Announcement

Collapse
No announcement yet.

96 tharpana vivaram.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 96 tharpana vivaram.

    *11/10/2020*
    முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் செய்யக்கூடியது ஆன தர்ப்பணங்களின் வரிசைகளை பார்த்துக்கொண்டு என்ற வகையிலே மேலும் தொடர்கிறார்.


    அதிலே நாம் அடுத்ததாக பார்க்கக் கூடியதான மிக முக்கியமான புண்ணியகாலம் #அஷ்டகா_ஸ்ராத்தம். #திஸ்ரோஷ்டகா_என்று_பஞ்சாங்கத்தில் #போட்டிருப்பார்கள்.


    *முதலில் இந்த அஷ்டகா புண்ணிய காலத்தை எப்பொழுது செய்ய வேண்டும், என்று பார்த்த பிறகு இதை நாம் எதற்காக செய்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.*


    *இதற்கான ஒரு சரித்திரத்தையே தர்மசாஸ்திரம் நமக்கு காண்பிக்கிறது. மார்ககஷிச மாசம் புஷ்ய மாசம் மாக மாசம் பால் குண மாசம் இந்த அஷ்டா சிராத்தம் கூட சாந்திரமான படிதான் தர்மசாஸ்திரம் நமக்கு காண்பிக்கிறது.*
    *மார்கழி மாதம் மாசி பங்குனி தை இந்த நான்கு மாதங்களிலும் கிருஷ்ணபட்ச த்தில் வரக்கூடிய, சப்தமி அட்டமி நவமி, இந்த மூன்று நாட்களில் நாம் இந்த புண்ணிய காலத்தை அனுஷ்டிக்க வேண்டும்.*


    *இதனுடைய முக்கியத்துவத்தை பார்த்துதான் மகரிஷிகள் நமக்கு சப்த பாக யஞ்கியங்களில் இந்த அஷ்டகாவை தனியாக வைத்திருக்கிறார்கள்.*
    *இந்த ஷண்ணவதி 96 தர்ப்பணங்களை நாம் பண்ணுகிறோம் குறைந்தபட்சம் ஒரு வருடத்தில். இதில் எந்த ஒரு புண்ணிய காலமும் பாக அல்லது ஹவிர் யஞ்கியங்களில் வரவில்லை.*


    நாற்பது சம்ஸ்காரங்களிலும் வரவில்லை. #ஆனால்_இந்த_அஷ்டகா #ஸ்ராத்தம்_40_சம்ஸ்காரங்களில் #சொல்லப்பட்டிருக்கிறது.
    *சப்த பாக யஞ்கியங்களில் ஒன்று தான் இந்த அஷ்டகா ஸ்ராத்தம். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதினால் தான் நாற்பது ஸம்ஸ்காரங்களில் இதை வைத்து கொடுத்திருக்கிறார்கள்*


    இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் இதை விடவே கூடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எப்படி சீ மந்தத்தையும் குழந்தைக்கு ஜாத கர்மாவையும் விடக் கூடாதோ, நாம கர்மாவையும் செய்யாமல் இருக்கக் கூடாதோ, அதேபோல்தான் இந்த அஷ்டகா புண்ணிய காலத்தையும் செய்யாமல் இருக்கக் கூடாது என்று மகரிஷிகள் நமக்கு காண்பித்துள்ளனர்.


    இதற்கு திஸ்ரோஷ்டகா என்று மூன்று புண்ணிய காலங்கள் வரும். மார்கழி மாதத்தில் வரக்கூடிய கிருஷ்ண பக்ஷத்தில் சப்தமி அஷ்டமி நவமி.
    அதேபோல் தை/மாசி/பங்குனி மாதத்திலும் வரக்கூடிய கிருஷ்ண பக்ஷத்தில் சப்தமி அஷ்டமி நவமி இப்படி 3 நாட்களாக நான்கு மாதங்களும் வரும்.
    இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சௌனகர் என்கின்ற மகரிஷி சொல்கின்ற பொழுது, ஹேமந்த ருது சிசிர ருது மார்கழி தை மாசி பங்குனி இந்த நான்கு மாதங்களும், இந்த ருதுக்களில் வரும். இதை செய்யவேண்டுமென்று மகரிஷி நமக்கு காண்பித்திருக்கிறார்


    ஸ்ராத்தம் பார்வனமாக செய்ய வேண்டும். பொதுவாக நாம் தர்ப்பணம் செய்யும் போது பிதுர் பிதாமஹ பிரபிதாமஹ மாத்ரு பிதாமஹி பிரபிதாமஹிகள் மாதாமஹ மாது பிதாமஹ மாது பிரபிதாமஹ, மாதாமஹி மாது பிதாமஹி மாது பிரபிதாமஹி இதுதான் வர்க்கத்துவயம் என்று சொல்கிறோம்.


    இந்த வர்க்கத்துவயம் எப்படி ஆராதிக்கிறோம் என்றால், ஒவ்வொரு ஸ்ராத்தங்களிலும் ஒவ்வொரு விதமாக அனுஷ்டானம் செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.


    தர்ப்பணம் ஆக நாம் செய்யும் பொழுது அதில் எந்த மாற்றமும் தெரியாது ஒரே மாதிரியாக செய்து விடுவோம். ஆனால் இதை சிராத்தம் ஆக செய்யும்பொழுது, அதில் நிறைய விசேஷங்கள் வருகிறது.



    இந்த அஷ்டகா சிராத்தத்தில் எப்படி என்றால், தாயார் வர்க்கத்திற்கு தனியாக வரணம் செய்ய வேண்டும். பொதுவாக இந்த ஷண்ணவதி அனைத்து ஸ்ராத்தங்களிலும் தாயாரும் தகப்பனாரும் சேர்ந்துதான் ஒரு வர்க்கம். அதேபோல் மாதாமஹர் மாதா மஹி ஒரு வர்க்கம்.


    ஆனால் ஒரு குறிப்பிட்ட சில இடங்களில் தாயாருக்கு தனியாக ஒரு வர்க்கம் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது வருடாவருடம் நாம் தாயாரை உத்தேசித்து செய்யக்கூடிய சிராத்தத்தில், நாந்தி சிராத்தத்திலும் கயையில் செய்யக்கூடிய ஸ்ராத்தத்திலும், #தாயார்_வர்க்கத்திற்கு #தனியாக_வரணம்_உண்டு.


    அதேபோல்தான் இந்த #அஷ்டகா #சிரார்த்தத்திலும்_தாயார்_வர்க்கத்திற்கு தனியாக ஒரு வரணம் சொல்லப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அங்குதான் விசேஷங்கள் நிறைய சொல்லப்பட்டிருக்கிறது.


    *அந்த சரித்திரத்தை பார்க்கும்போது அந்த விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே நாம் தகப்பனாரையும் தாயாரையும் ஒரு வர்க்கமாக செய்தாலும், எப்படி நாந்தி சிராத்தத்தில் தாயாருக்கு தனியாக ஒரு வர்க்கம் செய்கின்றோமோ, அதே போல் தான் இந்த அஷ்டகா சிராத்தத்திலும் தயாரித்து தனியாக செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.*



    *அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் இந்த அஷ்டகா சிராத்தத்தில் 4 மாதத்தில் மூன்று மூன்றாக 12 தர்ப்பணங்கள் வருகின்றன இந்த அஷ்டகா புண்ணியகாலம்.*


    *இதை அன்ன சிராத்தம் ஆக காண்பித்திருக்கிறார்கள்* *மேலும் தர்ப்பணம் ஆக செய்யலாம் என்றும் காண்பித்து இருக்கிறார்கள். குறைந்தபட்சம் தர்ப்பணமாகவாது செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.*


    *இதை ஏன் அன்ன ரூபமாக செய்யக்கூடாது என்றால் செய்யலாம் ஆனால் நிறைய நியமங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. மூன்று நாட்கள் இதை அனுஷ்டிக்க வேண்டிவரும். நியமங்கள் நிறைய சொல்லப்பட்டிருக்கிறது முடிந்தால் செய்யலாம். தர்ப்பணமாக செய்வதற்கு தர்ம சாஸ்திரத்தில் விசேஷங்கள் காண்பித்திருக்கிறார்கள்*


    *இந்த அஷ்டகா தர்ப்பணத்தை செய்யாவிடில் தோஷங்களும் காண்பிக்கிறார்கள். இதை யார் தெரிந்து கொள்ள வில்லையோ அல்லது தெரிந்து கொண்டும் செய்யவில்லையோ, அவர்கள் தரித்திரம் ஆக போய்விடுகிறார்கள். அதாவது பணம் இல்லாமல் இருப்பவர்கள் தரித்திரர் கள் ஆகவும்,

    அதேசமயம் பணம் இருந்தும் அனுபவிக்க முடியாதவர்களும் தரித்திரர்கள் என்ற ஒரு நிலையானது நமக்கு ஏற்படுகின்றது என்று ஒரு முக்கியத்துவம் சொல்லப்பட்டு இருக்கிறது இந்த அஷ்டகா புண்ணிய காலத்திற்கு.*
    *மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
Working...
X