருமைகள் சொல்லப்பட்டிருக்கின்றன*

    *வைதிருதி புண்ணியகாலம் அடுத்ததாக. அதாவது மன்வாதி என்பது ஒரு குறிப்பிட்ட மாதம் ஒரு குறிப்பிட்ட காலம் ஒரு குறிப்பிட்ட திதில் வரக்கூடியது. மாசம் பக்ஷம் திதி சேர்ந்து வரக்கூடியது சில புண்ணிய காலங்கள்.*



    #இந்த_வைதிருதி_என்பது_27 #யோகங்கள்_இருக்கின்றன_நாம் #தினமும்_பஞ்சாங்கம்_பார்த்து_தின #சுத்தி
    #தெரிந்துகொள்ளவேண்டும்_என்பது #ஒரு_முக்கியமான_தர்மம். காலையில் நாம் எழுந்ததும் சுப்ரபாதம் சொன்னபிறகு, பஞ்சாங்க படணம் செய்ய வேண்டும்.



    #ஐந்து_விஷயங்களை_நாம் #தெரிந்துகொள்ள வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது. #திதி_வாரம் #நட்சத்திரம்_யோகம்_கரணம். இந்த ஐந்தையும் நாம் தினமும் தெரிந்து கொள்ள வேண்டும்.*



    அதிலேயே யோகம் என்று ஒன்று வருகிறது அதில் தான் இந்த வைதிருதி என்கின்ற புண்ணியகாலம். ஒவ்வொருநாளும் இன்றைக்கு என்ன யோகம் என்று தெரிந்து கொள்வதினால், ரோக நிவர்த்தி நமக்கு கிடைக்கிறது, என்று பலன் சொல்லப்பட்டு இருக்கிறது.



    மொத்த யோகங்கள் 27, அதில் #சுபயோகம்_அசுபயோகம் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒன்பது யோகங்கள் அசுப யோகம் என்று பெயர். விஷ்கம்பம் அதிகண்டம் சூலம் கண்டம் வியாகாதம் வஜ்ரம் வ்தீபாதம் பரிகம் வைதிரிதி என்ற இந்த ஒன்பது யோகங்களும் அசுப யோகங்களாக அசுரர்களின் நாமக்களாக சொல்லப்பட்டிருக்கிறது.



    ஆகையினாலே தான் நாம் சங்கல்பம் செய்யும் போது கூட வாரம் திதி நட்சத்திரம் சொல்லுவோம், யோகம் கரணம் நேரடியாக சொல்வதில்லை. சுப யோக சுப கரண என்று தான் சங்கல்பத்தில் சொல்லுவோம்.



    ஏன் அப்படி ஒரு முறையாக அமைத்து இருக்கிறார்கள் என்றால், இந்த #அசுரர்களின்_நாமாக்களை அங்கு சொல்லும்படியாக நேரும் என்ற காரணத்தினால். இன்றைய தினம் அதிகண்ட யோகமாக இருந்தால்,சங்கல்பத்தில் நட்சத்திரத்துடன் இதை சேர்த்து சொல்லும்படியாக வரும்.

    அதனால் சுப யோகம் சுப காரணம் என்று சொல்வது ஒரு வழக்கமாக இருக்கின்றது. ஆகையினாலேஇந்த ஒன்பது யோகங்களும் அவர்களுடைய நாமாக்களை குறிப்பதால் நாம் சுப காரியங்களை அன்று செய்யாமல் இருக்க வேண்டும்.



    #இந்த_அசுபயோகங்கள்_உள்ள #தினத்திலே_வபனம்_செய்து #கொள்ளக்கூடாது. சுப கர்மாக்களை தவிர்க்க வேண்டும் அப்படியாக தர்மசாஸ்திர நமக்கு காண்பிக்கிறது.



    இதில் கடைசியில் வரக்கூடியது இந்த வைதிருதி என்கின்ற புண்ணியகாலம். இது மாதத்தில் ஒரு தடவை வரும். இது அக்ஷயம் ஆன திருப்தியை பித்ருக்களுக்கு கொடுக்கக்கூடியது புண்ணிய காலம். த்ருதி என்று பெயர் ஜோதிடத்தில் வைத்ருதி என்று காண்பித்திருக்கிறார்கள் முக்கியமான யோகமாக சொல்லப்பட்டிருக்கிறது



    அன்றைய தினம் நாம் செய்யக்கூடிய பிதுர் கர்மாக்கள் நிறைய பலன்களைக் கொடுக்கக்கூடியது. தர்ப்பணம் செய்ய வேண்டும். வைதிருதி சிராத்தம் என்று காண்பித்து இருக்கிறார்கள். அதை நாம் தர்ப்பணம் ஆக செய்ய வேண்டும்.



    மேலும் இந்த வைத்ருதி யோகத்திற்கு, என்ன விசேஷம் என்றால், #நிறைய #வருடங்கள்_திதிகள்_தெரியாமல் #ஒருவர்_சிராத்தம்_செய்ய_வில்லை #என்றால்_வைதிருதி_யோகம்_வருகின்ற #அன்று_சிராத்தம்_செய்ய_வேண்டும் என்று தர்மசாஸ்திரம் காண்பிக்கிறது.



    அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது இந்த வைதிருதி புண்ய காலம். ஒருவர் திதி மறந்து விட்டால் இந்த வைதிருதி யோக நாமும் என்று வருகிறதோ, அந்தத் திரியை எடுத்துக் கொள்ள வேண்டும், என்று
    #ஹே_மாத்திரி என்கின்ற கிரந்தம் காண்பிக்கின்றது.



    இந்த யோக நாளில் முகூர்த்தங்களையோ சுபகாரியங்களையோ தவிர்த்து,அன்றைய தினம் இந்த தர்ப்பணத்தையும் பித்ரு கர்மாக்களைச் செய்ய வேண்டும்.



    மேலும் கால விதானத்தில் இதைப் பற்றிச் சொல்லும் பொழுது, ஒரு முகூர்த்தத்தை ஒட்டி செய்யக்கூடிய நாந்தி ஸ்ராத்தத்திற்க்கோ, அல்லது #வருடாவருடம்_செய்யக்கூடிய #ஸ்ராத்தத்திற்க்கோ_வஸ்துக்கள் #அதாவது_சாமான்கள்_வாங்க_போகும் பொழுது, என்றைக்கு அவைகளை வாங்கவேண்டும் என்று சொல்லும்பொழுது, வைதிருதி என்றைக்கு வருகிறதோ அன்றைக்கு சாமான்கள் நாம் வாங்கினோம் ஆனால், #பித்ருக்களுக்கு_ரொம்ப_திருப்தியை கொடுக்கின்றது என்று காலவிதானம் சொல்கிறது.



    ஆகையினாலே சாமான்கள் வஸ்திரங்கள் ஸ்ராத்தத்திற்கு பொருள்களை வைதிருதி என்று வருகிறதோ அன்று வாங்க வேண்டும் என்று வைத்துக் கொள்ள வேண்டும்.



    அப்படி பித்ருக்களுக்கு ரொம்ப திருப்தியைக் கொடுக்கக் கூடிய காலமாக இந்த வைதிருதி யோகம் இருக்கிறது. அன்றைய தினம் அவசியம் நாம் நம்முடைய பித்ருக்களை உத்தேசித்து தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் நமக்கு காண்பிக்கிறது. மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.
Working...
X